உலகச் செய்திகள்


மீளப் பயன்­ப­டுத்­தக்­கூ­டிய பால்கன் 9 ஏவு­கணை வெற்­றி­க­ர­மாக சமுத்­திர தளத்தில் மீள தரை­யி­றக்கம்

வடகொரியாவால் கண்டம் விட்டு கண்டம் தாக்கக்கூடிய ஏவுகணை இயந்திரம் வெற்றிகரமாக பரிசோதனை

 பள்­ளி­வா­ச­லுக்கு அருகில் மோதல் ; லண்டனில் பரபரப்பு 

பாரிய பணமோசடிக்கு வழிவகுத்து கொடுத்த நிறுவனம் முற்றுகை

400 பேர் அமெரிக்காவில் கைது

வாட்ஸ்ஆப் தடை செய்யப்படுமா ?

ஜப்பானை உலுக்கிய இரு பூமியதிர்ச்சிகள் : 29 பேர் பலி, பலர் காயம், வீடுகளுக்கு சேதம்

சக்திவாய்ந்த நிலநடுக்கம், 30 பேர் பலி : சுனாமி எச்சரிக்கை.!







மீளப் பயன்­ப­டுத்­தக்­கூ­டிய பால்கன் 9 ஏவு­கணை வெற்­றி­க­ர­மாக சமுத்­திர தளத்தில் மீள தரை­யி­றக்கம்

11/04/2016 அமெ­ரிக்க ஸ்பேஸ் எக்ஸ் கம்­ப­னியால் ஏவப்­பட்ட மீளப் பயன்­ப­டுத்­தக்­கூ­டிய ஏவு­க­ணை­யா­னது வெற்­றி­க­ர­மாக சமுத்­திர தள­மொன்றில் தரை­யி­றங்­கி­யுள்­ளது.
அந்த கம்­ப­னியால் இதற்கு முன் மேற்­கொள்­ளப்­பட்ட 4 முயற்­சிகள் தோல்­வியைத் தழு­வி­யி­ருந்­தன. பால்கன் 9 ஏவு­க­ணை­யா­னது அமெ­ரிக்க புளோ­ரிடா மாநி­லத்­தி­லுள்ள கனா­வெரல் விண்­கல ஏவு­த­ளத்­தி­லி­ருந்து டிரகன் விண்­க­லத்தின் சகிதம் அந்­நாட்டு நேரப்­படி வெள்­ளிக்­கி­ழமை இரவு ஏவப்­பட்­டது.
இந்­நி­லையில் விண்­க­லத்தை விண்­வெ­ளிக்கு எடுத்துச் சென்ற குறிப்­பிட்ட ஏவு­கணை, பின்னர் அதி­லி­ருந்து பிரிந்து நாசா விண்­வெளி நிலை­யத்தின் சமுத்­தி­ரத்தில் மிதக்கும் தள­மொன்றில் தரை­யி­றங்­கி­யுள்­ளது.



டிரகன் விண்­கலம் ஞாயிற்­றுக்­கி­ழமை சர்­வ­தேச விண்­வெளி நிலை­யத்தைச் சென்­ற­டைந்­தது. அந்த ஏவு­கணை வெற்­றி­க­ர­மாக மிதக்கும் தளத்தில் தரை­யி­றங்­கி­யதும் ஸ்பேஸ் எக்ஸ் நிறு­வ­னத்தின் கலி­போர்­னிய ஹாவ்தோர்ன் நக­ரி­லுள்ள கட்­டுப்­பாட்டு நிலை­யத்­தி­லி­ருந்த அதி­கா­ரி­களும் உத்­தி­யோ­கத்­தர்­களும் 'அமெ­ரிக்கா, அமெ­ரிக்கா, அமெ­ரிக்கா' என கோஷம் எழுப்பியவாறு மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
இது மீள உபயோகப்படுத்தக் கூடிய ஏவுகணைகள் தொடர்பான வரலாற்றின் புரட்சிகர ஆரம்பமாக கருதப்படுகிறது. நன்றி வீரகேசரி 








வடகொரியாவால் கண்டம் விட்டு கண்டம் தாக்கக்கூடிய ஏவுகணை இயந்திரம் வெற்றிகரமாக பரிசோதனை

11/04/2016 வட கொரி­யா­வா­னது அணு ஆயு­தங்­களை ஏந்­தி­ய­வாறு கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்­கக்­கூ­டிய ஏவு­க­ணை­யொன்­றுக்­காக வடி­வ­மைக்­கப்­பட்­டுள்ள இயந்­தி­ர­மொன்றை வெற்­றி­க­ர­மாக பரி­சோ­தித்­துள்­ளது.
இந்தப் புதிய இயந்­தி­ர­மா­னது அமெ­ரிக்­காவின் பிர­தான நிலப் பகுதி மீது அணு ஆயுத தாக்­கு­த­லொன்றை நடத்­து­வ­தற்­கான அந்­நாட்டின் வல்­ல­மைக்கு உத்­த­ர­வாதம் அளிக்­கக்­கூ­டி­ய­தாக உள்­ள­தாக கே.சி.என்.ஏ. செய்தி முகவர் நிலையம் செய்தி வெளியிட்­டுள்­ளது. இந்த இயந்­திரப் பரி­சோ­த­னை­யா­னது அந்­நாட்டின் மேற்கு கடற்­க­ரைக்கு அரு­கி­லுள்ள நீண்ட தூர ஏவு­க­ணை­களை ஏவு­வ­தற்­கான தளத்தில் நடத்­தப்­பட்­டுள்­ளது.

இது அந்த நாட்டால் மேற்­கொள்­ளப்­பட்ட ஒரு தொகை ஏவு­கணை பரி­சோ­த­னை­களில் பிந்­திய பரி­சோ­த­னை­யாகும். இந்­நி­லையில் வட கொரி­யாவின் இந்த செயற்­பாட்­டிற்கு அமெ­ரிக்கா கடும் கண்­டனம் தெரி­வித்­துள்­ளது.
"இத்­த­கைய நட­வ­டிக்­கை­களை கைவி­டும்­படி வடகொரி­யா­வுக்கு அழைப்பு விடுக்­கிறோம். இது அந்தப் பிராந்­தி­யத்தின் ஸ்திரத்­தன்மை மேலும் குலைய­வே வழி­வ­கை­ செய்­வ­தாக உள்­ளது" என தன்னால் வெளியி­டப்­பட்­டுள்ள அறிக்­கையில் குறிப்­பிட்­டுள்ள அமெ­ரிக்கா, வட கொரி­யாவின் இந்த அத்­து­மீறல் நட­வ­டிக்கை குறித்து கடும் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என எச்­ச­ரித்­துள்­ளது.

மேற்­படி இயந்­தி­ரத்தின் பரி­சோ­தனை நட­வ­டிக்­கை­யா­னது வட கொரியத் தலைவர் கிம் யொங்–உன்னின் மேற்­பார்­வையின் கீழ் மேற்­கொள்­ளப்­பட்­ட­தாக அந்­நாட்டு அர­சாங்க ஊடகம் செய்தி வெளியிட்­டுள்­ளது.
அமெ­ரிக்கா மீது அணு ஆயு­தத்தை ஏந்திச் செல்­லக்­கூ­டிய ஏவு­கணை மூலம் தாக்­கு­தலை நடத்­து­வ­தற்­கு தேவை­யான ஆற்­றலை பெறும் இலக்கை வட கொரியா படிப்­ப­டி­யாக பூர்த்தி செய்து வரு­வ­தாக கிம் யொங் –உன் தெரி­வித்­ததாக அந்த ஊடகம் குறிப்­பிட்­டுள்­ளது.

“எமது நாடு தற்­போது அமெ­ரிக்க பிர­தான நிலப் பகுதி உள்­ள­டங்­க­லாக உலகின் எந்­த­வொரு பிசா­சு­களின் சாக்­க­டை­கு­ழி­யையும் தனது தாக்­குதல் தூரத்­துக்கு கொண்டு வந்­துள்ளது" என அவர் கூறி­ய­தாக அந்த ஊடகம் மேலும் தெரிவித்தது.   நன்றி வீரகேசரி 








பள்­ளி­வா­ச­லுக்கு அருகில் மோதல் ; லண்டனில் பரபரப்பு 


13/04/2016 லண்­ட­னி­லுள்ள பள்­ளி­வா­ச­லொன்­றுக்கு வெளியில் அந்­நாட்டு வல­து­சாரி குழு­வுக்கும் முஸ்­லிம்­க­ளுக்­கு­மி­டையே உக்­கிர மோத­லொன்று இடம்­பெற்­றுள்­ளது.
பள்­ளி­வா­சல்­க­ளுக்கு இனி­மேலும் இட­மில்லை எனக் குறிப்­பிடும் பதா­கை­களை ஏந்­தி­ய­வாறு வைட்­சபெல் எனும் இடத்தில் குறிப்­பிட்ட பள்­ளி­வாசல் அமைந்­துள்ள வீதிக்கு வந்த பிரிட்டன் பெர்ஸ்ட் அமைப் பைச் சேர்ந்த செயற்­பாட்­டா­ளர்கள், அந்தப் பள்­ளி­வா­சலில் தொழு­கையில் ஈடு­ப­டு­வ­தற்கு வந்­த­வர்­க­ளுடன் மோதலில் ஈடு­பட்­டுள்­ளனர். இதன்­போது அந்தக் குழு­வி­னரில் ஒருவர் நபரொருவரை தனது காலால் உதைப்பதை படத்தில் காணலாம்.



நன்றி வீரகேசரி







பாரிய பணமோசடிக்கு வழிவகுத்து கொடுத்த நிறுவனம் முற்றுகை

13/04/2016 உலகில் பாரிய நிதி மோசடிக்கு வழிவகுத்து கொடுக்க உதவிய பனாமாவில் உள்ள மோசெக் பொன்சேகா சட்ட நிறுவனத்தை அந் நாட்டு பொலிஸார் நேற்று முற்றுகையிட்டுள்ளனர்.
உலகலாவிய ரீதியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பனாமா பணமோசடி சம்பவத்தை அந் நாட்டு பத்திரிகை ஒன்று அண்மையில் வெளிப்படுத்தியதை தொடர்ந்து  பல நாடுகள் தற்போது விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.


உலகில் முக்கிய  செல்வந்தர்கள், விளையாட்டு வீரர்கள், மற்றும் நடிகர் நடிகைகள் என பல பேர் தமது கணக்கில் வரதா சொத்துகளை பனாமாவில் மறைத்து வைத்திருந்தமை அண்மையில் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி












400 பேர் அமெரிக்காவில் கைது

14/04/2016 அமெரிக்காவில் காங்ரஸ் வாரியத்தின் முன்னதாக  நாட்டின் அரசியல் நிலைமை மற்றும் நிதி மோசடி தொடர்பில் எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தவர்களில் 400 மேற்ப்பட்டவர்களை  அந்த நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர்.



நன்றி வீரகேசரி








வாட்ஸ்ஆப் தடை செய்யப்படுமா ?

14/04/2016 ஸ்மார்ட்போனில் குறுந்தகவல் அனுப்ப பெரும்பாலானோர் பயன்படுத்தும் செயலியாக வாட்ஸ்ஆப் இருக்கின்றது. 
இந்தியாவில் மட்டுமே சுமார் 7 கோடிக்கும் அதிகமானோர் வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்தி வருகின்றனமை குறிப்பிடத்தக்கது. அதுமற்றுமன்றி  வாட்ஸ்ஆப் பயனர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
அந்த வகையில் வாட்ஸ்ஆப் செயலியானது சமீபத்தில் முழுமையான என்க்ரிப்ஷன் (encryption) சேவையை சில தினங்களுக்கு முன் அறிவித்தது. 
இதன் மூலம் வாட்ஸ்ஆப் வாடிக்கையாளர்களின் அனைத்து குறுந்தகவல்களும் முழுவதுமாக பாதுகாக்கப்படுகின்றது. 
வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் புதிய என்க்ரிப்ஷன் சேவை வழங்கப்பட்டது முதல் இந்த செயலி இந்தியாவில் தடை செய்யப்படுவது குறித்து ஏராளமான தகவல்கள் இணையத்தில் உலவி வருகின்றது. 

உண்மையில் வாட்ஸ்ஆப் இந்தியாவில் தடை செய்யப்படுமா, இல்லையா.?  நன்றி வீரகேசரி









ஜப்பானை உலுக்கிய இரு பூமியதிர்ச்சிகள் : 29 பேர் பலி, பலர் காயம், வீடுகளுக்கு சேதம்

16/04/2016 தென் ஜப்­பானை வியா­ழக்­கி­ழமை நள்­ளி­ரவு கடந்த நிலையில் தாக்­கிய அதி சக்­தி­வாய்ந்த 6.4 ரிச்டர் பூமி­ய­திர்ச்­சியிலும் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்ற 7.3 ரிச்டர்   பூமி­ய­திர்ச்­சியிலும் சிக்கி குறைந்­தது 29 பேர் பலி­யா­ன­துடன் 1000 ற்கும் அதிகமானோர் காய­ம­டைந்­துள்­ளனர்.

காய­ம­டைந்­த­வர்­களில் பலரின் நிலைமை கவ­லைக்­கி­ட­மாக உள்­ள­தாக மருத்­து­வ ­மனை வட்­டா­ரங்கள் தெரி­விக்­கின்­றன.
இந் தப் பூமி­ய­திர்ச்­சிகளால் கட்­ட­டங்கள் பலவும் இடிந்து விழுந்­த­துடன் மின்­சார இணைப்­பு­களும் சேதத்­துக்­குள்­ளா­கியுள்­ளன.
இந்­நி­லையில் இடிந்து விழுந்த கட்­ட­டங்­களின் இடி­பா­டு­களின் கீழ் மேலும் பலர் சிக்­கி­யி­ருக்­கலாம் என அஞ்­சப்­ப­டு­கி­றது.

இந்த பூமி­ய­திர்ச்­சிகளால் பல வீடுகள் இடிந்து விழுந்­த­துடன் இரு தீ அனர்த்த சம்­ப­வங்­களும் இடம்­பெற்­றுள்­ளன.  நன்றி வீரகேசரி









சக்திவாய்ந்த நிலநடுக்கம், 30 பேர் பலி : சுனாமி எச்சரிக்கை.!


17/04/2016 தென் அமெரிக்காவின் வடக்கு கடற்கரையோர நகரமான ஈக்குவேடர் நாட்டில் இன்று அடுத்தடுத்து தாக்கிய இரு நிலநடுக்கங்களால் 30 பேர் பலியாகியுள்ளனர். 
தலைநகர் குவிட்டோவில் இருந்து 173 கிலோமீட்டர் வடமேற்கே பூமியின் அடியில் சுமார் 20 கிலோமீட்டர் ஆழத்தில் முதலில் ஒரு மிதமான நிலநடுக்கமும், அதற்கடுத்த சில நிமிடங்களில் சக்திவாய்ந்த மற்றொரு நிலநடுக்கமும் ஏற்பட்டதாக பசிபிக் பெருங்கடல் சுனாமி எச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது. 
இன்று காலை சுமார் 6.30 அளவில் முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் 4.8 ரிக்டராகவும், இரண்டாவதாக ஏற்பட்ட நிலநடுக்கம் 7.8 ரிக்டராகவும் பதிவாகியுள்ளது. இவ்விரு நிலநடுக்கங்களால் குவிட்டோ நகரில் உள்ள வீடு, கட்டிடங்கள் குலுங்கின. பீதியடைந்த மக்கள் வீடுகளைவிட்டு ஓடிவந்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். 
ஈக்குவேடரின் வர்த்தக நகரமான குயாகுவில் நகரில் ஒரு பாலம் இடிந்து விழுந்தது. மன்ட்டா நகரில் உள்ள விமான நிலையத்தில் கட்டுப்பாட்டு அறை கோபுரம் சாய்ந்து விழுந்தது. 
மேற்கண்ட மூன்று நகரங்களிலும் பல வீடுகள் இடிந்து நாசமடைந்த நிலையில், இடிபாடுகளில் சிக்கி சுமார் 30 பேர் பலியானதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் அண்டைநாடான பெருவின் வடபகுதிகளிலும் உணரப்பட்டதாக அந்த செய்திகள் குறிப்பிடுகின்றன. 
இன்றைய நிலநடுக்கம் தாக்கிய பகுதியில் இருந்து சுமார் 300 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள கடலோரப் பகுதிகளில் பேரலைகள் எழக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளதால், அப்பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.   நன்றி வீரகேசரி