நன்னக்கு பிரேமதோ
1150 திரையங்கில் சங்கராந்தி தின சிறப்பாக ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் நன்னக்கு பிரேமதோ. இப்படம் தற்போது பாக்ஸ் ஆபிஸ் கலக்க்ஷன் அள்ளி வருகிறது. ஜூனியர் என்.டி.ஆர் நடித்த படங்களிலேயே இப்படத்தில் செம ஸ்டைலிஷாக விருந்து படைத்துள்ள படம் நன்னக்கு பிரேமதோ.
கதை
லண்டனில் மிக செழிப்பாக வளர்ந்த இளைஞர் அபியாக இருக்கும் ஜூனியர் என் டி ஆர், இவரது தந்தை சுப்ரமணியன் (ராஜேந்திர பிரசாத்) மரணப்படுக்கையில் உள்ள போது சில வருடங்களுக்கு முன்பு தன்னை ஏமாற்றி அவமானப்படுத்திய ஜகபதி பாபு பற்றியும் இன்னும் 30 நாட்களில் நான் சாகப்போகிறேன் அதற்கு முன் நான் பட்ட அவமானம் போல் அவனும் படவேண்டும், அப்போது தான் என மனம் சாந்தியடையும் என்று அவரது மகனான ஜூனியர் என் டி ஆரிடம் சொல்கிறார். அதன் பிறகு ஜூனியர் என் டி ஆர், ஜகபதி பாபு தேடி சென்று அவரை ஒன்னும் இல்லாதவனாக செய்து எப்படி அவமானப்படுத்துகிறார் என்பதே கதை.
ஜூனியர் என்.டி.ஆர்
மிக ஸ்டைலிஷாக ஒரு ஹீரோவை பார்த்து நீண்ட நாட்கள் ஆனது, அந்த ஆசையை ஜூனியர் என்.டி.ஆர் இப்படத்தின் மூலம் தீர்த்துள்ளார். அவர் வைத்திருக்கும் தாடியும், உடையும் ஒவ்வொரு காட்சிக்கும் கம்பீரத்தை தருகிறது. மேலும் எந்த காரியத்தையும் கூலாக செய்யும் நபராக கலக்குகிறார். அது மட்டுமில்லாமல் சண்டை காட்சிகளில் ரிஸ்க் எடுத்து செய்திருப்பது தெரிகிறது. என்ன சில செண்டிமெண்ட்டான காட்சிகளில் முக அசைவுகள் சுத்தமாக சரியில்லை அதில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்.
ராகுல் ப்ரீத்தி
வழக்கம் போல் வில்லனுக்கு மகளாக வரும் கதாநாயகி, படத்தில் கிளாமரை அள்ளி வீசியுள்ளார். தன் கனவில் வரும் ஒரு சம்பவத்தை கண்டு அடிக்கடி அலறுவதும், தன் தாயை ஜெயிலில் பார்த்து உருகுவதும் நல்ல நடிப்பை வெளிபடுத்தியுள்ளார். மேலும் இப்படத்தில் அவரே டப்பிங் பேசியது வரவேற்கத்தக்க விஷயம்.
ஜகபதி பாபு
படத்தின் மிகப்பெரிய பலம், தன் செய்யும் ஒவ்வொரு வேலையிலும் சாமர்த்தியமாக திகழ்வது அடடா போடா வைக்கிறது. அதும் ஜூனியர் என்.டி.ஆர்க்கு நிகராக பக்கா ஸ்டைலிஷான வில்லனாக இருக்கிறார்.
ராஜேந்திர பிரசாத்
ஜூனியர் என்.டி.ஆரின் தந்தையாக நடித்திருக்கும் ராஜேந்திர பிரசாத், இப்படி ஒரு தந்தை இல்லையே என்று நம்மை ஏங்க வைக்கிறார். நேர்த்தியான ஒரு யதார்த்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்
கிளாப்ஸ்
1. ஜூனியர் என்.டி.ஆரின் ஸ்டைலிஷான நடிப்பு.
2. படத்தின் பின்னணி இசை மற்றும் பாராட்டத்தக்க ஒளிப்பதிவு
3. இரண்டாம் பாதியின் வேகம், யூகிக்க முடியாத திரைக்கதை
பல்ப்ஸ்
1. மெதுவான முதல் பாதி- கதைக்குள் செலவே சில நேரம் ஆகிறது
2. பார்த்து பழகி போன கதை
3. யதார்த்தத்தை மீறிய ஹீரோயிசம் மற்றும் சண்டைக்காட்சிகள்
இயக்குனர் சுகுமார் அப்பா, மகன் உணர்ச்சிகளை கருவாய் கொண்ட கதை களத்தை மாஸ் படங்களுக்கு இணையாக அதே சமயம் படுஸ்டைலிஷாக கொடுத்துள்ளார். கண்டிப்பாக ஜூனியர் என்.டி.ஆரின் ரசிகர்களுக்கு செம்ம விருந்தாக அமைந்துள்ளது இந்த படம்.
மொத்தத்தில் நன்னக்கு பிரேமதோ -- பாச போராட்டத்தில் ஒரு மாஸ் படம்
ரேட்டிங் - 3/5
நன்றி cineulagam