மரண அறிவித்தல்


அமரர் திரு சுப்பையா சிவலிங்கம்

தாயின் மடியில் 28-01-1931   ஆண்டவன் திருவடியில் 05-02-2016

குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கல்வியங்காட்டை வசிப்பிடமாகவும் கணக்காய்வாளரும் (Auditing Department, Colombo) பிள்ளையார் அரிசி ஆலை (அடம்பன், மன்னார்) உரிமையாளரும் ஆகிய திரு சுப்பையா சிவலிங்கம் அவர்கள் 05-02-2016 வெள்ளிக்கிழமை அன்று அவுஸ்திரேலியாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சுப்பையா தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஜயாத்துரை யோகம்மா அவர்களின் அன்பு மருமகனும், சிவபாக்கியத்தின் ஆருயிர்க் கணவரும், வசந்தி (அவுஸ்திரேலியா), வசந்தன் (அவுஸ்திரேலியா), முகுந்தன் (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும், சிறீதரன் (அவுஸ்திரேலியா), மெரியம் (அவுஸ்திரேலியா), கவிதா (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும், ஸ்ரீத்தீ, ஸ்ரீஷா, நேத்தன், லோரன், சானுஜன், சஜீதன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கனகரட்ணம், சவுந்தரம், நவரட்ணம், ஏகாம்பரம் மற்றும் பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரனும், காலஞ்சென்றவர்களான சிவலிங்கம், பேரம்பலம் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் பார்வைக்காக 101 South St, Granville, NSW ல் அமைந்துள்ள Liberty Funerals ல் 9/2/2016 செய்வாய்க் கிழமை மாலை 6 மணி முதல் 8 மணி வரை வைக்கப்பட்டு, 10/2/2016 புதன் கிழமை காலை 10:30 மணி முதல் 12:30 மணி வரை 16, Gooden Drive, Baulkham Hills, NSW ல் ஈமைக்கிரியைகள் நடாத்தப்பட்டு தகனத்திற்காக 712-746, Windsor Rd, Rouse Hill, NSW ல் அமைந்துள்ள Castlebrook Crematorium மயானத்துக்கு எடுத்து செல்லப்பட்டு அங்கு மதியம் 1:00 மணி முதல் 2:00 மணி வரையில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
சிவபாக்கியம் (மனைவி) - அவுஸ்திரேலியா:  612-9620-9639
வசந்தி (மகள்) – அவுஸ்திரேலியா:  614-7917-6282
சிறீதரன் (மருமகன்) – அவுஸ்திரேலியா:  613-0129-1281
வசந்தன் (மகன்) - அவுஸ்திரேலியா:  612-9624-6887

முகுந்தன் (மகன்) - கனடா:  905-554-3950 / 416-668-9696