உலகச் செய்திகள்


ரஷ்ய போர் விமானம் துருக்கிய வான் பரப்பில் மீண்டும் அத்துமீறி பிரவேசம்

ஸிகா வைரஸ் பரவல் தொடர்பில் அவசரகால நிலைமை : வெளிநாட்டடு பயணங்கள் ரத்து

கிரேக்கத் தீவில் குவிந்துள்ள உயிர்காப்பு மேலங்கிகள்

தொழு­கையில் கலந்­து­கொள்ளத் தவ­றிய 14 வயது சிறு­வ­னுக்கு பெற்றோர் முன்­னி­லையில்  மர­ண­தண்­டனை 

தாய்வானில் பயங்கர நிலநடுக்கம்: இடிபாடுகளிலிருந்து 221 பேர் மீட்பு

பீஜிங்கில் நில­ந­டுக்கம்: இருவர் பலி, 34 பேர் படு­காயம்

ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 37 பேர் பலி!


ரஷ்ய போர் விமானம் துருக்கிய வான் பரப்பில் மீண்டும் அத்துமீறி பிரவேசம்




01/02/2016 ரஷ்­யா­வா­னது துருக்­கிய வான் பரப்பில் மீண்டும் அத்­து­மீறல் நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டுள்­ளது எனவும் இத்­த­கைய நட­வ­டிக்­கைகள் தொடரும் பட்­சத்தில் பின் விளை­வு­களை எதிர்­கொள்ள நேரிடும் எனவும் துருக்கி எச்­ச­ரித்­துள்­ளது.
சிரிய எல்­லை­யு­ட­னான தனது வான் பரப்பில் ரஷ்­யாவின் போர் விமா­ன­மொன்று பறந்­த­தாக துருக்­கிய வெளி­நாட்டு அமைச்சு தெரி­வித்­தது. இந்­நி­லையில் ரஷ்­யா­வா­னது இது எந்த அடிப்­ப­டையும் அற்ற குற்­றச்­சாட்டு என மறுப்புத் தெரி­வித்­துள்­ளது.
கடந்த நவம்பர் மாதம் தனது வான் பரப்பில் அத்துமீறிப் பிர­வே­சித்த குற்­றச்­சாட்டில் ரஷ்ய போர் விமா­ன­மொன்றை துருக்கி சுட்டு வீழ்த்­தி­ய­தை­ய­டுத்து இரு நாடு­க­ளுக்­கு­மி­டை­யி­லான பதற்ற நிலை அதி­க­ரித்­துள்­ளது. ரஷ்யா சிரிய அர­சாங்­கத்­திற்கு ஆத­ர­வாக அந்­நாட்­டி­லுள்ள ஐ.எஸ். தீவி­ர­வா­தி­க­ளுக்கும் ஏனைய போராளி குழுக்­க­ளுக்கும் எதி­ராக கடந்த செப்­டெம்பர் மாதத்­தி­லி­ருந்து வான் தாக்­கு­தல்­களை நடத்தி வரு­கி­றது.
இந்­நி­லையில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை அந்­நாட்டு நேரப்­படி 11.46 மணிக்கு குறிப்­பிட்ட ரஷ்ய எஸ்.யு-–34 விமானம், ரஷ்ய மொழி­யிலும் ஆங்­கி­லத்­திலும் தம்மால் விடுக்­கப்­பட்ட எச்­ச­ரிக்­கை­களை அலட்­சியம் செய்து துருக்­கிய வான் பரப்பைக் கடந்து சென்­ற­தாக துருக்­கிய வெளி­நாட்டு அமைச்சால் வெளியி­டப்­பட்­டுள்ள அறிக்­கையில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.
இந்த சம்­பவம் குறித்து ஆஜ­ராகி விளக்­க­ம­ளிக்க துருக்­கி­யி­லுள்ள ரஷ்ய தூத­ருக்கு அழைப்­பாணை அனுப்­பப்­பட்­டுள்­ளது.
இத்­த­கைய அத்துமீறல்கள் தொடருமானால் ரஷ்யா கடும் பின் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என துருக்கிய ஜனாதிபதி தாயிப் எர்டோகன் சனிக்கிழமை எச்சரித்துள்ளார்.    நன்றி வீரகேசரி 










ஸிகா வைரஸ் பரவல் தொடர்பில் அவசரகால நிலைமை : வெளிநாட்டடு பயணங்கள் ரத்து




03/02/2016 சர்வதேச சுகாதார ஸ்தாபனமானது ஸிகா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதையொட்டி சர்வதேச பொது சுகாதார அவசரகால நிலைமையொன்றை திங்கட்கிழமை பிரகடனப்படுத்தியுள்ளது.
நுளம்புகளால் பரவும் இந்த வைரஸ் தாக்கம் காரணமாக குழந்தைகள் குறைபாடுகளுடனும் சிறிய தலைகளுடனும் பிறப்பதாக நம்பப்படுகின்ற நிலையிலேயே மேற்படி பிரகடனம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த வைரஸ் எல் சல்வாடோர், பிரேசில், பிரெஞ் பொலினேசியா ஆகிய நாடுகளில் மிக மோசமாக பரவி வருவதாக உலக சுகாதார ஸ்தாபனத்தைச் சேர்ந்த மருத்துவ கலாநிதி புரூஸ் அயில்வார்ட் தெரிவித்தார்.
மேற்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட பிராந்தியங்களில் வைரஸ் தொற்றை கண்டறிவதற்கான பரிசோதனைகளை மேற்கொள்ளல் மற்றும் தொற்றைத் தடுத்தல் உள்ளடங்கலான நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்த அவசர காலநிலை பிரகடனம் தேவையாகவுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது.
அதன் பிரகாரம் இந்தப் பிரகடனம் வைரஸை இனங்காணல், வைரஸ் பரவலை முறியடிப்பதற்கும் அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குணப்படுத்துவதற்குமான ஆய்வுகளை மேற்கொள்ளல் என்பவற்றை முன்னெடுக்க வழிவகை செய்வதாக உள்ளது.
சுவிட்ஸர்லாந்தின் ஜெனிவா நகரில் இடம்பெற்ற சர்வதேச உலக சுகாதார ஒழுங்குபடுத்தல் அவசரகால சபையின் முதலாவது கூட்டத்தின் போது ஸிகா வைரஸ் பரவல் வழமைக்கு மாறான நிகழ்வொன்றாகக் விபரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அந்த சபையின் கூட்டத்தின் போது ஸிகா வைரஸ் சர்வதேச கவலைக்குரிய பொது சுகாதார அவசரகால நிலைமையொன்றை தோற்றுவித்துள்ளதை அதன் உறுப்பினர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
கர்ப்பிணி பெண்கள் அல்லது கர்ப்பம் தரிக்க முயற்சிக்கும் பெண்கள் ஸிக்கா வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் அல்லது தள்ளி வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
ஸிகா வைரஸ் அபாயகரமான நிலையிலுள்ளதாக கடந்த வாரம் உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.    நன்றி வீரகேசரி 










கிரேக்கத் தீவில் குவிந்துள்ள உயிர்காப்பு மேலங்கிகள்

03/02/2016 ஆபிரிக்க மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து ஆபத்து மிக்க படகு பயணத்தை மேற்கொண்டு கிரேக்கத் தீவான லெஸ்பொஸை வந்தடையும் குடியேற்றவாசிகளின் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் மேற்படி குடியேற்றவாசிகளால் அணியப்பட்டு கைவிடப்பட்ட பல்லாயிரக்கணக்கான உயிர் காப்பு மேலங்கிகள் அந்த தீவுப் பிராந்தியத்திலுள்ள மொலிவொஸ் கிராமத்தில் 10 ஏக்கர் நிலப் பரப்பில் 5 மீற்றர் உயரத்துக்கு குவிந்திருக்கும் காட்சி ஆளற்ற விமானத்தைப் பயன்படுத்தி படமாக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதத்தில் கிரேக்கத் தீவுகளை தினசரி சுமார் 2,000 குடியேற்றவாசிகள் வந்தடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் தரவுகள் கூறுகின்றன.

நன்றி வீரகேசரி










தொழு­கையில் கலந்­து­கொள்ளத் தவ­றிய 14 வயது சிறு­வ­னுக்கு பெற்றோர் முன்­னி­லையில்  மர­ண­தண்­டனை

06/02/2016 ஐ.எஸ். தீவி­ர­வா­திகள் தொழு­கையில் கலந்து கொள்ளத் தவ­றிய 14 வயது சிறுவன் ஒரு­வ­னுக்கு அவ­னது பெற்றோர் முன்­னி­லையில் தலையைத் துண்­டித்து மர­ண­தண்­டனை நிறை­வேற்­றி­யுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

கடந்த சனிக்கி­ழமை நிறை­வேற்­றப்­பட்ட இந்த மர­ண­தண்­டனை குறித்து சர்­வ­தேச ஊட­கங்கள் நேற்று வெள்­ளிக்­கி­ழமை செய்­தி­களை வெளி­யிட்­டுள்­ளன.
வட சிரி­யா­வி­லுள்ள ஜரா­புலஸ் நகரைச் சேர்ந்த மேற்­படி சிறுவன் அந்­ந­க­ரி­லுள்ள மத்­திய பள்­ளி­வா­சலில் கடந்த வாரம் வெள்­ளிக்­கி­ழமை இடம்­பெற்ற தொழு­கையில் கலந்து கொள்ளத் தவ­றி­ய­தை­ய­டுத்து கைது செய்­யப்­பட்டான்.
அவன் மீது மத எதிர்ப்பு நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டமை மற்றும் மதத்தைக் கைவிட்­டமை போன்ற குற்­றச்­சாட்­டுகள் சுமத்­தப்­பட்­டி­ருந்­தன.
இத­னை­ய­டுத்து அந்த சிறு­வ­னுக்கு அவன் தாய் மற்றும் தந்தை உள்­ள­டங்­க­லான பெருந்தொகையான மக்கள் முன்னிலையில் தலையைத் துண்டித்து மரணதண்டனை நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. நன்றி வீரகேசரி








தாய்வானில் பயங்கர நிலநடுக்கம்: இடிபாடுகளிலிருந்து 221 பேர் மீட்பு

07/02/2016 தாய்வானில் நேற்று சனிக்கிழமை அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. 6.4 ரிச்டர் அளவில் இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் பதிவானதாக தாய்வான் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலநடுக்கத்தில் இதுவரை 11 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
அத்துடன், 475 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். யூஜிங் நகரின் தென்கிழக்கே 36 கி.மீ தொலைவில் உள்ள இடத்தில் பூமிக்கு அடியில் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


நன்றி வீரகேசரி










பீஜிங்கில் நில­ந­டுக்கம்: இருவர் பலி, 34 பேர் படு­காயம்



07/02/2016 பீஜிங்கில் நேற்றுக் காலை 03:30 மணி­ய­ளவில் 6.7 ரிச்டர் அள­வி­லான பாரிய நில­ந­டுக்கம் ஒன்று இடம்­பெற்­றுள்­ள­தாக வெளி­நாட்டு ஊட­கங்கள் செய்தி வெளி­யிட்­டுள்­ளன.
மேற்­படி நில­ந­டுக்­க­மா­னது, பீஜிங் கௌசிங் என்ற இடத்­தி­லேயே இடம்­பெற்­றுள்­ளது. இதனால் பாரிய சேதங்கள் இடம்­பெற்­றுள்­ளன.
இரு சட­லங்கள் மீட்­கப்­பட்­ட­துடன், இது­வரை 34 பேர் காயங்­க­ளுக்கு உள்­ளா­கி­யுள்ள நிலையில் மருத்­து­வ­ம­னை­களில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளனர்.
தொடர்­மாடி குடி­யி­ருப்பு கட்­டடம் இடிந்து முற்­றாக விழுந்­துள்­ள­மையால் அதில் வசிக்கும் சுமார் 123 பேரின் நிலை இன்னும் வெளி­யா­க­வில்லை.
இத­ன­டிப்­ப­டையில் மீட்பு பணிகள் தீவி­ர­மாக இடம்­பெற்­று­வரும் நிலையில், கன ரக இயந்­தி­ரங்­களின் உதவி கொண்டு மேலும் மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.  நன்றி வீரகேசரி










ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 37 பேர் பலி!

07/02/2016 குஜ­ராத்தில் ஆற்றில் அரச பேருந்து கவிழ்ந்து விபத்­துக்­குள்­ளா­னதில் 37 பேர் பலி­யா­கி­யுள்ள சம்­பவம் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.
குஜராத் மாநி­லத்தின் நவ்­சாரி மாவட்­டத்தில் உள்ள நவ்­சாரி நகரில் இருந்து உகாய் பகு­திக்கு அரச பேருந்து ஒன்று சென்­றுள்­ளது. பேருந்தில் சுமார் 60 பய­ணிகள் பய­ணித்­துள்­ளனர். பேரூந்து சுபா கிரா­மத்தில் உள்ள பூர்ணா நதிக்கு மேல் கட்­டப்­பட்­டுள்ள பாலத்தில் சென்று கொண்­டி­ருந்த போது, எதிரே வந்த வாக­னத்­துக்கு வழி­வி­டு­வ­தற்­காக ஓட்­டுநர் பேருந்தை இட­து­பு­ற­மாக திருப்­பி­யுள்ளார். அப்­போது ஓட்­டு­நரின் கட்­டுப்­பாட்டை இழந்து கண்­ணி­மைக்கும் நேரத்தில் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து நீரில் மூழ்­கி­யது. இந்தக் கோர விபத்தில் 20 பய­ணிகள் சம்­பவ இடத்­தி­லேயே பரி­தா­ப­மாக உயி­ரி­ழந்­துள்­ள­துடன், ஏரா­ள­மானோர் படு­கா­ய­ம­டைந்­தனர். அவர்கள் மீட்­புக்­கு­ழு­வி­னரால் மீட்­கப்­பட்டு அருகில் உள்ள மருத்­து­வ­ம­னை­களில் சிகிச்­சைக்­காக சேர்க்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இந்­நி­லையில், ஓட்­டுநர் மற்றும் நடத்­துநர் உட்­பட 15 பேர் பேருந்­தி­லேயே சிக்­கி­யி­ருப்­பதால், அவர்கள் உயிர்­பி­ழைக்க வாய்ப்பு இல்லை என கூறப்­ப­டு­கி­றது. இதனால் உயி­ரி­ழந்­தோரின் எண்­ணிக்கை 37 ஐ தாண்டி உள்­ள­தாக மீட்­புக்­கு­ழு­வினர் தெரி­வித்­துள்­ளனர். இந்த விபத்து தொடர்­பாக விசா­ர­ணைகள் நடை­பெற்று வரு­கின்­றன.
இந்­நி­லையில், இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு 4 இலட்சம் ரூபா நிவாரணம் வழங்கப்படும் என்று குஜராத் மாநில முதல்வர் ஆனந்திபென் பட்டேல் தெரி வித்துள்ளார்.  நன்றி வீரகேசரி