தமிழ் சினிமா


மகாபலிபுரம்


தமிழ் சினிமாவில் நண்பர்களின் கதை இதுவரை பல வந்துள்ளது. அந்த வகையில் இயக்குனர் டான் சாண்டி இயக்கத்தில் வெளிவந்த படம் தான் மகாபலிபுரம்.
கதை
கருணா, ரமேஷ், கார்த்திக் ஆகியோர் டூரிஸ் கைடாக வேலை பார்த்து வருகிறார்கள். வெற்றி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். வெற்றியும் அங்கனாவும் காதலித்து வர, இவர்கள் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர், நண்பர்கள் இவர்களுக்கு திருமணம் செய்து வைத்து தனி வீட்டில் தங்க வைக்கிறார்கள்.
சிற்பம் செதுக்கும் தொழில் செய்து வரும் விநாயக், நாயகி விர்த்திகாவை பார்க்கிறார். பார்த்தவுடனே அவர் மீது காதல் கொள்ள, வழக்கம் போல் முதலில் விநாயக் காதலை மறுக்கும் விர்த்திகா, பின்னர் காதலை ஏற்றுக் கொள்கிறார்.
இந்நிலையில் நண்பர்கள் எல்லோரும் இண்டர்நெட்டில் படம் பார்க்கும் பொழுது, வெற்றியின் மனைவியான அங்கனாவின் ஆபாசப் படத்தை பார்க்கிறார்கள். இதைப் பார்த்து அதிர்ச்சியடையும் வெற்றி, வீட்டிற்குச் சென்று அங்கனாவை பார்க்கிறார். ஆனால் அங்கனாவோ வீட்டில் பிணமாக கிடக்கிறார். இதைப் பார்த்த வெற்றியும் மாடியில் இருந்து விழுந்து இறந்து விடுகிறார். இதனால் நண்பர்கள் மனவேதனை அடைகிறார்கள்.
அதன்பின்னர், கருணாகரன் கவுன்சிலராக வேண்டும் என்று துரையிடம் கேட்கிறார். வெளிநாட்டினருடன் இணைந்து போதை மருந்து தொழிலில் ஈடுபட்டு வரும் துரை, விநாயக்கின் காதலியான விர்த்திகாவை தன் வெளிநாட்டு நண்பர்களுக்கு விருந்தாக அழைத்து வரும்படியும் இல்லையெனில் கவுன்சிலர் பதவியை விநாயக்கிடம் கொடுப்பதாக கருணாகரனிடம் துரை கூறுகிறார்.
கவுன்சிலர் பதவிக்கு ஆசைப்பட்டு கருணாகரனும் விநாயக் காதலியான விர்த்திகாவிடம் பொய் சொல்லி துரையின் இடத்துக்கு அழைத்து வருகிறார். அதன்பின் அங்கு என்ன நடந்தது? நண்பர்களின் வாழ்க்கை என்ன ஆனது? என்பதை பல்வேறு திருப்பங்களுடன் சொல்லியிருக்கிறார்கள்.
க்ளாப்ஸ்
கருணா மற்றும் அவருடைய நண்பர்களாக வருபவர்களின் காமெடி நன்றாக உள்ளது. மேலும் கர்ணாவின் வில்லன் முகம் ரசிகர்களுக்கு புதிதாக உள்ளது. விர்த்திகா யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கே பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம். ஒளிப்பதிவாளரும் தன் பங்கிற்கு மகாபலிபுரத்தை அழகாக படம் பிடித்து காட்டியுள்ளார்.
பல்ப்ஸ்
திரைக்கதை சில இடங்களில் தடுமாறுகிறது. பார்த்து பழகி போன சில காட்சிகள்.
மொத்தத்தில் மகாபலிபுரத்திற்கு ஒரு முறை ட்ரீப் அடிக்கலாம்.
ரேட்டிங்-2.75/5
நன்றி  cineulagam 

No comments: