பாகிஸ்தானின் லாகூர் நகரிலுள்ள தேவாலயங்கள் மீது தற்கொலை குண்டுத் தாக்குதல்கள்; 14 பேர் பலி
நைஜீரிய கிராமத்தில் துப்பாக்கிதாரிகள் தாக்குதல்; 95 பேர் உயிரிழப்பு
ஆப்கானில் தலிபான் தற்கொலை குண்டுதாரி தாக்குதல்; 7 பேர் பலி; 40 பேர் காயம்
பாகிஸ்தானின் லாகூர் நகரிலுள்ள தேவாலயங்கள் மீது தற்கொலை குண்டுத் தாக்குதல்கள்; 14 பேர் பலி
பாகிஸ்தானிய லாகூர் நகரிலுள்ள தேவாலயங்களை இலக்குவைத்து இரு தலிபான் தற்கொலைக் குண்டுதாரிகள் ஞாயிற்றுக்கிழமை நடத்திய தாக்குதலில் குறைந்தது 14 பேர் பலியானதுடன் 70 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
யுஹனபாத் பிரதேசத்தில் ஒன்றுக்கொன்று சுமார் அரை மைல் தொலைவிலுள்ள இரு தேவாலயங்களில் ஞாயிறு ஆராதனைக்கூட்டங்கள் இடம்பெற்ற வேளையிலேயே இந்த குண்டு வெடிப்புக்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த குண்டு வெடிப்புக்களால் தேவாலயத்தின் ஜன்னல் கண்ணாடிகள் சேதத்திற்குள்ளாகியுள்ளன.பலியானவர்களில் குறைந்தது ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளடங்குகி றார்.
இந்த தாக்குதலுடன் தொடர்புபட்டவர் என கருதப்படும் இருவர் அங்கு கூடியிருந்த கும்பலால் அடித்து உதைக்கப்பட்டு கொல்லப்பட்டதுடன் அவர்களது சடலங்களுக்குத் தீ வைக்கப்பட்டது.
மேற்படி தாக்குதல் இடம்பெற்ற பிரதேசங்களிலிருந்து இரு சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தாமே இந்த தாக்குதலை நடத்தியதாக தெஹ்ரீக் ஈ-தலிபான் போராளி குழுவின் ஜமாத் உல் - அஹ்ரர் பிரிவு உரிமை கோரியுள்ளது.மத சட்டத்தை நடைமுறைப்படுத்தும் இலக்கில் தாக்குதல்களை தொடரப் போவதாக அந்தக் குழு சூளுரைத்துள்ளது.
கிறிஸ்தவர்களைப் பெரும்பான்மையாக கொண்ட யுஹனபாத் பிரதேசத்தில் 100,000 க்கும் அதிகமான கிறிஸ்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர். நன்றி வீரகேசரி
நைஜீரிய கிராமத்தில் துப்பாக்கிதாரிகள் தாக்குதல்; 95 பேர் உயிரிழப்பு
17/03/2015 மத்திய நைஜீரியாவிலுள்ள கிராமமொன்றில் அதிகாலை வேளையில் நடத்தப்பட்ட தாக்குதலில் பெண்கள், சிறுவர்கள் உட்பட பெருந்தொகையானோர் பலியாகியுள்ளனர்.
பெனு மாநிலத்தில் எக்பா கிராமத்தில் இனந்தெரியாத துப்பாக்கிதாரிகள் நடத்திய தாக்குதலில் 95 க்கு மேற்பட்ட கிராமவாசிகள் உயிரிழந்துள்ளதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.
கிராமவாசிகள் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்த வேளையிலேயே இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேற்படி பிராந்தியத்தில் புலானி இனத்துவ குழுவைச் சேர்ந்த கால்நடை வளர்ப்பவர்களுக்கும் விவசாயிகளுக்குமிடையே மோதல்கள் இடம்பெறுவது வழமையாக வுள்ளது. நன்றி வீரகேசரி
ஆப்கானில் தலிபான் தற்கொலை குண்டுதாரி தாக்குதல்; 7 பேர் பலி; 40 பேர் காயம்
ஆப்கானில் தலிபான் தற்கொலை குண்டுதாரி தாக்குதல்; 7 பேர் பலி; 40 பேர் காயம்
19/03/2015 தென் ஆப்கானிஸ்தானில் தலிபான் தற்கொலைக் குண்டுதாரி ஒருவர் டிரக் வண்டியொன்றை செலுத்தி வந்து புதன்கிழமை நடத்திய தாக்குதலில் குறைந்தது 7 பொது மக்கள் பலியானதுடன் 40 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
ஹெல்மண்ட் மாகாணத்திலுள்ள லஷ்கார் காஹ் நகரில் ஆளுநர், மாகாண சபைத் தலைவர், பிரதி மாகாண பொலிஸ் தலைவர் ஆகியோரின் வீடுகளைக் கொண்ட கட்டடத் தொகுதிக்கு அருகில் ட்ரக் வண்டியை செலுத்தி வந்து தற்கொலை குண்டுதாரி தாக்குதலை நடத்தியுள்ளார்.
இந்தச் சம்பவத்தில் ஆளுநரும் மாகாண சபைத் தலைவரும் பிரதி மாகாண பொலிஸ் தலைவரும் உயிர் தப்பியுள்ளனர்.
மேற்படி தாக்குதலானது ஆட்கடத்தல் தொடர்பில் கருத்தரங்கு ஒன்று நடைபெற்ற மண்டபமொன்றில் கூடியிருந்த அரசாங்க உத்தியோகத்தர்கள், பொதுச் சேவை உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை இலக்கு வைத்து நடத்தப்பட்டுள்ளதாக மாகாண பிரதி ஆளுநர் மொஹமட் ஜான் ரஸோல்யர் தெரிவித்தார்.
இந்தத் தாக்குதலில் அந்த வளாகத்திலிருந்த கட்டடங்கள் சில சேதமடைந்துள்ளன.மேற்படி தாக்குதலை தாமே நடத்தியதாக தலிபான் போராளிகள் உரிமை கோரியுள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்தவர்களில் மாகாண சபை பேச்சாளர் ஓமர் ஸஹ்வக் உள்ளடங்குகிறார். நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment