இலங்கைச் செய்திகள்

. நாடு கடத்தப்பட்ட தமிழ் அகதிகள் மீது சித்திரவதை: பிரித்தானியா

மோடி, ஜெயலலிதாவுக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்

ஒத்துழைக்கவே மாட்டோம் : பேரவையில் இலங்கை திட்டவட்டம்

விசாரணைக்கு ஒத்துழையுங்கள் : நவ­நீதம் பிள்ளை

விசாரணையாளர்களுக்கு அனுமதி வழங்கவேண்டும் : அமெரிக்கா,பிரிட்டன் கோரிக்கை

மாணவன் தெஹிவளையில் சடலமாக மீட்பு

சொந்தக் காணிகளில் மக்கள் மீளக்குடியேற்றப்பட வேண்டும் : சலோகா பெயானி

ஊடகவியலாளர்களை பாதுகாக்க விசேட செயற்றிட்டம் அவசியம் : நவிப்பிள்ளை

 ஐ.நா. விசாரணைக்குழுவும் அரசாங்கத்தின் நிலைப்பாடும்

வண்டியை நிறுத்தியதன் பின்னரே நண்பன் மீது மதுபோதையில் இருந்த பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்:உயிரிழந்தவரின் நண்பன் வாக்குமூலம் 

 பாரிய மண்சரிவால் அட்டன்-கொழும்பு வீதி போக்குவரத்து பாதிப்பு, ரயில் சேவையும் பாதிப்பு

நாடு கடத்தப்பட்ட தமிழ் அகதிகள் மீது சித்திரவதை: பிரித்தானியா

12/06/2014 
பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட தமிழர்கள் சித்திரவதை மற்றும் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்படுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் பிரித்தானிய அரசாங்கம் விசாரணை செய்யவுள்ளது.



பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் வில்லியம் ஹேக் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
லண்டனில் நேற்று ஆரம்பமான வன்முறையின் போது பாலியல் வன்புணர்வை தடுக்கும் பிரகடனத்துக்கான மாநாட்டின் ஆரம்ப நாளில் அகதிகள் சட்டத்தரணிகள் மற்றும் குழுக்கள் முன்வைத்த முறைப்பாட்டின் பின்னரே ஹேக் தமது தகவலை வெளியிட்டார்.


அண்மைய வாரங்களில் நாடு கடத்தப்பட்ட தமிழ் அகதிகளும் இவ்வாறான சித்திரவதைகளுக்கு உட்பட்டுள்ளதாக சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டினார்கள்.
இதற்கு பதில் வழங்கிய வில்லியம் ஹேக்,
அகதிகள் விடயத்தை பிரித்தானிய உள்துறை அமைச்சே கையாளுகிறது என்று குறிப்பிட்டார். எனவே அந்த அமைச்சு இந்த விடயத்தில் விசாரணை நடத்துவதாக உறுதியளித்துள்ளதாக ஹேக் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவை பொறுத்தவரை அது அடைக்கலம் கோருவோருக்கு திறந்த நாடு எனினும் ஒழுங்குகள் உரிய முறையில் பேணப்படும். எவராவது இந்த ஒழுங்குகள் பேணப்படவில்லை என்று உணர்ந்தால், அது தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என்று ஹேக் குறிப்பிட்டுள்ளார்
இதேவேளை நேற்றைய ஆரம்ப நிகழ்வில் உரையாற்றிய ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான பிரதிநிதி அஞ்சலினா ஜொய்லி, மாநாட்டில் பிரித்தானியாவில் உள்ள விடுதலைப்புலிகளின் பெண் போராளிகள் தொடர்பில் பேசவுள்ளதாக குறிப்பிட்டார்.
இந்தநிலையில் அவர்களுக்கு ஏற்பட்ட பாலியல் மற்றும் துஸ்பிரயோக வன்முறைகள் தொடர்பில் உயர்ஸ்தானிகர் அன்டனியே கட்டரஸ் நாளை வியாழக்கிழமை மாநாட்டுக்கு வரும் போது கவனத்துக்கு கொண்டு வரவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதேநேரம் இலங்கையில் பொலிஸும் இராணுவமும் சித்திரவதைகளை ஒரே மாதியாக செயற்படுத்தி வருவதாக சித்திரவதை தொடர்பான கொள்கை வகுப்பாளர் பேனியட் லௌவிஒக்ஸ் குறிப்பிட்டார்.
இதற்கிடையில் குடிவரவு தொடர்பான சட்டத்தரணியாக செயற்படும் குலசேகரம் கீதாத்தனன் தமது உரையில், பிரித்தானியாவில் இருந்து நாடு கடத்தப்படும் தமிழ் அகதிகள் இலங்கையில் பாரிய சித்திரவதைகளுக்கு உள்ளாகின்றனர்.
எனினும் பிரித்தானிய தொடர்ந்தும் தமிழர்களை நாடு கடத்துவதாக அவர் குற்றம் சுமத்தினார். நன்றி வீரகேசரி 
 
மோடி, ஜெயலலிதாவுக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்
 10/06/2014  இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கும் எதிராக கொழும்பில் அமைந்துள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை விவகாரத்தில்இவர்கள் தலையிட வேண்டாம் என்று கூறியே ஆரப்பட்டக்காரர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் ஜெயலலிதாவின் உருவப்பொம்மையை தீயிட்டு எரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Pic by : J.Sujeewakumar)
 நன்றி வீரகேசரி
 ஒத்துழைக்கவே மாட்டோம் : பேரவையில் இலங்கை திட்டவட்டம்
 11/06/2014  இலங்­கையில் இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் மனித உரிமை மீறல் விவ­கா­ரங்கள் தொடர்­பான விசா­ர­ணை­களை மேற்­கொள்­வ­தற்­காக, ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேரவை­யினால்நிய­மிக்­கப்­பட்­டுள்ள விசா­ரணைக் குழு­வி­னரின் பரந்­து­பட்டவிசா­ர­ணை­க­ளுக்கு ஒத்­து­ழைப்பு வழங்­க­மாட்டோம் என்று ஜெனிவா மனித உரிமைப் பேர­வைக்­கான இலங்­கையின் வதி­விட பிர­தி­நிதி ரவி­நாத ஆரி­ய­சிங்க தெரி­வித்தார்.
அத்­துடன் இலங்­கைக்கு எதி­ராக நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ர­ணையை முழு­மை­யான முறையில் நிரா­க­ரிப்­ப­தா­கவும் ரவி­நாத ஆரி­ய­சிங்க குறிப்­பிட்­டுள்ளார்.
ஜெனி­வாவில் அமைந்­துள்ள ஐக்­கிய நாடுகள் சபை மனித உரிமைப் பேர­வையில் நேற்று ஆரம்­ப­மான 26 அவது கூட்டத் தொடரின் முதல் நாள் அமர்வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.
அமர்வில் ஆரம்­பத்தில் உரை­யாற்­றிய ஐக்­கிய நாடு­களின் மனித உரிமை ஆணை­யாளர் நவ­நீதம் பிள்ளை இலங்­கையில் பொறுப்­புக்­கூ­ற­லையும் நல்­லி­ணக்­கத்­தையும் ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான பரந்­து­பட்ட விசா­ர­ணையை மேற்­கொள்­வ­தற்­கான நிபு­ணர்கள் மற்றும் விசேட அறிக்­கை­யா­ளர்கள் உள்­ள­டங்­கிய விசா­ரணைக் குழுவை நிய­மித்­துள்­ள­தாக குறிப்­பிட்டார்.
இந்­நி­லையில் ரவி­நாத ஆரி­ய­சிங்க அங்கு மேலும் கூறி­ய­தா­வது,
இலங்­கை­யினால் இந்த சபைக்கு விநி­யோ­கி­கப்­பட்­டுள்ள அறிக்­கையின் ஊடாக இலங்­கை­யா­னது ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வை­யுடன் எவ்­வா­றான ஈடு­பாட்­டுடன் செயற்­ப­டு­கின்­றது என்­பது உறுப்பு நாடு­க­ளுக்கு தெரிந்­தி­ருக்கும். அத்­துடன் புலிகள் தோற்­க­டிக்­கப்­பட்­டாலும் அவர்­களின் சர்­வ­தேச வலை­ய­மைப்­பா­னது இலங்­கைக்கும் பிராந்­தி­யத்­துக்கும் எவ்­வா­றான பாது­காப்பு சவால்­களை உரு­வாக்­கி­யுள்­ளது என்­பதும் புரிந்­தி­ருக்கும்.
இந்­நி­லையில் பரந்­து­பட்ட விசா­ரணை தொடர்பில் ஆணை­யாளர் இங்கு அறி­வித்­துள்ளார். இலங்­கையை பொறுத்­த­வரை இலங்­கைக்கு எதி­ரான பிரே­ர­ணையை முழு­மை­யாக நிரா­க­ரிக்­கின்­றது. அத்­துடன் இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் மனித உரிமை மீறல் விவ­கா­ரங்கள் தொடர்­பான விசா­ர­ணை­களை மேற்­கொள்­வ­தற்­காக, ஜக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் சபை­யினால் நிய­மிக்­கப்­பட்­டுள்ள விசா­ரணைக் குழு­வி­னரின் பரந்­து­பட்ட விசா­ர­ணை­க­ளுக்கு ஒத்­து­ழைப்பு வழங்­க­மாட்டோம் என்­ப­த­னையும் தெளி­வாக குறிப்­பி­டு­கின்றோம்.
இலங்­கைக்கு எதி­ரான பிரே­ர­ணை­யா­னது ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையின் அரை­வா­சிக்கும் குறை­வான உறுப்பு நாடு­களின் ஆத­ர­வுடன் நிறை­வேற்­றப்­பட்­டது. இது ஐக்­கிய நாடு­களின் உறுப்பு நாடு­களின் இறை­மையை மீறு­வ­தாக அமைந்­துள்­ளது. அத்­துடன் சர்­வ­தேச சட்­டங்­களின் விதி­மு­றைகள் மீறு­வ­தா­கவும் அமைந்­துள்­ளது.
இந்தப் பிரே­ர­ணை­யா­னது உள்­நாட்டு நல்­லி­ணக்க செயற்­பாட்டை கடு­மை­யாக பாதிக்கும். இலங்கை விட­யத்தில் முற்­கூட்­டிய தீர்­மானம் மற்றும் பக்­கச்­சார்பு செயற்­பாடு என்­பன மனித உரிமை ஆணை­யாளர் மற்றும் மனித உரிமை பேர­வை­யிடம் தொடர்ந்து காணப்­ப­டு­கின்­றது.
மேலும் பிரே­ர­ணை­யா­னது மனித உரிமைப் பேர­வையின் விசா­ரணை மற்றும் உள்­நாட்டு விசா­ரணை ஆகிய இரண்­டையும் கோரு­கின்­றது. அதன் இரண்டாம் பந்­தியும் பத்தாம் பந்­தியும் முரண்­பட்­டுள்­ளன. அவை சர்­வ­தேச சட்­டத்தின் அடிப்­படை விதி­மு­றை­களை மீறு­கின்­றன.
இலங்­கையை பொறுத்­த­வரை ஏற்­க­னவே முன்­கொண்டு செல்­லப்­ப­டு­கின்ற உள்­நாட்டு நல்­லி­ணக்க செயற்பாடுகளில் ஈடுபட்டுவருகின்றது. பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க விடயத்தில் இலங்கையினால் தற்போது முன்னெடுக்கப்படுகின்ற செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்பதனை வலியுறுத்துகின்றேன். இந்த விடயத்தில் நேர்மையான முறையில் இலங்கை மக்கள் மீது அக்.கறை கொண்டுள்ள நாடுகளுடனும் அரச சார்பற்ற நிறுவனங்களுடனும் அரசாங்கம் வேலை செய்யும்.
 நன்றி வீரகேசரி









விசாரணைக்கு ஒத்துழையுங்கள் : நவ­நீதம் பிள்ளை

11/06/2014 இலங்­கையில் பொறுப்­புக்­கூ­ற­லையும் நல்­லி­ணக்­கத்­தையும் ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான பரந்­து­பட்ட விசா­ர­ணையை மேற்­கொள்­வ­தற்­கான நிபு­ணர்கள் மற்றும் விசேட அறிக்­கை­யா­ளர்கள் உள்­ள­டங்­கிய விசா­ரணைக் குழுவை நிய­மித்­துள்ளேன். இந்த உண் ­மையை கண்­ட­றியும் விசா­ரணை செயற்­பாட்­டுக்கு இலங்கை ஒத்­து­ழைப்பு வழங்­க­வேண்டும் என்று ஐக்­கிய நாடு­களின் மனித உரிமை ஆணை­யாளர் நவ­நீதம் பிள்ளை கோரிக்கை விடுத்தார்.


 

விசா­ரணை செயற்­பாட்டை ஐக்­கிய நாடு­களின் மனித உரிமைப் பேர­வை­யினால் நிய­மிக்­கப்­பட்­டுள்ள உத்­தி­யோ­கத்­தர்­களே நடத்­து­வார்கள் என்றும் நிபு­ணர்கள் மற்றும் விசேட அறிக்­கை­யா­ளர்கள் அவர்­க­ளுக்கு உத­வு­வார்கள் என்றும் நவ­நீதம் பிள்ளை குறிப்­பிட்டார்.

 

இலங்­கையில் கடந்த மாதம் யுத்தம் முடி­வ­டைந்து ஐந்­தா­வது நிறைவு விழா கொண்­டா­டப்­பட்­டது. ஆனால் பயங்­க­ர­வாதம் மற்றும் மோதல்­க­ளினால் ஏற்­பட்ட தழும்­புகள் இன்னும் ஆற்­றுப்­ப­டுத்­தப்­ப­ட­வேண்­டி­யுள்­ளன என்றும் அவர் குறிப்­பிட்டார். ஜெனி­வா வில் அமைந்­துள்ள ஐக்­கியநாடுகள் சபை மனித உரிமைப் பேர­வையில் நேற்று ஆரம்­ப­மான 26 ஆவது கூட்டத் தொடரின் முதல் நாள் அமர்வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

 

'' எனது அலு­வ­லகம் தற்­போது உத்­தி­யோ­கத்­தர்கள் குழாம் ஒன்றை நிய­மித்­துள்­ளது. நிபு­ணர்கள் மற்றும் விசேட அறிக்­கை­யா­ளர்கள் ஆகி­யோரின் உத­வி­யுடன் இலங் ­கையில் பொறுப்­புக்­கூ­ற­லை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான பரந்­து­பட்ட விசா­ர­ணையை இந்த விசா­ரணைக் குழு நடத்தும். ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேரவை வழங்­கி­யுள்ள ஆணைக்கு அமைய இந்த விசா­ரணை முன்­னெ­டுக்­கப்­படும் '' என்று ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் நவ­நீதம் பிள்ளை தெரி­வித்தார்.

 

மேலும் இலங்­கையில் கடந்த மாதம் யுத்த முடி­வ­டைந்து ஐந்­தா­வது நிறைவு விழா கொண்­டா­டப்­பட்­டது. ஆனால் பயங்­க­ர­வாதம் மற்றும் மோதல்­க­ளினால் ஏற்­பட்ட தழும்­புகள் இன்னும் ஆற்­றுப்­ப­டுத்­தப்­ப­ட­வேண்­டி­யுள்­ளன என்றும் நவ­நீதம் பிள்ளை குறிப்­பிட்டார்.

 

தனது இறுதி மனித உரிமைப் பேரவை கூட்டத் தொடரில் உரை­யாற்­றிய நவ­நீதம் பிள்ளை 2006 ஆம் ஆண்­டி­லி­ருந்து தனது பதவிக் காலத்தில் பெறப்­பட்ட அடை­வு­மட்­டங்­களை விளக்­கினார்.

 

ஐக்­கிய நாடு­களின் மனித உரிமை ஆணை­யாளர் நவ­நீதம் பிள்ளை அங்கு மேலும் கூறி­ய­தா­வது பயங்­க­ர­வா­தத்தின் அச்­சு­றுத்­த­லா­னது மிகவும் தெளி­வான சவா­லாகும். ஆனால் பயங்­க­ர­வா­தத்­துக்கு எதி­ரான செயற்­பாட்டு நுட்­பங்கள் வாழ்­வ­தற்­கான உரிமை மற்றும் காணாமல் போதல்­க­ளி­லி­ருந்து மீள்தல், தடுத்து வைத்­தல்கள், சித்­தி­ர­வ­தைகள் ஆகிய உரி­மை­களை மீறு­வ­தற்கு எதி­ராக போரா­ட­வேண்­டி­யுள்­ளது.

 

பயங்­க­ர­வா­தத்­துக்கு எதி­ரான செயற்­பா­டுகள் சட்­டத்தின் ஆட்­சி­ப­டுத்­த­லையும் மனித உரி­மை­யையும் பாது­காப்­ப­தாக அமை­ய­வேண்டும். அவற்றை குறைத்து மதிப்­பி­டக்­கூ­டாது. சில நாடு­களின் மனித உரிமை நிலை­மை­களை எடுத்­து­ரைத்­த­மைக்­காக பல விமர்­ச­னங்­களை எனது அலு­வ­லகம் எதிர்­கொண்­டது. இந்த விட­யத்தில் ஒவ்­வொரு நாடு­க­ளுக்கும் முக்­கி­ய­மான அக்­கறை உள்­ளது.

 

ஒவ்­வொரு வித­மான ஸ்திர­மின்­மைகள் மற்றும் மோதல்­க­ளிலும் மனித உரிமை மீறல்கள் முக்­கிய விட­யங்­க­ளாக உள்­ளன. மிகவும் கவ­ன­மாக எனது அலு­வலம் மேற்­கொண்ட ஆய்­வுகள் மற்றும் மீறல் குற்­றச்­சாட்­டுக்கள் குறித்த விசா­ரணை கோரிக்­கைகள் என்­பன கற்­சுவர் மற்றும் மறுப்­புக்­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டன.

 

கடந்த ஆறு வரு­டங்­களில் நான் மனித உரிமை ஆணை­யாளர் என்ற வகையில் பெற்ற அனு­ப­வங்கள் ஆழ­மா­ன­வை­யாகும். மனித உரிமைப் பாது­காப்பில் காணப்­ப­டு­கின்ற இடை­வெ­ளி­களை கண்­டு­பி­டிப்­பதில் ஒவ்­வொரு நாட்­டுக்கும் அக்­கறை உள்­ளது. இது மனித உரிமை பேரவை அலு­வ­லகம் உள்­ளிட்ட அமைப்­புக்­க­ளி­னதும் கட்­ட­மைப்­புக்­க­ளி­னதும் வகி­பா­க­மாகும். இது மனித உரி­மை­க­ளுக்­காக வாதாடும் தன்­மை­யாகும்.

 

அனைத்து மனித உரிமை மீறல்­களும் சட்­ட­வி­ரோ­த­மா­ன­வை­யாகும். விமர்­சனம் செய்வோர், அதி­ருப்­தி­யா­ளர்கள், புலம்­பெயர் மக்கள் ,சிறு­பான்­மை­யினர், சுதேச மக்கள் என யாருக்கு எதி­ரான மனித உரிமை மீற­லாக இருந்­தாலும் அவை சட்­ட­வி­ரோ­த­மா­ன­வை­யாகும் என்றும் அவர் நேற்­றைய அமர்வில் குறிப்­பிட்டார்.

 

நல்­லி­ணக்க ஆணைக்­குழு கவனம் செலுத்­திய காலப் பகு­தியில் இலங்­கையில் இரு­த­ரப்­பி­ன­ராலும் இழைக்­கப்­பட்­ட­தாகக் கூறப்­படும் குற்­றங்கள் மற்றும் மோச­மான மனித உரிமை மீறல்கள், துஷ்­பி­ர­யோ­கங்கள் தொடர்­பாக ஐக்­கிய நாடுகள் சபை மனித உரிமைப் பேர­வையின் விரி­வான சுதந்­தி­ர­மான விசா­ர­ணையை மேற்­கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை முன்­வைக்­கப்­பட்டே இலங்­கைக்கு எதி­ரான பிரே­ரணை கடந்த மார்ச் மாதம் நிறை­வேற்­றப்­பட்­டது.

 

அதற்­கேற்­பவே தற்­போது ஐக்­கிய நாடு­களின் மனித உரிமை ஆணை­யா­ள­ரினால் விசா­ரணைக் குழு நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது.

 

இலங்­கையில் பொறுப்­புக்­கூ­ற­லையும் நல்­லி­ணக்­கத்­தையும் ஊக்­கு­வித்தல் என்ற தலைப்­பி­லான இந்தப் பிரே­ர­ணைக்கு ஆத­ர­வாக 23 நாடு­களும் பிரே­ர­ணையை எதிர்த்து 12 நாடு­களும் வாக்­க­ளித்­தன. அத்­துடன் இந்­தியா உள்­ளிட்ட 12 நாடுகள் வாக்­க­ளிப்பில் கலந்­து­கொள்­ளாமல் நடு­நிலை வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

எனினும் கடந்த மார்ச் மாதம் 27 ஆம் திகதி இலங்கைக்கு எதிரான பிரேரணை ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்டபோது அதனை இலங்கை முற்றாக நிராகரித்திருந்தது. இவ்வாறான பிரேரணை ஒன்று தற்போதைய நிலைமையில் அவசியமில்லை என்றும் இது போன்ற செயற்பாடுகளினால் உள்ளக செயற்பாடுகளில் குழப்பம் ஏற்படும் என்றும் இலங்கையின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

கடந்த 2013 ஆம் ஆண்டு மற்றும் 2012 ஆம் ஆண்டிலும் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
நன்றி வீரகேசரி












விசாரணையாளர்களுக்கு அனுமதி வழங்கவேண்டும் : அமெரிக்கா,பிரிட்டன் கோரிக்கை

11/06/2014  ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வை­யினால் நிய­மிக்­கப்­பட்­டுள்ள விசா­ரணைக் குழு­வுடன் இலங்கை ஒத்­து­ழைக்­க­வேண்டும் என்றும் விசா­ர­ணை­யா­ளர்­க­ளுக்கு அனு­மதி வழங்க வேண்டும் என்றும் அமெ­ரிக்­காவும் பிரிட்­டனும் கோரிக்கை விடுத்­துள்­ளன. ஐக்­கிய நாடு­களின் விசா­ரணை செயற்­பாட்­டுடன் ஒத்­து­ழைப்­ப­வர்கள் எந்­த­வி­த­மான அச்­சு­றுத்­தல்­களும் பய­மு­றுத்­தல்­களும் இன்றி செயற்­ப­டு­வ­தற்­கான சூழலை உரு­வாக்­க­வேண்டும் என்றும் இந்த இரண்டு நாடு­களும் ஐ.நா. மனித உரிமைப் பேர­வையின் 26 ஆவது கூட்டத் தொடரின் நேற்­றைய முதல் நாள் அமர்வில் கோரிக்கை விடுத்­துள்­ளன.


 

ஜெனி­வாவில் அமைந்­துள்ள ஐக்­கிய நாடுகள் அமைப்பின் மனித உரிமைப் பேர­வையின் 26 ஆவது கூட்டத் தொடர் நேற்று ஆரம்­ப­மா­ன­துடன் அதில் உரை­யாற்­றிய ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் நவ­நீதம் பிள்ளை இலங்­கையில் பொறுப்­புக்­கூ­ற­லையும் நல்­லி­ணக்­கத்­தையும் ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான விசா­ரணைக் குழுவை நிய­மித்­துள்­ள­தாக குறிப்­பிட்டார்.

 

அதன் பின்னர் உரை­யாற்­றிய அமெ­ரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடு­களின் பிர­தி­நி­திகள் இலங்கை விசா­ர­ணைக்கு ஒத்­து­ழைக்­க­வேண்டும் என்று கோரிக்கை விடுத்­தனர்.

அமெ­ரிக்கா ஜெனிவா மனித உரிமைப் பேர­வைக்­கான அமெ­ரிக்­காவின் இரா­ஜ­தந்­திரி கீத் ஹார்பர் குறிப்­பி­டு­கையில்

இலங்கை விவ­காரம் தொடர்பில் ஐக்­கிய நாடு­களின் விசா­ரணைக் கட்­ட­மைப்பை உரு­வாக்­கி­யமை தொடர்பில் ஐக்­கிய நாடு­களின் மனித உரிமை ஆணை­யா­ள­ருக்கு நன்றி தெரி­விக்­கின்றோம்.

 

இலங்­கையில் நீதி­யையும் பொறுப்­புக்­கூ­ற­லையும் நல்­லி­ணக்­கத்­தையும் ஊக்­கு­விக்­க­வேண்­டிய தேவையை இந்த விசா­ரணை கோடிட்­டுக்­காட்­டு­கின்­றது. எனவே விசா­ரணைக் கட்­ட­மைப்­புடன் முழு­மை­யான ஒத்­து­ழைப்­புடன் செயற்­ப­டு­மாறு இலங்­கையை வலி­யு­றுத்­து­கின்றோம். அந்­த­வ­கையில் விசா­ர­ணை­யா­ளர்­க­ளுக்கு அனு­மதி வழங்­க­வேண்டும். அத்­துடன் மனித உரிமைப் பேர­வையின் விசா­ர­ணைக்கு தக­வல்கள் வழங்­கு­கின்­ற­வர்­க­ளுக்கு எதி­ராக எதிர்­ந­ட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­டக்­கூ­டாது என்றார்.

 

மனித உரிமைப் பேரவை அமர்வில் உரை­யாற்­றிய பிரிட்­டனின் ஜெனிவா மனித உரிமைப் பேர­வைக்­கான அர­சியல் அதி­காரி இயன் டடி குறிப்­பி­டு­கையில்

சர்­வ­தேச விசா­ர­ணைக்கு ஒத்­து­ழைக்­க­வேண்டும் என்ற ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யா­ளரின் கோரிக்­கைக்கு நாங்கள் ஆத­ர­வ­ளிக்­கின்றோம். இந்த பேர­வையின் ஆணைப்­படி விசா­ர­ணைக்கு ஆத­ர­வ­ளிக்­கின்றோம். எனவே விசா­ரணை செயற்­பாட்­டுடன் ஈடு­ப­டு­கின்­ற­வர்­க­ளுக்கு அனு­ம­தியை வழங்க இலங்கை அர­சாங்­கத்தை ஊக்­கு­விப்­ப­துடன் அத­னுடன் ஒத்­து­ழைப்­ப­வர்கள் அச்­ச­மின்­றியும் அச்­சு­றுத்தல் இன்­றியும் பழி­வாங்­கல்­க­ளுக்கு உட்படாமலும் செயற்படுவதை உறுதிபடுத்தவேண்டும் என்றும் கேட்கின்றோம் என்றார்.

 

கடந்த மார்ச் மாதம் ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் இடம்பெற்ற 25 ஆவது கூட்டத் தொடர்பில் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட ஐந்து நாடுகளே இலங்கைக்கு எதிரான பிரேரணையை கொண்டுவந்தன.
நன்றி வீரகேசரி














மாணவன் தெஹிவளையில் சடலமாக மீட்பு

12/06/2014  கணினி விஞ்­ஞானம் பயின்­று­வரும் வவு­னியா பிர­தே­சத்தை சேர்ந்த மாணவன் ஒருவர் மர்­ம­மான முறையில் உயி­ரி­ழந்த நிலையில் சட­ல­மாக மீட்­கப்­பட்­டுள்ளார்.


 

கொழும்பின் புறநகர்ப் பகு­தி­யான தெஹி­வளை அல்விஸ் வீதியில் உள்ள தொடர்­மாடிக் குடி­யி­ருப்பு ஒன்றின் கீழி­ருந்து இவரின் சடலம் மீட்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் சுமார் 20 வயது மதிக்­கத்­தக்க மாணவன் ஒருவரது சட­லமே இவ்வாறு மீட்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் பொலிஸ் ஊடகப் பேச்­சா­ளரின் அலு­வ­லகம் குறிப்­பிட்­டது.

 

தெஹி­வ­ளையில் தங்­கி­யி­ருந்த நிலையில் கணினி விஞ்­ஞானம் தொடர்பில் குறித்த மாணவன் பயின்று வந்த நிலையில் நண்­பர்கள் சில­ருடன் குறித்த தொடர்­மா­டியில் உள்ள அறை ஒன்றில் தங்­கி­யி­ருந்­துள்­ளமை பொலி­ஸாரின் ஆரம்ப கட்ட விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ளது.

 

நேற்று முன் தினம் நண்­பர்­க­ளுடன் குறித்த மாணவன் தொடர்­மா­டியில் உள்ள தமது அறையில் உறங்­கிக்­கொண்­டி­ருந்த நிலையில் நேற்று முற்­பகல் வேளையில் சட­ல­மாக மீட்­கப்­பட்­டுள்ளார். இந் நிலையில் நண்­பர்­க­ளுடன் இரவு தூங்­கிக்கொண்டி­ருந்த குறித்த மாணவன் கட்­ட­டத்­தி­லி­ருந்து கீழே விழுந்­தாரா, கொலை செய்­யப்­பட்டு கீழே கொண்­டு­

வந்து போடப்­பட்­டாரா அல்­லது தற்­கொலை செய்­து­கொண்­டாரா என பல்­வேறு கோணங்­களில் பொலிஸார் விசா­ரணைகளை முன்­னெ­டுத்­துள்­ளனர்.

 

எவ்­வா­றா­யினும், குறித்த மாண­வனின் மரணம் தொடர்பில் தற்­போ­தைக்கு எத­னையும் உறு­தி­யாகக் கூறமுடி­யாது என குறிப்­பிட்ட பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் அலு­வ­ல­கத்தின் கடமை நேர சிரேஷ்ட அதி­காரி ஒருவர், சடலம் பிரேத பரி­சோ­த­னை­களின் பொருட்டு களு­போ­வில போதனா வைத்­தி­ய­சா­லையில் வைக்­கப்­பட்­டுள்­ள­தாக குறிப்­பிட்டார்.

 

அத்­துடன் குறித்த மாணவன் இறப்­ப­தற்கு முன்னர் வாந்தி எடுத்­துள்­ளமை தொடர்­பிலும் தக­வல்கள் கிடைத்­துள்­ள­தாக குறிப்­பிட்ட அவர் இது ஒரு கொலையா அல்­லது இயற்கை மர­ணமா என உறு­தி­யாக கூற முடி­யாது என குறிப்­பிட்டார். மாணவன் காயங்­க­ளுடன் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் எனினும் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்கும் போதே அவர் உயிரிழந்திருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நன்றி வீரகேசரி














சொந்தக் காணிகளில் மக்கள் மீளக்குடியேற்றப்பட வேண்டும் : சலோகா பெயானி

12/06/2014   வடக்கில் மீள்­கு­டி­யேற்­றப்­பட்­டுள்ள சில பகு­தி­க­ளி­லி­ருந்து இரா­ணு­வத்தை மீளப்­பெ­று­வ­தற்­கான திட்­டத்தின் வெளிப்­ப­டை­யான தக­வல்களை இடம்­பெ­யர்ந்த மக்­க­ளுக்கு வழங்­க­வேண்டும் என்று ஐக்­கிய நாடு­களின் இடம்­பெ­யர்ந்த மக்­க­ளுக்­கான விசேட அறிக்­கை­யாளர் சலோகா பெயானி தெரி­வித்­துள்ளார்.
மேலும் இது­வரை தமது சொந்தக்காணி­களில் மீள்­கு­டி­யேற்­றப்­ப­டா­த­வர்கள் சொந்தக் காணி­களில் மீள்­கு­டி­யேற்­றப்­ப­ட ­வேண்டும் என்றும் நஷ்­ட­ஈடு வழங்­கப்­ப­ட ­வேண்டும் எனவும் அவர் பரிந்­துரை செய்­துள்ளார்.
ஐக்­கிய நாடு­களின் இடம்­பெ­யர்ந்த மக்­க­ளுக்­கான விசேட அறிக்­கை­யாளர் சலோகா பெயானி மனித உரிமைப் பேர­வையின் 26 ஆவது கூட்டத் தொட­ருக்கு சமர்ப்­பித்­துள்ள இலங்கை இடம்­பெயர் மக்கள் குறித்த விசேட அறிக்­கையின் பரிந்­து­ரை­க­ளி­லேயே மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டுள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்­டி­ருந்த ஐக்­கிய நாடு­களின் இடம்­பெ­யர்ந்த மக்கள் குறித்த விசேட அறிக்­கை­யாளர் சலோகா பெயானி வடக்கு பகு­திக்கு சென்று மீள்­கு­டி­யேற்ற பகு­தி­க­ளையும் மீள்­கு­டி­யேற்­றப்­பட்­டுள்ள மக்­களின் நிலை­மை­க­ளையும் பார்­வை­யிட்­டி­ருந்தார்.
அத்­துடன் மீள்­கு­டி­யேற்ற மக்­க­ளுடன் கலந்­து­ரை­யா­டி­யி­ருந்த சலோகா பெயானி மீள்­கு­டி­யேற்ற விவ­காரம் தொடர்­பு­பட்ட அதி­கா­ரி­க­ளு­டனும் அரச உயர்­மட்­டத்­தி­ன­ரு­டனும் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யி­ருந்தார்.
அந்­த­வ­கை­யி­லேயே அவர் விசேட அறிக்­கையை 26 ஆவது கூட்டத் தொடரில் சமர்ப்­பித்­துள்ளார். சலோகா பெயானி இன்­றைய தினம் மனித உரிமைப் பேர­வையில் உரை­யாற்­ற­வுள்ளார். தென் சூடான் குறித்தே தனது உரையில் அதிக கவனம் செலுத்­த­வுள்ள நிலையில் இலங்கை குறித்தும் தனது பரிந்­து­ரை­களை முன்­வைக்­க­வுள்ளார்.
இந்­நி­லையில் சலோகா பெயானி ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வைக்கு சமர்ப்­பித்­துள்ள அறிக்­கையின் பரிந்­து­ரை­களில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது
இடம்­பெ­யர்ந்த மக்­களை மீள்­கு­டி­யேற்­றுதல் காணி விவ­கா­ரங்கள் உள்­ளிட்ட விட­யங்கள் குறித்த கற்­ற­றிந்த பாடங்­களும் நல்­லி­ணக்­கமும் தொடர்­பான ஆணைக்­கு­ழுவின் பரிந்­து­ரை­களை அமுல்­ப­டுத்­த­வேண்டும்.
இடம்­பெ­யர்ந்த மக்­களின் மனித உரி­மை­களை பாது­காப்­பது தொடர்­பாக மனித உரி­மை­களை பாது­காப்­ப­தற்­கான தேசிய செயற்­றிட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­த­வேண்டும்.
யுத்தம் முடி­வ­டைந்­துள்­ள­மை­யினால் தேசிய பாது­காப்பில் இரா­ணு­வத்தின் வகி­பாகம் தொடர்பில் மீள்­ம­திப்­பீடு செய்­யப்­ப­ட­வேண்டும். குறிப்­பாக சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்­டங்­க­ளுக்கு அமை­வாக இதனை செய்­யலாம்.
வடக்கில் மீள்­கு­டி­யேற்­றப்­பட்­டுள்ள சில பகு­தி­க­ளி­லி­ருந்து இரா­ணு­வத்தை மீளப்­பெ­று­வ­தற்­கான திட்­டத்தின் வெளிப்­ப­டை­யான தக­வல்­களை இடம்­பெ­யர்ந்த மக்­க­ளுக்கு வழங்­க­வேண்டும். நட்­ட­ஈடும் வழங்­கப்­ப­ட­வேண்டும்.
காணி உரிமை குறித்த விவ­கா­ரங்கள் சட்ட ரீதி­யான முறையில் தீர்க்­கப்­ப­டு­வது அவ­சி­ய­மாகும். பெண்கள் தலை­மை­யி­லான குடும்­பங்­களை பாது­காக்­க­வேண்டும். வடக்கில் பெண்­க­ளுக்கு எதி­ரான பாலியல் வன்­மு­றை­க­ளி­லி­ருந்து அவர்­களை பாது­காக்­க­வேண்டும்.
இடம்­பெ­யர்ந்த மக்கள் மீள்­கு­டி­யேற்ற செயற்­பா­டு­க­ளின்­போது அவர்கள் தாக்­கப்­ப­டுதல் சித்­தி­ர­வ­தைக்கு உட்­ப­டுதல் அச்­சு­றுத்­தப்­படல் என்­பன இடம்­பெ­று­வதை தவிர்க்­க­வேண்டும். அவர்­களின் சுதந்­தி­ர­மான நட­மாட்டம் உறு­தி­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும்.
இடம்­பெ­யர்ந்த நிலையில் மீள்­கு­டி­யேற்­றப்­பட்­ட­வர்­களின் கல்வி சுகா­தார தேவைக் வாழ்­வா­தாரம் சட்­டத்தின் முன் சம­னாக நடத்­தப்­படல் என்­ப­னற்­றுக்கு தேவை­யான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­ட­வேண்டும்.
முன்னாள் அதி­தி­யுயர் பாது­காப்பு வல­யங்­க­ளுக்கு இடம்­பெ­யர்ந்த மக்­களின் செல்­வ­தற்­கான அனு­ம­திகள் உறு­தி­ப­டுத்­து­வ­தற்­கான மாதி­ரிகள் அவ­சியம்.காணாமல் போனோர் தொடர்­பாக விசா­ரணை செய்­வ­தற்கு நியமிக்க்பபட்டுள்ள ஆணைக்குழுவானது சர்வதேச அங்கீகரிக்கப்பட்ட விதிமுறைகளை பின்பற்றுவதை உறுதிபடுத்தவேண்டும். காணாமல் போனோரின் உறவினர்களுடன் இணைந்து செயற்பட்டு பரிந்துரைகளை வெளிப்படுத்தவேண்டும்.
இடம்பெயர்ந்த மக்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படுவதை உறுதிபடுத்தவேண்டும். சிவிலியன்களுக்கு எதிராக குற்றங்களில் ஈடுபட்ட பாதுகாப்பு அதிகாரிகள் தண்டிக்கப்படாமல் இருக்கின்றமை குறித்து ஆராயப்படவேண்டும்.
நன்றி வீரகேசரி












ஊடகவியலாளர்களை பாதுகாக்க விசேட செயற்றிட்டம் அவசியம் : நவிப்பிள்ளை

12/06/2014   
ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு எதி­ரான தாக்­கு­தல்கள் விசா­ரிக்­கப்­ப­டா­மலும் சம்பந்­தப்பட்டோர் தண்­டிக்­கப்­ப­டா­மலும் இருப்­பது மேலும் வன்­மு­றை­க­ளுக்கு அழைப்பு விடுப்­ப­தற்குச் சம­னாகும். தாக்­கு­தல்கள் குறித்து பொறுப்புக் கூறும் செயற்­பா­டு­களின் மூலமே எதிர்­கால தாக்­கு­தல்­களை தடுக்க முடியும் என்று ஐக்­கிய நாடு­களின் மனித உரிமைகள் ஆணை­யாளர் நவ­நீதம்பிள்ளை தெரி­வித்தார். 1992 ஆம் ஆண்­டி­லி­ருந்து இது­வரை உலகில் 1000க்கும் மேற்­பட்ட ஊட­க­வி­ய­லா­ளர்கள் கொல்­லப்­பட்­டுள்­ளனர். 
இவ்­வ­ரு­டத்தின் ஆரம்­பத்­தி­லி­ருந்து 15 ஊட­க­வி­ய­லா­ளர்கள் கொல்­லப்­பட்­டுள்­ளனர் என்றும் அவர் கூறினார்.
ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையின் 26 ஆவது கூட்டத் தொடரின் நேற்­றைய அமர்வில் ஆரம்ப உரையை நிகழ்த்­திய அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். நேற்­றைய தினம் காலை அமர்வில் உலகில் ஊட­க­வி­யா­ளர்­களின் பாது­காப்பு தொடர்பில் கலந்­து­ரை­யா­டப்­பட்­டது.
நவ­நீதம் பிள்ளை அ்ஙகு மேலும் கூறி­ய­தா­வது,
சிவில் அர­சியல் பொரு­ளா­தார சமூக கலா­சார முன்­னேற்­றத்­துக்கும் அபி­வி­ருத்­திக்கும் ஊட­க­வி­ய­லா­ளர்­களின் பாது­காப்பு என்­பது மிகவும் முக்­கி­ய­மா­ன­தாகும்.
எவ்­வா­றெ­னினும் 1992 ஆம் ஆண்­டி­லி­ருந்து இது­வரை 1000 க்கும் மேற்­பட்ட ஊட­க­வி­ய­லா­ளர்கள் கொல்­லப்­பட்­டுள்­ளனர். இவ்­வ­ரு­டத்தின் ஆரம்­பத்­தி­லி­ருந்து 15 ஊட­க­வி­ய­லா­ளர்கள் கொல்­லப்­பட்­டுள்­ளனர்.
பல நாடு­களில் இவ்­வா­றான தாக்­கு­தலில் ஈடு­பட்­ட­வர்கள் தண்­டிக்­கப்­ப­டாமல் இருக்­கின்­றனர். அதி­க­மான ஊட­க­வி­ய­லா­ளர்கள் வன்­மு­றைகள் சித்­தி­ர­வ­தைகள் அச்­சு­றுத்­தல்கள் கடத்­தல்கள் தடுத்து வைத்­தல்கள் காணா­மல்­போ­தல்கள் கண்­கா­ணிப்­புகள் உள்­ளிட்ட பல்­வேறு விட­யங்­க­ளுக்கு உட்­பட்­டு­வ­ரு­கின்­றனர். பெண் ஊட­க­வி­ய­லா­ளர்கள் பாலியல் ரீதி­யான வன்­மு­றை­க­ளுக்கு முகம் கொடுக்­கின்­றனர்.
ஊட­க­வி­ய­லா­ளர்கள் தமது பணி­களின் கார­ண­மாக தாக்­கு­த­லுக்கு உள்­ளா­கின்­றனர். எனவே அவர்­களின் பாது­காப்­புக்கு நட­வ­டிக்கை அவ­சி­ய­மாகும். ஐக்­கிய நாடு­களின் பாகாப்புச் சபை பொதுச் சபை மற்றும் மனித உரிமைப் பேரவை என்­பன ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு எதி­ரான தாக்­கு­தல்­களை கண்­டித்து பிரே­ர­ணை­களை நிறை­வேற்­றி­யுள்­ளன.
ஊட­க­வி­ய­லா­ளர்­களை பாது­காப்­ப­தற்கு அனைத்து நாடு­களும் உரிய சட்ட நட­வ­டிக்­கை­களை எடுக்­க­வேண்டும் என்று இந்த அமைப்­புக்கள் நாடு­க­ளிடம் கேட்­கின்­றன. அப்­போ­துதான் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளினால் தடை­களும் தேவை­யற்ற அழுத்­தங்­களும் இன்றி தமது பணி­களை முன்­னெ­டுக்­கலாம்.
2012 ஆம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பும் மனித உரிமைப் பேர­வையும் இணைந்து ஊட­க­வி­ய­லா­ளர்­களை பாது­காப்­ப­தற்­கான செயற்­றிட்­டத்தை உரு­வாக்­கி­யது. இந்தத் திட்டம் தற்­போது ஈராக் நேபாளம் பாகிஸ்தான் தென் சூடான் மற்றும் துனி­சியா ஆகிய நாடு­களில் மாதிரித் திட்­ட­மாக நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டு­வ­ரு­கின்­றது .
ஊட­க­வி­ய­லா­ளர்­களும் ஊடக பணி­யா­ளர்­களும் பரந்­து­பட்ட ரீதியில் பாது­காக்­கப்­ப­ட­வேண்டும். ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு எதி­ரான தாக்­கு­தல்கள் விசா­ரிக்­கப்­ப­டா­மலும் சம்­மந்­தப்­பட்டோர் தண்­டிக்­கப்­ப­டா­மலும் இருப்­பது மேலும் வன்­மு­றை­க­ளுக்கு அழைப்பு விடுப்­ப­தற்கு சம­மாகும். தாக்­கு­தல்கள் குறித்து பொறுப்புக் கூறும் செயற்­பா­டு­களின் மூலம் எதிர்­கால தாக்­கு­தல்­களை தடுக்க முடியும்.
ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்பில் உள்நாட்டு செயற்பாட்டுக்கு அமைய விசாரணை நடத்தப்படுவது அவசியமாகும். விசேட விசாரணைப் பிரிவுகளை அமைப்பது சிறப்பாக இருக்கும்.
'' முன்னெச்சரிக்கை மற்றும் விரைவான பதில் கட்டமைப்பு '' என்ற முறைமையை உருவாக்குவதன் மூலம் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்படும்போது அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்துகொடுக்க முடியும். அவசர நிலைமைகளின்போது இந்த முறைமையின் ஊடாக உதவிகளை செய்யக்கூடியதாக இருக்கவேண்டும்.
நன்றி வீரகேசரி















ஐ.நா. விசாரணைக்குழுவும் அரசாங்கத்தின் நிலைப்பாடும்

12/06/2014  இலங்கையில் பொறுப்புக்கூறலையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்கான பரந்துபட்ட விசாரணைகளை மேற்கொள்வதற்கான நிபுணர்கள் மற்றும் விசேட அறிக்கையாளர்கள் உள்ளடங்கிய விசாரணைக்குழுவை நியமித்துள்ளேன். இந்த உண்மையைக் கண்டறியும் விசாரணை செயற்பாட்டிற்கு இலங்கை ஒத்துழைப்பு வழங்கவேண்டும். என்று ஐ.நா.வின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை கோரிக்கை விடுத்துள்ளார்.


 

ஐ.நா. மனித உரிமை பேரவையின் 26 ஆவது கூட்டத் தொடர் நேற்று முன்தினம் ஆரம்பமாகியுள்ளது. இந்த கூட்டத் தொடரை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே நவநீதம்பிள்ளை விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு இலங்கை அரசாங்கத்தை கோரியிருக்கின்றார். விசாரணைச் செயற்பாட்டை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையினால் நியமிக்கப்பட்டுள்ள உத்தியோகத்தர்களே நடத்துவார்கள். நிபுணர்கள் மற்றும் விசேட அறிக்கையாளர்கள் அவர்களுக்கு உதவுவார்கள் என்றும் நவநீதம்பிள்ளை சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

 

இலங்கையில் கடந்தமாதம் யுத்தம் முடிவடைந்து ஐந்தாவது ஆண்டு நிறைவுவிழா கொண்டாடப்பட்டது. யுத்த வடுக்கள் ஆறாத நிலையில் வெற்றிக்கொண்டாட்டம் இடம் பெற்றுள்ளது என்றும் நவநீதம்பிள்ளை தனது உரையின் போது விசனம் தெரிவித்திருக்கின்றார்.

 

ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் நவநீதம்பிள்ளை கோரிக்கை விடுத்துள்ள நிலையில் அந்தக் கோரிக்கையை அரசாங்கம் மீண்டும் நிராகரித்திருக்கின்றது. ஐ.நா. மனித உரிமைப் பேரவைக்கான இலங்கையின் வதிவிடப்பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க பேரவையில் நேற்று முன்தினம் உரையாற்றுகையில் இலங்கையில் இடம் பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல் விவகாரங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் நியமிக்கப்பட்டுள்ள விசாரணைக்குழுவின் பரந்துபட்ட விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கமாட்டோம். இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட பிரேரணையை முழுமையாக நாம் நிராகரிக்கின்றோம் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

 

மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஐ.நா. வின் உறுப்புநாடுகளின் இறைமையை மீறுவதாக அமைந்துள்ளது. இந்தப் பிரேரணையானது உள்நாட்டு நல்லிணக்க செயற்பாட்டை கடுமையாக பாதிக்கும் இலங்கை விடயத்தில் முற்கூட்டிய தீர்மானம் மற்றும் பக்கச் சார்ப்பு செயற்பாடு என்பன மனித உரிமை ஆணைக்குழுவிடமும் ஆணையாளரிடமும் தொடர்ந்து காணப்படுகின்றது என்றும் ரவிநாத ஆரியசிங்க தெரிவித்திருக்கின்றார்.

 

இந்த நிலையில் ஐ.நா. மனித உரிமை பேரவையினால் நியமிக்கப்பட்டுள்ள விசாரணைக்குழுவுடன் இலங்கை ஒத்துழைக்க வேண்டும். அத்துடன் விசாரணையாளர்களை நாட்டுக்குள் அனுமதித்து அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று மனித உரிமைப்பேரவையில் நேற்று முன்தினம் கருத்துத் தெரிவித்த அமெரிக்கா, மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

இலங்கையில் இடம் பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்படவேண்டுமென்று சர்வதேச சமூகம் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட காலத்திலிருந்தே கோரிவருகின்றது. ஆனால் இதற்கான உரிய விசாரணைகள் உள்நாட்டில் இடம் பெறாமையினால் சர்வதேச விசாரணைக்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டது. 2012 ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் முதலாவது பிரேரணை முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

 

அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக அமுல்படுத்தக்கோரும் வகையிலேயே அந்தப் பிரேரணை நிறைவேற்றப்பட்டது. ஒருவருடகாலத்தில் இதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாமையினால் 2013 ஆம்ஆண்டு மார்ச் மாதத்தில் மீண்டுமொரு பிரேரணையை அமெரிக்கா கொண்டுவந்து நிறைவேற்றியிருந்தது. இந்த நிலையிலும் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த வருடம் மார்ச் மாதம் இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை பேரவையின் விசாரணையை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

 

இந்த பிரேரணையை இலங்கை அரசாங்கம் உடனடியாகவே நிராகரித்திருந்தது. ஐ.நா. விசாரணைக்கு ஒருபோதும் ஒத்துழைக்கப்போவதில்லையென்று அரசாங்கம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் தான் தற்போது ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் விசாரணைக்கென குழுவொன்றினை நியமித்துள்ளதுடன் அந்தக்குழுவின் விசாரணைக்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைக்கவேண்டுமென பகிரங்க வேண்டுகோள் விடுத்திருக்கின்றார். ஆனால் இந்த வேண்டுகோளையும் இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

 

ஐ.நா. மனித உரிமைபேரவைக்கும் இலங்கை அரசாங்கத்திற்குமிடையில் தற்போது முரண்பாடான நிலை தோன்றியுள்ளது. விசாரணைக்குழுவின் உறுப்பினர்கள் இலங்கை வருவதற்கு அனுமதிக்கப்போவதில்லை என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் உள்ளது. இவ்வாறான நிலையில் ஐ.நா. மனித உரிமை ஆணையாளரால் நியமிக்கப்பட்ட குழு இம்மாத நடுப்பகுதியில் விசாரணைகளை ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

 

இந்த விசாரணை தொடர்பில் பாராளுமன்றத்தில் பிரேரணை ஒன்றை நிறைவேற்றி சகல கட்சிகளின் ஒத்துழைப்பை பெறுவது குறித்து அரசாங்கம் தற்போது ஆராய்ந்து வருகின்றது. ஆனாலும் ஐ.நா. விசாரணை தொடர்பில் நாட்டிலுள்ள பிரதான அரசியல் கட்சிகள் மத்தியில் மாறுபட்ட கருத்து நிலவிவருகின்றது.

 

ஐ.நா. வின் விசாரணைக்கு அரசாங்கம் ஒத்துழைக்கவேண்டும். இல்லையேல் பெரும் நெருக்கடியான நிலை ஏற்படும். அரசாங்கம் இந்த சந்தர்ப்பத்தைப்பயன்படுத்தி எமது படையினர் மீதான குற்றச்சாட்டுக்களை நிராகரித்து நாட்டன் கௌரவத்தை பாதுகாக்கவேண்டும் என்று ஐக்கிய தேசியக்கட்சி தெரிவித்துள்ளது.

 

அரசாங்கத்திற்கு தற்போது நல்ல சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இதனை கைநழுவவிடக்கூடாது. சர்வதேச ரீதியாக எமது படையினர் மீது சுமத்தப்பட்டுள்ள யுத்த மீறல் குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக சாட்சியங்களுடன் காரணங்களை எடுத்துக்கூறி படையினர் மீதான அவப்பெயரை நீக்கமுடியும் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

 

இதேபோல் சர்வதேச விசாரணையினால் அரசாங்கம் பாரிய நெருக்கடிகளை சந்திக்கக நேரும் என்று ஜே.வி.பி. கூறியுள்ளது. ஐ.நா.வின் விசாரணைக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு சகல வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்கும். விசாரணைக்கு தேவையான சாட்சியங்களையும், ஆவணங்களையும் திரட்டி நாம் முன்வைப்போம். சாட்சியங்களின் பாதுகாப்பு தொடர்பிலும், நாம் கவனம் செலுத்துவோம் என்று கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராஜா கருத்து கூறியிருக்கின்றார்.

 

இவ்வாறு ஒவ்வொரு கட்சிகளும் வெவ்வேறு நிலைப்பாட்டில் உள்ளன. ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் விசாரணைக்கான குழுவினை நியமித்து விட்டார். அரசாங்கம் விசாரணைக்கு ஒத்துக்கொள்கின்றதோ இல்லையோ விசாரணை என்பது நடைபெறபோகின்றது. எனவே இந்த விடயத்தில் நாட்டின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு தீர்க்கமான முடிவுக்கு அரசாங்கம் வரவேண்டியது இன்றியமையாததாகும். சர்வதேச சமூகத்துடன் தொடர்ந்தும் முரண்பட்டுக்கொண்டு செயற்படமுடியுமா? என்பது குறித்தும் அரசாங்கம் சிந்திக்கவேண்டிய நேரம் தற்போது உருவாகியுள்ளது.

நன்றி வீரகேசரி











வண்டியை நிறுத்தியதன் பின்னரே நண்பன் மீது மதுபோதையில் இருந்த பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்:உயிரிழந்தவரின் நண்பன் வாக்குமூலம்

12/06/2014 மோட்டார் வண்டியை தாம் நிறுத்தியதன் பின்னரே பொலிஸார் தனது நண்பன் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக, பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலியான இளைஞனின் நண்பன் தெரிவித்துள்ளார். 
எனினும் தாம் தப்பிச் செல்ல முயன்றவேளை பொலிஸார் தனது நண்பனை சுட்டுக் கொன்றதாக யாரேனும் கேட்டால் சொல்ல வேண்டும் என பொலிஸார் எச்சரித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். 
நேற்று இரவு மோட்டார் வண்டியில் சென்ற இளைஞன் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 23 வயதுடைய நபர் உயிரிழந்தார். 
இந்த சம்பவம் தொடர்பில் அந்த மோட்டார் வண்டியில் சென்ற இளைஞனின் நண்பன் ஊடகங்களுக்கு தகவல் வழங்கும்போது மேற்கண்டவாறு தெரிவித்தார். 
குறித்த சம்பவம் இடம்பெற்றவேளை பொலிஸார் ஐவர் மதுபோதையில் இருந்ததாக அந்த இளைஞன் தெரிவித்துள்ளார். 
மோட்டார் வண்டியில் சென்ற இளைஞன் மோட்டார் வண்டியை நிறுத்தாது தப்பிச் சென்றவேளை பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்க பொலிஸார் முயற்சிப்பதாக உயிரிழந்த இளைஞனின் தந்தை தெரிவித்தார். 
தனது மகன் மீதான துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யச் சென்ற வேளை, முறைப்பாடு செய்ய தேவையில்லை என பொலிஸார் தெரிவித்ததாக உயிரிழந்த இளைஞனின் தந்தை குறிப்பிட்டார். 
இந்த சம்பவத்தின்போது மோட்டார் வண்டியில் சென்ற பிறிதொரு இளைஞன் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
மீரிகம, பஸ்யால பிரதேசத்தில் பொலிஸ் சோதனையின்போது மோட்டார் வண்டியை நிறுத்தாது சென்ற இளைஞன் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் அவ் இளைஞன் உயிரிழந்துள்ளார்.  நேற்று இரவு 11.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
 நன்றி வீரகேசரி











பாரிய மண்சரிவால் அட்டன்-கொழும்பு வீதி போக்குவரத்து பாதிப்பு, ரயில் சேவையும் பாதிப்பு

க.கிஷாந்தன்
அட்டன் - கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேன தியகல பகுதியில் இன்று மாலை 5 மணியளவில் பாரிய மண்சரிவு ஒன்று ஏற்பட்டுள்ளதால் இவ்வீதியடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கொழும்பு பதுளை ரயில் பாதையில் வட்டவளை பிரதேசத்திற்கு அண்மித்த பகுதியில் ரயில் பாதையில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக வட்டவளை புகையிரத நிலைய பொறுப்பதிகாரி தெரிவிக்கின்றார்.
 
நன்றி வீரகேசரி







No comments: