திரை இசை ஆரம் - வாணி ஜெயராமின் இன்னிசை நிகழ்வு

.


இன் நிகழ்ச்சி 7ஆம் திகதி ஜூன் மாதம் மலை 6.30 மணிக்கு Kings School Auditorium இல் நடைபெற்றது  15 நிமிடங்கள்  நிகழ்ச்சி தாமதமாக ஆரம்பித்தாலும், வாணி ஜெயராம் என்ற குயில் மேடை ஏறியதும் எல்லாம்மறந்து 
விட்டது. கடும் குளிரையும் பொருட் படுத்தாமல் அரங்கமே நிரம்பி வழிந்தது இந்த சாதனை குயிலின் இசை மழையில் நனையத்தான்


வாணி ஜெயராம் அரங்கினுள் நுழையும் போது மக்கள் அனைவரும் எழுந்து நின்று கை தட்டி அவரை கௌரவப் படுத்தினார்கள். இதை அவ்வாறு ஒழுங்கு செய்த ஒருங்கினைபார்களுக்கு நன்றி. ஏனெனில் சாதனையாளர்களுக்கு மரியாதை தர எம்மவர்கள் என்றும் பின் நிற்பதில்லை.
மேடை ஏறிய இந்த பாடகியை, உடனே பாடலுடன் 
ஆரம்பிக்குமாறு அறிவிப்பாளர் அழைத்த போது, தனது கால் அணிகளை கலட்டி விட்டு வருகிறேன் என்று அவர் 
கூறிய போது, இவர்கள் எல்லாம் எப்படி சிகரம் தொடுகிறார்கள் என்று புரிந்தது.  


அந்த மேடைக்கு அவர் அவ்வளவு மரியாதை தந்த போது, 
மேடையில் இருந்த ஏனையோரும் அதற்கு ஏற்ப மரியாதையுடன் இருந்திருக்க வேண்டும். பல நேரங்களில் வாணி அம்மா முகம் சுளிப்பதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. ஒரு சிரேஷ்ட அறிவிப்பாளர் பல 
இடங்களில் தடு மாறிய போது, மக்கள் மத்தியில் பலமுனு முனுப்புக்கள், இதை அறிவிப்பாளர் வருங்காலங்களில் 
கவனத்தில் கொள்வது நல்லது.


எல்லா மன்னன்களையும் வசமாக்கும் அந்தப் பாடல் மல்லிகை என் மன்னன் மயங்கும் என்று வாணி அம்மா 
பாடியபோது அதே குரல், அதே இனிமை. வயது 70 தாண்டி இருந்தாலும்  அம்மாவின் குரல் இன்னும் 
இளமையாகவே இருக்கின்றதுயாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது எனும் பாடலையும் தனது இனிமையான குரலால் பாடி எல்லோரையும் தமது இருக்கையில் கட்டிப் போட்டு விட்டார் என்பதே உண்மை. சத்திய பிரகாஷுடன் இணைந்து நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன் என்னும் பாடலையும் பாடினார். அத்துடன் தான் முதலில் பாடிய ஹிந்தி பாடல் ஒன்றையும் பாடினார். அவர் தனக்கு கிடைத்த பாடல்கள் அனைத்தும் பாடுவதற்கு கடினமான பாடல்களாக அமைந்தது எனவும் கூறினார். ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் என்னும் பாடலையும் மிகவும் இனிமையான குரலில் பாடினார்.


வாணி அம்மாவுடன், ஹரிஷ் ராகவேந்திரா சூப்பர் சிங்கர் 
பாடகர்கள் சத்திய பிரகாஷ் , மதுமிதாவும் இணைந்து இந்திய வாத்தியக் கலைஞர்களுடன் ஒரு 
இனிய மாலை பொழுதினை எமக்கு தந்தார்கள்.

ஹரிஷ் ராகவேந்திரா பாடிய பாடல்களில் என் மனதை கவர்ந்த பாடல் சர்க்கரை நிலவே மற்றும்  நிற்பதுவே நடப்பதுவே.


சத்திய பிரகாஷ் பாட்டும் நானே எனும் பாடலை மிகவும் இனிமையாக பாடி பலத்த கரகோஷத்தையும் பாராட்டையும் பெற்றுக்கொண்டார். இவர் பாடிய இன்னுமொரு பாடல் ஊதா ஊதா கலரு ரிப்பன். மிகவும் இனிமையான  குரல் வளம் பெற்ற இந்த பாடகர் எல்லா வித பாடல்களையும் எந்த வித சிரத்தையும் இல்லாமல் மிகவும் எளிமையாக பாடினார்.மதுமிதாவும் தான்  எந்த விதத்திலும் சளைத்தவர் இல்லை என்பதை நிரூபிக்கும் விதத்தில் who is the hero மற்றும் உள்ளூர் பாடகியுடன் தாச்சு கோ தாச்சு கோ தங்கமே தாச்சு கோ எனும் பாடல்களை மிகவும் இனிமையாக பாடினார்.

  
இந்தியக் கலைஞர்களுடன் எமது உள்ளூர் பாடகர்களுக்கும் ஒரு சந்தர்ப்பம் அளித்த Sri Ranjan பாராட்டியே ஆக வேண்டும்.அது மட்டும் அல்ல Sri Ranjan, இலங்கை POP இசை பாடல் உனக்கு தெரியுமா நான் உன்னை நினைப்பது  என்ற பாடலை  
சத்திய பிரகாஷ்  பாட வைத்து அனைத்து மக்களின் 
கரகோஷத்தையும் பெற்றார்.


பலர்  நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் பாடல்கள் கேட்கவில்லை என்றும் ஒலி அமைப்பு நன்றாக இருக்கவில்லை என்றும் முனு முணுத்துக் கொண்டிருந்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. அந்த மண்டபத்தில் முதன் முதலில் இடம் பெற்ற ஒரு தமிழ் நிகழ்வில் நானும் கலந்து கொண்டிருந்த காரணத்தினால் எனக்கு அந்த மண்டபம் இசை நிகழ்ச்சிகளை வளங்குவதர்கேற்ற வாறு ஒலி அமைப்புடன்  நிர்ணயிக்கப் படவில்லை என்பது தெரிந்து கொண்டிருந்தேன். மற்றும் பாடகர்கள் வாத்திய, இசைக் கலைஞர் நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு முன்பாக sound check இக்கு வராமலேயே நிகழ்ச்சி அரம்பிக்கப் பட்டது. எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் sound Check என்பது மிகவும் முக்கியமானதொன்றாகும். இதனை  நிகழ்ச்சி ஒருங்கமைபாளர்கள் கருத்தில் கொண்டு, sound check இக்கு ஒதுக்கப் பட்ட அந்த நேரத்தில் பாடகர்களையும் வாத்தியக் குழுவினரையும் கொண்டு செல்வது மிகவும் முக்கியம். பல சிரமங்களுக்கு மத்தியில் நிகழ்ச்சி தொடங்கியவுடன் ஒவ்வொரு வாத்திய கருவிக்கு ஏற்ற வாறும் ஒவ்வொரு பாடகருக்கு ஏற்றவாறும் ஒலியமைப்பை சீர்படுத்தி அந்த மண்டபத்தின் அமைப்புக்குள் திறம்ப்படக் கொடுக்கக் கூடிய அளவில் கொடுத்திருந்தார்கள் Audio Impression நிறுவனத்தினர்.அதிஷ்ட லாபச் சீட்டில் சேர்ந்த பணத்தை எமது தாய் மண்ணில் அல்லல் உறும் சிறுவர்கள் மற்றும் விதவைகள் காப்பகங்களுக்கு வழங்கியது வரவேற்க தக்க ஓர் விடயமாகும். 

பல இன்னல்கள் மத்தியில் Sri Ranjan இந்த நிகழ்ச்சியை நடத்தினார் என்ற செய்தி 
காதில் விழுந்தது. இன்று எம் மத்தியில் இந்தியாவில் இருந்து இசை நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்வோர் தங்களது சுய நலம் கருதி ஏதோ ஒரு காரணத்திற்காக நிகழ்ச்சிகளை கடைசி நிமிடத்தில் ரத்து செய்கின்ற காரணத்தினால் எமது மக்கள் நிகழ்ச்சிகளுக்கு முன் கூடியே நுழைவுச் சீட்டுகளை வாங்குவதற்கு தயங்குகின்றார்கள். இந்த நிகழ்ச்சி மட்டும் ரத்து செய்யப் பட்டிருந்தால், இனி எந்த ஒரு நிகழ்ச்சியும் சிட்னியில் இந்திய பாடகர்களை கொண்டு நடாத்த முடியாது போய் இருக்கும். ஒரு தனி மனிதனின் ஏமாற்று வேலையால் 
நிகழ்ச்சி தடை பட இருந்த வேளையில் , எப்படியாவது எடுத்த காரியம் முடிக்க வேண்டும் என்று Sri Ranjan முயற்சி செய்து நிகழ்ச்சியை திறம் பட செய்து ஒட்டுமொத்த சிட்னி ஒருங்கினைபாளர்களையும் காப்பாற்றி உள்ளார் என்று தான் கூற வேண்டும். ஏனென்றால் இன்னும் ஓர் நிகழ்ச்சி சிட்னி இல் ரத்து செய்யப் 
பட்டிருந்தால், இனி எந்த நிகழ்ச்சிக்கும் மக்கள் நம்பி 
டிக்கெட்வாங்கி இருக்க மாட்டார்கள். இதற்காகவே Sri Ranjan இற்கு எல்லோர் சார்பாகவும் ஒரு பெரிய நன்றி .

மதுரா மகாதேவ்

  
7 comments:

Anonymous said...

Hall is very cold. no heating Or A/C . Musicians and Singer find very difficult stay for long Time. well Written Good work Ranjan.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

அன்பான வாசகர்களுக்கு என் அன்பான வேண்டுகோள் தயவு செய்து யார் பெயரையும் எழுதாதீர்கள். அப்படி நீங்கள் பெயர் போட்டு எழுதுவதன் மூலம் நீங்கள் எழுதும் கருத்துகள் நீக்கப்பட்டு விடும். ஆதலால், தயவு செய்து ஒரு தனி பட்ட மனிதரது பெயரை குறிப்பிடாது உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுமாறு மிகவும் தாழ்மையுடனும் அன்புடனும் கேட்டுக் கொள்கின்றேன். அவர் அவர் செய்யும் பாவச் செயல்களுக்கு என்றோ ஒருநாள் அதன் விளைவை அவர்கள் அனுபவிப்பார்கள். நான் கற்றுக் கொண்ட ஒரே பாடம் என்ன வென்றால் எமது சமுதாயம் நாளை அவர்கள் வந்து ஒரு நிகழ்ச்சியை ஒருங்கமைத்து நடத்தினால் அவர்கள் நிச்சயமாக நிகழ்ச்சிக்கு சென்று ஆதரவை வழங்குவார்கள். அவர்களைப் பற்றி தூற்றி கூறினாலும் தங்களுக்கு அதில் ஏதாவது நன்மை இருந்தால் பின் அவர்களுடன் ஒன்றாக சேர்வதற்கு பின் தங்க மாட்டார்கள். மறந்து மன்னிப்பதே தமிழர் பண்பாடு. ஆதலால் தயவு செய்து பெயர்களை குறிப்பிடாது உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள். எனது இந்த கருத்தில் ஏதாவது தவறாக கூறி இருந்தால் மன்னிக்கவும்.

மதுரா

tamilmurasu said...

பத்திரிகை கொடுக்கும் சுதந்திரத்தை பாவிக்கத் தெரியாத சிலரின் தவறான கருத்துக்களால் , கருத்து முன்வைப்பது தடைசெய்யப்பட்டுள்ளது.

சொல்லவேண்டிய விடயத்தை நாகரீகமாக சொல்லத் தெரியாதவர்கள் தாங்கள் சமூகத்தை திருத்துவதாக சொல்லி தப்பாக எழுதுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

tamilmurasu said...

மன்னிக்க வேண்டும் நீங்கள் கருத்தை முன்வைக்கலாம் உங்கள் ஈமெயில் அடையாளத்துடன்
நன்றி