சுரலயாவின் இசை விழா – நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்

.

யூன் மாதம் 9ம் திகதி திங்கட்கிழமை மகாராணியாரின் பிறந்ததினத்தை கொண்டாட நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் அரச விடுமுறையை அமோகமாக கொண்டாடுபவர் சிட்னி இசை இரசிகர்கள். காரணம் எம்மை மறந்து இரசிக்க சிட்னியிலே இசைவிழா கடந்த 8 வருடங்களாக தவறாது  நடைபெறுகிறது. இதை நடத்திவைப்பவர்கள் Swara Laya Fine Arts Society

தமிழகத்தில் கர்நாடக இசையில் பிரபலங்களான 20க்கும் அதிகமான இசை கலைஞர்களை அழைத்து வந்து 3 நாட்கள் தொடர்ந்து நடத்தும் சாதனையை புரிந்து வருகிறார்கள். இவர்களை வாயார வாழ்த்தாத ரசிகர்களே கிடையாது. சென்னை வரை சென்று மார்கழி இசை விழாவை இரசித்து வந்த இரசிகர்கள் எநதவித சிரமும் இன்றி சிட்னியில் இசையை இரசிக்கிறார்கள். இந்த இசைவிழா இப்பொழுது அவுஸ்திரேலியா பிற மாநிலங்களில் இருந்தும் இரசிகர்களை சிட்னி நோக்கி வர செய்கிறது. கடந்த வருடம் லண்டனிலிருந்தும் வருகை தந்த இருவரை சந்தித்தேன். சென்னைக்கு போவதில் விட இங்கு அவுஸ்திரேலியாவில் வந்து இரசிப்பது எமக்கு வசதியாக அமைகிறது என்றார்கள். இப்படி பலரையும் கவரும் கர்நாடக இசை விழா இவ்வருடமும் அமோகமாக ஆரம்பமானது.


வேறுபட்ட கலைஞர்க்ள அத்தனை பேரும் கர்நாடக இசையைத்தான் இசைக்கிறார்கள் ஆமாம். காலை தொடங்கி இரவு 9.30 வரை. இது சலிப்புத்தட்டாதா என என்னைப் பார்த்து தோழி ஒருத்தி கேட்டார். அவர் கேட்டது வாஸ்தவம் தான். சிறிது மலைத்துப் போனேன். என்ன பதில் கூறுவது. ஆயிரம் பேர் நிறைந்த மண்டபம் நுளைவுச் சீட்டுகள் விற்றாகி விட்டது. இத்தனை பேரும் இந்த இசையால் கவரப்பட்டல்லவா நுளைவுச்சீட்டை வாங்குகிறார்கள். டிக்கட்டை விற்க  “தந்திரமாக” ஊரிலே கஷ்டப்படும் எம்மக்களுக்கு உதவவே நிதிதிரட்டுகிறோம் என யாரும் கேட்கவில்லை. கர்நாடக இசையை கேட்கவல்லவா நுளைவுச்சீட்டு. அந்த உயர்ந்த சங்கீதத்திற்கு நாம் கொடுத்த விலை அல்லவா அது. ஆனால் அந்த கேள்வி என்னை உறுத்தாமல் இல்லை. சிந்தித்தேன். வேறுபட்ட கலைஞர்கள் வௌ;வேறு இரசனையை எமக்கு தருகிறார்கள். ஒருவரோ எம்மையும் தம்முடன் கைகோத்து இணைந்து உயரப்பறந்து உல்லாசமாக இதோபார் இது தான் சங்கீதம் என்கிறார். மற்றரொருவரோ ஆழ்கடலில் முத்துக்குளித்து சங்கீதம் என்ற முத்தை நம்முன் படைத்து வியக்கவைக்கும் திறமைஞானி. பிறிதொருவர் சங்கீதமோ தென்றல் என வருடி எம்மை சுகா  அனுபவம் பெறவைக்கிறது. மற்றவர் தன்னுடன் எம்மையும் தெய்வ சன்னிதிக்கே அழைத்து சென்று இதுதான் தெய்வீகமா என மெய்சிலுக்க வைக்கும் மகான். இத்தனையும் சங்கீதம் தரும் அனுபவங்கள். 

இதைப்பெறவே கூட்டம் அலை மோதுகிறது. கர்நாடக இசை நோட்சை வைத்துக்கொண்டு வாசித்து முடிக்கும் சங்கீதமல்ல. இசையை குருவிடம் கற்று கொள்கிறார்கள். ஆனால் இசை கலைஞராகும் போது அவரவர் கற்பனைக்கு விஸ்தாரமாக வழம் அழிப்பது சங்கீதம். ஒருவர் அரப் பிரய்தாபம் பண்ணும் திறமை சாலி , மற்றவர் ராகத்தை ரம்மியமாக விய்தாரம் செய்வார். பிறிதொருவர் பாடலின் சுவையை இரசித்து உணர்ந்து பாடி எம்மை ரசா அனுபவத்தில் ஆழ்த்தும் திறமைசாலி இறுதியிலே அவரவர் தனிப்பட்ட ஆழுமையே சங்கீதமாக பிரவாகிக்கிறது. ஒரே பாடலானாலும் அவரவர் ஆழுமையை அங்கு காணலாம். ஏன் ஒருவரே ஒரேபாடலை  பல இசை கச்சேரியில் பாடினாலும் ஒவ்வொரு தடவையும் அது வேறுபட்ட உருவமாகவே மாறுபாட்டுடன் காணப்படும். விந்தையே கர்நாடக இசை என்ற எமது கலைப் பொக்கிஷம். சங்கீதத்தை கண்டு தூர ஓடாதீர்கள். எத்தனையோ பேர் நாதஸ்வர இரசிகர்கள். ஆனால் கர்நாடக சங்கீதமா நமக்கு வேண்டாம் என்பார்கள். நாதஸ்வரத்தில் வாசிப்பதும் கர்நாடக இசையே. அவர்கள் கேட்பது பிறமொழியிலே கர்நாடக சங்கீதம் பாடினால் இரசிக்க முடியுமா? என்பதே நியாமான கேள்வியே பிறிதொரு இடத்தில் இதை ஆராய்வோம். நிகழ்ச்சிக்குள் செல்வோம்.

இந்த விழாவிலே நன் முத்துக்களாக தேர்ந்து நான்கு இழம் கலைஞர்களை அழைத்து வந்தார்கள். நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள். இவர்கள் இழமையின் உத்வேகத்துடன் துடிப்பாக பாடும் கலைஞர் நாளைய பெரும் கலைஞர்கள். இவர்கள் கலை அங்கீகாரம் பெற்று பல பரிசில்களும் பெற்றுள்ளனர். காயித்திரி வெங்கட்டராமன். இவர் All India Radio வில் தேசிய போட்டியில் கலந்து முதற்பரிசை பெற்றவர். சேகேதராமன் சின்னஞ்சிறு வயதிலேயே கச்சேரி செய்யும் மேதை, திறம் படைத்த குழந்தைக்கலைஞன். அந்த பிறவி கொடையை மேலும் வளம்படுததியவர் வயிலின் மேதையாக திகழ்ந்து அண்மையிலே எம்மையெல்லாம் விட்டுப்பிரிந்த ஸ்ரீ வால்குடி ஜெயராமன். சேகேதராம் லால்குடியிடம் 20 வருடம் கற்றுத்தேறியவர். லால்குடியால் புடம்போட்ட கலைஞன்.
அடுத்தவர் ஸ்ரீறஞ்சனி பெயரிலேயே இசையின் மணம் வீசுகிறது. பார்த்தால் சின்ன பொண்ணு என்னதான் பாடுவாளோ என எண்ண, தனது இசையால் எம்மையெல்லாம் கவர்ந்துவிட்டார். அசைக்க முடியாத ஆழமான சங்கீதம் பாடிமுடிந்ததும் நிகழ்ச்சி நடத்தி செல்லுபவர் நெய்வேலி சந்தான கிறிஷ்ணனின் மகள் ஸ்ரீரஞ்சனி என கூறினார்.  ஆகா இந்த இசை உடலிலே ஓடும் ரத்ததிலேயே வந்ததல்லவா என புரிந்தோம். பெற்ற பரிசுகள் அங்கீகாரங்க்ள் பல. இவை எல்லாம் எதற்கு. நெய்வேலி சந்தான கிறிஷ்ணனை தந்தையாக பெற்ற பாக்கியம் பெற்றவள் அல்லவா ஸ்ரீறஞ்சனி.
அடுத்து இழம் கலைஞர் பட்டியலிலே சேர்ப்பவர் சுசித்திரா பால சுப்ரமணியம். இவர் இசையை முறையாக கற்றவர் இசை கலைஞராக திகழவே விரும்பினார். ஆனால் இவர் திசை மாறியது சுசித்திராவின் பாட்டியா தஞ்சாவூர் ஸ்ரீமதி கமலாமூர்த்தி கரிகதையில் பிரபலமானவர். சில இசைகலைஞர்கள் நீயேன் கதாகாலேட்சபம்  பண்ண கூடாது என தூண்ட, பாட்டியிடம் கற்றுக்கொண்டு இன்று கதாகாலேட்சபம் பண்ணி பிரபலமாகிவிட்டார். 24லே  வயதில் அறிவு முதிர்ச்சியும் அருமையாக ஆறுபடை வீடு காலேட்சேபம் பண்ணினார்.
இவ்வருடம் நாம் இரசித்த இழம் வயலின் வித்துவான் திருவேந்திரம் சம்பத். தாயாரிடமே வயலினை கற்றுக்கொண்டு 12 வயதிலே இசைகச்சேரிசெய்யும் திறமை படைத்தவர். இசை விழாவிலே இவரை ரசிக்காதார் இல்லை. அபார திறமையால் இரசிகரை கவர்ந்தார்.

அடுத்து இசைவிழாவில் வேங்குழல் வாசித்த வட இந்திய கலை கலைஞர் Ronu Majmdar யாவரின் கவனத்தையும் கவர்ந்தார். மாலை இராகத்தை வாசிப்பதற்கு திட்டம் இட்டு வரும் பொழுது மழை பெய்ய தொடங்கியதால் அவருக்கு மழையையே இசையாக தர மழை இராகத்தை இசைக்க (அமிந்தவர்ஷனி அல்ல) ஆரம்பித்தார் உலகெல்லாம் புகள் பெற்ற Ronu மழையின் அழகை எமக்கு காட்டினார் அல்லவா. எம்மை மழையில் தோய வைத்துவிட்டார். வானம் கறுத்து மெள்ள தூறி, பேய்மழையாக, சாரமாக, தூவானமாக, சொட்டும் மழையாக, கூவி இரையும் மழையாக எத்தனை எத்தனை ஜாலம். உலகெல்லாம் புகழ்பெற்ற இந்த கலைஞரின் பக்தி இசையையே தெய்வமாக காணும் தன்மை தமக்கு முன் வாழ்ந்தகலைஞரை போற்றும் தன்மை ஒரு உயர்ந்த கலைஞன் இவ்வாறுதான் இருப்பான் என்பதற்கு உதாரணமாக திகழ்ந்தார்.

இன்றைய இசை உலகின் சிகரமாக விளங்கும் T V சங்கரநாராயணன், சுதா ரகுநாதன், நெய்வேலி சந்தான கிறிஷ்ணர், T M கிறிஷ்னா என பெரும் கலைஞர்கள் சம்பிரதாய சங்கீதத்திலே எம்மை ஆட்கொண்டார்கள். எப்போ அடுத்தவருடம் வரும் இதையெல்லாம் அனுபவிக்க என இசை சுவைஞர்கள் காத்திருக்கிறார்கள்.

No comments: