அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம்

.
                நாவல் இலக்கியம்  அனுபவப்பகிர்வு


         13-12-2014  சனிக்கிழமை   மாலை  4.00 மணிக்கு    Mulgrave Neighbourhood  House  ( 36-42 Mackie Road, Mulgrave, Victoria -3170)    சமூக    மண்டபத்தில்  நடைபெறவுள்ள நாவல் இலக்கியம்  அனுபவப்பகிர்வு நிகழ்வில்  கலந்துகொள்ளுமாறு  இலக்கிய  ஆர்வலர்கள் அழைக்கப்படுகிறார்கள்.     கலந்துகொள்ளும்  இலக்கிய  ஆர்வலர்களும்  தமது  நாவல்  இலக்கிய   வாசிப்பு  அனுபவங்கள்  தொடர்பாக  கருத்துக்களைத் தெரிவிக்கலாம்.
நாவல் இலக்கிய அனுபவப்பகிர்வில் கலந்துகொள்ள விரும்பும் அன்பர்கள் தாம் விரும்பிப்படித்த ஒரு நாவல் தொடர்பாக தங்களுடைய வாசிப்பு அனுபவத்தை ஐந்து நிமிடங்களுக்கு மேற்படாமல் தெரிவிப்பதற்கும் இந்நிகழ்ச்சியில் நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதனால் - தமது நாவல் வாசிப்பு அனுபவத்துடன் வருகைதருமாறு அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.
அவுஸ்திரேலியா  தமிழ்  இலக்கிய  கலைச்சங்கம்  வருடாந்தம்  தமிழ் எழுத்தாளர்   விழாவை  கலை  இலக்கிய  ஒன்றுகூடலாக நடத்திவருவதுடன்   அனுபவப்பகிர்வு  நிகழ்வுகளையும் ஒழுங்குசெய்து வருகிறது. கடந்த   காலங்களில்  சிறுகதை,  கவிதை  மற்றும்  தமிழ்  விக்கிபீடியா பயிலரங்கு  அனுபவப்பகிர்வுகளை   நடத்தியுள்ள  சங்கம் -  நாவல் இலக்கியம்   தொடர்பான   அனுபவப்பகிர்வையும்   நடத்தவுள்ளது. சங்கத்தின்  தலைவர்  Dr. நடேசனின்  தலைமையில்  நடைபெறவுள்ள நாவல்   இலக்கிய  அனுபவப்பகிர்வில்  இலங்கை  - தமிழக   நாவல்கள் புலம்பெயர்ந்தவர்களின்  நாவல்  இலக்கிய  முயற்சிகள்  மற்றும் மேலைத்தேய   பிறமொழி  நாவல்  இலக்கியம்  தொடர்பாகவும்  உரைகளும்  கலந்துரையாடலும்   இடம்பெறும்.
இந்நிகழ்ச்சியில் தேநீர் விருந்தும் இடம்பெறவிருப்பதனால் சிற்றுண்டிகள் வழங்குவதற்கு விரும்பும் அன்பர்கள் தொடர்புகொள்ளலாம்.
மேலதிக  விபரங்களுக்கு:  நடேசன் (தலைவர்)   0411 606 767 |  ஸ்ரீநந்தகுமார் (செயலாளர்)     0415 405  361


No comments: