சிங்கப்பூரில் தமிழில் புதிய தேசிய கீதம்
மதத்தின் பெயரால் தீவிரவாதம் முன்னெடுக்கப்படுவதை கண்டிக்க வேண்டும்: பாப்பரசர் வலியுறுத்தல்
ஜ.எஸ். போராளி குழுத்தலைவரின் மனைவி மகன் கைது
சோமாலிய தலைநகரில் ஐ.நா. வாகனத்தை இலக்கு வைத்து தற்கொலை குண்டுதாரி தாக்குதல்: 4 பேர் உயிரிழப்பு
கொலம்பியாவில் விமான விபத்து :10 பேர் பலி
அவுஸ்திரேலியாவின் முதலாவது பெண் விமானி நியமனம்
இந்தியாவில் ஒபாமா மீது தாக்குதல் நடத்த திட்டம்: உளவுத்துறை எச்சரிக்கை
சிங்கப்பூரில் தமிழில் புதிய தேசிய கீதம்
02/12/2014 சிங்கப்பூரின் 50 ஆவது ஆண்டு சுதந்திர தின விழா எதிர்வரும் ஆண்டு கொண்டாடப்படவுள்ள நிலையில் அந்நாட்டின் நான்காவது உத்தியோகபூர்வ மொழியான தமிழில் புதிய தேசிய தின கீதமொன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
5 பேரை கொண்ட குழுவினர் 6 மாதங்களை செலவிட்டு இந்த கீதத்திற்கான பாடலை எழுதியுள்ளனர்.
இதற்காக மேற்படி பாடல் உருவாக்க குழுவின் தலைவரான லோகபிரியன் ரெங்கநாதனுக்கு 50,000 சிங்கப்பூர் டொலர் வழங்கப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி
01/12/2014 மதத்தின் பெயரால் தீவிரவாதம் முன்னெடுக்கப்படுவதை உலகமெங்குமுள்ள இஸ்லாமிய தலைவர்கள் கண்டிக்க வேண்டும் என பாப்பரசர் பிரான்சிஸ் வலியுறுத்தியுள்ளார்.
துருக்கிக்கான 3 நாள் விஜயத்தை பூர்த்தி செய்து கொண்டு விமானத்தில் ரோமுக்கு திரும்புகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தீவிரவாதத்துடன் மதத்தை தொடர்புபடுத்துவது தீங்கு விளைவிக்கக் கூடியது என தான் அறிவதாக அவர் கூறினார்.
இந்த தீவிரவாத முறைமையிலிருந்து பெரும்பான்மையோர் விலகுவதற்கு வன்முறை தொடர்பான உலகளாவிய கண்டனம் உதவும் என அவர் தெரிவித்தார்.
துருக்கியிலான விஜயத்தின் போது மதங்களுக்கிடையிலான பிரிவினை குறித்து பாப்பரசர் கலந்துரையாடினார்.
அனைத்து முஸ்லிம்களும் தீவிரவாதிகள் என ஏனையவர்கள் கூறுவது தொடர்பில் பாப்பரசர் கடும் கண்டனம் தெரிவித்தார்.
அனைத்து கிறிஸ்தவர்களும் அடிப்படைவாதிகள் என எம்மால் எவ்வாறு கூற முடியாதோ அதேபோன்று ஏனைய மதத்தவர்களையும் தீவிரவாதிகள் எனக் கூற முடியாது என அவர் கூறினார்.
துருக்கியில் 120 000 கிறிஸ்தவர்கள் மட்டுமே உள்ளனர். அந்நாட்டின் 80 மில்லியன் பிரஜைகளில் பெரும்பான்மையானோர் முஸ்லிம்களாவர். நன்றி வீரகேசரி
ஜ.எஸ். போராளி குழுத்தலைவரின் மனைவி மகன் கைது
சோமாலிய தலைநகரில் ஐ.நா. வாகனத்தை இலக்கு வைத்து தற்கொலை குண்டுதாரி தாக்குதல்: 4 பேர் உயிரிழப்பு
கொலம்பியாவில் விமான விபத்து :10 பேர் பலி
அவுஸ்திரேலியாவின் முதலாவது பெண் விமானி நியமனம்
இந்தியாவில் ஒபாமா மீது தாக்குதல் நடத்த திட்டம்: உளவுத்துறை எச்சரிக்கை
ஜ.எஸ். போராளி குழுத்தலைவரின் மனைவி மகன் கைது
03/11/2014 ஜ .எஸ். போராளிகள் குழுவின் தலைவரான அபூபக்கர் அல் பக் டாட்டியின் மனைவி மற்றும் மகனை சிரிய எல்லையில் வைத்து லெபனானிய பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளதாக அந்த நாட்டு இராணுவம் தெரிவித்தது.
10 நாட்களுக்கு முன் லெபனானுக்குள் பிரவேசித்த மேற்படி இருவரும் இராணுவ புலனாய்வுத் தகவலொன்றை அடிப்படையாக வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பக்டாட்டியின் மனைவி லெபனானிய பாதுகாப்பு அமைச்சில் விசாராணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஜூன் மாதம் சிரியா மற்றும் ஈராக்கில் ஐ.எஸ். போராளிகளால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள இஸ்லாமிய தேசத்தின் தலைவராக கடந்த மாதம் பக்டாடி பெயர் குறிப்பிடப்பட்டார்.
வட ஈராக்கிய நகரான மொசுலீல் அமெரிக்க தலைமையிலான படையினர் நடத்திய தாக்குதலில் பஹ்டாடி கொல்லப்பட்டோ அல்லது காயமடைந்தோ உள்ளதாக வெளியாகிய செய்திகளுக்கு ஐ.எஸ். போராளிகள் கடந்த மாதம் மறுப்புத் தெரிவித்திருந்தனர். இதன் போது
அவர்கள் பஹ்டாடியுடையது என தெரிவிக்கப்பட்ட ஒலிநாடா செய்தியொன்றை வெளியிட்டிருந்தனர். நன்றி வீரகேசரி
சோமாலிய தலைநகரில் ஐ.நா. வாகனத்தை இலக்கு வைத்து தற்கொலை குண்டுதாரி தாக்குதல்: 4 பேர் உயிரிழப்பு
03/11/2014 சோமாலிய தலைநகர் மொகாடிஷுவில் ஐக்கிய நாடுகள் வாகனத் தொடரணியொன்றை இலக்கு வைத்து வெடி பொருட்கள் நிரப்பப்பட்ட காரை செலுத்தி வந்த தற்கொலைக் குண்டுதாரியொருவர் புதன்கிழமை நடத்திய தாக்குதலில் குறைந்தது 4 பேர் பலியாகியுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.
மொகாடிஷு விமான நிலையத்துக்கு ஐக்கிய நாடுகள் சபை உத்தியோகத்தர்களை ஏற்றிச்சென்ற வாகனத்தையும் அதற்கு காவலாக சென்ற பாதுகாப்பு குழுவினரின்
வாகனங்களையும் இலக்கு வைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. விமான நிலையத்தின் நுழைவாயிலுக்கு அண்மையிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு குழுவும் உரிமை கோராத போதும் அல் - கொய்தாவுடன் தொடர்புடைய அல் -ஷபாப் போராளிகளே காரணம் என நம்பப்படுகின்றது.
சர்வதேச ஆதரவுடன் செயற்படும் சோமாலிய அரசாங்கத்தை ஆட்சி கவிழ்க்க அந்த போராளிகள் போராடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தற்கொலை குண்டுதாரி ஐக்கிய நாடுகள் ஊழியர்களுக்கு பாதுகாப்பாக சென்ற வாகனங்களுக்கிடையே காரைச் செலுத்தி வந்து தாக்குதலை நடத்தியுள்ளார்.
இந்த தாக்குதலையடுத்து வானளாவ கரும் புகைமூட்டம் எழுந்துள்ளது.
மொகாடிஷுவிலுள்ள பாரிய விமான நிலைய வளாகத்தில் பெருந்தொகையான வெளிநாட்டு தூதரகங்கள் அமைந்துள்ளன.
அத்துடன் அந்நகரின் மத்தியிலிருந்த ஐக்கிய நாடுகள் வளாகம் கடந்த வருடம் அல் - ஷபாப் போராளிகளால் தாக்கப்பட்டதையடுத்து ஐக்கிய நாடுகள் உத்தியோகத்தர்கள் பலர் அந்த விமான நிலைய வளாகத்திலேயே தங்கியுள்ளனர்.
அல் - ஷபாப் போராளி குழுவின் தலைவர் அஹ்மட் அப்டி கோடன் அமெரிக்க வான் தாக்குதலில் கடந்த செப்டெம்பர் மாதம் கொல்லப்பட்டதையடுத்து அக்குழுவின் தலைவராக அஹ்மட் உமர் அபு உபெய்டாஹ் செயற்பட்டு வருகின்றார். நன்றி வீரகேசரி
கொலம்பியாவில் விமான விபத்து :10 பேர் பலி
04/12/2014 கொலம்பியாவில் சிறிய ரக விமானமொன்று புதன்கிழமை விபத்துக்குள்ளானதில் குறைந்தது 5 சிறுவர்கள் உட்பட 10பேர் உயிரிழந்துள்ளனர்.
மாகுயிடா விமான நிலையத்தில் அவசர கால நிலைமையின் கீழ் தரையிறங்கவிருந்த அந்த விமானம் விமான நிலையத்திலிருந்து 8 மைல் தொலைவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
அந்த விமானத்தில் பயணித்த இரு விமானிகளும் 8 பயணிகளும் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். நன்றி வீரகேசரி
அவுஸ்திரேலியாவின் முதலாவது பெண் விமானி நியமனம்
05/12/2014 அவுஸ்திரேலிய விமான சேவை யொன்றின் தலைமை விமானியாக முதல் தடவையாக பெண் ணொருவர் நியமிக்கப் பட்டுள்ளார்.
ஜோர்ஜியானா சட்டன் என்ற மேற்படி பெண் விமானி ஜெட்ஸ்டார் விமான சேவையின் தலைமை விமானியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அவர் எதிர்வரும் வருடம் பெப்ரவரி மாதத்திலிருந்து தனது பதவியை கையேற்று சுமார் 180 விமானிகளை மேற்பார்வை செய்யும் பொறுப்பை வகிக்கவுள்ளார்.
ஜோர்ஜியானா பெருந்தொகையான உள்ளூர் மற்றும் வெளியூர் விமானிகளுடன் கடும் போட்டியை எதிர்கொண்டு மேற்படி பதவி நிலைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
உலகளாவிய ரீதியிலுள்ள சுமார் 130இ000 விமானிகளில் சுமார் 4000 பேர் மட்டுமே பெண்கள் என சர்வதேச பெண் விமானிகள் சபை கூறுகின்றது. நன்றி வீரகேசரி
இந்தியாவில் ஒபாமா மீது தாக்குதல் நடத்த திட்டம்: உளவுத்துறை எச்சரிக்கை
07/12/2014 அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, இந்திய குடியரசு தின விழாவில் கலந்து கொள்வதற்காக இந்தியா வருகை தர உள்ளார். அவரின் வருகையின் போது தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து, புது டில்லி நகரம் முழுவதும் சோதனை, கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment