தமிழ் சினிமா - காடு

.

தமிழ் சினிமாவில் சில நாட்களாக புரட்சி வெடிக்கிறது. கம்னியூசம் தீ பறக்கிறது. இந்த கம்னியூச வெறி விஜய்யை மட்டும் இல்லை நம்ம விதார்த்தையும் விட்டு வைக்கவில்லை. அந்த வகையில் புதுமுக இயக்குனர் ஸ்டாலின் இயக்கத்தில் வெளி வந்திருக்கும் படம் தான் இந்த காடு.


உலகின் மூன்றாம் உலகப்போர் என்று வந்தால் கண்டிப்பாக அது தண்ணீருக்காக தான் இருக்கும் என அறிக்கைகள் சொல்கிறது. தண்ணீர் வறட்சிக்கு முக்கிய காரணம் காடுகளை அழித்தல். காடுகளை தான் அழித்துவிட்டு அந்த காட்டை பாதுகாக்கும் மக்களையும் விரட்டி விட்டு, மரங்களை வெட்டுதல், விலங்குகளை கொல்லுதல் போன்ற சமூகத்திற்கு எதிரான செயல்களை சுட்டி காட்டுகிறது இந்தப்படம்.

கதை

விதார்த்-கருணா நம்ம தளபதி ஸ்டையில் நண்பர்கள். அவருக்கும் ஒன்று என்றால் இவர் கொதித்து எழுந்து விடுவார். அவர் செய்யும் தவறுகளை தான் ஏற்றுக்கொள்வார். இந்நிலையில் கருணா வனத்துறை அதிகாரியாக ஆக முயற்சி செய்து வருகிறார். இந்தப்பக்கம் விதார்த் வழக்கமான தமிழ் சினிமாவில் வருவது போல் பள்ளிக்கு செல்லும் பெண்ணுடன் காதல், பாட்டு இடையில் சிங்கம் புலி, காதலியின் அப்பா தம்பி ராமையாவுடன் சேட்டை என்று சுத்திக்கொண்டு இருக்கிறார்.

ஒரு கட்டத்தில் நண்பன் செய்யும் தவறுக்காக அவன் ரேஞ்சர் கனவு பலிக்க வேண்டும் என்பதற்காக பலியை இவர் ஏற்றுக்கொண்டு சிறைக்கு செல்கிறார். ஆனால், நண்பன் நம் மக்களுக்கே துரோகம் செய்தான் என்று தெரிய வருகிறது சிறையில். அங்கு தான் சமுத்திரக்கனியை சந்திக்கிறார் விதார்த்.


சிறையில் பூத்த சே குவராகவாக கைதியாக இருந்து கொண்டே புரட்சி வெடிக்க போதனைகள் சொல்லி முறுக்கு ஏற்றி விதார்த்தை வெளியே அனுப்புகிறார். பின் அந்த தீய சக்திகளுக்கு எதிராக போராடி எப்படி காட்டையும், காட்டு மக்களையும் காப்பாற்றுகிறார் என்பதே மீதிக்கதை.
நடிகர் நடிகைகள் இன்வால்மென்ட்

படத்தின் மொத்த பலமும் சமுத்திரகனி தான். வருவது 4 சீனாக இருந்தாலும் 40 முறை கைத்தட்டு வாங்கி விடுகிறார். விதார்த் வழக்கமான தன் எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். குறிப்பாக ஜெயிலில் வரும் தாத்தா ஒருவர நடிப்பில் தூள் கிளப்புகிறார். கதாநாயகிக்கு பாட்டுக்கும், சைட்டுக்கும் மட்டும் தான். மற்றபடி பாரஸ்ட் ஆபிசர் நரேன், கருணா என அனைவரும் நல்ல நடிப்பை வழங்க்கியுள்ளனர்.
க்ளாப்ஸ்

படத்தின் முதல் க்ளாப்ஸ் வசனத்திற்கு தான். சில நாட்களுக்கு முன் பார்த்த இட்லி கம்னியூசத்தை விட காடு கம்னியுசம் மனத்திற்கு நெருக்கமாக உள்ளது. 'விலை உயர்ந்த பொருட்கள் அனைத்து நச்சு தான்', காடு என்பது நமது மூதாதயை நம் முன்னோர்களா வெட்டுறவன நீ வெட்டு' போன்ற வசனங்கள் சபாஸ் ஸ்டாலின். கே வின் பின்னணி இசை சூப்பர். உனக்காக தான் பாடல் மட்டும் கேட்கும் ரகம்.
பல்ப்ஸ்

முதலில் எடிட்டிங். எங்குமே திரையில் ஒட்டவே இல்லை. மேலும் தமிபி ராமையா, சிங்கம் புலி அன்கொவின் தேவைல்யில்லாத கா(மெ)டி. விதாரத் எழுத படிக்கவே தெரியாதுன்னு ஒரு சீன்ல சொல்றாரு , அப்பறம் எப்படி சமுத்திரகனி கொடுக்குற சே குவாரா புக் மட்டும் படிக்கிறாரு? இது மாதிரி அங்கங்கே லாஜிக் உதறல்.
மொத்தத்தில் காடு அனைவரும் பார்க்க (படிக்க) வேண்டிய ப(பா)டம் -



நன்றி  cineulagam



No comments: