இளமையை சாகடிக்கும் ரியால்களும்,தீனார்களும்! - (கீழை ஜஹாங்கீர் அரூஸி)

.
இளமை இருபதில் பாலைதேசம் நோக்கிய பயணங்கள் பல எதிர்பார்ப்புகளோடு?
வருடங்கள் பல உருண்டோடியும் வறுமை நீங்கா குடும்பங்கள் அதிகமுண்டு.
வெளிநாட்டு மாப்பிள்ளை என்னும் மோகத்தில் பெண் கொடுத்தவர் பலர்.

கொடுப்பது ஆயிரமென்றாலும் அரபு நாட்டு பணமென்னும் வரட்டு கவுரவம் பார்ப்பவர் சிலர்.
அதனால் பலரின் இளமை வாழ்க்கை அரபு மண்ணிற்குள் புதைக்கப்பட்டு விட்டன.
ரியால்களும்,தீனார்களுமே பலரது வாழ்க்கைக்கு எதிரியாய் நிற்கிறது.
வெளிநாட்டு பணத்தை நேசிக்கும் அளவுக்கு கூட தம் கணவனை நேசிக்கா மனைவியரின் அணிவகுப்பு அதிகமாகிவிட்டது.
இரண்டு வருடத்திற்கு ஒருமுறை இரண்டு மாத விடுமுறை கால இல்லற வாழ்க்கையில் யார்?,யாரை புரிந்து கொள்ள முடியும்?
வெளிநாட்டு பொருட்களின் மீதான நேசத்திலேயே இரண்டு மாதங்களும் உருண்டோடி விடுவதால் கணவன் மனைவிக்கு இடையிலான புரிந்துணர்வில் சில இடைவெளி.
அதனால் தான் விவாகரத்து பெருகி விட்டதோ? 
ரியால்களும்,தீனார்களும் சிலரது வாழ்வில் வெளிச்சம் கொடுத்தாலும்,பலரது வாழ்வை இருளாக்கி விடுகிறது.
தலையில் வழுக்கையை கொடுத்த ரியால்களே!வயிற்றில் தொப்பையை கொடுத்த தீனார்களே!
உன்னை விட்டு பிரியும்போது மனதில் சோர்வையும்,உடம்பில் நோயையும் அல்லவா உடன் அழைத்து செல்கிறோம்.
என்று தணியும் எங்களின் விடுதலை தாகம்?

No comments: