உலகச் செய்திகள்


ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கத் தயார் : உக்ரேனிய ஜனாதிபதி அறிவிப்பு

எகிப்திய முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பை சேர்ந்த 183 பேருக்கு மரணதண்டனை : நீதிமன்றம் உறுதிப்படுத்தி தீர்ப்பளிப்பு

சிரிய இராணுவ இலக்குகள் மீது இஸ்ரேல் வான் தாக்குதல்

பாகிஸ்தான் பெஷாவர் விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு: பெண் ஒருவர் பலி

எகிப்தில் 3 நிலக்கீழ் புகையிரத நிலையங்களில் குண்டு வெடிப்புகள்

நைஜீரியாவில் குண்டு வெடிப்பு:21 பேர் பலி

காணாமல்போன மலேசிய விமானத்தை தேடுவதற்கான புதிய பிரதேசம் அறிவிப்பு



=================================================================

ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கத் தயார் : உக்ரேனிய ஜனாதிபதி அறிவிப்பு

23/06/2014 உக்­ரேனின் புதிய மேற்­கு­லக ஆத­ரவு ஜனா­தி­பதி பெட்ரோ பொரோ­ஷென்கோ பிரி­வினைவாதி­க­ளுடன் பேச்­சு­வார்த்தை நடத்­து­வ­தற்கு ஞாயிற்­றுக்­கி­ழமை இணக்கம் தெரி­வித்­துள்ளார்.
தனது நாட்­டிற்கு அச்­சு­றுத்­த­லா­க­வுள்ள ரஷ்ய ஆத­ரவு கிளர்ச்­சியை முடி­வுக்கு கொண்டு வரும் முக­மாக படு­கொலை மற்றும் சித்­தி­ர­வ­தை­க­ளுடன் தொடர்பு படாத பிரி­வினைவாதி­க­ளுடன் பேச்­சு­வார்த்தை நடத்­து­வ­தற்கு தான் தயா­ரா­க­வுள்­ள­தாக அவர் அறி­விப்புச் செய்­துள்ளார்.
கிழக்கு உக்­ரேனில் முன்­னெ­டுக்­கப்­பட்ட அர­சாங்­கத்தின் 10 வார தீவி­ர­வாத எதிர்ப்பு நட­வ­டிக்­கையில் 375 பேர் பலி­யாகி பல்­லா­யி­ரக்­க­ணக்­கானோர் இடம்­பெ­யர்ந்­துள்ள நிலையில் ஒரு வார பரஸ்­பர யுத்த நிறுத்தம் தொடர்பில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை அறி­விப்பு செய்­யப்­பட்­டது.
இந்­நி­லையில் உக்­ரேனால் பேச்­சு­வார்த்­தை­களை ஆரம்­பிப்­ப­தற்­கான ஆரம்ப செயற்­பா­டு­களை உள்­ள­டக்கி முன்­வைக்­கப்­பட்­டுள்ள சமா­தான திட்­டத்துக்கு ஆத­ர­வ­ளிப்­ப­தாக ரஷ்ய ஜனா­தி­பதி விளா­டிமிர் புட்டின் சனிக்­கி­ழமை மாலை அறி­விப்புச் செய்­துள்ளார்.
பெட்ரோ பெரோஷன் கோவால் பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள இந்த ஒரு வார யுத்த நிறுத்த உடன்­ப­டிக்கை இறுதி தீர்­மா­ன­மாக இருக்­கக்­கூ­டாது என புட்டின் கூறினார்.
எனினும் இந்த யுத்த நிறுத்­தத்தை பிரி­வினைவாதிகள் நிரா­க­ரித்­துள்­ளனர்.
தமது சொந்த யுத்த நிறுத்­தத்தை உக்­ரே­னிய இரா­ணுவம் மீறி­யுள்­ள­தாக அவர்கள் குற்­றஞ்­சாட்­டினர்.கிழக்கு உக்­ரேனில் சனிக்­கி­ழமை இரவு தொடர்ந்து மோதல்கள் இடம்­பெற்­றுள்­ளன. இதன் போது கிளர்ச்­சி­யா­ளர்­களின் தாக்­கு­தலில் 6 எல்லைக் காவ­லர்கள் காய­ம­டைந்­துள்­ளனர்.
அதே­ச­மயம்இ உக்­ரே­னி­லுள்ள 7 ரஷ்ய ஆத­ரவு தலை­வர்­க­ளுக்கு எதி­ராக சொத்து முடக்கம் உள்­ள­டங்­க­லான தடை­களை அமெ­ரிக்கா விதித்­துள்­ளது. உக்­ரேனில் பதற்ற நிலையை தூண்டி விடும் ரஷ்­யா­வுக்கு எதி­ராக மேல­திக தடை­களை விதிக்கப் போவ­தாக மேற்­கு­லக தலை­வர்கள் அச்­சு­றுத்தல் விடுத்­துள்­ளனர்.
இந்­நி­லையில் ரஷ்ய ஜனா­தி­பதி அலு­வ­ல­கத்தால் வெளி­யி­டப்­பட்ட அறிக்­கையில் அமை­தி­யான தீர்­வொன்றை எட்ட ஒரு தொகை பல­மான முன்­ன­டி­யெ­டுத்து வைப்­பு­களை முன்­னெ­டுக்க விளா­டிமிர் புட்டின் ஆத­ர­வ­ளிப்­ப­தாக குறிப்­பிடப்­பட்டுள்­ளது.
கிழக்கு உக்­ரே­னி­லுள்ள எதிர்த்­த­ரப்­பி­ன­ரி­டையே அர்த்­த­முள்ள பேச்­சு­வார்த்­தை­க­ளையும் அர­சியல் உறு­திப்­பா­டு­களை முன்­னெ­டுக்க வழி­வகை செய்­யப்­படும் பட்­சத்தில் மட்­டுமே மேற்­படி சமா­தான திட்டம் செயற்­படக் கூடி­ய­தாக இருக்கும் என புட்டின் வலி­யு­றுத்­தி­யுள்ளார்.
பிரி­வினை வாத ஆயு­த­தா­ரி­களால் கைப்­பற்­றப்­பட்­டுள்ள கிழக்கு உக்­ரே­னிய பிராந்­தி­யங்­க­ளி­லுள்ள கட்­ட­டங்­களின் கட்­டுப்­பாட்டை மீளக் கைப்­பற்­று­வ­தற்கு உக்­ரே­னிய படை­யினர் போராடி வரு­கின்­றனர்.
டொனெட்ஸ்க் மற்றும் லுஹா­ன்ஸ்க் பிராந்­தி­யங்­க­ளி­லுள்ள உக்­ரே­னிய எல்லைக் காவ­ல­ரண்கள் மூன்றை பிரி­வி­னை­வா­திகள் வெள்­ளிக்­கி­ழமை இரவு தாக்­கி­யுள்­ளனர்.
இதன்போதுஇ பிரிவினைவாதிகள் ஏவு கணைகள் மற்றும் மோட்டார் குண்டுகளைப் பயன்படுத்தியதாகக் கூறப்­ப­டு­கி­றது.
அத்துடன்இ டொனெட்ஸ் பிராந்தியத் திலுள்ள கிரமடோர்ஸ்க் விமான நிலையத்துக்கு வெளியிலிருந்த படையினர் மீதும் பிரிவினைவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
 நன்றி வீரகேசரி 






எகிப்திய முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பை சேர்ந்த 183 பேருக்கு மரணதண்டனை : நீதிமன்றம் உறுதிப்படுத்தி தீர்ப்பளிப்பு

23/06/2014  எகிப்­திய முஸ்லிம் சகோ­த­ரத்­துவ அமைப்பின் தலைவர் மொஹமட் பாடி உட்­பட 183 இஸ்­லா­மி­ய­வா­தி­க­ளுக்கு மரண தண்­டனை நிறை­வேற்­றப்­ப­ட­வுள்­ளதை அந்­நாட்டு நீதி­மன்­ற­மொன்று உறு­திப்­ப­டுத்தி சனிக்­கி­ழமை தீர்ப்­ப­ளித்­துள்­ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் திகதி மின்யா மாகா­ணத்­தி­லுள்ள பொலிஸ் நிலை­ய­மொன்றின் மீது நடத்­தப்­பட்ட தாக்­குதல் தொடர்­பி­லேயே அவர்­க­ளுக்கு மரணதண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது. மொத்தம் 683 பேருக்கு மரணதண்­டனை வழங்க சிபா­ரிசு செய்­யப்­பட்­டி­ருந்­தது.
இந்­நி­லையில் அவர்­களில் 4 பேருக்கு 15 முதல் 25 வருட சிறை­தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது. ஏனைய 496 பேரும் விடு­தலை செய்­யப்­பட்­டுள்­ளனர்.
மொஹ­மட் ­பாடி தனக்கு விதிக்­கப்­பட்ட தண்­ட­னைக்கு எதி­ராக மேன்­மு­றை­யீடு செய்வார் என நம்­பப்­ப­டு­கி­றது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் முஸ்லிம் சகோ­த­ரத்­துவ அமைப்பைச் சேர்ந்த முன்னாள் ஜனா­தி­பதி மொஹமட் முர்ஸி இரா­ணு­வத்தால் ஆட்­சி­யி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்­டது முதற்­கொண்டு இஸ்­லா­மி­ய­வா­தி­களை ஒடுக்கும் முயற்­சியில் அந்­நாட்டு அதி­கா­ரிகள் ஈடு­பட்­டுள்­ளனர்.
அதே­ச­மயம் பாடிக்கும் ஏனைய 13 பேருக்கும் கடந்த வருடம் இடம்பெற்ற பிறிதொரு மோதல் தொடர்பிலும் மரண தண்டனை விதிக்க சிபாரிசு செய்யப் பட்டுள்ளது.
 நன்றி வீரகேசரி 






சிரிய இராணுவ இலக்குகள் மீது இஸ்ரேல் வான் தாக்குதல்

23/06/2014 இஸ்ரேலானது சிரியாவில் உள்ள 9  இராணுவ இலக்குகள் மீது வான் தாக்குதல்கள் நடத்தியுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இஸ்ரலுக்கும் சிரியாவுக்குமிடையிலுள்ள எல்லையிலுள்ள கோலன் ஹைம்ஸ் பிராந்தியத்தில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தாக்குதலில் 15 வயது சிறுவன் ஒருவன் கொல்லப்பட்டமைக்கு பதிலடி  கொடுக்கும் முகமாகவே இந்த வான் தாக்குதல் நடத்தப்பட்டது.
கோலன் ஹைட்ஸ் பிராந்தியத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் சிறுவனின் தந்தை மற்றும்  இஸ்ரேலிய பாதுகாப்பு ஒப்பந்தக்காரர் ஒருவர் ஆகியோர் காயமடைந்தனர். மேற்படி மூவரும் பயணித்த வாகனத்தின் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நன்றி வீரகேசரி









பாகிஸ்தான் பெஷாவர் விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு: பெண் ஒருவர் பலி

25/06/2014 பாகிஸ்தான் பெஷாவர் விமான நிலையத்தில் மர்ம நபர்களின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி பெண் பயணி ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 
நேற்றிரவு 178 பயணிகளுடன் சவூதி அரேபியாவில் இருந்து வந்த விமானம் பெஷாவர் சர்வதேச விமான நிலையத்தில் தரை இறங்கிய போது விமானம் மீது மர்ம நபர்கள் சரமாரியாக துப்பாக்கி பிரயோகம் நடத்தியுள்ளனர்.
விமானத்தை குறிவைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிப்பதோடு, சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
நன்றி வீரகேசரி








எகிப்தில் 3 நிலக்கீழ் புகையிரத நிலையங்களில் குண்டு வெடிப்புகள்


25/06/2014 எகிப்திய கெய்ரோ நகரிலுள்ள 3 நிலக்கீழ் புகையிரத நிலையங்களில் இன்று புதன்கிழமை சனசந்தடிமிக்க காலை வேளையில் சில நிமிட இடைவெளிகளில் இடம்பெற்ற 4 குண்டுவெடிப்புகளில் சிக்கி குறைந்தது 4 பேர் காயமடைந்துள்ளனர்.
கடந்த வருடம் ஜூலை மாதம் இஸ்லாமிய ஜனாதிபதி மொஹமட் முர்ஸி இராணுவத்தால் ஆட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டது முதற் கொண்டு எகிப்தில் போராளிகளால் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அவற்றில் பல தாக்குதல்கள் பாதுகாப்பு படையினருக்கு எதிரானவையாகும்.
இந்நிலையில் இன்றுபுதன்கிழமை இடம்பெற்ற குண்டு வெடிப்புகளில் ஒரு குண்டு மத்திய கெய்ரோவிலுள்ள கம்ரா புகையிரத நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.
ஏனைய குண்டு வெடிப்புகள் தலைநகரின் புறநகர்ப் பகுதிகளான ஷுப்ரா எல் கெயிமா ஹாடயெக் அல் - கொப்பா ஆகிய இடங்களில் இடம்பெற்றுள்ளன. 
மேற்படி குண்டுகளானது ஆரம்ப கட்ட சக்தி குறைந்த குண்டுகள் என பிராந்திய அதிகாரி ஒருவர் கூறினார்.
நன்றி வீரகேசரி






நைஜீரியாவில் குண்டு வெடிப்பு:21 பேர் பலி

26/06/2014   நைஜீரியாவில் வர்த்தக நிலையம் ஒன்றில் நேற்று ஏற்பட்ட குண்டு வெடிப்பு காரணமாக 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆர்ஜென்டீனாவிற்கும் நைஜீரியாவிற்கும் இடையிலான உலக கிண்ண கால் பந்தாட்ட போட்டி ஆரம்பமாவதற்கு ஒரு மணிநேரத்துக்கு முன்னதாக குறித்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பிரேசில் மற்றும் மெக்சிக்கோ அணிகளுக்கிடையிலான போட்டிகளின் போது  நைஜீரியாவின் டமடுரு  நகரில்  டந்த ஒரு வாரத்திற்கு முன்பு  இவ்வாறானதொரு தற்கொலை குண்டு தாக்குதல் சம்பவம் ஒன்று  இடம்பெற்றதுடன்,இதன் போது 14 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
நன்றி வீரகேசரி









காணாமல்போன மலேசிய விமானத்தை தேடுவதற்கான புதிய பிரதேசம் அறிவிப்பு

26/06/2014 காணாமல்போன மலேசிய எம்.எச்.370 விமானத்தை தேடுவதற்கான புதிய பிரதேசம் தொடர்பில் அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவிப்பு செய்துள்ளது.
செய்மதித்தரவுகளை மேலும் பகுப்பாய்வுக்குட்படுத்தியதையடுத்தே மேற்படி அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய கடற்கரையின் மேற்கே 18000 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள பிரதேசத்தில் மேற்படி விமானத்தை தேடும் நடவடிக்கை புதிதாக முன்னெடுக்கப்படவுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதிப் பிரதமர் வரென்தரஸ் தெரிவித்தார்.
மலேசிய எம்.எச்.370 விமானம் கடந்த மார்ச் மாதம் 8 ஆம் திகதி கோலாலம்பூரிலிருந்து டீஜிங் நகருக்கு 239 பயணிகளுடன் பயணித்த வேளை காணாமல் போனது.
மேற்படி விமானம் விபத்துக்குள்ளானதாக நம்பப்படுகிறது.
மேற்படி விமானத்தை தென் இந்து சமுத்திரத்தில் தேடுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கை தோல்வியில் முடிவடைந்தது.
இந்நிலையில் அந்த விமானத்தை தேடுவதற்கான கடலுக்கடியிலான புதிய பிரதேசம் குறித்து 64 பக்க அறிக்கையொன்றை அவுஸ்திரேலிய அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
நன்றி வீரகேசரி




No comments: