மதுபோதையில் பள்ளிவாசல்கள், கடைகள் மீது தாக்குதல் நடத்திய நால்வர் கைது
வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 62 பேர் கைது
அளுத்கம பிரதேச பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம் : ஆசிரியர், மாணவர்களின் வரவு வீழ்ச்சி
' நானே என்னை வெட்டிக் கொண்டேன்':வட்டரெக விஜித்த தேரர் வாக்கு மூலம்'
புலனாய்வுப் பிரிவினர் எனக் கூறி வெள்ளவத்தையில் பணம் கொள்ளை:இரு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் கைது
வட்டரக்க விஜித்த தேரர் கைது
வட மாகாணசபை உறுப்பினர்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு இல்லை : யாழ்.பிரதிப்பொலிஸ் மா அதிபர்
புலிகள் இயக்கத்தை சார்ந்த இருவர் கைது
அளுத்கம சம்பவம் தொடர்பில் 68 பேர் கைது:அஜித் ரோஹண
புலிகள் இயக்கத்தின் ரவிச்சங்கருக்கு எதிராக சிவப்பு அறிக்கை
==================================================================
மதுபோதையில் பள்ளிவாசல்கள், கடைகள் மீது தாக்குதல் நடத்திய நால்வர் கைது
24/06/2014 குருணாகல் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மல்லவபிட்டிய மற்றும் நகரிலிருந்து சுமார் 6 கிலோமீற்றர் தொலைவில் உள்ள கொக்கரெல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இப்பாகமுவ, பன்னல ஆகிய பகுதிகளில் இரு பள்ளிவாசல்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. அத்துடன் இப்பாகமுவ தெகல்கொடை பகுதியில் முஸ்லிம் கடை தொகுதி ஒன்றும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற இந்த தாக்குதல்களின் போது பள்ளிவாசல்களினதும் கடைகளினதும் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளன. நேற்று முன் தினம் இரவு 7.00 மணியளவில் குருணாகல்-தம்புள்ளை பிரதான வீதியில் உள்ள கொக்கரெல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இப்பாகமுவ பன்னல பள்ளிவாசல் மீதும் இப்பாகமுவ, தெகல்கமுவ பகுதிகளிலுள்ள கடைத்தொகுதி மீதும் மதுபோதையில் வந்த குழுவினரால் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது.
பன்னல பகுதியில் வீதியோரம் உள்ள பள்ளிவாசல் மீது மது போதையில் வந்த சுமார் 15 பேர் கல்வீச்சு தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இதனால் பள்ளிவாசலின் முன்பக்க கண்ணாடிகள் கடும் சேதத்துக்கு உள்ளாகியுள்ளன.
அதனையடுத்து அங்கிருந்து தப்பிச் சென்ற குறித்த குழுவினர் குருணாகல் தம்புள்ளை பிரதான வீதியில் இப்பாகமுவ சந்தியில் உள்ள கடை தொகுதியிலுள்ள முஸ்லிம் கடைகளை உடன் மூடுமாறு கூச்சலிட்டுள்ளனர். இதன் போது அந்த பகுதியில் சிவில் உடையிலிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் ஏன் கடைகளை மூடவேண்டும் என குறித்த குழுவினரிடம் கேள்வியெழுப்பியுள்ளார்.
இதனையடுத்து அக்குழுவினர் மேலும் கூச்சலிட்ட வண்ணம் கடைகள் மீது கற்கள் மற்றும் பொல்லுகளால் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் கடைகளின் முன்பக்க கண்ணாடிகளுக்கு கடும் சேதம் ஏற்பட்டது. இதனைத் தொடாந்து அப்பகுதியில் உள்ள முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டன.
சம்பவத்தை அடுத்து பிரதேச வாழ் முஸ்லிம்கள் பெரும் அச்சத்துக்கு உள்ளாகியதுடன் அப்பிரதேசமெங்கும் பெரும் பதற்றம் ஏற்பட்டது. அதனையடுத்து கொககரெல்ல பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்ததுடன் வடமேல் மாகாண சபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் றிஸ்வி ஜவஹர்ஷா மற்றும் இப்பாகமுவ பிரதேச சபை தவிசாளர் டீ.ஜே.சுமித் ஆகியோரும் ஸ்தலத்துக்கு சென்று பதற்ற நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் விதமாக பொலிஸாருடன் கலந்துரையாடினர்.
தமது ஊரினை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் பெரும்பான்மையினத்தைச் சேர்ந்தவர்களே இந்த தாக்குதலை நடத்தியதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
மல்லவபிட்டிய பள்ளிவாசல் மீதும் தாக்குதல் இதனிடையே குருணாகல் - கண்டி பிரதான வீதியுஇல் உள்ள மல்லவபிட்டிய பகுதியில் உள்ள பள்ளிவாசல் மீதும் நேற்று இரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் காரணமாக பள்ளிவாசலுக்கு சிறிது சேதம் ஏற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் குறிப்பிட்டனர்.
பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் செல்ல முயன்ற இருவரை பிரதேச மக்கள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
எவ்வாறாயினும் இவ்விரு சம்பவங்களுடனும் தொடர்புடைய நால்வரை பொலிஸார் நேற்று கைது செய்தனர். மது போதையில் இவர்கள் இவ்வாறான செயல்களில் ஈடுபட்டுள்ளதாகவும் இதில் வேறு ஏதும் உள் நோக்கம் கிடையாது எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
கொகரெல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சம்பவத்திலும் குருணாகல் பகுதி சம்பவத்திலும் தொடர்புடையவர்களையும் பொலிஸார் கைது செய்துள்ள நிலையில் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேர்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
குடித்துவிட்டே இவர்கள் கூச்சலிட்டு இந்த செயலை செய்துள்ளதாக சுட்டிக்காட்டிய அவர் விசாரணைகளை பொலிஸார் தொடர்வதாக குறிப்பிட்டார்.
இவ்விரு சம்பவங்களை அடுத்து குருணாகல் மாவட்டதுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபரின் விஷேட அறிவித்தலின் பிரகாரம் முஸ்லிம் பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி
வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 62 பேர் கைது
23/06/2014 பேருவளை,அளுத்கம மற்றும் வெலிப்பன்ன ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் மேலும் நால்வர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதுடன்,இதுவரை 62 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இந்த சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகளுக்கு 20 பொலிஸ் குழுக்களை நியமித்துள்ளதாக அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார்.
நன்றி வீரகேசரி
அளுத்கம பிரதேச பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம் : ஆசிரியர், மாணவர்களின் வரவு வீழ்ச்சி
23/06/2014 பேருவளை அளுத்கம மற்றும் தர்கா நகர் பகுதிகளில் ஏற்பட்ட இனக்கலவரத்தை அடுத்து சுமார் ஒருவார காலம் மூடப்பட்டிருந்த சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ள போதிலும் ஆசிரியர்கள் மாணவர்களின் வரவு வீழ்ச்சியடைந்து காணப்பட்டது. குறிப்பாக அல் ஹ_மைஸரா தேசியப்பாடசாலையில் ஆசிரியர்களின் வரவு மிகவும் வீழ்ச்சியடைந்து காணப்பட்டது.
76 ஆசிரியர்கள் கடமையாற்றும் இப்பாடசாலையில் 38 ஆசிரியர்களே கடமைக்கு வந்திருந்தனர்.
பேருவளைப் பகுதியில் உள்ள முஸ்லிம் பாடசாலைகளில் கடமையாற்றும் கூடுதலான ஆசிரியர் தர்கா நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
ஆசிரியர்கள், மாணவர்களின் வருகை குறைந்து காணப்பட்ட சில பாடசாலைகள் நேர காலத்துடன் மூடப்பட்டன.
நன்றி வீரகேசரி
' நானே என்னை வெட்டிக் கொண்டேன்':வட்டரெக விஜித்த தேரர் வாக்கு மூலம்
25/06/2014 தனது மர்ம உறுப்பு உள்ளிட்ட உடல் பாகங்களை தானே வெட்டிக்கொண்டதாக ஜாதிக பல சேனாவின் தலைவர் வட்டரெக விஜித்த தேரர் பொலிஸாருக்கு வாக்கு மூலம் அளித்துள்ளார். இதன் படி வட்டெரெக விஜித்த தேரரை கைது செய்வதா இல்லையா என்பதை அவர் வைத்தியசாலையிலிருந்து விடுதலையானதன் பின்னர் தீர்மானிப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் 17 ஆவது அறையில் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்றுவரும் வட்டரெக விஜித்த தேரர் உடல் நிலை தேறி வரும் நிலையில் அவர் வைத்தியசாலையிலிருந்து வெளியேறலாம் என நேற்று எதிர்ப்பார்க்கப்பட்டது. இந் நிலையில் அவர் வைத்தியசாலையிலிருந்து வெளியேறினால் அவரை கைது செய்ய பொலிஸார் தயார் நிலையில் இருப்பதாக கூறப்பட்டது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அஜித் ரோஹண மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
வட்டெரெக விஜித்த தேரர்' என்னை நானே வெட்டிக்கொண்டேன்' எனவும் நடந்த முழு சம்பவமும் தன்னாலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸாரிடம் வழங்கிய வாக்குமூலத்தில் ஒப்புக்கொண்டுள்ளார். அத்துடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையும் காயங்கள் அனைத்தும் அவராலேயே ஏற்படுத்திக் கொள்ளப்பட்டவை என்பதை உறுதி செய்துள்ளன. இந் நிலையில் பொய்யான முறைப்பாடு அளித்தமை தொடர்பில் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. எனினும் அவரை கைது செய்வதா இல்லையா என்பது குறித்து அவர் வைத்தியசாலையிலிருந்து வெளியேறிய பின்னரேயே தீர்மானிக்கப்படும் என்றார்.
கடந்தவாரம் பண்டாரகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹிரண பாலம் அருகே வீதியோரத்தில் மயக்க நிலையில் காயங்களுடன் கிடந்த வட்டரெக விஜித்த தேரர் பொலிஸாரால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல் பகுதிகளில் பிளேட் வெட்டுக்காயங்களும் மர்ம உறுப்புப் பகுதியில் காயங்களும் மருத்துவர்களால் அவதானிக்கப்பட்டது.இது தொடர்பிலான விசாரணைகளை பாணந்துறை பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரூடாக மேற்கொள்ளப்பட்டது. இந் நிலையிலேயே சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை
நன்றி வீரகேசரி
புலனாய்வுப் பிரிவினர் எனக் கூறி வெள்ளவத்தையில் பணம் கொள்ளை:இரு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் கைது
25/06/2014 வெள்ளவத்தையில் சுமார் 14 இலட்சம் ரூபா பணத்தை வங்கியில் வைப்பிலிடச் சென்ற ஒருவரை புலனாய்வுப் பிரிவினர் எனக் கூறி கடத்தி பணத்தை கொள்ளையிட்டதாக கூறப்படும் வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தின் இரு கான்ஸ்டபிள்கள் கைது செய்யப்பட் டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டது.

கடந்த 21 ஆம் திகதி வெள்ளவத்தை வியாபார நிலையம் ஒன்றின் பணத்தை அவ் வியாபார நிறுவன உரிமையாளரின் உறவுக்காரரில் ஒருவராகிய வெள்ளவத்தையை சேர்ந்த ஒருவர் வங்கியில் வைப்பிலிட எடுத்துச் சென்றுள்ளார். இந் நிலையில் குறித்த நபரை இடை நடுவே நிருத்தியுள்ள இரு பொலிஸ் கான்ஸ்டபிள்களும் தாம் குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸார் எனக் கூறி தம்மை அறிமுகம் செய்துள்ளனர். அதனை தொடர்ந்து முச்சக்கர வண்டியொன்றில் இருவரையும் ஏற்றிக்கொண்டு சென்றுள்ள அவ்விரு கான்ஸ்டபிள்களும் குறித்த நபரிடமிருந்து பணத்தொகையை கொள்ளையிட்டுள்ளனர்.
இந் நிலையில் நேற்று முந்தினம் வெள்ளவத்தை பொலிஸ் நிலைய குற்றவியல் பிரிவு பொலிஸாருக்கு இது தொடர்பில் முறைப்பாடொன்று கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியின் ஆலோசனைக்கு அமைய விசாரணைகளை துரிதப்படுத்திய குற்றவியல் பிரிவு பொலிஸார் கொள்ளையிட்டதாக கூறப்படும் இரு பொலிஸ் கான்ஸ்டபிள்களையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
பொலிஸார் மேற்கொண்டுள்ள விசாரணைகளில் 13 இலட்சத்து 65 ஆயிரம் ரூபா பணத்தொகையை இவ்வாறு கடத்தி கொள்ளையிட்டுள்ளமை தெரியவந்துள்ளது. மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
நன்றி வீரகேசரிவட்டரக்க விஜித்த தேரர் கைது
25/06/2014 ஜதிக பல சேனாவின் தலைவர் வட்டரக்க விஜித்த தேரர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விஜித்த தேரர் தன்னை இனந்தெரியாதோர் தாக்கியதாக குறிப்பிட்டிருந்ததோடு, பின்னர் எவரும் தன் மீது தாக்குதல் மேற்கொள்ளவில்லை எனவும் தன்னை தானே தாக்கி கொண்டதாகவும் கருத்து ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் விஜித்த தேரர் இன்று வைத்தியசாலையிலிருந்து வெளியேறும் போது கைது செய்துள்ளனர்.
நன்றி வீரகேசரிவட மாகாணசபை உறுப்பினர்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு இல்லை : யாழ்.பிரதிப்பொலிஸ் மா அதிபர்
25/06/2014 வடக்கு மாகாணசபை உறுப்பினர்களுக்கு வழக்கப்பட்டு வந்த பொலிஸ் பாதுகாப்பினை விலக்குவதாக யாழ்.மாவட்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் இன்று கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment