சாய்மானகதிரை

.


எங்கள் வீட்டில் இப்போதைக்கு
வயதானது இதுதான் 
இதன்  பின்னல்களோடு சேர்த்து
எங்களின் பல நூறுகதைகள் பின்னப்பட்டிருக்கும்.

அம்மப்பாவுக்கு அரியாசனமாய்
அம்மம்மாவுக்கு சரியாசனமாய்
அம்மாவுக்கு  சிம்மாசனமாய்
அப்பாவுக்கு பொன்னாசனமாய்
 என பல அவதாரங்களை இது சுமந்திருக்கும்.

அதன் பின்னலின் ஓட்டைகளில்
வெளிப்பட்டுபோனது
அதுக்கு வயதாகிய விசயம்.

தன்னை சீண்டுவார் யாருமில்லை எனும்
கோபத்தில் தன் ஒற்றைகையை உடைத்துவைத்திருக்கிறது.

ஓய்வுக்காக கொஞ்சம் உட்காந்த போது அதன் ஓட்டைபின்னலோ என் காற்சட்டை
பொத்தானை இழுத்துபிடித்து இன்னமும்
கொஞ்சம் உட்காந்து போவேனன
கையை நீட்டி கதறுவதாய் தோனியது 


கைகள்,கால்களில்  ஆணியடித்ததால்
மீண்டும் உயிர்தெழுந்து  எங்கள் பா(ர)வங்களை சுமப்பதால் அதுவும்  
ஒரு இயேசுகிறிஸ்துதான்

ஓய்வெடுப்போர் வரட்டும் என 
ஓய்வெடுத்து கொண்டிருக்கிறது
எங்கள் பரம்பரையை சுமந்த
பல்லக்கான சாய்மானகதிரை  
 Nantri :sangarfree.com

No comments: