உலகச் செய்திகள்


நூற்றுக்கணக்கான சிரிய அகதிகளை ஏற்கத் தயாராகும் பிரித்தானியா

சாதிக்க நினைத்தவர் சாவை தழுவிய பரிதாபம்!

அமெரிக்காவின் தென் பிராந்தியத்தை தாக்கிய பனிப்புயல்




=====================================================================

நூற்றுக்கணக்கான சிரிய அகதிகளை ஏற்கத் தயாராகும் பிரித்தானியா


சிரிய அகதிகளில் மிகவும் மோசமாக பாதிக்கப்படக் கூடிய நிலையிலுள்ள சிலருக்கு பிரித்தானியாவில் தற்காலிகமாக குடியேற அனுமதி வழங்கவுள்ளதாக பிரித்தானிய பிரதிப் பிரதமர் நிக் கிளெக் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் போரால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் பாலியல் வன்முறைகளுக்கும் சித்திரவதைகளுக்கும் உள்ளாகக் கூடிய நிலையிலுள்ளவர்களுக்கும் வயதானவர்களுக்கும் விசேட தேவையுள்ளவர்களுக்கும் முன்னுரிமை கொடுக்கவுள்ளதாக அவர் கூறினார்.
இதன் பிரகாரம் பிரித்தானிய அரசாங்கம் நூற்றுக்கணக்கான சிரிய அகதிகளை ஏற்றுக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரித்தானியாவின் இந்த சிரிய அகதிகளை ஏற்றுக் கொள்ளும் திட்டம் ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர் ஸ்தானிகராலயத்தின் சிரிய அகதிகள் தொடர்பான திட்டத்திலிருந்து வேறுபட்டதென தெரிவிக்கப்படுகிறது.
நன்றி வீரகேசரி 




சாதிக்க நினைத்தவர் சாவை தழுவிய பரிதாபம்!
29/01/2014
அமெரிக்காவில் அரிசோனா மாகாணத்தில் 41வயது நபர் ஒருவர் 2000 அடி உயர பள்ளத்தாக்கில் இருந்து குதித்து சாதனை புரியும் முயற்சியில் தோல்வியடைந்து பரிதாபமாக மரணம் அடைந்த சம்பவம் அந்த பகுதியையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் டேவிட் என்ற 41 வயது நபர் தனது நண்பர்களுடன் அங்குள்ள கொலராடோ என்ற நதியருகே உள்ள பள்ளத்தாக்கில் சென்று 2000 அடி உயரத்தில் இருந்து குதித்து சாதனை செய்யும் முயற்சியில் ஈடுபட்டார். பாராசூட் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் உதவியுடன் கீழே குதித்த அவரை அவரது நண்பர்கள் உற்சாகப்படுத்தினர்.
மேலே இருந்து கீழே குதித்த டேவிட், திடீரென பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பள்ளத்தாக்கின் இடையில் உள்ள பகுதியில் சிக்கினார். இதை மேலே இருந்து பார்த்த அவரது நண்பர்கள் அதிர்ச்சியடைந்து அதிரடி மீட்புப்படையினர்களுக்கு தகவல் கொடுத்தனர்.
மீட்புப்படையினர் ஹெலிகாப்டர் உதவியுடன் தேடியபோது அவர் எங்கிருக்கிறார் என்று தெரியாததால் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. பின்னர் மறுநாள் காலை அவரது உடலை ஒரு பாறை இடுக்கில் இருந்து கண்டெடுத்தனர். ரத்த வெள்ளத்தில் பலத்த காயங்களுடன் உயிரற்ற நிலையில் டேவிட் உடல் மீட்கப்பட்டு பின்னர் பிரேத பரிசோதனைக்காக அரிசோனோ மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
அரிசோனோ போலீஸார் டேவிடுடன் சென்ற நண்பர்களை விசாரணை செய்து வருகின்றனர். தகுந்த அனுமதி பெறாமல், பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி அந்த பகுதியில் இருந்து கீழே குதிக்கும் சாதனைக்கு தற்போது தடை செய்யப்பட்டுள்ளது.















அமெரிக்காவின் தென் பிராந்தியத்தை தாக்கிய பனிப்புயல்

அமெ­ரிக்­காவின் தென் பிராந்­தி­யத்தைத் தாக்­கிய பனிப்­புயல் கார­ண­மாக குறைந்­தது 12 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­துடன் பலர் காய­ம­டைந்துள்ளனர். பனிப்­பு­யலில் சிக்கி வாக­னங்கள் விபத்­துக்­குள்­ளா­ன­தி­லேயே அநே­க­மான மர­ணங்கள் இடம்­பெற்­றுள்­ளன.
அதே­ச­மயம் ஜோர்­ஜியா, அல­பாமா ஆகிய பிராந்­தி­யங்­களைச் சேர்ந்த பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மாண­வர்கள் பனிப்­புயல் கார­ண­மாக பாட­சா­லை­களை விட்டு வெளி­யேற முடி­யாத நிலைக்கு தள்­ளப்­பட்­டி­ருந்­தனர். அத்­துடன் அட்­லான்டா பிராந்­தி­யத்தில் கடும் பனி­பொ­ழிவில் நகர முடி­யாத நிலை­யி­லி­ருந்த பாட­சாலை பஸ்­க­ளிலும் நூற்­றுக்­க­ணக்­கான மாண­வர்கள் சிக்­கி­யி­ருந்­தனர்.
எனினும், அனைத்து மாண­வர்­களும் புதன்­கி­ழமை இர­வுக்குள் தத்­த­மது வீடு­க­ளுக்கு திரும்­பி­யுள்­ள­தாக ஜோர்­ஜிய மாநில ஆளுநர் நாதன் டீல் தெரி­வித்தார்.
அதே­ச­மயம் அட்­லான்­டாவில் பனியால் மூடப்­பட்ட வீதி­யொன்றில் கர்ப்­பிணிப் பெண்­ணொ­ரு­வ­ருக்கு பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் ஒருவர் பிர­சவம் பார்த்து குழந்­தையைப் பிர­ச­விக்க உதவியுள்ளார்.
தென் கரோ­லி­னா­வி­லுள்ள பட்ரோல் நெடுஞ்­சா­லையில் பனி­மூட்டம் கார­ண­மாக 800க்கு மேற்­பட்ட வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளாகியுள்ளன. அத்துடன் இந்த பனிப் புயலினால் புதன்கிழமை 1700 விமானப் பயணங்களும் இரத்துச் செய்யப்பட்டன.  நன்றி வீரகேசரி 


No comments: