இலங்கைச் செய்திகள்


மனித புதை குழியில் இருந்து மேலும் மூன்று எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு

வெள்ளை வேனில் கடத்தப்பட்ட குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

சர்வதேச விசாரணை வேண்டும் : வட மாகாணசபையில் தீர்மானம்

வவுனியாவில் பழங்கால நாணயங்கள் கண்டுபிடிப்பு

========================================================================

மனித புதை குழியில் இருந்து மேலும் மூன்று எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு\

27/01/2014
மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி மீண்டும் இன்று திங்கட்கிழமை மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணத்தின் முன்னிலையில் தோண்டப்பட்ட போது மேலும் மூன்று மனித எலும்புக்கூடு உள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
மன்னார் நீதவான் முன்னிலையில் 15 ஆவது தடவையாக குறித்த மனித புதை குழி இன்று திங்கட்கிழமை தோண்டப்பட்ட போதே குறித்த மனித எலும்புக்கூடுகள் உள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளது. இது வரை மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்துள்ளது.
இதே வேளை   திருக்கேதீஸ்வரம் மனித புதை குழி உள்ள இடத்திற்கு வருகை தந்த குற்ற புலனாய்வுப் பிரிவினர் (சி.ஐ.டி) மூன்றாவது  நாளாக இன்று திங்கட்கிழமை தமது விசாரனைகளை அங்கு முன்னெடுத்துள்ளனர்.
கடந்த டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி குறித்த மனித எலும்புக்கூடுகள் உள்ளமை கண்டு பிடிக்கப்பட்ட நிலையில் மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணத்தின் உத்தரவிற்கமைவாக அன்று முதல் தற்போது வரை குறித்த புதை குழி தோண்டப்பட்டு வருகின்றது.

மன்னார் நீதவானின் உத்தரவிற்கமைவாக மன்னார் பொது வைத்தியசாலையில் பாதுகாப்பான இடம் ஒன்று தெரிவு செய்யப்பட்டு அங்கு பெட்டிகளில் பொதி செய்யப்படும் மனித எலும்புக்கூடுகளை பாதுகாப்பாக வைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று திங்கட்கிழமை மதியம்  2 மணிவரை குறித்த பணிகள் இடம் பெற்றது.

மீண்டும் புதை குழி தோண்டும் பணி  நாளை செவ்வாய்க்கிழமை இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி 

வெள்ளை வேனில் கடத்தப்பட்ட குடும்பஸ்தர் சடலமாக மீட்பு
28/01/2014 பொலிஸார் எனக் கூறிக்­கொண்டு வெள்ளை வேனில் வந்த ஆயுதம் தரித்த குழு­வி­னரால் 

நேற்று முன்­தினம் இரவு கடத்­தப்­பட்­ட­தாகக் கூறப்­படும் தெஹி­வளை, படோ­விற்ற பகு­தியைச் சேர்ந்த இளம் குடும்­பஸ்தர் ஒரு­வரின் சடலம் நேற்று பிற்­பகல் கல்­கிஸை பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட அத்­தி­டிய கஹ­விட்ட மாவத்­தை­யி­லுள்ள ஓடை ஒன்­றி­லி­ருந்து பொலி­ஸாரால் மீட்­கப்­பட்­டுள்­ளது.
நேற்று பிற்­பகல் கல்­கிஸை பொலிஸ் அவ­சர தொலை­பேசி அழைப்­புக்குக் கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்­ப­டையில் ஸ்தலத்­துக்குச் சென்று பொலிஸார் சட­லத்தை மீட்­ட­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் அலு­வ­லகம் குறிப்­பிட்­டது.
சட­ல­மாக மீட்­கப்­பட்­டவர் 36 வய­தான சிஹான் ஹஷித்த பெரேரா என அடை­யாளம் காணப்­பட்­டுள்ள நிலையில், கடத்­திய குழு­வி­னரால் இவர் சுட்டுக் கொலை செய்­யப்­பட்­டி­ருக்­கலாம் என பொலிஸார் சந்­தே­கிக்­கின்­றனர்.
இத­னி­டையே, கைவி­லங்­கி­டப்­பட்ட நிலையில் கடத்திச்செல்­லப்­பட்டுகொலை செய்­யப்­பட்­டுள்­ள­தாக கூறப்­படும் நபர் தொழில் ரீதி­யாக முச்­சக்­கர வண்டிச் சார­தி­யாக தொழில் புரிந்து வந்­துள்­ள­துடன் இரு பிள்­ளை­களின் தந்­தை­யாவார்.
இத­னி­டையே சட­ல­மாக மீட்­கப்­பட்­டுள்ள நபர் போதைப் பொருள் வர்த்­த­கத்­துடன் தொடர்­பு­டை­யவர் என தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. பிர­பல போதைப்பொருள் வர்த்­த­க­ரான வெலே­சு­தாவின் கையா­ளாக குறித்த நபர் செயற்­பட்டுவந்­துள்­ள­தா­கவும் அந்த தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.
எவ்வாறாயினும், சம்பவம் தொடர்பில் கல்கிைஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகி ன்றனர்.
நன்றி வீரகேசரி 
சர்வதேச விசாரணை வேண்டும் : வட மாகாணசபையில் தீர்மானம்
28/01/2014   இறுதி யுத்­தத்தின் போது தமிழ் மக்கள் கொல்­லப்­பட்­டமை தொடர்­பிலும் மன்னார் மனிதப் 

புதை­குழி விவ­காரம் குறித்தும் பக்கச்சார்­பற்ற சர்­வ­தேச விசா­ரணை நடத்­தப்­ப­ட­வேண்டும் என்று வட மாகா­ண­சபை அமர்வில் தீர்­மா­னங்கள் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளன. 
இறுதி யுத்தம் நடை­பெற்ற முள்­ளி­வாய்க்கால் பகு­தியில் உயி­ரி­ழந்த மக்­களை நினைவுகூரு­வ­தற்கு ஏது­வாக அவ்­வி­டத்தில் ஓர் நினைவுச்சின்னம் அமைக்­கப்­ப­ட­வேண்டும் என்றும் இங்கு மற்­றொரு பிரேரணை உட்­பட 12 தீர்­மா­னங்கள் திருத்­தங்­க­ளுடன் ஏக­ம­ன­தாக நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளன.
வட­மா­காண சபையின் ஐந்­தா­வது அமர்வு நேற்­றுக்­காலை அவைத் தலைவர் சி.வீ.கே. சிவ­ஞானம் தலை­மையில் நடை­பெற்­றது. முன்­ன­தாக தமிழர் திரு­நா­ளான தைப்­பொங்கல் தினத்தை முன்­னிட்டு அவை மண்­ட­பத்தின் முன்­பாக இசைக்­கச்­சேரி நடை­பெற்­றது.
நேற்­றைய அமர்வில் நெடுந்­தீவு தவி­சாளர் கொலை வழக்கில் கைதாகி தடுப்­புக்­கா­வலில் வைக்­கப்­பட்­டுள்ள வட­மா­காண சபை எதிர்க்­கட்சித் தலைவர் கந்­த­சாமி கம­லேந்­திரன் கலந்து கொண்டார். காலை 9.30 மணிக்கு கூடிய மாகாண சபையில் சபை உறுப்­பி­னர்­களால் பிரே­ர­ணைகள் முன்­வைக்­கப்­பட்­டன.
முல்­லைத்­தீவு மாவட்ட வட­மா­காண சபை உறுப்­பினர் து.ரவி­க­ரனால் முன்­வைக்­கப்­பட்ட பிரே­ர­ணையில்,
பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மக்கள் உயிர்த்­தி­யாகம் செய்த முள்­ளி­வாய்க்கால் மண்ணில் தங்­க­ளு­டைய உற­வு­களை எண்ணி ஒரு சொட்டுக் கண்­ணீ­ருடன் அவர்­களை நினைவு கூரு­வ­தற்கு ஏது­வாக ஒரு நினைவுச் சின்னம் அமைத்தல் வேண்டும். புதுக்­கு­டி­யி­ருப்பு பிர­தேச வைத்­தி­ய­சா­லை­யா­னது போர்க் காலப் பகு­தியில் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மக்­க­ளுக்குச் சேவை வழங்­கி­யது. இது இறு­திக்­கட்ட யுத்­தத்தில் முற்­றாக அழிக்­கப்­பட்­டது. தற்­போது அங்­குள்ள மக்கள் தொகைஇ பய­ன­டையும் நோயாளர் எண்­ணிக்கை அனைத்­தையும் கவ­னத்தில் கொண்டு அதனை ஒரு ஆதா­ர­வைத்­தி­ய­சா­லை­யாகத் தர­மு­யர்த்த வேண்டும் என்று கோரப்­பட்­டி­ருந்­தது. இந்த பிரே­ர­ணைகள் அவை உப தலைவர் அன்­ரனி ஜெக­நா­தனின் வழி மொழி­வுடன் ஏக­ம­ன­தாக நிறை­வேற்­றப்­பட்­டன.
ம. அன்­ரனி ஜெய­நா­தனால் முன்­வைக்­கப்­பட்ட முல்­லைத்­தீவு மாவட்­டத்தில் காணி­க­ளுக்­காக விண்­ணப்­பித்­த­வர்­க­ளுக்கு காணிக் கச்­சேரி நடாத்தி காணியை வழங்க வேண்டும் என்ற பிரே­ரணை முன்­வைக்­கப்­பட்­டது. இதேபோல் முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வ­ரனால், இந்த நாட்டில் சட்ட ஒழுங்கு சீர்­கு­லைந்­துள்­ளது. வடக்கு மக்­களின் வாழ்­வி­ட­ங்­களில் படை­யினர் குடி­யி­ருப்­பதால் அவர்­களின் இயல்பு வாழ்க்கை பாதிக்­கப்­பட்டு வரு­கின்­றது. பாரிய யுத்த அழி­வு­களால் பாதிக்­கப்­பட்ட வடக்கு மக்கள் வடக்கில் நல்­லாட்சி நிலவ வேண்டும் என்­ப­தற்­காக வட­மா­காண சபையைத் தெரிவு செய்து எமக்கு ஆணை வழங்­கி­யுள்­ளனர். இந்த மக்­களின் உட­னடித் தேவை­களை வடக்கு மாகாண சபை நிறை­வேற்­ற­வேண்டும். இதற்கு மத்­திய அரசின் பூரண ஒத்­து­ழைப்பு வேண்டும்.
பிரித்­தா­னியப் பிர­தமர் யாழ்ப்­பா­ணத்­திற்கு வருகை தந்து மக்­களை சந்­தித்­த­மைக்கு வட­மா­காண சபை நன்றி தெரி­விக்­கின்­றது என்ற பிரே­ரணை சமர்­ப்பிக்­கப்­பட்­டது. இந்தப் பிரே­ர­ணை­களும் ஏக­ம­ன­தாக நிறை­வேற்­றப்­பட்­டன.
சர்­வ­தேச விசா­ரணை வேண்டும்
மாகா­ண­சபை உறுப்­பினர் எம்.கே. சிவா­ஜி­லிங்­கத்தால் தமிழ்த் தேசத்தின் மீது நடத்­தப்­பட்­டதும் நடந்து கொண்­டி­ருப்­பதும் இலங்கை அர­சினால் தமிழ் மக்­க­ளுக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­ப­டு­கின்ற திட்­ட­மிட்ட இன அழிப்பு என்­ப­தனை அனைத்­து­லக சமூ­கத்­திற்கு நாம் சுட்­டிக்­காட்­டு­கின்றோம்.
இலங்கை அரசில் எமக்கு எள்­ள­ளவு நம்­பிக்­கையும் இல்லை என்­ப­துடன் எந்­த­வி­த­மான உள்­நாட்டுப் பொறி­மு­றை­களும் எமக்கு நீதி­யையோ அல்­லது அர­சியல் தீர்­வையோ ஒரு­போதும் கொடுக்­கு­மென நம்­பவே இல்லை. ஆகையால் அனைத்து உள்­நாட்டுப் பொறி­மு­றை­க­ளையும் நாம் அடி­யோடு ஆணித்­த­ர­மாக நிரா­க­ரிக்­கின்றோம்.
எமது மக்­க­ளுக்கு எதி­ராக இழைக்­கப்­பட்ட போர்க் குற்­றங்கள் மானி­டத்­திற்கு எதி­ரான குற்­றங்கள் இனப்­ப­டு­கொ­லைகள் ஆகி­ய­வற்றை விசா­ரணை செய்­வ­தற்­காக பக்கச் சார்­பற்ற பன்­னாட்டு விசா­ர­ணையை ஐக்­கிய நாடுகள் சபையின் துணை­யுடன் உரு­வாக்­கு­வ­தற்கு அனைத்­து­லக சமூ­கத்­தினை நாம் வேண்­டு­கின்றோம் என்ற பிரே­ரணை முன்­னைக்­கப்­பட்­டது.
உண்­மை­யான கணக்­கெ­டுப்பு வேண்டும்
அனந்தி சசி­த­ரனால், மூன்­றா­வது முறை­யாக ஜெனிவா மனித உரி­மைகள் மாநாடு நடை­பெ­ற­வுள்­ளதால் முள்­ளி­வாய்க்­காலில் நடை­பெற்­றது இன அழிப்பு என்­ப­தனை நிரூ­பிக்கும் வகை­யிலும் அரச அதி­பர்­களின் புள்ளி விப­ரப்­படி காணாமற் போன­வர்­களில் ஒரு இலட்­சத்து 46 ஆயி­ரத்து 679 நபர்­க­ளி­னது நிலை­யையும் ஆராயும் வகை­யிலும் அரசின் நீதி­யற்ற கணக்­கெ­டுப்­புக்கு மாறாக எமது மாகாண சபையால் நியா­ய­மான கணக்­கெ­டுப்பு மேற்­கொள்­ளப்­பட்டு ஜெனிவா மாநாட்­டிற்கு உண்மை நிலையைத் தெளி­வு­ப­டுத்­து­வ­துடன் இன அழிப்­புக்குச் சாட்­சி­யாக ஆதா­ரங்­க­ளோடு நாமும் அங்கு செல்­வ­தற்கு வழி வகுக்­க­வேண்டும் என்­ப­துடன் மன்னார் மாந்தை ஏ 32 வீதி, திருக்­கே­தீஸ்­வரம் மனிதப் புதை குழிக்கு நம்­ப­க­ர­மான சர்­வ­தேச விசா­ரணை நடத்­தப்­ப­ட­வேண்டும் என்ற பிரே­ரணை முன்­வைக்­கப்­பட்­டது.
மாகா­ண­சபை உறுப்­பினர் கலா­நிதி சர்­வேஸ்­வ­ரனால், தமிழ் மொழி இலங்­கையின் தேசிய மொழி­களில் ஒன்று என்­ப­துடன் வடக்கு கிழக்கு மாகா­ணங்­களில் உத்­தி­யோ­க­பூர்வ மொழி­யா­கவும் திகழ்­கின்­றது. எனினும் இம் மாகா­ணத்தின் ஊர்கள், தெருக்கள் தனியார் மற்றும் அரச நிறு­வ­னங்­களின் பெயர்ப் பல­கை­களில் சிங்­கள மொழியே முத­லிடம் பெற்­றுள்­ளது.
வடக்கு மாகா­ணத்தில் அனைத்துப் பெயர்ப் பல­கை­களும் முதலில் தமி­ழிலும் அடுத்து சிங்­க­ளத்­திலும் மூன்­றா­வ­தாக ஆங்­கி­லத்­திலும் குறிப்­பிட்ட கால­வ­ரை­ய­றைக்குள் மாற்­றி­ய­மைக்­கப்­ப­ட­வேண்டும்.
யாழ். மாவட்­டத்தில் வலி. வடக்குப் பிர­தே­சத்தில் விவ­சா­யி­களால் 18 ஆண்­டு­க­ளுக்கு முன்னர் கைவி­டப்­பட்ட கால் நடைகள் இன்று பல்கிப் பெருகி சுமார் 4 ஆயிரம் வரை இருப்­ப­தாக அறிய முடி­கி­றது. இக்­கால்­ந­டை­களை வைத்து மிகப் பெரும் பண்­ணை­களை நடத்தி வரும் பாது­காப்­புத்­த­ரப்­பினர் தமக்குத் தேவை­யான பாலை எடுத்துக் கொண்டு எஞ்­சி­யதை விற்­பனை செய்­வ­தா­கவும் அறி­ய­மு­டி­கின்­றது. இது­போன்று முல்­லைத்­தீவு மாவட்­டத்தில் முத்­தை­யன்­கட்டுக் குளத்­திற்கு மேற்­காக படை­யி­னரின் பயிற்சித் தளத்­திற்கு அருகில் தமிழ் மக்­களின் 2 ஆயி­ரத்­திற்கும் மேற்­பட்ட மாடு­களைக் கொண்ட பண்­ணையை இரா­ணு­வத்­தினர் நடத்தி வரு­வ­துடன் அதில் பெறப்­படும் பால் அவர்­களின் தேவைக்குப் போக ஒரு நாளைக்கு சுமார் 45 ஆயிரம் ரூபா­விற்கு நெஸ்ரில் கம்­ப­னிக்கு விற்­பனை செய்­யப்­ப­டு­கின்­றது. இவ்­வி­டயம் கடந்த வரவு செலவுத் திட்ட உரையில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் க. சுரேஷ்­பி­ரே­மச்­சந்­தி­ரனால் சுட்­டிக்­காட்­டப்­பட்­ட­போது அதற்கு மத்­திய அர­சி­லி­ருந்து எது­வித மறுப்பும் தெரி­விக்­கப்­ப­ட­வில்லை. எனவே இவ்­விரு கால்­நடைப் பண்­ணை­க­ளையும் மாகாண அரசு பொறுப்­பேற்­ப­தற்கு சம்­பந்­தப்­பட்ட அமைச்சர் உரிய நட­வ­டிக்­கை­களை விரைந்து மேற்­கொள்­ள வேண்டும்.
கட்­டாக்­காலி மாடுகள் தொடர்­பாக இரண்டு முக்­கிய பிரச்­சி­னைகள் காணப்­ப­டு­கின்­றன. கட்­டாக்­காலி மாடுகள் என்ற வகைக்குள் மக்கள் வளர்க்­கின்ற மாடுகள் கட்­டுக்­கோப்­பின்றி அலை­ய­வி­டு­வ­துடன் உரிமை கோரப்­ப­டாத மாடுகள் என்­பன உள்­ள­டங்­கு­கின்­றன. கட்­டாக்­காலி மாடுகள் ஒரு­புறம் பல்­வேறு மாவட்­டங்­க­ளிலும் விவ­சா­யி­க­ளுக்கும் போக்­கு­வ­ரத்­திற்கும் இடை­யூ­றாக இருப்­ப­துடன் தினமும் கள்­ளத்­த­ன­மாகப் பிடிக்­கப்­பட்டு இறைச்­சி­யாக்­கப்­பட்டு வெளி­மா­வட்­டங்­க­ளுக்குக் கடத்­தப்­ப­டு­வ­துடன் அந்த மாவட்­டங்­க­ளிலும் இர­க­சி­ய­மாக விற்­கப்­ப­டு­கின்­றன. எனவே வட­மா­கா­ணத்தில் கட்­டாக்­காலி மாடுகள் அனைத்­தையும் பிடித்து உரிமை கோரு­ப­வர்கள் இருந்தால் அவர்­க­ளி­டமே கைய­ளித்து உரிமை கோரப்­ப­டா­த­வற்றை மாகாண அரசு தனது பொறுப்பில் எடுத்து பண்­ணைகள் நடத்­த­வேண்டும் என்ற பிரே­ரணை முன்­வைக்­கப்­பட்­டது.
மாகா­ண­சபை உறுப்­பினர் சுகிர்­தனால் , வவு­னியா பூந்­தோட்­டத்தில் கூட்­டு­ற­வுப்­ப­யிற்சிக் கல்­லூரி மன்னார் கூட்­டு­றவுச் சபை அலு­வ­லகம் ஆகி­ய­வற்­றி­லி­ருந்து படைத்­த­ரப்­பினர் வெ ளியேறி அவற்­றினை சம்­பந்­தப்­பட்­ட­வர்­க­ளிடம் கைய­ளிக்­க­வேண்டும். அத்­துடன் அச்­சு­வே­லியில் உள்ள பல நோக்கு கூட்­டு­றவுச் சங்க காரி­யா­லயம், பல­நோக்கு கூட்­டு­றவுச் சங்­கத்தின் எரி­பொருள் நிரப்பு நிலையம் ஆகி­ய­னவும் சம்­பந்­தப்­பட்­ட­வர்­க­ளிடம் கைய­ளிக்­க­வேண்டும் என்ற பிரே­ர­ணையும் சமர்ப்­பிக்­கப்­பட்­டது. இந்தப் பிரேரணைகள் திருத்தங்களுடன் சபையில் நிறைவேற்றப்பட்டன.
நன்றி வீரகேசரி 
வவுனியாவில் பழங்கால நாணயங்கள் கண்டுபிடிப்பு
28/01/2014   வவுனியா மருக்காரம்பலை பகுதியில் பழங்கால நாணயங்கள் அடங்கிய பானையொன்று நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வவுனியா அரசாங்க அதிபர் பந்துல ஹரிச்சந்திர தெரிவித்துள்ளார். 
ஒரு பக்கத்தில் திரிசூலம் சின்னத்தைக் கொண்ட 120 நாணயங்கள் பானையொன்றில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 
வவுனியா தாண்டிக்குளத்தில் இருந்து சாஸ்திரிகூழாங்குளம் - கல்மடு செல்லும் வீதியில் மருக்காரம்பலை பாடசாலைக்கு எதிரில் வீதியோரத்தில் வாய்க்கால் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தவர்களே இந்த நாணயங்களைக் கொண்ட பானையைக் கண்டுள்ளனர். 
இந்தத் தகவல் வவுனியா பிரதேச செயலாளருக்கும் அரசாங்க அதிபருக்கும் அறிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற வவுனியா அரசாங்க அதிபர் அந்த நாணயங்களைப் பரிசீலனை செய்ததன் பின்னர் செய்தியாளர்களுக்கு இதுபற்றிய தகவல்களைத் தெரிவித்துள்ளார். 
முற்காலத்தைச் சேர்ந்தவையாகக் கருதப்படுகின்ற இந்த நாணயங்கள் இந்திய நாணயங்களாக இருக்கலாம் என்று அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார். இந்த நாணயங்கள் வவுனியாவில் உள்ள தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளிடம் கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் வவுனியா அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.நன்றி வீரகேசரி மன்னார் மனித புதை குழியில் மேலும் 2 எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு
மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி மீண்டும் 17 ஆவது தடவையாக இன்று புதன் கிழமை மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் தோண்டப்பட்டது. இன்று காலை 8.30 மணிமுதல் மதியம் 1 மணிவரை குறித்த புதை குழி தோண்டப்பட்ட போது மேலும் இரண்டு எலும்புக்கூடுகள் உள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இது வரை மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 55 ஆக அதிகரித்துள்ளது.  இன்று புதன் கிழமை குறித்த மனித புதை குழி தோண்டப்பட்ட  போது அனுராதபுர சட்ட வைத்திய நிபுணர் டி.எல்.வைத்திய ரெட்ண தலைமையிலான குழுவினர் குறித்த இடத்திற்கு சமூகமளிக்கவில்லை. இதனால் அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்கப்படவில்லை.

இதே வேளை   திருக்கேதீஸ்வரம் மனித புதை குழி உள்ள இடத்திற்கு வருகை தந்த குற்ற புலனாய்வுப் பிரிவினர் (சி.ஐ.டி) 5 ஆவது  நாளாகவும் இன்று  புதன்  கிழமை தமது விசாரனைகளை முன்னனொடுத்துள்ளனர். மீண்டும் நாளை வியாழக்கிழமை கிழமை நீதவான் முன்னிலையில் குறித்த பணிகள் 18 ஆவது தடவையாக  இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி 

No comments: