இலங்கைச் செய்திகள்

அழிவு வரும்; வந்தே தீரும்; காத்திருங்கள்: மனோ கணேசன்

ஐ.நா. விசேட அறிக்கையாளர் பெயானி இலங்கை வருகை

ஐ.நா. விசேட பிரதிநிதியுடன் விக்னேஸ்வரன் சந்தித்து கலந்துரையாடல்

நள்ளிரவில் கதவைத் தட்டிய கப்பல் கப்டன் பொதுமக்களால் மடக்கிப்பிடிப்பு

முல்­லைத்­தீவு விகாரையின் காணி உறுதியை ஐ.நா. பிரதிநிதியிடம் காண்பித்த உரிமையாளர்

கமலேந்திரன் ஈ.பி.டி.பியிலிருந்து இடைநிறுத்தம்

பாலியல் வன்முறைக்கு எதிராக விழிப்புணர்வு நிகழ்வும், எதிர்ப்புப்பேரணியும்


'எங்களுக்கு எதுவும் வேண்டாம் சொந்த இடத்தில் வாழவிடுங்கள்"=====================================================================

அழிவு வரும்; வந்தே தீரும்; காத்திருங்கள்: மனோ கணேசன்

03/12/2013    கொழும்பு கல்கிசை படோவிட 2ம் வட்டார ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான காணிக்கை உண்டியல் நேற்று இரவு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஒரு வாரத்தில் நான்கு இந்து கோவில்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் மலையகத்தில் நடைபெற்றுள்ளன. வடபகுதியின் இந்து கோவில் அழிப்பு-கொள்ளை கலாச்சாரம் மலையகத்துக்கும் பரவி, இப்போது மேல்மாகாணத்துக்கும் வந்துவிட்டதா, என்ற கேள்வி இப்போது எம்மக்கள் மத்தியில் எழுந்துள்ளது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

 
கொள்ளை சம்பவத்துக்கு உள்ளான கல்கிசை படோவிட 2ம் வட்டார ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்துக்கு நேரடியாக இன்று காலை சென்ற மனோ கணேசன், அங்கு ஆலய குருக்கள் மற்றும் அறங்காவலர் சபை உறுப்பினர்களிடம் நடந்த சம்பவம் பற்றி விசாரித்து அறிந்து கொண்டார். மனோ கணேசனுடன் ஜமமு மாநகரசபை உறுப்பினர்கள் சண். குகவரதன், எஸ். பாஸ்கரா ஆகியோரும் சென்றிருந்தனர். இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மனோ கணேசன் கூறியதாவது,

இச்சம்பவம் பற்றி போலிஸ் மாதிபர்  இலங்ககோனுக்கு அறிவித்து என் அதிருப்தியை தெரிவித்துள்ளேன்.  இது இரண்டு நாட்களில் போலிஸ் மாதிபருக்கு நான் நேரடியாக அறிவித்த ஐந்தாவது கோவில் கொள்ளை சம்பவமாகும்.
இந்த சம்பவத்தில் உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு, திருவிழா காணிக்கை நிதி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் இரத்தினபுரி மாவட்ட கொலொன்ன போலிஸ் பிரிவிலும், மாத்தறை மாவட்ட தெனியாய போலிஸ் பிரிவிலும் நான்கு சம்பவங்கள் நடைபெற்று கோவில் உண்டியல் பணம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
இந்த கொள்ளைகளை  யார் செய்கிறார்கள்? இவை இந்து கோவில்களை குறி வைத்து திட்டமிட்டு செய்யப்படும் சம்பவங்களா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இந்த குற்றச்செயல்களை எவர் செய்தாலும், இந்நாட்டு வரலாற்றில் என்றும் இல்லாதவாறு, இந்து கோவில்களின் மீது கை வைக்கும் அளவுக்கு காடைத்தன சிந்தனையை இன்று இந்நாட்டில் ஊட்டி வளர்ப்பது யார் என்பது மக்களுக்கு நன்கு தெரியும். இந்நாட்டில் இன்று இந்து தமிழர்கள் கேட்பாரற்ற சமூகத்தினராக, நாதியற்றவர்களாக இருக்கின்றார்கள் என சிலர் நினக்கிறார்கள். இப்படி நினைபவர்களுக்கு விரைவில் நாம்  யார் என்பதை சாத்வீகமாக எடுத்து காண்பிப்போம்.
இந்த குற்றசெயல்களுக்கான முன்மாதிரியை இந்த அரசாங்கமே செய்து காட்டி தந்துள்ளது. வடக்கில் இந்து கோவில்கள இடித்து தரைமட்டம் ஆக்கப்படுகின்றன. அதை பார்வையிட சென்ற வடக்கு இந்து முதலமைச்சரை உள்ளே விட மறுத்துள்ளார்கள். தம்புள்ளையிலும், கொழும்பு கொள்ளுபிட்டியிலும் இரண்டு இந்து அம்மன் கோவில்கள் இடிக்கப்பட்டுள்ளன. இது அரசாங்கத்தின் நேரடி வேலை. இதுபோல் இந்நாட்டில் அரச ஆதரவுடன் செயல்படும் பௌத்த மத தீவிரவாதிகள் கோவில்களையும், பள்ளிகளையும், தேவாலயங்களையும் தாக்குகிறார்கள். இத்தகைய சம்பவங்களினால், சாதாரண குற்றவாளிகளுக்கும் ஆலயங்களில் கை வைக்கும் துணிச்சல் ஏற்பட்டுள்ளது.
இன்று இந்நாட்டில் தாம் எதிர்கொள்ளும் நாளாந்த சவால்களினால் நிர்க்கதியாகியுள்ள பொதுமக்கள்  கடைசியாக சரணடையும் இடமாக வணக்க ஸ்தலங்களே உள்ளன. இந்நிலையில் வணக்க ஸ்தலங்களையும் விட்டு வைக்காத கொள்ளை கலாச்சாரம் வெகு வேகமாக பரவி வருகிறது. இதனுடன் இன்று பேரினவாத, மதவாத தீவிரவாதமும் சேர்ந்து கொண்டுள்ளது. இதனால் குற்றவாளி கும்பல்கள் மேலும் ஊக்குவிக்கப்பட்டு சிறுபான்மை இனத்தவரின் கோவில்கள், பள்ளிகள், தேவாலயங்கள் குறிவைக்கப்படுகின்றன. இதில் இரண்டு கருத்துக்கு இடமில்லை. இன்று இவைபற்றி நானும் சலிக்காமல் போலிஸ் மாதிபருக்கும், அனைத்து போலிஸ் அதிகாரிகளுக்கும் முறையிட்டு வருகிறேன். ஊடகங்களும் இந்த அநீதிகளை பற்றி நாட்டிற்கு அறிவித்து தங்கள் கடமைமையை செய்து வருகின்றன. போலிஸ் விசாரணைகள்  மூலம் தீர்வு பெரும்பாலும் கிடைப்பதில்லை. ஆனால், இந்நாட்டில் இன்று தமிழ் பேசும் சிறுபான்மை மக்கள் கேட்பாரற்ற, நாதியற்ற மக்கள் என எவரும் நினைத்து விடக்கூடாது என்பதாலேயே எம்மாலான  இயன்ற உடன் நடவடிக்கைகளையும்  நாம் எடுக்கின்றோம். அநீதிகளை தட்டி கேட்காமலேயே இருந்தால் இத்தகைய சம்பவங்கள் நாடு முழுக்க  இன்னமும் அதிகமாக பரவும் அபாயம் இருக்கிறது.
குற்றவாளிகள் தற்காலிகமாக சட்டத்தின் பிடியில் இருந்து தப்பினாலும், ஆண்டவன் சாபத்துக்கு ஆளாவார்கள் என்பது திண்ணம்.  இந்து தமிழர்கள் அல்லது சிறுபான்மை மக்கள் கேட்பாரற்றவர்கள் என எண்ணி அம்மன் கோவில்களை கொள்ளையடிக்கும் திருட்டு கும்பல்களுக்கும், கோவில்களையும், பள்ளிகளையும், கிறிஸ்தவ தேவாலயங்களையும் இடித்து, இந்த குற்றவாளிகளை  தட்டிகொடுத்து அவர்களுக்கு முன்மாதிரி தரும் இந்த அரசாங்கத்துக்கும், அரசாங்கத்துடன் சேர்ந்து செயல்படும் மதவாத கும்பல்களுக்கும்  இதை நான் கூறி வைக்க விரும்புகிறேன். அழிவு வரும்; வந்தே தீரும்; காத்திருங்கள்.   நன்றி வீரகேசரி
ஐ.நா. விசேட அறிக்கையாளர் பெயானி இலங்கை வருகை


03/12/2013    ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான விசேட அறிக்கையாளர் சலோகா பெயானி ஐந்து நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு நேற்று இலங்கை வந்தடைந்தார்.
இலங்கையில் இடம்பெயர்ந்த மக்களின் நிலைமை மற்றும் மீள்குடியேற்ற நிலைமை போன்றவற்றை பார்வையிடும் நோக்கிலேயே அவர் இலங்கை வந்துள்ளார்.
அனைத்து தரப்புக்களிடம் இருந்தும் நான் தகவல்களை பெறுவேன். இடம்பெயர்ந்த மக்களிடமே தகவல்களை பெறவுள்ளேன் என்று ஐ.நா.வின் விசேட அறிக்கையாளர் சலோகா பெயானி தெரிவித்துள்ளார்.
விசேட அறிக்கையாளர் தனது இலங்கை விஜயத்தின்போது யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு ஆகிய பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டு சந்திப்புக்களை மேற்கொள்ளவுள்ளதுடன் கொழும்பிலும் பல்வேறு தரப்புக்களுடனும் சந்திப்புக்களை நடத்தவுள்ளார்.
எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கையின் மீள்குடியேற்ற நிலைமை தொடர்பில் அவர் ஜெனீவாவில் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.நன்றி வீரகேசரி

ஐ.நா. விசேட பிரதிநிதியுடன் விக்னேஸ்வரன் சந்தித்து கலந்துரையாடல்


03/12/2013   ஐ.நா. விசேட பிரதிநிதி கலாநிதி சலோகா பெயானி வடக்கு மாகாண முதலமைச்சர், ஆளுநர், யாழ்.அரச அதிபர் ஆகியோரைச் சந்தித்து இன்று கலந்துரையாடியுள்ளார்.
இலங்கைக்கு நேற்று வருகைதந்த ஐ.நா. விசேட பிரதிநிதி கலாநிதி சலோகா பெயானி உள்ளிட்ட குழுவினர் இன்று காலை 10 மணியளவில்   யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்து வடக்கு மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியை அவரது உத்தியோகபூர்வ அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்பின்பு   யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தையும் யாழ்.மாவட்டசெயலகத்தில் ஐ.நா விசேட பிரதிநிதி உள்ளிட்ட குழுவினர் மாவட்ட செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளானர்.
இதனையடுத்து வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனையும் யாழிலுள்ள அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

நன்றி வீரகேசரி


நள்ளிரவில் கதவைத் தட்டிய கப்பல் கப்டன் பொதுமக்களால் மடக்கிப்பிடிப்பு


03/12/2013   காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கப்பலில் வந்த கப்பலின் உப கப்டன் நள்ளிரவு வேளையில் ஏழாலை சூராவத்தை பகுதியில் உள்ள வீடொன்றினுள் உட்பிரவேசிக்க முற்பட்ட வேளை அச்சமடைந்த மக்கள் மடக்கிப் பிடித்து சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கப்பல் நங்கூரமிடப்பட்ட பின்னர் குறிப்பிட்ட உதவிக் கப்டன் இலங்கை மின்சார சபையின் சுன்னாகம் அலுவலகத்தில் கடமையாற்றும் தனது நண்பனான பொறியியலாளரைச் சந்திக்கச் சென்றுள்ளார்.
அதனைத் தொடர்ந்து இருவரும் மது அருந்திவிட்டு நண்பரின் இருப்பிடத்துக்கு சென்றுள்ளனர். நள்ளிரவு வேளையில் குறிப்பிட்ட உதவிக் கப்டன் வெளியேறி ஏழாலை சூராவத்தைப் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் உட்பிரவேசிக்க முயன்று கதவைத் தட்டியதுடன் சிங்கள மொழியில் பேசியும் உள்ளனர்.
இந்நிலையில் திருடன் என நினைத்த பொதுமக்கள் பிடிக்க முற்பட்டவேளை குறித்த நபர் தாக்கிவிட்டு தப்பியோட முயற்சித்தபோது பொதுமக்கள் அந் நபரை விரட்டிப் பிடித்து சுன்னாகம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் குறித்த நபர் யார் என இனங்காணப்பட்டுள்ளதுடன் நண்பரான இலங்கை மின்சார சபையில் கடமையாற்றும் பொறியியலாளரை அழைத்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு உண்மை நிலை உறுதிசெய்யப்பட்டதன் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.நன்றி வீரகேசரி
முல்­லைத்­தீவு விகாரையின் காணி உறுதியை ஐ.நா. பிரதிநிதியிடம் காண்பித்த உரிமையாளர்

05/12/2013    முல்­லைத்­தீவு மாவட்­டத்தில் வெள்ள முள்­ளி­வாய்க்கால் பகு­தியில் பெளத்த பிக்கு ஒரு­வரின் ஏற்­பாட்டில் அமைக்­கப்­பட்­டுள்ள விகாரை அமைந்­துள்ள ஆத­னத்தின்  உரி­மை­யாளர் தனது ஆத­னத்­திற்­கு­ரிய அறுதி உறு­தியை ஐக்­கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்­கு­ழுவின் விசேட அறிக்­கை­யி­ட­லாளர் சலோகா பெயா­னி­யிடம் காண்­பித்து தனது ஆத­னத்தை மீட்­டுத்­த­ரு­மாறு கோரிக்கை விடுத்­துள்ளார்.
அது அறு­தி­யு­று­தியா என வினா­விய ஐ.நா. பிர­தி­நிதி அந்த உறு­தியின் நகல் பிரதி ஒன்­றி­னையும் பெற்றுச் சென்­றுள்ளார்.
நேற்றுப் பிற்­பகல் ஐ.நா. சபையின் மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவின் விசேட அறிக்­கை­யி­ட­லாளர் பிர­தி­நிதி முள்­ளி­வாய்க்கால் பகு­திக்குச் சென்ற பொழுது இச்­சம்­பவம் நடை­பெற்­றுள்­ளது.
இவ்­வி­டயம் தொடர்­பாக மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,
ஐக்­கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்­கு­ழுவின் விசேட அறிக்­கை­யி­ட­லாளர் சலோகா பெயானி நேற்று முல்­லைத்­தீவு மாவட்­டத்­திற்கு விஜயம் செய்து முள்­ளி­வாய்க்கால் பகு­தியில் மக்­களைச் சந்­தித்துக் கலந்­து­ரை­யா­டி­யுள்ளார். இச் சந்­திப்பின் போதுஇ அண்­மையில் வெள்ளாம் முள்­ளி­வாய்க்கால் பகு­தியில் பௌத்த பிக்கு ஒரு­வ­ரு­டைய ஏற்­பாட்டில் அமைக்­கப்­பட்­டுள்ள விகாரை அமைந்­துள்ள ஆத­னத்தின் உரி­மை­யாளர் கலந்­து­கொண்டு தனது ஆத­னத்­தினை மீட்­டுத்­த­ரு­மாறு ஐ.நா. பிர­தி­நி­தி­யிடம் கோரிக்கை விடுத்­துள்ளார்.
இதன்­பொ­ழுது குறித்த நபர் தனது ஆத­னத்தின் உறு­தி­யையும் ஐ.நா. பிர­தி­நி­தி­யிடம் காண்­பித்­துள்ளார். இவ்­வி­ட­யத்­தினை கருத்­தி­லெ­டுத்த ஐ.நா. பிர­தி­நிதி குறித்த நப­ரிடம் நீங்கள் காண்­பிக்­கின்ற இந்த ஆவணம் உங்­க­ளு­டைய காணியின் உறு­தியா? எனக் கேட்­டுள்ளார். அதற்கு அவர் அது தனது காணியின் அறுதியுறுதி எனக் காட்டியுள்ளார். அந்த உறுதியின் நகல் பிரதி ஒன்றினையும் ஐ.நா. பிரதிநிதி கோரிப் பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.நன்றி வீரகேசரி 

கமலேந்திரன் ஈ.பி.டி.பியிலிருந்து இடைநிறுத்தம்

 05/12/2013    வடக்கு மாகாணசபையின் எதிர்கட்சித்தலைவரும் யாழ்.மாவட்ட அமைப்பாளரமான கந்தசாமி கமலேந்திரன் ஈ.பி.டி.பியிலிருந்து  இடைநிறுத்தப்பட்டுள்ளார் என அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் சி. தவராசா  அறிவித்துள்ளார்.    
                           
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில்,
எமது கட்சியின் மூத்த உறுப்பினரும், நெடுந்தீவு பிரதேச சபையின் தலைவருமாகிய டானியல் றெக்சியன் ரஐPவ் அவர்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பதனை மருத்துவமனை ஆதாரங்களை வைத்து நீதிமன்ற விசாரணைகள் நடந்துவருகின்றன.
ஈவிரக்கமற்ற இப்படுகொலை குறித்து சந்தேகத்தின் பேரில் எமது கட்சியின் உறுப்பினர் கந்தசாமி கமலேந்திரன்; கைதாகி நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றார். நீதிமன்ற விசாரணையில் இருக்கும் இவ்விடயம் குறித்து நாம் தற்போது எவ்வித கருத்துக்களும் கூற முடியாது.
ஆனாலும், இது குறித்து எமது மக்களுக்கு நாம் கட்சியின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டியது அவசியமாகும். வன்முறைகள், அச்சுறுத்தல்கள், மற்றும் படுகொலைகள் போன்ற ஜனநாயக விரோத செயற்பாடுகளால் எமது மக்கள் கடந்த காலங்களில் பேரவலங்களையே சந்தித்து வந்திருக்கின்றார்கள்.
இது போன்ற படுகொலை சம்பவங்களை எமது கட்சியின் தலைமை ஒருபோதும் அனுமதித்திருந்ததும் இல்லை. நியாயப்படுத்தியிருந்ததும் இல்லை. கட்சி உறுப்பினர்களுக்கு இடையிலான முரண்பாடுகள் எந்தகட்சிக்குள்ளும் இல்லாமல் இல்லை. ஆனாலும் அப்படியான முரண்பாடுகள் கட்சியின் கட்டுப்பாட்டு விதிகளுக்கு உட்பட்டே தீர்க்கப்படல் வேண்டும்.
டானியல் றெக்சியன் ரஐPவ் அவர்களினது படுகொலையானது தனிப்பட்ட முரண்பாடுகளின் காரணமாகவே நடந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவருகின்றது.
டானியல் றெக்சியன் ரஐPவ் அவர்களின் படுகொலை குறித்த கொலையாளிகள் யார் என்பது தொடர்பாக நீதிமன்ற விசாரணைகள் ஒழிந்து தீர்ப்புவழங்கப்படும் வரை எமதுகட்சியின் உறுப்பினர் கந்தசாமி கமலேந்திரன் அவர்களை கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்து இடைநிறுத்தி வைக்க கட்சியின் தலைமைப்பீடம் தீர்மானித்திருக்கிறது.
எமது கட்சியின் கட்டுப்பாட்டு விதிகளில் இருந்துமீறுவோர் எவராயினும் கட்சியில் இருந்து நிரந்தரமாகவே விலக்கப்படுவார்கள் என்பதையும், சமூக விரோத செயல்களை யார் செய்தாலும் அவர்கள் பாகுபாடின்றி சட்டத்தின் முன் தண்டிக்கப்பட வேண்டும் என்பதையும், நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம்..நன்றி வீரகேசரி

பாலியல் வன்முறைக்கு எதிராக விழிப்புணர்வு நிகழ்வும், எதிர்ப்புப்பேரணியும்

 05/12/2013   பெண்களுக்கெதிரான வன்முறைகளை இல்லாதொழிக்கும் முகமாகவும், பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறைகளுக்கு நீதி கோரியும் இன்று வியாழக்கிழமை மன்னாரில் விழிர்ப்புணர்வு நிகழ்வும், எதிர்ப்பு பேரணியும் மன்னார் மாவட்ட மாதர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், மன்னார் மாவட்ட பெண்கள் உரிமைக்கான செயற்பாட்டுக் குழுவினர் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.
இன்று வியாழக்கிழமை காலை 10 மணியளவில் மன்னார் அரச பேரூந்து தரிப்பிடத்தில் குறித்த நிகழ்வுகள் ஆரம்பமானது.
இதன் போது மன்னார் மாவட்டத்தில் பெண்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வன்முறைச் சம்பவங்களின் பதிவுகளாக மீட்கப்பட்ட பெண்களின் 'ஆடைகள்' காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து பெண்களுக்கெதிரான வன்முறைகளை ஒழிக்கக்கோரி பெண்கள் உரிமைக்கான செயற்பாட்டுக் குழுவினர் தயாரித்த மகஜர் வாசிக்கப்பட்டு அங்கு வருகை தந்த மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. நந்தினி ஸ்ரான்லி டி மேல் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு மகஜர் கையளிக்கப்பட்டது.
மகஜர் கையளிக்கப்பட்டதை தொடர்ந்து மன்னார் அரச பேருந்து தரிப்பிடத்தில் பெண்களுக்கெதிரான வன்முறைகளை சுட்டிக்காட்டி வீதி நாடகமும் இடம் பெற்றது.
இறுதியாக மன்னார் அரச பேருந்து நிலையத்தில் இருந்து விழிர்ப்புணர்வு ஊர்வலம் ஒன்று ஆரம்பமாகி மன்னார் பொலிஸ் நிலைய வீதியூடாக மன்னார் வைத்தியசாலை சந்தியை சென்றடைந்தது.
குறித்த நிகழ்வில் சட்டத்தரணி எஸ்.வினோதன், மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி பிரிமூஸ் சிறாய்வா, பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை இம்மானுவேல் செமாலை அடிகளார், மன்னார் மாவட்ட மாதர் ஒன்றியத்தின் மாவட்ட இணைப்பாளர் மகாலட்சுமி குருசாந்தன், மட்டக்களப்பு கலாசாரக் குழு, சமாதான அமைப்பின் தலைவர் பீ.ஏ.அந்தோனி மார்க், பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள் என பல நூற்றுக்கணக்கானவர்கள் குறித்த ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.  நன்றி வீரகேசரி

'எங்களுக்கு எதுவும் வேண்டாம் சொந்த இடத்தில் வாழவிடுங்கள்"

 05/12/2013   எங்­க­ளுக்கு எது­வுமே வேண்டாம். எம்­மையும் எமது சொந்த நிலங்­களில் குடி­யி­ருக்க அனு­ம­தி­த்தால் மட்டும் போதும் என ஐக்­கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான விசேட அறிக்­கை­யாளர் சாலோகா பெயா­னியிடம் முல்­லைத்­தீவு மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்­துள்­ளனர்.
முல்­லைத்­தீவு மாவட்­டத்­திற்கு நேற்று விஜயம் செய்த ஐ.நா. பிர­தி­நிதி, இடம்­பெ­யர்ந்த மக்கள் தங்க வைக்­கப்­பட்­டுள்ள கேப்­பா­பி­லவு, சீனிமா மோட்டைப் பகு­தி­யி­லுள்ள மக்­களைச் சந்­தித்துக் கலந்­து­ரை­யா­டும்­போதே இந்த மக்கள் இவ்­வாறு கோரிக்கை விடுத்­துள்­ளனர்.
அங்கு மக்கள் அவ­ரிடம் மேலும் தெரி­விக்­கையில்,
நாங்கள் கடந்த நான்கு வரு­டங்­க­ளாக இடம்­பெ­யர்ந்து சொல்­லொணாத் துய­ரங்­க­ளுடன் வாழ்ந்து வரு­கின்றோம். எங்­களை எமது சொந்த இடங்­களில் மீள்­கு­டி­யேற விடாது இரா­ணு­வத்­தினர் தடுத்து வரு­கின்­றனர். எமது நிலங்­களில் இரா­ணுவ முகாம் அமைக்­கப்­பட்­டுள்­ளது. தற்­பொ­ழுது எம்மைப் பிறி­தொரு இடத்தில் 1ஃ4 ஏக்கர் (4 பரப்பு) நிலத்தில் குடி­யி­ருக்­கு­மாறு நிர்ப்­பந்­திக்­கின்­றனர். இந்த நிலத்தில் எம்மால் விவ­சாயம் செய்ய முடி­யாமல் உள்­ளது.
எமக்கு எந்­த­வொரு வச­தி­களும் தேவை­யில்லை. எம்மை எமது சொந்த நிலங்­களில் குடி­ய­மர்த்­தினால் நாம் சந்­தோ­ஷ­மாக வாழ்வோம் என்­றனர்.
இதே­வேளை இந்த மக்­க­ளிடம் அடிப்­படை வச­தி­க­ளான போக்­கு­வ­ரத்து, மின்­சாரம், குடி­யி­ருப்பு வீடுகள் என்­பன அமைத்துத் தரப்­பட்­டுள்­ள­தா என ஐ.நா. பிர­தி­நிதி கேட்­ட­போது அதற்கு மக்­கள்­க­ருத்துத் தெரி­விக்­கையில்,
எங்­க­ளு­டைய பிர­தே­சத்தில் எமக்­காக எந்த வச­தி­களும் செய்து தரப்­ப­ட­வில்லை. எமக்கு மின்­சாரம் கிடைக்­க­வில்லை. எமது நிலங்­களில் கேப்­பா­பி­லவுப் பகு­தியில் மட்டும் 512 ஏக்கர் நிலத்தை இரா­ணுவம் அப­க­ரித்­துள்­ளது என்­றனர்.
இதன்­பின்னர் முள்­ளி­வாய்க்கால் பகு­திக்கு விஜயம் செய்த ஐக்­கிய நாடுகள் சபையின் அறிக்­கை­யாளர் அங்கு வசிக்­கின்ற மக்­க­ளிடம் நிலை­மை­களைக் கேட்­ட­றிந்­துள்ளார்.
இவ்­வி­டத்தில் சமு­க­ம­ளித்­தி­ருந்த வட­மா­காண சபை உறுப்­பினர் இர­வி­தரன் மக்­களின் பிரச்­சி­னைகள் தொடர்­பாக விளக்­கி­யுள்ளார்.
அவ்­வி­டயம் தொடர்­பாக இர­வி­தரன் கருத்துத் தெரி­விக்­கையில்,
கடந்த 30 வரு­டங்­க­ளாக எமது மக்கள் இடம்­பெ­யர்ந்த அவல வாழ்­வினை வாழ்ந்து வரு­கின்­றனர். கொக்­குத்­தொ­டுவாய், கொக்­கிளாய், கரு­நாட்­டுக்­கேணி ஆகிய பகு­தி­களில் மக்­களின் வாழ்­வா­தார நிலங்­களில் சுமார் 2ஆயி­ரத்து 556 ஏக்கர் நிலத்­தினை இரா­ணு­வத்­தினர் அப­க­ரித்­துள்­ளனர். எமது மாவட்­டத்தில் மக்­களை மீள்­கு­டி­ய­மர்த்­தி­யுள்ள பொழு­திலும் தமிழ் மக்கள் தொழில் செய்­கின்ற வாழ்­வா­தார நிலங்கள் இன்­னமும் விடு­விக்­கப்­ப­ட­வில்லை. இதனால் எமது மக்கள் விவ­சாயம் செய்ய முடி­யாது வரு­மா­ன­மின்றி வறு­மையில் வாடு­கின்­றனர்.
அண்­மையில் கொக்­குத்­தொ­டுவாய் பகு­தியில் தமிழ் மக்­களின் நிலங்­களில் 25 ஏக்கர் நிலத்­தினை தென் பகு­தியைச் சேர்ந்த 22 பேருக்குக் கொடுத்­துள்­ளனர். ஆனால் எமது மக்கள் இன்­னமும் சொந்த இடங்­களில் மீள்­கு­டி­ய­மர முடி­யாமல் அல்­ல­லு­று­கின்­றனர்.
இதேபோல் முல்­லைத்­தீவு மாவட்­டத்தில் மாவட்ட ஒருங்­கி­ணைப்புக் குழுவின் தலை­வரின் சிபார்­சுடன் சுமார் 600 முஸ்­லிம்­க­ளுக்கு காணி­களை வழங்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. இதே­வேளை தமிழ் மக்­க­ளுக்கு காணி­களை வழங்­கு­வ­தற்கு எந்­த­வொரு நட­வ­டிக்­கையும் எடுக்­கப்­ப­ட­வில்லை.
எனவே எமது தமிழ் மக்­க­ளுக்குக் காணி­களை வழங்­கு­வ­தற்கு ஐ.நா. சபையின் ஊடாக நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும்.
இதேபோல் தென் பகுதி மீன­வர்­களின் அத்­து­மீ­றல்­க­ளாலும் தடை செய்­யப்­பட்ட தொழில் முறை­க­ளி­னாலும் எமது தமிழ் மீன­வர்­க­ளின் தொழில் பாதிப்­ப­டைந்­துள்­ளது. இத­னையும் தடை செய்­ய­வேண்டும் எனக் கூறினோம் என்றார்.
இதே­வேளை இவ்­வி­டத்தில் சமு­க­ம­ளித்­தி­ருந்த வட­மா­காண சபை உறுப்­பி­னரும் பிரதி அவைத் தலை­வ­ரு­மான அன்­ரனி ஜெக­நா­தனும் தமிழ் மக்­க­ளு­டைய காணி­களை விடு­விக்க வேண்டும் என்ற கோரிக்­கையை முன்­வைத்தார்.
இவ்­வி­டத்தில் ஒன்று கூடிய தமிழ் மக்கள் தம்மை தமது சொந்த இடங்­களில் குடி­ய­ம­ரவும் விவ­சாயம் செய்­யவும் அனு­ம­திக்­க­வேண்டும் என்ற கோரிக்­கை­யினை முன்­வைத்­தனர்.
இவ்­வி­ட­யங்­களை பொறு­மை­யுடன் கேட்­ட­றிந்து கொண்ட ஐ.நா. பிர­தி­நி­தி தான் ஐ.நா. அதி­கா­ரி­க­ளுக்குத் தெரி­யப்­ப­டுத்­து­வ­தாக மக்­க­ளிடம் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி

No comments: