07/12/2013 தென்னாபிரிக்க முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா வியாழக்கிழமை
தனது 95 ஆவது வயதில் மரணமானதையொட்டி உலகத் தலைவர்கள் பலரும் ஆழ்ந்த
கவலையை வெளியிட்டுள்ளனர்.
இந்த உலகத்திற்கான மிகப் பெரிய ஒளி மறைந்து விட்டது என பிரித்தானிய பிரதமர் டேவிட் கமெரோன் தனது அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
எமது காலத்தில் உச்ச நிலையிலிருந்த உலகின் உண்மையான வீரபுருஷர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்கொயிஸ் ஹொலன்ட் தனது அனுதாபச் செய்தியில், நெல்சன் மண்டேலாவின் மறைவானது சுதந்திரத்துக்காக போராடுபவர்களுக்கு உத்வேகமளிப்பதாக தொடர்ந்தும் இருப்பதுடன் பிரபஞ்ச உரிமைகளை பாதுகாப்பதில் மக்களுக்கு நம்பிக்கையளிப்பதாகவும் இருக்கும் என தெரிவித்தார்.
''மண்டேலாவின் வன்முறைக்கு எதிரான அரசியல் கொள்கையும் அனைத்து விதமான இனவாதத்துக்கு எதிரான கண்டனமும் தொடர்ந்து செல்வாக்கு செலுத்தும்'' என ஜேர்மனிய அதிபர் அஞ்சலா மெர்கெல் குறிப்பிட்டுள்ளார்.
நவீன காலத்தில் மாபெரும் அரசியல் வாதிகளில் ஒருவர் நெல்சன் மண்டேலா எனக் கூறிய ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், அவர் தனது கொள்கைகளில் இருந்து ஒருபோதும் பின் வாங்கியதில்லை என தெரிவித்தார்.
நவீன ஆபிரிக்க வரலாற்றில் முழு சகாப்தம் ஒன்று நெல்சன் மண்டேலாவின் பெயருடன் தொடர்புபட்டுள்ளதாகவும் அது இன ஒடுக்கு முறைக்கான வெற்றியையும் ஜனநாயக தென் ஆபிரிக்காவை கட்டியெழுப்புவதையும் குறிப்பதாக உள்ளதாகவும் புட்டின் மேலும் கூறினார்.
நெல்சன் மண்டேலா தனது நாட்டின் நலனுக்காக அயராது பாடுபட்ட ஒருவர் என குறிப்பிட்டுள்ள பிரித்தானிய எலிஸபெத் மகாராணியார், இன்று அனைவரும் காணும் அமைதியான தென்னாபிரிக்காவுக்கு அவரே வழிவகை செய்துள்ளதாக தெரிவித்தார்.
மியன்மார் ஜனநாயக தலைவர் ஆங் சான் சூகி விடுத்த அனுதாப செய்தியில், தனது பிறப்பின் நிமித்தம் ஏற்பட்ட தனது தோலின் நிறத்துக்காக எவரும் தண்டிக்கப்படக்கூடாது என்பதை அனைவரும் அறியச் செய்த தலைவர் நெல்சன் மண்டேலா என்று தெரிவித்துள்ளார்.
''எம்மால் உலகை மாற்ற முடியும் என்பதை அவர் எம்மை உணரவைத்துள்ளார்" என ஆங் சான் சூகி தனது செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நெல்சன் மண்டேலா தனது அசாதாரண முயற்சியால் இன ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டத்தில் தென் ஆபிரிக்க மக்களை வெற்றி பெறச் செய்துள்ளார். புதிய தென் ஆபிரிக்கா உதயமாகவும் அபிவிருத்தியடையவும் அவர் பங்களிப்புச் செய்துள்ளார். என சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் கூறியுள்ளார்.
''மனித கெளரவம், சுதந்திரம், சமாதானம், மீள்நல்லிணக்கம் என்பவற்றுக்கான சாதனையாளராக நெல்சன் மண்டேலாவை வரலாறு நினைவு கூரும்'' என முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்டன் தெரிவித்துள்ளார்.
அதே சமயம் நாடு கடந்து வாழும் திபெத்திய ஆன்மிக தலைவர் தலாய் லாமா விடுத்த செய்தியில், நெல்சன் மண்டேலாவிற்கு நாம் செய்யக்கூடிய மிகச் சிறந்த அஞ்சலி அவரைப் பின்பற்றி சமாதானத்துக்கும் மீள் நல்லிணக்கத்திற்கும் பணியாற்றுவதாகும் என குறிப்பிட்டுள்ளார்.

நன்றி வீரகேசரி
கறுப்புச் சரித்திரம் சரிந்தது..!
06/12/2013 தென்னாபிரிக்காவின் கறுப்புச் சரித்திரம் என்று அழைக்கப்பட்ட அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா தனது 95 ஆவது வயதில் நேற்று வியாழக்கிழமை காலமானார்.
இந்தத் தகவலை அந்நாட்டு அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
நெல்சன் மண்டேலா கடந்த சில மாதங்களாக கடும் சுகயீனமுற்ற நிலையில்
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததுடன் அதன் பின்னர் அவரது இல்லத்தில்
ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார்.
அவருடைய உடல்நிலை பாதிப்படைந்து வருவதாக நேற்று முன்தினம் உறவினர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் நேற்றிரவு அந்நாட்டு நேரப்படி 8.05 மணிக்கு அவருடைய உயிர் பிரிந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1918 ஆம் ஆண்டு ஜுலை 18 ஆம் திகதி பிறந்த நெல்சன் மண்டேலா
தென்னாபிரிக்காவின் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்
குடியிரசுத் தலைவராவார். தென்னாபிரிக்காவில் புரட்சியை ஏற்படுத்திய
பெருமையுடன் நிறவெறிக்கு எதிராக போராடியமையால் உலகம் போற்றும் தலைவராகவும்
இவர் திகழ்ந்தார். நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment