உலகச் செய்திகள்


அமெரிக்காவில் ரயில் விபத்து: நால்வர் பலி

விமான விபத்தில் 33 பேர் பலி

யேமன் பாதுகாப்பு அமைச்சு கட்டிடத்தின் மீது குண்டுத் தாக்குதல்

==========================================================================

அமெரிக்காவில் ரயில் விபத்து: நால்வர் பலி


02/12/2013    அமெரிக்கா, புரான்ஸ் பகுதியில் பயணிகள் ரயில் ஒன்று நேற்று விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் பலியானதுடன் 65க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
அமெரிக்கா, நியூயோர்க் நகரிலிருந்து புறப்பட்ட பயணிகள் ரயில், புரான்ஸ் என்ற இடத்தில் சென்ற போது, வளைவில் வேகமாகத் திரும்பியுள்ளது. இதன்போது, ரயிலின் ஏழு பெட்டிகள் தடம் புரண்டுள்ளன.
இந்த விபத்தையடுத்து நூற்றுக்கும் அதிகமான தீயணைப்பு படையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.    நன்றி வீரகேசரி 

விமான விபத்தில் 33 பேர் பலி

01/12/2013   மொசாம்பிக் நாட்டிலிருந்து அங்கோலா சென்ற விமானம் நமீபியாவில் விழுந்து விபத்துக்குள்ளானதில் விமானத்தில் பயணம் செய்த 33 பேரும் பலியானர்கள்.
நேற்று மொசாம்பிக் நாட்டிலிருந்து அங்கோலாவுக்கு டி.எம்.470 ரக விமானம் 27 பயணிகள் மற்றும் 6 விமான பணியாளர்கள் என 33 பேருடன் பறந்தது. 
இந்நிலையில் தரையிறங்காமல் மாயமானதால் பொலிஸ் அதிகாரிகள் ஹெலிகொப்டரில் சென்று தேடினர். இந்நிலையில் நமீபியாவில் உள்ள வப்வாட்டாவில் உள்ள தேசிய பூங்காவில் விமான விழுந்து விபத்துக்குள்ளாகி இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.     நன்றி வீரகேசரி






யேமன் பாதுகாப்பு அமைச்சு கட்டிடத்தின் மீது குண்டுத் தாக்குதல்

 05/12/2013

யேமன் தலைநகரான சனாவில் அமைந்துள்ள அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சு கட்டிடத்தின் மீது இன்று வியாழக்கிழமை குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
கார் குண்டுத் தாக்குதலாக இருக்கக் கூடும் என ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ள போதிலும் தற்கொலை குண்டுத் தாக்குதலாக இருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இனந்தெரியாதோரால் மேற்கொள்ளப்பட்டுள்ள இத்தாக்குதலில் பலியானோரின் எண்ணிக்கை மற்றும் சேத விபரங்கள் குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை.
குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட பின்னர் அப்பகுதியெங்கும் புகைமூட்டமாக காணப்பட்டதாக அந்நாட்டு செய்திச் சேவைகள் குறிப்பிட்டுள்ளன.
யேமன் பாதுகாப்புத் தரப்பினருக்கும் அல்-குவைதா தீவிரவாத அமைப்பினருக்கும் இடையிலான முறுகல் நிலையை சுட்டிக்காட்டியுள்ள அரசாங்க ஊடகங்கள் இத்தாக்குதலுக்கு அந்த அமைப்பினரே காரணமாக இருக்கலாம் என ஊகம் வெளியிட்டுள்ளன.
குண்டு வெடிப்பின் பின்னர் தொடர்ச்சியாக துப்பாக்கி வேட்டுச் சத்தங்கள் கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
சுமார் இரண்டாயிரத்துக்கும் அதிகமான பாதுகாப்புத் தரப்பினர் தற்போதுஅங்கு வரவழைக்கப்பட்டு தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
 நன்றி வீரகேசரி

No comments: