கிம் ஜொங்- உன்னின் முன்னாள் காதலிக்கு மரண தண்டனை: ஆபாச பட விவகாரமா? மனைவியின் பழிவாங்கலா?
ஐரோப்பாவின் மிகப்பெரிய நூலகம் பேர்மிங்ஹாமில்!
சிரிய கடல் பிராந்தியத்துக்கு புலனாய்வு கப்பலை அனுப்பியுள்ள ரஷ்யா?
சிரியாவிலிருந்து 2 மில்லியன் அகதிகள் வெளியேற்றம்
--------------------------------------------------------------------------------------------
கிம் ஜொங்- உன்னின் முன்னாள் காதலிக்கு மரண தண்டனை: ஆபாச பட விவகாரமா? மனைவியின் பழிவாங்கலா?
30/08/2013 வட கொரியாவின் ஆட்சியாளரான கிம் ஜொங்- உன்னின் முன்னாள் காதலியான
பாடகியொருவரும், அப் பெண் அங்கம் வகித்த இசைக்குழுவின் உறுப்பினர்களும்
சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆட்சியாளரான கிம் ஜொங்- உன்னின் உத்தரவுக்கமையவே இவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆபாச பட விவகாரமொன்றே இத்தண்டனைக்கான காரணமெனத் தெரிவிக்கப்படுகின்றது.
சுட்டுக்கொல்லப்பட்ட பாடகியின் பெயர் ஹயோன் சொங்-வொல் எனவும் அவரோடு
அவர் அங்கம் வகிக்கும் இசைக்குழுவைச் சேர்ந்த பாடகர்கள், இசைக்கலைஞர்கள் என
12 பேர் பொது இடத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
அவ் இசைக்குழுவின் பெயர் 'ஹுனாசு' எனவும் இக்குழு உறுப்பினர்கள்
அமைவரும் இணைந்து தாமே ஆபாசப்படங்களில் நடித்து அவற்றை விற்பனை
செய்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இம்மாதம் 17 ஆம் திகதி இவர்கள் கைதுசெய்யப்பட்டதாகவும், 20 ஆம் திகதி
இவர்களுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
வட கொரியாவின் ஆட்சியாளரான கிம் ஜொங்- உன் மற்றும் ஹயோன் சொங்-வொல்
ஆகிய இருவரும் 13 வருடங்களுக்கு முன்னர் ஒருவரையொருவர் சந்தித்துள்ளனர்.
எனினும் கிம் ஜொங்- உன்னின் தந்தையும் தென்கொரியாவின் முன்னாள்
ஆட்சியாளரான கிம் ஜொங்-இல் இக்காதலுக்கு சம்மதம் தெரிவிக்காமையால் அவர்கள்
பிரிய நேர்ந்துள்ளது.
இதன்பின்னர் ஹயோன் சொங்-வொல் வேறு ஒருவரை மணந்துள்ளார்.
ஆனால் கிம் ஜொங்-இல் மறைவிற்கு பின்னர் குறித்த ஜோடி மீண்டும் இணைந்ததாக தகவல் வெளியாகியிருந்தது.
இதேவேளை கிம் ஜொங்- உன்னின் புதிய மனைவியான ரி சொல்-ஜுவும் இதே இசைக்குழுவின் உறுப்பினரொருவரென தெரிவிக்கப்படுகின்றது.
எனவே கணவனின் முன்னாள் காதலியான ஹயோன் சொங்-வொல்லை பழிவாங்கும்
நோக்குடன் ரி சொல்-ஜு மேற்கொண்ட சதியாக இது இருக்கலாம் எனவும்
சந்தேகிக்கப்படுகின்றது.நன்றி வீரகேசரி
ஐரோப்பாவின் மிகப்பெரிய நூலகம் பேர்மிங்ஹாமில்!
29/08/2013 ஐரோப்பாவின் மிகப்பெரிய நூலகம் இங்கிலாந்தின் பேர்மிங்ஹாமில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 3 ஆம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளது.
இதனை நிர்மாணிக்க 3 வருடங்கள் தேவைப்பட்டுள்ளதுடன், மொத்த நிர்மாண செலவு 189 மில்லியன் பவுண்ஸ்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நூலகத்தின் நிர்மாணப் பணிகள்
ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் இவ்வருடம் ஏப்பிரல் மாதமே இது நிறைவடைந்துள்ளது.
கட்டிடவியலாளரான பிரன்சைன் ஹவுபனினாலேயே இது நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
மிகவும் நவீனமான முறையில் இதன் உள்ளக வேலைப்பாடுகள் அமைக்கப்பட்டுள்ளன.
அரிய புத்தகங்கள், புகைப்படங்கள் என பல மேற்படி நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
நன்றி வீரகேசரி
சிரிய கடல் பிராந்தியத்துக்கு புலனாய்வு கப்பலை அனுப்பியுள்ள ரஷ்யா?
03/09/2013 ரஷ்யாவானது சிரியாவுக்கு அப்பால் கருங்கடல் பிராந்தியத்துக்கு
தனது புலனாய்வு கப்பலை அனுப்பி வைத்துள்ளதாக இராணுவ வட்டாரமொன்றை
மேற்கோள் காட்டி ‘இன்டர் பக்ஸ்’ செய்தி முகவர் நிலையம் திங்கட்கிழமை
செய்தி வெளியிட்டுள்ளது.
சிரியாவில் இரசாயன ஆயுத தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளமைக்கான சான்றுகள் கிடைக்கப் பெற்றதையடுத்து, அந்நாட்டின் மீது இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள மேற்குலக நாடுகள் திட்டமிட்டு வருவதை ரஷ்யா கவலையுடன் அவதானித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ரஷ்யாவின் ‘எஸ்.எஸ்.வி. - 201’ புலனாய்வு கப்பலானது ஞாயிற்றுக்கிழமை மாலை கிழக்கு மத்திய தரை கடல் பிராந்தியத்துக்கான பயணத்தை ஆரம்பித்துள்ளதாகவும், அந்தக் கப்பலிலுள்ள குழுவினர் பிராந்தியத்தில் மோதல் ஒன்று கிளர்ந்தெழுவது தொடர்பான தகவல்களை சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நன்றி வீரகேசரிசிரியாவில் இரசாயன ஆயுத தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளமைக்கான சான்றுகள் கிடைக்கப் பெற்றதையடுத்து, அந்நாட்டின் மீது இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள மேற்குலக நாடுகள் திட்டமிட்டு வருவதை ரஷ்யா கவலையுடன் அவதானித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ரஷ்யாவின் ‘எஸ்.எஸ்.வி. - 201’ புலனாய்வு கப்பலானது ஞாயிற்றுக்கிழமை மாலை கிழக்கு மத்திய தரை கடல் பிராந்தியத்துக்கான பயணத்தை ஆரம்பித்துள்ளதாகவும், அந்தக் கப்பலிலுள்ள குழுவினர் பிராந்தியத்தில் மோதல் ஒன்று கிளர்ந்தெழுவது தொடர்பான தகவல்களை சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சிரியாவிலிருந்து 2 மில்லியன் அகதிகள் வெளியேற்றம்
No comments:
Post a Comment