படித்தோம் சொல்கின்றோம் -ரஸஞானி

.
கிருஷ்ணமூர்த்தியின்  மறுவளம்

விவேகானந்தர்  துறவி  என்றாலும்ää அவர்  மனிதன்  தனது  அடையாளத்தை  விட்டுச்செல்வதற்கு  மூன்று  ஆலோசனைகளை   சொல்லியிருக்கிறார்.
மனிதன்  பிறக்கிறான்ää  மறைகிறான்.  இடையில்  அவனிடமிருப்பது  நீண்ட  அல்லது  குறுகிய  கால  வாழ்க்கை.  அந்த  இடைவெளியில்  அவன்  உருப்படியாக  மூன்று  விடயங்களில்  ஏதாவது  ஒன்றையாவது  செய்துவிடவேண்டும்.  இல்லையேல்  அவனுக்குப்பிறகு  அவனது  பெயர்  சொல்வதற்கு  அடையாளமாக  ஒன்றும்  இருக்காது.
இல்லறத்தில்  ஈடுபட்டு  ஒரு  பிள்ளைக்காவது   பெற்றோராகிவிடவேண்டும்.   அல்லது  தனது  பெயர்    சொல்ல  ஒரு  வீட்டையாவது    விட்டுச்செல்லவேண்டும்.  அல்லது  ஒரு   புத்தகம்  எழுதிவிடவேண்டும்.
நண்பர்  கிருஷ்ணமூர்த்தியின்  மறுவளம்   நூலை  கையிலெடுத்தபொழுது   விவேகானந்தர்  சொன்னதுதான்   எனது    நினைவுக்கு  வந்தது.
கிருஷ்ணமூர்த்தி   ஒன்றல்ல  மூன்று  கடமையையும்   செய்துவிட்டார்.  குழந்தைகளின்  தந்தையாக  குடும்பத்தலைவன்ää  புகலிடத்தில்    உழைத்து  வீடு.    தற்பொழுது ஒரு  நூலையும்    வாசகர்களுக்கு    சமர்ப்பித்துவிட்டார்.
நீண்டகாலமாக    அவர்    எழுதிவந்தாலும்   தற்பொழுதுதான்   ஒரு  நூலை  வெளியிடவேண்டும்   என்ற   விருப்பத்திற்கு   வந்துள்ளார்   என்பதனால்  விவேகானந்தரின்   கூற்றையும்   இங்கு  குறிப்பிட்டேன்.
இலங்கையில்  தமிழில்  பத்தி  எழுத்துக்களை  பரவலான  அறிமுகத்துக்கு  விட்டவர்  திறனாய்வாளர்  கே.எஸ். சிவகுமாரன்.   அவர்  தாம்  படித்த  தமிழ்  ஆங்கில  நூல்கள் மற்றும்  பிறமொழிப்படைப்பு  மொழிபெயர்ப்புகள்ää  தரமான  திரைப்படங்கள்ää  நாடகங்கள்  பற்றியெல்லாம்   நயப்புரையாக   திறனாய்வு   செய்பவர்.




அவுஸ்திரேலியாவில்   மெல்பனில்  வதியும்  கிருஷ்ணமூர்த்தியும்ää  தனது  வாசிப்பு  அனுபவங்களையும்    ரசித்த   திரைப்படங்களையும்   தன்னால்   மறக்கமுடியாத  சம்பவங்களையும்  இந்த  நூலில்  பதிவுசெய்துள்ளார்.
இந்நூலைப்படிக்கும்பொழுதுää  அவரது   பார்வையும்  ரசனையும்  துலக்கமாகிறது.  தனது  கருத்துக்களை  அழுத்தாமல்  வாசகனின்  சிந்தனையில்  ஊடுறுவும்  பாணியை  அவர்  தமது  பத்தி  எழுத்துக்களில்  கையாளுகிறார்.
தொலைந்துபோன   நாட்கள்ää    சிந்தனைக்குச்சிலää    எனது  நூலகம்ää   மறைந்தும்  மறையாதோர்ää      சினிமாää    சிறுகதைää     நேர்காணல்   முதலான  தலைப்புகளில்  தமது   கலைää  இலக்கியää   சமூகம்  சார்ந்த   சிந்தனைகளை    கதம்பமாலையாக கோர்த்துள்ளார்.
இலங்கையிலிருந்த     காலத்தில்   அவ்வப்போது    இதழ்களில்  புனைபெயர்களில் எழுதிவந்திருக்கும்   கிருஷ்ணமூர்;த்திää  அகää  புற  காரணங்களே  அதற்குக்காரணம்  என்றும்    சொல்கிறார்.    புனைபெயர்களில்    படைப்பாளிகள்    எழுதுவது  வழக்கம்.   புதுமைப்பித்தன்ää  சுஜாதாää   வாலிää   ஆகியோருக்கு  இயற்பெயர்   வேறு.  ஆனால்   அவர்கள்    புனைபெயர்களில்தான்    பிரபலமானார்கள்.
இலங்கையில்    கிருஷ்ணமூர்த்தி   தொடர்ந்து  வாழ்ந்திருப்பாரேயானால்  சிலவேளை  அவர்  முன்னர்  தமக்குத்தாமே  சூட்டிக்கொண்ட  புனைபெயர்களில்  ஏதாவது  ஒன்றில்  பிரபலமாகியிருக்கவும்  கூடும்.   அது   அவர்  எழுதியவற்றை  பொருத்தும்  அமையும்.
ஆனால்   விதிவசத்தால்  ஐரோப்பிய  நாடுகளெல்லாம்  சுற்றியலைந்துவிட்டு  இந்த  கடல் சூழ்ந்த  கண்டத்துக்குள்  வந்த   பின்னர்ää   அவரது  வாசிப்புத்தாகம்  குன்றாமல் குடத்துள்    இட்ட  தீபமாகவே   சுடர்விட்டிருக்கிறது.
சில  வருடங்களுக்கு  முன்னர்  தங்கு  தடையின்றி  தொடர்ச்சியாக  சுமார்  14  ஆண்டுகள்    மெல்பனில்  வெளியான  உதயம்    இருமொழி  மாத  இதழ்   அவரது ஆற்றலை  இனம்  கண்டு    ஊக்குவித்திருக்கிறது.
உதயம்  இதழில்   அவருக்கு  எழுதுவதற்கு  வாய்ப்பளி;த  ஆசிரியபீடத்துக்கு  இந்த  நூலில்  அவர்  நன்றியும்  தெரிவிக்கின்றார்.  இங்கு  அவர்  அக - புற  காரணிகள்  எதுவும்  இன்றி  கிருஷ்ணமூர்த்தி  என்ற  பெயரிலேயே  எழுதிவந்தவர்.  அவருக்கு  கேலிச்சித்திரம்  வரையும்   ஆற்றலும்  உண்டு.  ஆனால்  அவர்  அந்தத்துறையில்  தன்னை    வளர்த்துக்கொள்ள   விரும்பவில்லைப்போல்    தெரிகிறது.
உலகில்  எவரும்  எங்கு  வாழத்தலைப்பட்டாலும்  பெற்றவர்களையும்  பிறந்த  பொன்னாட்டையும்   மறக்கமாட்டார்கள்.  இவர்  இலங்கையில்  தமது  பூர்வீக  வடபிரதேச ஊரான  இடைக்காடு  கிராமத்தை  மறக்காமல்ää  அவ்வூர்  சனசமூக  நிலையங்களுக்கு தமது  மறுவளம்    நூலை  சமர்ப்பணம்  செய்துள்ளார்.
உதயம்ää   திண்ணைää    பதிவுகள்ää   யுகமாயினிää   மல்லிகைää   குமுதம் காம்ää யாழ்மணம்ää    வீரகேசரிää    ஜீவநதிää    எதுவரைää    அக்கினிக்குஞ்சுää    அவுஸ்திரேலியா  தமிழ்  முரசுää    தேனிää    இடைக்காடு  இணையம்   முதலானவற்றில்   வெளியான   பத்தி   எழுத்துக்களுடனும்  சிட்னியிலிருந்து  ஒலிபரப்பாகும்  அவுஸ்திரேலிய  தமிழ்  ஒலிபரப்பு  கூட்டுத்தாபன  வானொலியில்  ஒலிபரப்பான  ஆக்கங்களுடனும்    மறுவளம்    நூலை    தொகுத்திருக்கிறார்.
ஊரிலே   புழக்கத்தில்  உள்ள  ஒரு  சொல்  மறுவளம்.   மறுவளமாகப்பாருங்கள்…  மறுவளமாக    யோசியுங்கள்… என்றெல்லாம்  யாழ்ப்பாணத்து  தமிழ்  மக்கள்  பேசுவதைக்கேட்டிருக்கின்றேன்.
(பிரதேச  தமிழ்  மொழி  வழக்குகள்  பற்றிக்கூட  நாம்  விரிவாக  உரையாடலாம் -  எழுதலாம்)
எனவே    கிருஷ்ணமூர்த்தியின்  மறுவளம்   என்ற  நூலின்  தலைப்பு   உள்ளடக்கத்தை  எமக்கு  அடையாளம்  காட்டுகிறது.
நூலின்   முதலாவது  இரண்டாவது  ஆக்கங்கள்  மனதை  உருக்குகின்றன.  போரின்  கொடூரத்தைää   சித்திரவதைக்கொடுமைகளை  எதிர்பாராத  இழப்புகளை  மரணிக்கும்  வரையில்   தொடரும்  துன்பியல்  நினைவுகளை  கிருஷ்ணமூர்த்தி  சித்திரித்துள்ளார்.
படிக்கும்பொழுது  மனம்  பதைபதைக்கிறது.
அவர்   தெய்வாதீனமாக  உயிர்  தப்பிய  சம்பவம்  ஒரு  சிறுகதை  போன்று மரணம்  எனக்கு  மிக  அருகில்   என்ற  தலைப்பில்  பதிவாகியிருக்கிறது.
தொடர்ந்துவந்த   வாழ்க்கைப்போராட்டத்திலிருந்து  தப்பிச்செல்ல  அந்நியம்  புறப்படுவதற்காக   கொழும்புக்கு  வந்து  ஏஜன்ஸியின்  பதிலுக்கு  காத்திருந்து  ஒரு  விடுதியில்   தங்கியிருந்தவேளையில்   ஊர்   நண்பர்  ஈழநாடு  பத்திரிகையுடன்  வந்து  சொல்லும்  செய்தி:-    இவருடைய  ஊர்ச்சந்தியில்   விமானம்  போட்ட  குண்டில்  இவரது  நண்பர்கள்  சிலர்   கொல்லப்பட்டுவிட்டார்கள்.
அவர்களின்  மரணச்சடங்கிற்காக  ஊர்  திரும்புபவர்ää   வடமராட்சி  லிபரேஷன்  ஒப்பரேஷன்   தாக்குதல்களினால்   அங்கு  செல்லமுடியாமல்   அகதிகளுடன்  அகதியாக  அல்வாய்  அம்மன்  ஆலயத்தில்   தங்குகிறார்.  மறுநாள்  அங்கிருந்து  இடம்பெயர்ந்து    சென்றபின்னர்ää   அந்த  அம்மன்   ஆலயமும்   குண்டுவீச்சில்   தாக்கப்பட்டு   பல  உயிர்கள்  மடிகின்றன   என்ற   தகவலை  அறிகிறார்.   ஒரு  வீட்டில்   தஞ்சமடைந்தபொழுது     இராணுவம்    பிடித்துச்செல்கிறது.  கண்முன்னே  ஒரு  மாணவன்  சுட்டுக்கொல்லப்படுகிறான்.   கைதானவர்களை  காலி  முகாமுக்கு  அனுப்ப  கப்பலில்  ஏற்றுகிறார்கள்.
  ஒரு  மனிதனை  போர்  எப்படி  ஓட  ஓட  விரட்டுகிறது   என்பதை  சித்திரிக்கும்   இந்த  ஆக்கத்தின்  இறுதி  வரிகள்:-
 வெய்யிலில்  நின்றால்தான்  நிழலின்  அருமை  தெரியும்.  யுத்தக்கொடுமையை  அனுபவித்தால்தான்  சமாதானத்திற்கான   பெறுமதி  தெரியும்.
ஆளுக்கொரு தேதி   என்ற  இரண்டாவது  ஆக்கம்   கடல்  மார்க்கமாகத்தப்பிச்செல்ல  முயன்றதை    சித்திரிக்கின்றது.   ஏற்கனவே   1983  இல்  தந்தையையும்  அண்ணனையும்   இனவாத  சக்திகளிடம்   பலி (பறி)  கொடுத்துவிட்டு   ஒரு  விடுதலை  இயக்கத்தில்  இணையும்   நண்பன்   செண்பன்ää  “  ஆளுக்கொரு  தேதி  வைத்து  ஆண்டவன்   அழைத்தான்…”   என்று  பாடிக்கொண்டே  கடலில்  மூழ்கிவிடுகின்றான். அவனது   நெஞ்சுறுதி   எம்மை   வியக்கவைக்கிறது.   இப்படி   எத்தனை   கொழுந்துகளை   இழந்துவிட்டோம்.
நீந்தி   தப்பிச்சென்ற   இயக்கத்தின்  முக்கியஸ்தரிடம்ää  மூழ்கி  இறந்தவர்கள்  பற்றிய  தகவலைச்சொல்லி   கவலைப்பட்டபொழுதுää  “  ஏன்  கவலைப்படுகிறீர்கள்?  அவர்கள்  இறந்ததற்காகவா?   அல்லது  நான்  உயிர்  தப்பிவிட்டேன்   என்பதற்காகவா?  என்று  அவர்  கேட்கிறார்.
இது  எப்படி  இருக்கிறது?
இவ்வாறு    கடந்துபோன    போர்க்காலத்தைää   இனியும்   போரே  வேண்டாம்.   போருக்குத்   தள்ளவேண்டாம்    போரைத்திணிக்க   வேண்டாம்   அதற்கான  சூழலை  உருவாக்கவேண்டாம்    என்று   அதிகாரத்தை   தூண்டுபவர்களை  -  அதிகாரத்திலிருப்பவர்களை   நோக்கி   அறைந்து   சொல்கிறது   இந்தப்   பத்தி   எழுத்துக்கதைகள்.
இவ்வாறு  மறுவளம்    நூலின்  ஒவ்வொரு  அத்தியாயத்தையும்   பக்கம்  பக்கமாக   விவரித்து   எழுதிக்கொண்டே  போகலாம்.
சினிமா   பிரியர்களுக்காகவும்   கிருஷ்ணமூர்த்தி   எழுதுகிறார்
காமராஜ்ää  பெரியார்ää  காந்தியின்  தந்தைää  ஸ்லம்டோக்  மில்லியனர்ää   நான்  கடவுள்ää  தாரோ   ஜமீன்   பார்ää    பூ ää   சுப்பிரமணிய  புரம்ää   தசாவதாரம்   முதலான  தமிழ்   ஆங்கில  ஹிந்திப்படங்கள்  பற்றிய  தனது  பார்வைகளையும்   குறும்படங்கள்  குறித்த   தமது  ரஸனை  அனுபவங்களையும்   இந்த  நூலில்  பதிவுசெய்துள்ளார்.
அரசியல்ää  சமூகம்ää  சினிமாää  இலக்கியம்   உட்;பட  மரணிக்காத  நினைவுகளினதும்   தொகுப்புத்தான்   மறுவளம்.
வாசகர்கள்   மறுவளம்   நூலை  படித்து  ஏனையவற்றை   தெரிந்துகொள்ளட்டும்   என்று   இத்துடன்  நிறுத்திக்கொள்கின்றேன்.
கிருஷ்ணமூர்த்திää    அவுஸ்திரேலியாவில்   தொடர்ச்சியாக  வருடந்தோரும்   தமிழ்  எழுத்தாளர்   விழாவை   நடத்திவரும்   அவுஸ்திரேலியா   தமிழ்   இலக்கிய  கலைச்சங்கத்தின்   ஸ்தாபக   உறுப்பினர்  மட்டுமல்ல  இச்சங்கத்தின்  பணிகளில்  செயல்  ஊக்கமுள்ள  உறுப்பினருமாவார்.
இந்த  ஆண்டில்  சிட்னியில்  நடந்த  13  ஆவது  எழுத்தாளர்  விழாவில்   வெளியிடப்பட்ட     மறுவளம்    அண்மையில்   இலங்கையில்  கிளிநொச்சியிலும்   அறிமுகப்படுத்தப்பட்டது.  விரைவில்   மெல்பனிலும்   அறிமுகப்படுத்தவிருக்கிறார்.
தீவிர   தமிழ்   வாசகர்கள்   அவசியம்  படிக்கவேண்டிய  நூல்  மறுவளம்.
தமிழ்நாட்டில்   தரமான  நூல்களை   வெளியிடும்  கறுப்பு  பிரதிகள்  பதிப்பகம்  இதனை   நூலாக்கம்   செய்திருக்கிறது.    கிருஷ்ணமூர்த்தியை   இந்நூல்   வெளியீட்டின்   ஊடாக   தமிழகத்துக்கும்   அறிமுகப்படுத்தியிருக்கும்    நண்பர்  கவிஞர்ää  ஊடகவியலாளர்   கருணாகரன்   பாராட்டுக்குரியவர்.   ஆரோக்கியமான   இலக்கிய   தொடர்பாடலுக்கும்   இந்நூல்  சான்று  பகருகின்றது.
பிரதிகள்  தேவைப்படுவோர்  கிருஷ்ணமூர்த்தியுடன்   தொடர்பு   கொள்ளலாம்.

மின்னஞ்சல்:  sellamuthu6@hotmail.com

No comments: