ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான அறிவுத் திறன் போட்டி - 2013
இப் போட்டிகள் September  மாதம் 15ம் திகதி ஞாயிற்றுக்கிழமை சிட்னி துர்க்கை அம்மன் கோவிலில் பிற்பகல் 2 மணியிலிருந்து நடைபெறவுள்ளது.
வர்ணம் தீட்டுதல் (பாலர் ஆரம்ப பிரிவுக்கும் பாலர் பிரிவுக்கும் மட்டும்), சமய அறிவுப் போட்டி, திருமுறை ஒப்புவித்தல் போட்டி என மூன்று போட்டிகள் நடைபெறும். (அறிவுப்போட்டிக்கான மாதிரி வினாக்களும் வழங்கப்படும்)
இப்போட்டிகளில் பங்குபற்றுபவர்களுக்கு பரிசில்கள் முதற் பிரிவு, இரண்டாம் பிரிவு, மூன்றாம் பிரிவென மூன்று வகையாக வழங்கப்படவுள்ளது. ஓவ்வொரு பிரிவிலும் ஓன்றுக்கு மேற்பட்ட திறமையானவர்களுக்கு பரிசில்கள் கிடைக்கவேண்டும் என்பதற்காக இப்படி வகுக்கப்பட்டடுள்ளது.

போட்டி நடாத்தப்படும் பிரிவுகளும் போட்டிகளும்


பாலர் ஆரம்ப பிரிவு 
01.08.2008 இலும் அதன் பின்னரும் பிறந்தவர்கள்    சமய அறிவுப் போட்டி
வர்ணம் தீட்டும் போட்டி

பாலர் பிரிவு 
01.08.2006 க்கும் 31.07.2008 க்கும் இடையில் பிறந்தவர்கள்
சமய அறிவுப் போட்டி
வர்ணம் தீட்டும் போட்டி

கீழ்ப்பிரிவு   
01.08.2004 க்கும் 31.07.2006 க்கும் இடையில் பிறந்தவர்கள்
சமய அறிவுப் போட்டி
திருமுறை ஒப்புவித்தல் போட்டி

மத்தியபிரிவு
01.08.2001 க்கும் 31.07.2004 க்கும் இடையில் பிறந்தவர்கள்
சமய அறிவுப் போட்டி
திருமுறை ஒப்புவித்தல் போட்டி

மேற்பிரிவு
 01.08.1998 க்கும் 31.07.2001 க்கும் இடையில் பிறந்தவர்கள்
சமய அறிவுப் போட்டி
திருமுறை ஒப்புவித்தல் போட்டி

அதிமேற்பிரிவு
 31.07.1998 இலும் அதன் முன்பும் பிறந்தவர்கள்
சமய அறிவுப் போட்டி
திருமுறை ஒப்புவித்தல் போட்டிபோட்டிகளுக்கான விண்ணப்படிவம்

போட்டிகளுக்கான விண்ணப்படிவத்தை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான கரும பீடத்திலும்; பின்வரும் அறிவுப்போட்டிக் குழு அங்கத்தவர்களிடமும் பெற்றுக்கொள்ளலாம்.   விண்ணப்படிவம் கீழேயும் தரப்பட்டுள்ளது.

திரு கு கருணாசலதேவா        0418 442 674
திரு செ மகேஸ்வரன்        02 9642 5241
திரு செ பாஸ்கரன்        0407 206 792
திருமதி க ஜெகநாதன்           02 9749 1842   
திருமதி சி நிஷ்கலா         02 9863 1465
திருமதி அ சாரதா            02 9863 3769
திரு சி தியாகராஜா        0414 631 860
திரு சி இரவீந்திரன்        0401 752 995
திரு இரவி ஆனந்தராஜா        0424 674 642

விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து 14 September 2013 க்கு முன்பாக கிடைக்கக் கூடியதாக ஸ்ரீ துர்க்கா தேவி தேவஸ்தானம், 21- 23 Rose Crescent Regents Park NSW 2143 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
அல்லது  karunalojana@gmail.com  என்ற மின்னஞ்சல் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

ஓருவர் அந்தந்த வயதிற்கேற்ற போட்டிகளில் பங்குபற்றலாம். எத்தனை போட்டிகளில் பங்கு பற்றினாலும் ஒரு நபருக்கு போட்டிக்கான நுழைவுக்கட்டணமாக  $5 (போட்டி நடைபெறும் தினத்தில்) பெறப்படுகின்றது.  

போட்டிக்கான விதிமுறைகள், புள்ளிகள் வழங்கும் முறை பற்றிய குறிப்புகள் என்பனவற்றை விண்ணப்பப் படிவத்தோடு பெற்றுக்கொள்ளலாம்.

=======================================================================
விண்ணப்பப் படிவம்

ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான அறிவுத் திறன் போட்டி - 2013

கீழே குறிப்பிடப்பட்டுள்ள போட்டிகள் September மாதம் 15 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும். 

பங்குபற்றுவரின் பெயர்:    
பிறந்த திகதி:
பெற்ரோரின் பெயர்:
 விலாசம்:
தொலைபேசி இலக்கம்:   
Email Address:

கீழே குறிப்பிடப்பட்டுள்ள போட்டிகளில் வட்டம் இடுக

பாலர் ஆரம்ப பிரிவு
5 வயதிற்கு கீழ்    01.08.2008 இலும் அதன் பின்னரும் பிறந்தவர்கள்   
15-09-2013 பிற்பகல் 2 மணி    சமய அறிவுப் போட்டி, வர்ணம் தீட்டும் போட்டி   

பாலர் பிரிவு
7 வயதிற்கு கீழ்    01.08.2006 க்கும் 31.07.2008 க்கும் இடையில் பிறந்தவர்கள்        15-09-2013 பிற்பகல்  2:30 மணி    சமய அறிவுப் போட்டி, வர்ணம் தீட்டும் போட்டி   

கீழ்ப்பிரிவு
9 வயதிற்கு கீழ்    01.08.2004 க்கும் 31.07.2006 க்கும் இடையில் பிறந்தவர்கள்        15-09-2013 பிற்பகல் 3 மணி     சமய அறிவுப் போட்டி, திருமுறை ஓப்புவித்தல் போட்டி   
                   
மத்தியபிரிவு
12 வயதிற்கு கீழ்    01.08.2001 க்கும் 31.07.2004 க்கும் இடையில் பிறந்தவர்கள்        15-09-2013 பிற்பகல் 3:30 மணி    சமய அறிவுப் போட்டி, திருமுறை ஓப்புவித்தல் போட்டி   
                   
மேற்பிரிவு
15 வயதிற்கு கீழ்    01.08.1998 க்கும் 31.07.2001 க்கும் இடையில் பிறந்தவர்கள்        15-09-2013 பிற்பகல்  4 மணி    சமய அறிவுப் போட்டி, திருமுறை ஓப்புவித்தல் போட்டி   
                   
அதிமேற்பிரிவு
15 வயதிற்கு மேல்    31.07.1998 இலும் அதன் முன்பும்  பிறந்தவர்கள்        15-09-2013 பிற்பகல் 4:30 மணி    சமய அறிவுப் போட்டி, திருமுறை ஓப்புவித்தல் போட்டி
நான் ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான அறிவுத் திறன் போட்டி விதி முறைகளுக் கிணங்க நடந்து கொள்வேன்.


பெற்ரோரின் கையொப்பம்                                                           திகதி
=======================================================================

 ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான அறிவுத் திறன் போட்டி - 2013
விதிமுறைகள்


அறிவுப் போட்டி

1)    ஒவ்வொரு போட்டிக்கும் நடுவர்கள் இருவர் சேர்ந்து போட்டியை நடாத்துவார்கள். நடுவர்களின் தீர்ப்பே முடிவானதாகும். போட்டி முடிவுகள் அன்றே தெரிவிக்கப்படும்.

2)    போட்டியின்போது பெற்றோர் இருந்து பார்ப்பதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

3)    போட்டிகள் தொடர்பாக முறைப்பாடு செய்ய விரும்புவோர், எமக்கு எழுத்தில் கொடுக்க வேண்டும். முறைப்பாட்டுப் படிவம் கொடுக்கப்படும்.

4)    முதலாவதாக வந்த பிள்ளையின் புள்ளிகள் 100க்கு உயர்த்தப்பட்டு ஏனைய பிள்ளைகளுக்கும் அதே விகிதாசாரப்படி புள்ளிகள் வழங்கப்படும்.

5)    90 புள்ளியும் அதற்கு மேலாகவும் பெற்ற பிள்ளைகள் Band A ஆகவும், 80 புள்ளியும் அதற்கு மேலாகவும் பெற்ற பிள்ளைகள்; Band B ஆகவும், 70 புள்ளியும் அதற்கு மேலாகவும் பெற்ற பிள்ளைகள் Band C ஆகவும் கணிக்கப்படுவார்கள். 70 புள்ளிகளுக்கு குறைவாக பெற்ற மாணவர்களுக்கு பங்குபற்றியமைக்கான சான்றிதழ்கள் வழங்கப்படும்.
திருமுறை ஒப்புவித்தல் போட்டி

கீழ்ப்பிரிவினர் திருஞானசம்பந்த நாயனார் பாடிய தேவாரங்களில்  நீங்கள் விரும்பிய ஒரு தேவாரத்தை ஒப்புவிக்கவேண்டும்.

மத்திய பிரிவினர் திருநாவுக்கரசு நாயனார் பாடிய தேவாரங்களில்  நீங்கள் விரும்பிய இரண்டு தேவாரங்களை ஒப்புவிக்கவேண்டும்.

மேற்பிரிவினர் சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய தேவாரங்களில்  நீங்கள் விரும்பிய மூன்று தேவாரங்களை ஒப்புவிக்கவேண்டும்

அதிமேற்பிரிவினர் பஞ்ச புராணத்தில் ஏதாவது மூன்றை ஒப்புவிக்கவேண்டும.; அதில் அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் ஒன்று இருக்கவேண்டும்.

புள்ளிகள் பின்வருமாறு வழங்கப்படும்.

1.    மனனம் செய்யும் திறமை (40 புள்ளிகள்)
தடங்கலின்றி திருமுறையை ஒப்புவிக்கவேண்டும். நீங்கள் பயின்ற இராகத்தில் பாடலாம் அல்லது ஒப்புவிக்கலாம்.  மாணவர்கள் திருமுறையை சரியாக மனனம் செய்திருக்க வேண்டும். மாணவர்கள் ஒப்புவிக்கும்போது  கருத்துப் பிழையின்றி ஒப்புவிக்க வேண்டும்.

2.     உச்சரிப்பு: (40 புள்ளிகள்)
மாணவர்கள் தமிழை சரியாக உச்சரிக்க வேண்டும். அதாவது சொற்களையும் எழுத்துக்களையும் கேட்பவர்கள் விளங்கிக் கொள்ளக் கூடிய முறையில் தெளிவாக உச்சரிக்க வேண்டும். கீழ்ப்பிரிவில் மட்டும் மழலை உச்சரிப்பு இருத்தல் பிழையன்று.

3.     சபை மரபு: (20 புள்ளிகள்)
சபைக்கு வருதல், சபையில் உள்ளவர்களை விழித்தல், சபைக்கு முன் நிற்றல், சபையை விட்டகலல் என்பவற்றிக்கு வயதிற்கேற்ற பக்குவமும் தமிழர் மரபிற்கேற்ற செயற்பாடுகளும் இருத்தல் வேண்டும்.  ஒப்புவித்து முடித்தவுடன் இயற்கையான முறையில் வணக்கம் தெரிவித்து. தனது இருப்பிடம் சென்று அமர்தல் வேண்டும்.

விதி முறைகள்
1)  ஒவ்வொரு போட்டிக்கும் நடுவர்கள் நியமிக்கப்படுவார்கள். நடுவர்களின் தீர்ப்பே முடிவானதாகும்.

2) போட்டியின்போது பெற்றோர் தமக்குள் உரையாடுவதும், தம் பிள்ளைகளுடன் உரையாடுவதும், இடையிட்டு கருத்து தெரிவிக்க முயல்வதும் தவிர்க்கப்பட வேண்டும். போட்டிகளின் போது பெற்றோர் அமைதியாக இருந்து ஒத்துழைக்க வேண்டும்.

3)  போட்டிகள் தொடர்பாக முறைப்பாடு செய்ய விரும்புவோர் எமக்கு எழுத்தில் கொடுக்க வேண்டும்.

4)  பிள்ளைகளின் பங்களிப்புக்கேற்ப பரிசுகள் வழங்கப்படும்.

5) முதலாவதாக வந்த பிள்ளையின்  புள்ளிகள் 100க்கு உயர்த்தப்பட்டு ஏனைய பிள்ளைகளுக்கும் அதே விகிதாசாரப்படி புள்ளிகள் வழங்கப்படும்.  90 புள்ளியும் அதற்கு மேலாகவும் பெற்ற மாணவர்கள் Band A ஆகவும் 80 புள்ளியும் அதற்கு மேலாகவும் பெற்ற மாணவர்கள்; Band B ஆகவும் 70 புள்ளியும் அதற்கு மேலாகவும் பெற்ற மாணவர்கள்; Band C  ஆகவும் கணிக்கப்படுவார்கள். 70 புள்ளிகளுக்கு குறைவாக பெற்ற பிள்ளைகளுக்கு பங்குபற்றியமைக்கான சான்றிதழ்கள் வழங்கப்படும்.
வர்ணம் தீட்டும் போட்டி

பாலர் ஆரம்பபிரிவுக்கும் (5 வயதிற்குக் கீழ்) பாலர்பிரிவுக்கும் (7 வயதிற்குக் கீழ்) மட்டுமே இப்போட்டி நடைபெறும்.

விதி முறைகள்

புள்ளிகள் பின்வருமாறு வழங்கப்படும்.

1)    கொடுக்கப்பட்டிருக்கும் படத்திற்கு பொருத்தமான நிறங்களை பாவித்தல்.(50புள்ளிகள்)

2)    ஒழுங்காக வர்ணத்தை தீட்டுதல். (50 புள்ளிகள்)
   வர்ணம் தீட்டும் பொழுது கோடுகளுக்கு வெளியில் செல்லாமல் தீட்டுதல்.
   பொருத்தமான அளவில் நிறங்களைப் பாவித்தல்.

3)    ஒவ்வொரு போட்டிக்கும் 2 நடுவர்கள் நியமிக்கப்படுவார்கள். நடுவர்களின் தீர்ப்பே  
   முடிவானதாகும்.

4)    போட்டிகள் தொடர்பாக முறைப்பாடு செய்ய விரும்புவோர் எமக்கு எழுத்தில் கொடுக்க
வேண்டும்.

5)    பிரிவில் முதலாவதாக வந்த பிள்ளைக்கு புள்ளிகள் 100க்கு உயர்த்தப்பட்டு ஏனைய பிள்ளைகளுக்கும் அதே விகிதாசாரப்படி புள்ளிகள் வழங்கப்படும்.

6)    90 புள்ளியும் அதற்கு மேலாகவும் பெற்ற பிள்ளைகள் Band A ஆகவும், 80 புள்ளியும் அதற்கு மேலாகவும் பெற்ற பிள்ளைகள்; Band B ஆகவும், 70 புள்ளியும் அதற்கு மேலாகவும் பெற்ற பிள்ளைகள் Band C ஆகவும் கணிக்கப்படுவார்கள். 70 புள்ளிகளுக்கு குறைவாக பெற்ற மாணவர்களுக்கு பங்குபற்றியமைக்கான சான்றிதழ்கள் வழங்கப்படும்.========================================================================No comments: