உண்ணாவிரதத்தின் மூலம் அவுஸ்திரேலியாவின் கொள்கைகளை மாற்ற முடியாது: ஜூலியா கிளார்ட்


16/04/2013 அவுஸ்திரேலிய மெல்பேர்னில் உள்ள தடுப்பு முகாமில் புகலிடக் கோரிக்கையாளர்கள் முன்னெடுத்துள்ள  உண்ணாவிரதப்போராட்டமானது அந்நாட்டு அரசாங்கத்தின் கொள்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதில் வெற்றியடைப்போவதில்லை என பிரதமர் ஜூலியா கிளார்ட் தெரிவித்துள்ளார்.

மெல்பேர்னினுள்ள  புரோட்மெடோஸ் தடுப்பு முகாமில் 25  தமிழ்  புகலிடக் கோரிக்கையாளர்கள் உட்பட 27 பேர் முன்னெடுத்துள்ள  உண்ணாவிரதப் போராட்டம் தொடர்பாக கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்குள்ள புகலிடக்கோரிக்கையாளர்கள் அகதிகள் என ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் பாதுகாப்பு பரிசோதனை என்ற மதிப்பீட்டை அவுஸ்திரேலிய புலனாய்வு அமைப்பான ASIO( Australian Security Intelligence Organisation) மேற்கொள்ளும்.
அவர்களால் அவுஸ்திரேலியாவிற்கோ அல்லது வேறு நாடுகளின் பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லையென உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் மட்டுமே  அகதிகளுக்கான விசா வழங்கப்பட்டு வருகின்றது.

மிகவும் கடுமையான நிபந்தனைகளை இம் முறைகொண்டுள்ளதுடன் சிக்கலானதுமாகும்.
சிலவேளைகளைல் அம் மதீப்பீட்டின் முடிவு எதிர்மறையாக முடியும் பட்சத்தில் அவர்கள் காலவரையின்றி தடுத்து வைக்கப்படுவர்.


இந் நடைமுறையால் பெரும்பாலான இலங்கையைச் சேர்ந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதே காரணத்தினாலேயே புரோட்மெடோஸ் தடுப்பு முகாமில் பல இலங்கை அகதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்களது உண்ணாவிரதப் போராட்டம் கடந்த 8 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் ஒரு சிலர் வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது அவர்களது போராட்டம் உலகினது கவனத்தினை ஈர்த்துள்ளது.

இந்நிலையில் உண்ணாவிரதப் போராட்டத்தின் மூலம் அகதியோ அல்லது புகலிடக்கோரிக்கையாளரோ  பாதுகாப்பு பரிசோதனை கொள்கைகளை மாற்றமுடியாது என கிலார்ட் தெரிவித்துள்ளார். நன்றி வீரகேசரி
 

No comments: