கவியரசரின் பாடல்கள்




இசைக்கேட்டால் புவிஅசைந்தாடும்
அது இறைவன் அருளாகும்
இசைக்கேட்டால் புவிஅசைந்தாடும்
அது இறைவன் அருளாகும்   

ஏழாம் கடலும் வானும் நிலவும்
என்னுடன் விளையாடும்
இசை என்னிடம் உருவாகும்
இசை என்னிடம் உருவாகும்

இசைக்கேட்டால் புவிஅசைந்தாடும்
அது இறைவன் அருளாகும்

என்பாடல் சேய்கேட்கும் விருந்தாகலாம்
என்பாடல் நோய் தீர்க்கும் மருந்தாகலாம்
என்பாடல் சேய்கேட்கும் விருந்தாகலாம்
என்பாடல் நோய் தீர்க்கும் மருந்தாகலாம்

என்மேன்மை இறைவா அருளாதலால்
என்மேன்மை இறைவா அருளாதலால்..
எரியாத தீபத்தில் ஓளிவேண்டினேன்
எரியாத தீபத்தில் ஓளிவேண்டினேன்


ஏழாம் கடலும் வானும் நிலவும்
என்னுடன் விளையாடும்
இசை என்னிடம் உருவாகும்
இசை என்னிடம் உருவாகும்

விதியோடு விளையாடும் ராகங்களே
விளக்கேற்றி உயிர்காக்க வாருங்களேன்
கனலேந்தி வாருங்கள் தீபங்களே..
கனலேந்தி வாருங்கள் தீபங்களே..
கரைந்தோடும் நோய் என்னும் பாவங்களே 
கரைந்தோடும் நோய் என்னும் பாவங்களே 


த்த்தும் கடலை ஓடி ஓடி வரும்
எந்தன் இசையுடன் ஆடி ஆடி வரும் தீபங்களே..

எந்தன் இசையுடன் பாடல் கேட்டபின்னும்
இன்னும் வரவ்வில்லை செய்தபாவமென்ன தீபங்களே
கண்ணில் கனல் வர பாடவேண்டுமெனில்     
மின்னும் ஒளியுடன் நூறு பாடல் வரும்

தீபங்களே..தீபங்களே..தீபங்களே...

இசைக்கேட்டால் புவிஅசைந்தாடும்
அது இறைவன் அருளாகும்

படம்: தவப்புதல்வன் 
பாடல்: கவியரசர்





மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
தந்தை தவறு செய்தார் தாயும் இடம் கொடுத்தாள்
தந்தை தவறு செய்தார் தாயும் இடம் கொடுத்தாள்
வந்துபிறந்து விட்டோம் வெறும்பந்தம் வளர்த்து விட்டோம்
மனது துடிக்கின்றது மயக்கம் வருகின்றது
அழுது லாபம் என்ன அவன் ஆட்சி நடக்கின்றது
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
காட்டு மனமிருந்தால் கவலை வளர்ந்து விடும்
காட்டு மனமிருந்தால் கவலை வளர்ந்து விடும்
கூட்டைத் திறந்து விட்டால் அந்தக் குருவி பறந்து விடும்
காலில் விலங்கு விட்டோம் கடமை என அழைத்தோம்
நாலு விலங்குகளில் தினம் நாட்டியமாடுகின்றோம்
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
விதியின் ரதங்களிலே நாம் விரைந்து பயணம் செய்தால்
மதியும் மயங்குதடா சிறு மனதும் கலங்குதடா
கொடுக்க எதுவுமில்லை என் குழப்பம் முடிந்ததடா
கணக்கை முடித்து விட்டேன் ஒரு கவலை முடிந்ததடா
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று

திரைப்படம்: அவன் தான் மனிதன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
ஆண்டு: 1975

No comments: