வாழ்த்துக்கள் 20.04.2013 இல் திருமண வெள்ளிவிழா கண்ட திரு. திருமதி. சச்சிதானந்தம்

                                              
அன்பெனும் ஆலமரமாய் வாழ்க்கை
அறுகுபோல் வேரூன்றி வாழ்வது வாழ்க்கை
வெற்றி பெற்றால் மகிழ்வுறுவது வாழ்க்கை
தோல்விகளின்றி எதிர் கொள்வது வாழ்க்கை
நிபந்தனைகள் அற்றது அன்பு
வரையரையற்றது வாழ்க்கை
அவ்வாழ்வில் லயிப்பது இன்பம்
வாழ்வில் பகிர்ந்தளிப்பு பகிர்ந்தளிக்கப்பட்ட வாழ்க்கை
இவையிரண்டும் கொடுக்கும் மட்டற்ற மகிழ்ச்சியை
இருபத்திநான்கு வருடங்களின்
அழகிய தருணங்களை நினைவு கூர்ந்து
உங்கள் இதயக் கருவறையில்
ஒருவரையொருவர் சுமந்து பாசமெனும்
சிற்பியாய் உங்கள் வாழ்க்கையை செதுக்கி
வாழ்வின் ஒவ்வொரு சூழ்நிலையிலும்
தோள் கொடுத்து உறுதுணையாய்
ஒருவரோடொருவர் இணைந்து வாழ்வீர்
அன்பெனும் ஓடத்தில் ஏறி
நற்குழந்தைகளின் பாச ஆற்றில் பயணித்து
நூற்றாண்டு வாழ வாழ்த்துகின்றேன்
பரணி

No comments: