உலகச் செய்திகள்

அமெரிக்காவில் குண்டு வெடிப்பு!: 3 பேர் பலி, பலரின் நிலை கவலைக்கிடம்

கடலில் மிதந்த இந்தோனேஷிய விமானம்!


அமெரிக்காவில் மீண்டும் வெடிப்பு: 70 பேர் பலி?

ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமணத்தை சட்டபூர்வமாக்கியது நியூசிலாந்து!

========================================================================


அமெரிக்காவில் குண்டு வெடிப்பு!: 3 பேர் பலி, பலரின் நிலை கவலைக்கிடம்

16/04/2013 அமெரிக்காவில் பொஸ்டன் நகரில் அடுத்தடுத்து நடந்த இரு குண்டுவெடிப்புகளில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் நூற்றுக்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
பொஸ்டன் நகரில் இன்று நடந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மரதன் போட்டியைக் குறி வைத்து இத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
http://www.virakesari.lk/image_article/article-2309545-1950E679000005DC-125_964x577.jpg
மரதன் போட்டி முடிவடையும் இடத்தில் இந்த இரு குண்டுகளும் வைக்கப்பட்டிருந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.




http://www.virakesari.lk/image_article/article-2309545-1950737F000005DC-139_964x760.jpg
இந்த மரதன் போட்டியில் சுமார் 16,000 பொது மக்கள் பங்கேற்றிருந்தனர். போய்ல்ஸ்டன் தெருவில் இந்தப் போட்டி முடிவடைந்த நிலையில், அங்கு மக்கள் குவிந்திருந்தபோது அடுத்தடுத்து இரு குண்டுகள் வெடித்தன.
http://www.virakesari.lk/image_article/article-2309545-1950B0A6000005DC-514_964x677.jpg
இதில் ஒரு 8 வயது சிறுவன் உள்பட 3 பேர் உயிரிழந்ததுடன் மேலும் 144பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இதல் 42 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதையடுத்து பொலிஸார் அங்கு நடத்திய சோதனையில் மேலும் 2 குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
http://www.virakesari.lk/image_article/article-2309545-195063AD000005DC-196_964x640.jpg
அவை உடனடியாக அங்கிருந்து அகற்றப்பட்டு வெடிக்கச் செய்யப்பட்டன.
இந்தத் தாக்குதல் குறித்து எப்.பி.ஐ. விசாரணையை ஆரம்பித்துள்ளது. இத் தாக்குதல் தொடர்பாக ஒரு கறுப்பினத்தைச் சேர்ந்தவரை தேடுவதாக எப்.பி.ஐ .அறிவித்துள்ளது.
http://www.virakesari.lk/image_article/article-2309545-19506D0E000005DC-646_964x817.jpg
இதேவேளை இச்சம்பவத்துடன் தொடர்புடையவர் எனக் கருதப்படும் காலில் காயமடைந்த சவுதி நாட்டுப் பிரஜையொருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

http://www.virakesari.lk/image_article/article-2309545-1950BEAE000005DC-69_964x734.jpg


நன்றி வீரகேசரி 








கடலில் மிதந்த இந்தோனேஷிய விமானம்!

13/04/2013 இந்தோனேஷியாவின் பாலி பகுதியில் 130 பேருடன் சென்ற பயணிகள் விமானம் கடலில் விழுந்து விபத்திற்குள்ளானது.

இந்தோனேஷியாவிற்கு சொந்தமான லையன் ஏர் போயிங் 737 ரக விமானம், இன்று பாலி தீவில் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 130 பேருடன் சென்ற பயணிகள் விமானம் புறப்பட்டது.


ஓடுதளத்தில் இருந்து மேலே பறக்கும் நேரத்தில் திடீரென விலகி அருகே கடலில் பாய்ந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதில் உயிர்தேசம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
நன்றி வீரகேசரி







அமெரிக்காவில் மீண்டும் வெடிப்பு: 70 பேர் பலி?

18/04/2013 அமெரிக்காவின் டெக்சஸின் வாகோ  பகுதியில்  அமைந்துள்ள தாவரங்களுக்கான உரம் தயாரிக்கும் நிறுவனமொன்றில் ஏற்பட்ட பாரிய வெடிவிபத்தில் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் இதில் சிக்கி 70 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெடிப்பு மிகுந்த சக்திமிக்கதெனவும் இதனால் அருகில் அமைந்திருந்த கட்டிடங்கள் பலவும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
http://www.virakesari.lk/image_article/18texas_web1-articleLarge.jpg
விபத்து இடம்பெற்ற பிரதேசத்திலிருந்து 24 கிலோ மீற்றர் தொலைவில் அதன் தாக்கம் உணரப்பட்டுள்ளது.
அந்நாட்டு நேரப்படி நேற்று இரவு 8 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
தற்போது அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்விபத்தில் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகின்றது.
http://www.virakesari.lk/image_article/hedstrom20130418032439190.jpg
இந்நிலையில் விபத்துக்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் பொஸ்டன் நகரில் நேற்று முன் தினம் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 3 பேர் உயிழந்ததுடன் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.
http://www.virakesari.lk/image_article/explosionssffsfsfr444.jpg
அச்சம்பவம் இடம்பெற்று சில தினங்களில் இவ் வெடிப்புச் சம்பவமும் இடம்பெற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி வீரகேசரி 






ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமணத்தை சட்டபூர்வமாக்கியது நியூசிலாந்து!

18/04/2013 ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் ஓரினச்சேர்க்கையாளர்களின் திருமணத்தை சட்டபூர்வமாக அங்கீகரித்த முதல் நாடாக நியூசிலாந்து பதிவாகியுள்ளது.
ஓரினச்சேர்க்கையாளரின் திருமணத்தை அங்கீகரிக்கும் பொருட்டு சட்டமூலம்மொன்று அந்நாட்டு பாராளுமன்றத்தில் நேற்று முன்வைக்கப்பட்டது.
இதன்போது  அளிக்கப்பட்ட 77 மொத்த வாக்குகளில் 44 சட்டமூலத்திற்கு ஆதரவாக அளிக்கப்பட்டிருந்தது.
இதன்மூலம் நியூசிலாந்தில் ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமணம் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஓரினச்சேர்க்கையாளர்களின் திருமணத்தை சட்டபூர்வமாக அங்கீகரித்த உலகின் 13 ஆவது நாடாக நியூசிலாந்து பதிவானது.
நெதர்லாந்து, பெல்ஜியம் ஸ்பெய்ன் கனடா, தென்னாபிரிகா, நோர்வே, சுவீடன் போர்த்துக்கல், ஐஸ்லாந்து, ஆர்ஜண்டீனா டென்மார்க் ஆகிய நாடுகளில் ஓரினச்சேர்க்கையாளர்களின் திருமணம் ஏற்கனவே சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
உருகுவேயில் கடந்த சில தினங்களுக்கு முன்னர்  ஓரினச்சேர்க்கையாளர்களின் திருமணத்தை அங்கீகரிக்கின்றன்மை தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலம் அந்நாட்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.


நன்றி வீரகேசரி

No comments: