அபத்த நாடகம் - நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்

.
ஒரு சில வாரங்கட்கு முன் அவுஸ்திரேலிய மருத்துவ உதவி நிதியம் “முத்தமிழ் மாலை 2012” என்ற நிகழ்ச்சியை நடாத்தி இருந்தது. முதல் நிகழ்ச்சியே  Dr J ஜெயமோகனின் தயாரிப்பில் “கம்பனும் கவிராயனும்” இசைசித்திரம். அருணாசல கவிராயரின் பாடல்கள் கதை கோவையாக இடம் பெற்றது.   Dr J  ஜெயமோகனே கதையை கூற பாடல் இடம் பெற்றது. கதையின் பாத்திரத்தை சந்தர்ப்பத்தை விழக்கிய Dr J ஜெயமோகன் தனக்கே உரிய பாணியில் நகைசுவையை கலந்து கூறினார். பலர் இரசித்தனர். சிலர் இது தேவைதானா எனவும் வினாவினார்கள்.


கருனாடக சங்கீதத்தை இசைத்தால் மக்கள் கேட்பார்களோ என்ற சந்தேகமே இவ்வாறு இசையுடன் கதையையும் இணைத்தமையா? இசை இரசிகர்க்கு இசையின் ஒட்டம் தடைப்பட்டது போன்ற உணர்வை ஏற்படுத்தியது. இராம கதை ஒருவர் கதை கூறிதான் நாம் அறிய வேண்டுமா? பார்வையாளர் தொடர்ந்து பாடலை இசைதாலே புரிந்துவிடுவார். பாடிய இருவருமே உணர்ந்து பாடினார்கள். முழுமையாக கச்சேரியாக கேட்கமுடியவில்லையே என்ற குறை மனதை வாட்டியது.

இடைவேளையின் பின் 9 மணிக்கே நாடகம் ஆரம்பமானது. “விடை தேடும் வினாக்கள்” என்ற நாடகம் “நாடக கலாவித்தகர்” திருமதி கோகிலா மகேந்தரனால் நெறியாழப்பட்டு மேடை ஏறியது. அபத்த நாடகம் அதாவது ABSURD Theater பாணி என கூறப்பட்டது. நாடக கரும் பொருள் விடை தேடும் வினாக்களா? அல்லது இந்த நாடகம் பாணிதான் என்ன என எம்முள் ஒரு வினைவை வைத்தார்களா? அந்த அபத்த நாடகம் அல்லது ஆங்கிலத்திலே ABSURD Theater தான் என்ன என பலரும் அறிய முற்பட்டனர்.
அபத்த நாடகம் பாணி எமது யதார்த்த நாடக பள்ளி போன்றே ஐரோப்பியரை பின்பற்றிய புதிய பாணி. இரண்டாவது மகாயுத்தத்தின் பின் ஏற்பட்ட தாக்கம் ஐரோப்பாவிலே புதிய சிந்தனைகளை தோற்றிவித்தது. யுத்தத்தின் கொடுமையால் தாக்கப்பட்ட சமுதாயத்தில் பல முரண்பட்ட சிந்தனைகள் வெளிப்பட்டன. நாம் வாழும் முறை ஏற்புடையதா? அப்பொழுது நிலவிய சமூக கட்டுப்பாடுகள் அரசியல் சித்தாந்தங்கள் வேண்டியதா? ஏன்ற எண்ணங்கள் நிலவிய காலம் அது. வேதனையின் கொடுருத்தால் தாக்குண்ட சமூகம் கட்டுப்பாடுகளை மீறுவதால் தகர்த்தெறிவதால் சுயதிருப்தி கண்டது.
அவ்வாறு தோன்றியதே ABSURD Theater.   நாடகத்தில் எந்த வலுவான கருப்பொருளும் இரா. அதே நேரம் தமது கருத்துகளை கூறியும் கூறாமலும் நடித்துக் காட்டும் பாணி. இங்கு வார்த்தைகள் மனித உணர்வுகள் அத்தனையும் வெளிக்காட்டிவிடா. ஆதனால் உடல் அங்க அசைவுகள் வேண்டும். அதே சமயம் உடல் அசைவுகள் முறையாக வகுக்கப்பட்ட ஆடல் அல்ல. ஒருவித அசைவு இத்தனையும் சேர்ந்ததே அபத்த நாடகம்.
இந்த பாணியில் அரங்கேறிய “விடை தேடும் வினாக்கள்” மேடை அலங்காரம் கேள்வி குறிகள் தொங்க பாத்திரங்கள் வினாக்களாக தோன்றினர். ஆடலும் பாடலும் உரையாடலும் இணைய கேட்கப்பட்ட வினாக்கள் இன்றைய சமூகத்தில் நாம் காணும் நாளாந்த பிரச்சனைகளே. பாலியல்,  ஒரு இன சேர்க்கை,  விவாகரத்து பெண் இன்றும் அடிமையா? பயங்கரவாதம் இவ்வாறு பழைய பிரச்சனைகளும் புதிய பிரச்சனைகளுமே வினாக்கள். அது தவிர புதிய விணக்களும் தோன்றிய வண்ணமே இருக்கும். மக்கள் சுபீட்சத்திற்கு மதம் கை கொடுக்கும். 10 ஆண்களும் 2 பெண்களும் நடித்தார்கள். நடிப்பை பலர் ரசித்தனர். சிலருக்க எதுவுமே புரியவில்லை.
சிட்னிக்கு புதிய பாணி நாடகம். இது தேவைதானா,  இதன் வருங்காலம் பார்வையாளர் நிட்சயிக்க வேண்டியதே. நூடக கலையை ஆழமாக இரசிக்கும் நாடக பிரியருக்கு நல்ல விருந்து. நாடக ஆர்வலர் முன் நடித்துக் காட்டவேண்டிய ஒன்றை சாதாரண மக்கள் முன் நடாத்தினால் அவர்கள் விமர்சனம் அபத்தமாகவே இருக்கும். நகை சுவை நாடகங்களே பார்த்து ரசிப்பவர் அத்தனைபேரும் ஆழமான கருத்தை புரிந்த சீர்தூக்கி பார்ப்பார்களா? நிதி உதவிக்காக விற்கப்படும் நுளைவுச்சீட்டு கட்டணம் பாதிக்கப்பட்ட எமது சமூதாயத்திற்கு விடிவு தேட உதவுகிறது. அரங்கக் கலை வழர்ச்சி என நோக்குமிடத்து நிதி உதவி நிகழ்ச்சிகளையே நம்பி வாழ முடியாது. எமது அரங்க கலைகளை மதித்து ரசிக்க வரும் ரசிகர்களை நாம் வழர்க்கவேண்டும். அதுவே கலை வழர்வதற்கான முறையும் கூட. முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை. முயல்வோம் வெல்வோம்.

1 comment:

Anonymous said...

புதிய சிந்தனைகளுக்கு வரவேற்புக் கொடுப்போம் அது தான் மனிதகுலம் முன்னேறும் வழி