உலகச் செய்திகள்

.
நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த ஒபாமா!
 
தீவுக்காக மோதும் ஜப்பான் - சீனா: தொடரும் பதற்றம்!

உக்ரைனில் கடும் பனி: 37 பேர் மரணம்

சோதனை என்ற பெயரில் இளம்பெண்களிடம் சில்மிஷம்: மருத்துவருக்கு 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை

நித்யஸ்ரீ தற்கொலை முயற்சி : கணவர் தற்கொலை

 பிரபஞ்ச அழகியானார் ஒலிவியா

தென் கொரியாவில் முதல் முறையாக பெண் அதிபர்

நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த ஒபாமா!

அமெரிக்கா கனெக்டிக்கட் மாநிலத்தில் உள்ள பள்ளியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 28 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 20 பேர் குழந்தைகள்.
இச்சம்பவம் அமெரிக்காவை அதிர்ச்சி அடைய செய்தது. இந்த நிலையில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நியூ டவுனில் நடந்தது. அதில் ஜனாதிபதி ஒபாமா கலந்து கொண்டார். 
அப்போது துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த குழந்தைகளின் பெயரையும், சாண்டி ஹூக் பள்ளியின் முதல்வர், ஆசிரியைகள் பெயரையும் வாசித்தார். அப்போது குழந்தைகளை காப்பாற்ற அன்பு கலந்த துணிச்சலுடன் போராடி உயிரை துறந்துள்ளனர் என பாராட்டினார்.
மேலும், அவர் கூறும் போது, இது போன்ற செயல்களை ஏற்றுக் கொள்ள முடியாது. ஆனால் இது போன்ற படுகொலைகளை உடனடியாக தடுத்து நிறுத்த முடியாத நிலையில் இருக்கிறோம். அதில் அரசியல் உள்ளது. எனவே இனி வரும் காலங்களில் எனது அதிகாரத்தை பயன்படுத்தி இது போன்ற வன்முறை செயல்கள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுப்பேன்.
இச்சம்பவம் துப்பாக்கி வைத்திருக்கும் உரிமைக்கான சட்டத்தின் மீது நாடு முழுவதும் மிகப் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சட்டத்தின் மூலம் வன்முறை என்ற பிசாசை நமது சமுதாயத்தில் இருந்து விரட்டுவோம்.
பள்ளி குழந்தைகளை பாதுகாப்பதில் எங்களுக்கு மிகுந்த கடமை உள்ளது. அதற்காக தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
அஞ்சலி கூட்டத்துக்கு முன்னதாக துப்பாக்கி சூட்டில் பலியான குழந்தைகளின் குடும்பத்தினரை தனித் தனியாக நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
நன்றி வீரகேசரி   


தீவுக்காக மோதும் ஜப்பான் - சீனா: தொடரும் பதற்றம்!

நன்றி வீரகேசரி  கிழக்கு சீனக் கடலில் சர்ச்சைக்குரிய தியாவ்யூ தீவுப் பகுதியில் சீனாவின் போர் விமானம் இறங்கியதைத் தொடர்ந்து ஜப்பானும் எப்.15 ரக போர் விமானங்களை அப்பகுதியில் இறக்கியிருப்பதால் பதற்றம் நிலவி வருகிறது.

தியாவ்யூ தீவு, இயற்கை எரிவாயு வளம் மிக்கது. இத்தீவுக்கு சீனாவும் ஜப்பானும் உரிமை கொண்டாடி வந்தன. இந்த நிலையில் தீவை உரிமையாளரிடமிருந்து விலைபேசி தமது நாட்டுடன் இணைத்துக் கொண்டது ஜப்பான். இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது.

மேலும் அப்பகுதிக்கு தமது ரோந்து கப்பல்களையும் அனுப்பி வந்தது. தற்போதும் அப்பகுதியில் கண்காணிப்பு கப்பல்களை சீனா நிறுத்தி இருக்கிறது. இந்நிலையில் தியாவ்யூ தீவு அருகே சீனாவின் போர் விமானம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கும் ஜப்பான், போட்டியாக எப்.15 ரக போர் விமானங்களை அப்பகுதிக்கு அனுப்பி வைத்திருக்கிறது. இதனால் கிழக்கு சீனக் கடற்பரப்பில் யுத்தம் வெடிக்கும் அபாயம் உருவெடுத்திருக்கிறது.   உக்ரைனில் கடும் பனி: 37 பேர் மரணம்

ஐரோப்பாவின் கிழக்கில் உள்ள உக்ரைன் நாட்டில் கடந்த ஒரு மாதமாக கடுமையாக பனிப் பொழிந்து வருகிறது. 

அங்கு தட்பவெட்ப நிலை (- 17 ) பாகைக்கு கீழே சென்று உள்ளது.

அங்குள்ள மக்களின் உடல் வெப்பம் மிகவும் குறைந்து கடுமையான பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.
இதனால் இந்த மாதத்தில் மாத்திரம் அங்கு 37 பேர் உயிரிழந்துள்ளனர்.
வயதானவர்களும் வீடுகள் இல்லாதவர்களும் இதில் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாடு முழுவதும் மக்கள் தங்கி உணவு அருந்த 1500 தற்காலிக மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அங்கு கடும் பனி பொழிவினால் வீதிகளில் வாகனங்கள் பயணிக்க முடியாத நிலை தோன்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.   நன்றி வீரகேசரி    

சோதனை என்ற பெயரில் இளம்பெண்களிடம் சில்மிஷம்: மருத்துவருக்கு 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை
[ புதன்கிழமை, 19 டிசெம்பர் 2012 ]
சோதனை என்ற பெயரில் இளம்பெண்கள், சிறுமிகளிடம் தவறாக நடந்து கொண்ட மருத்துவருக்கு 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.இங்கிலாந்தின் டோன்காஸ்டர் நகரில் கிளினிக் நடத்தி வருகிறார் டாக்டர் கவுசல் இஸ்லாம்(வயது 70).
இவர் தன்னிடம் சிகிச்சைக்கு வரும் இளம்பெண்கள் மற்றும் சிறுமிகளிடம் சோதனை என்ற பெயரில் தவறாக நடந்து கொண்டுள்ளார்.
கடந்த 2010ஆம் ஆண்டு பெண் ஒருவர் கொடுத்த புகாரின் போது இவரது செயல்கள் அம்பலமானது.
இதனையடுத்து அடுத்தடுத்து பெண்கள் புகார் அளிக்கவே, விவகாரம் விஸ்வரூமெடுத்தது.
இதனை தொடர்ந்து மருத்துவர் பணிக்கு பொறுப்பில்லாதவர் என கூறி அவரை இங்கிலாந்து மெடிக்கல் கவுன்சில் சஸ்பெண்ட் செய்தது. இதுதொடர்பான வழக்கு ஷெப்பீல்டு கிரவுன் நீதிமன்றத்தில் நடந்தது.
இதுகுறித்து நீதிபதி சைமன் லாலர், கடவுளுக்கும் மேலாக மருத்துவர்கள் மீது மக்கள் நம்பிக்கையும், மரியாதையும் வைத்திருக்கிறார்கள்.
அதை குலைக்கும் விதமாக கவுசல் நடந்து கொண்டுள்ளது மன்னிக்க முடியாத குற்றம் என கூறி 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தார்.

நன்றி தமிழ்வின் நித்யஸ்ரீ தற்கொலை முயற்சி : கணவர் தற்கொலை


நன்றி வீரகேசரி    பிரபல கர்நாடக இசை பாடகி நித்யஸ்ரீயின் கணவர் தற்கொலை செய்துகொண்டதனையடுத்து நித்யஸ்ரீயும் விசம் அருந்தி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

பாடகி நித்யஸ்ரீயின் கணவர் மகாதேவன் இன்று சென்னை கோட்டூர்புரம் அருகே உள்ள அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். குறித்த இடத்திற்கு காரில் சென்று ஆற்றில் குதித்ததை கண்டு பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து தீயணைப்பு படையினரால் சடலமாக மீட்கப்பட்டு தற்போது பிரதேன பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவ மனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

இதேவேளை இத்தகவலை அறிந்த நித்யஸ்ரீ விரக்தியில் விசம் அருந்தி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். ஆனால் தற்போது மருத்துவமனையில் அனுமதித்து அவருக்கு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இத்தற்கொலைக்கு குடும்பப் பிரச்சினையே காரணம் என கூறப்படுகிறது.

 

 

  பிரபஞ்ச அழகியானார் ஒலிவியா

நன்றி வீரகேசரி    லாஸ் வெகாஸ் இடம்பெற்ற 'பிரபஞ்ச அழகி 2012' இறுதிச் சுற்றில் 20 வயதான அமெரிக்க அழகி ஒலிவியா கல்போ பிரபஞ்ச அழகியாக முடிசூட்டப்பட்டார்.

சிறந்த தேசிய ஆடையாலங்காரப் பிரிவில் சீன அழகி முதலிடத்தை பெற்ற அதேவேளை இலங்கையைச் சேர்ந்த அழகி சப்றினா ஹேர்பட் 4ஆவது இடத்தைப்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க அழகி ஒலிவியா கல்போ பிலிப்பைன்ஸ் அழகியை பின்தள்ளி பிரபஞ்ச அழகியாக தெரிவானார். இவருக்கு கடந்த ஆண்டு பிரபஞ்ச அழகியாக தெரிவான அங்கோலாவைச் சேர்ந்த லெய்லா லோப்ஸ் மகுடம் சூட்டி கௌரவித்தார்.

அத்துடன் முறையே 2ஆம், 3ஆம், 4ஆம்  5ஆம் இடங்களை பிலிப்பைன்ஸ், வெனிசூலா, அவுஸ்திரேலியா மற்றும் பிரேஸில் அழகிகள் பெற்றுக்கொண்டனர்.

மேலும் கேள்வி பதில் நேரத்தின் போது முன்னாள் பிரபஞ்ச அழகியான ஸிமெனா நவரெட்ட ஒலிவியாவிடம், நீங்கள் செய்த விடயமொன்றில் திரும்பச் செய்யவே கூடாதது எது? எனக் கேட்டதற்கு, நல்லதோ கெட்டதோ கிடைக்கின்ற ஒவ்வொரு அனுபவத்திலிருந்தும் நாம் ஏதோவொன்றைக் கற்றுக்கொள்கிறோம் எனத் தெரிவித்தார்.
 

 

தென் கொரியாவில் முதல் முறையாக பெண் அதிபர்
தென் கொரியாவில் முதல் முறையாக பெண் ஒருவர் அதிபராகத் தேர்தெடுக்கப்பட்டுள்ளார். தற்போது அதிபராகத் தேர்தெடுக்கப்பட்டுள்ள பார்க் ஹ்யாங் ஹேயின் தந்தை ஒரு இராணுவச்சதிப் புரட்சியில் ஆட்சியை பிடித்த பிறகு 18 ஆண்டுகள் நாட்டின் அதிபராக இருந்தார். அவரது தந்தையும் முன்னாள் சர்வாதிகாரியுமான பார்க் யுங் ஹீ 1979 ஆம் ஆண்டு சுட்டிக் கொல்லப்பட்டார். மிகவும் நெருக்கமாக இருந்த போட்டியின் இறுதியில், பார்க் அவர்களை எதிர்த்துப் போட்டியிட்ட லிபரல் கட்சியின் வேட்பாளர் மூன் ஜே யின் தனது தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளார். 60 வயதாகும் செல்வி பார்க், தற்போது அதிபாராக இருக்கும் லீ ம்யுங் பாக் அவர்களிடமிருந்து பொறுப்பேற்றுக் கொள்வார். நாட்டின் செல்வங்களை அனைவருக்கும் பிரித்தளிக்க பார்க் ஹ்யாங் ஹே உறுதியளித்துள்ளார். நாட்டில் ஒரு புதிய தேசிய மகிழ்ச்சிக்கான சகாப்தம் தொடங்கியுள்ளது என்று தனது வெற்றிக்கு பிறகு, ஆதரவாளர்களிடையே பேசும் போது பார்க் அவர்கள் கூறினார். தற்போது வட கொரியா மற்றும் தென் கொரியா ஆகிய இரு நாடுகளிலும், இராணுவத் தலைவர்களின் வாரிசுகளே நாட்டை ஆளும் சூழல் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தகுந்தது. நன்றி தேனீ 

 

No comments: