கொழும்பில் மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியீடு

.


அவுஸ்திரேலியாவில் வதியும் எழுத்தாளர்களும் ஊடகவியலாளர்களுமான டொக்டர் நொயல் நடேசன் மற்றும் முருகபூபதி ஆகியோரின் மொழிபெயர்ப்பு நூல்கள் எதிர்வரும் ஜனவரி 8 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு கொழும்பில் பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் செயற்குழுக்கூட்ட அறையில் (இலக்கம் 08) நடைபெறும்.
ஏற்கனவே ஆங்கிலத்தில் வெளியான நடேசனின் வண்ணாத்திக்குளம் நாவல் சமணலவௌ என்ற பெயரில் வெளியாகிறது. இதனை எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான மடுளுகிரியே விஜயரத்தின சிங்களத்தில் மொழிபெயர்த்துள்ளார். வண்ணாத்திக்குளம் நாவல் ஏற்கனவே ஆங்கிலத்தில் டீரவவநசகடல டுயமந என்ற பெயரில் ஆங்கிலத்தில் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனை மொழிபெயர்த்தவர் அவுஸ்திரேலியாவில் வதியும் எழுத்தாளர் நல்லைக்குமரன் குமாரசாமி.
நடேசனின் மற்றுமொரு நாவலான உனையே மயல்கொண்டு டுழளவ in லழர என்னும் பெயரில் வெளியாகிறது. இதனை இலங்கையின் பிரபல நூல் வெளியீட்டாளர்கள் விஜித்த யாப்பா பதிப்பகத்தினர் வெளியிடுகின்றனர்.
முருகபூபதியின் பத்து சிறுகதைகள் சிங்களத்தில் மதகசெவனெலி (ளூயனழறள ழுக ஆநஅழசநைள) என்றபெயரில் வெளியாகிறது. இக்கதைகளை ஏ.சி;.எம் கராமத் மொழிபெயர்த்துள்ளார். தோதன்ன பதிப்பகம் இதனை வெளியிடுகிறது.
இந்நூல்களின் வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு படைப்பாளிகள் பத்திரிகையாளர்கள் மொழிபெயர்ப்பாளர்கள் அழைக்கப்படுகின்றனர். இந்நிகழ்வை சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின் அவுஸ்திரேலியா அமைப்பு ஒழுங்குசெய்துள்ளது.


No comments: