நாவலர் விழா

.
  உ
சிவமயம்


                            
  நல்லைநகர் தந்த
ஆறுமுகநாவலர்
 நவாலியூர் தந்த
சோமசுந்தரப்புலவர்


 சைவத்திற்கும் தமிழிற்கும் அளப்பரிய  பணிபுரிந்த பெரியோர்களான
ஆறுமுகநாவலர் பெருமான் அவர்களையும் 
சோமசுந்தரப் புலவர் அவர்களையும் 
நினைவுகூரும் விழா 
9 – 3 – 2013  சனிக்கிழமை மாலை 5மணி
 இடம் - 23 றோஸ் கிறசென்ற் - றீயன்ஸ்பார்க் அருள்மிகு துர்க்கை அம்மன் கோயில் கலாசார மண்டபம்             



 அன்புடையீர்!
                “ஆறுமுகநாவலர் பிறந்திலரேல்
            சைவமெங்கே? சொல்லு தமிழெங்கே?”
எமது ஈழநாட்டிலே மேன்மைகொள் சைவத்திற்கு மிகுந்த பேராபத்துச் சூழ்ந்த காலகட்டத்தில் தனது பேச்சுத் திறனாலும் எழுத்து வன்மையினாலும் கண்டனத் துண்டுப்பிரசுரங்களாலும் நல்லைநகர் தந்த ஆறுமுகநாவலர் பெருமான் அவர்கள் சைவசமய வளர்ச்சிக்குப்  பெரும் பணி ஆற்றியவர். இவர் சைவச் சான்றோரினால் “ஐந்தாம் சமயகுரவர்” எனப் போற்றப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆட்சியிலிருந்த அந்நியரின் பிறமதப் பிரசாரத்தினை எதிர்நோக்கி ஈழத்துச் சைவர்கள் தத்தளித்துக்கொண்டிருந்த வேளையிலே அவர்களின் சமய வாழ்விலே புகுந்துவிட்ட களைகளைநீக்கியும் புறச்சமய வெள்ளத்திலிருந்து அணை கட்டிக் காவல்செய்தும் பெருந்தொண்டாற்றியவர் ஆறுமுகநாவலர். மூட நம்பிக்கைகள் பலவற்றை நீக்கியும் சைவ ஆலயங்களின் சீர்திருத்தப் பணிகளைச் சிறக்கச்செய்தும் வெற்றி கண்டவர்.
ஈழத்தின் புலவர் பரம்பரையை நிலைநிறுத்திச் செந்தமிழ் வளர்ச்சிக்கு அளப்பரிய பங்கெடுத்ததுடன் தமிழிற் பதினையாயிரத்திற்கும் மேலான செந்தமிழ்ப் பாக்களையும் செய்யுள்களையும் பிரபந்தங்களையும் இயற்றித் “தங்கத் தாத்தா”வெனத் தமிழறிஞர்களாற் போற்றப்பட்டவர் நவாலியூர் தந்த சோமசுந்தரப்புலவர்.
ஆறுமுகநாவலர் பெருமான் அவர்களும் அவரைத் தொடர்ந்து சோமசுந்தரப் புலவர் அவர்களும் கோவில்களில் உயிர்ப்பலி செய்வதை நிறுத்த அயராது உழைத்து அதிலே பெரும் வெற்றியும் ஈட்டியவர்கள். புலவர் அவர்கள் “ஆடு கதறியது” என்னும் உருக்கமான கவிதையை இயற்றி அதனைப் பல இடங்களில்; நடிப்பித்துக் காட்டி உயிர்ப்பலி செய்வதை நிறுத்த அரும்பாடுபட்டவர்.
இவ்வண்ணம் சைவ சமயத்திற்கும் தமிழுக்கும் அரும்பணி ஆற்றிய இப் பெரியார்களை எம்போன்றோரும் இளைய சமூகத்தினரும் நினைவுகூரும் பொருட்டுச் சிட்னியிலே ஒரு சிறந்த விழாவினை நடத்த முன்னேற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வருகிற ஆண்டு மார்ச் மாதம் 9ஆம் திகதி சனிக்கிழமை மாலை 5மணிக்கு றீயன்ஸ்பார்க் அருள்மிகு துர்க்கை அம்மன் கலாசார மண்டபத்தில் (9-3-2013) நடைபெறவிருக்கும் இந்த விழாவினையொட்டி நியூ  சவுத் வேல்ஸ்  தமிழ் மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டி கவிதை மனனப் போட்டி ஆகியவை நடாத்தப்படவுள்ளது. கீழ்ப் பிரிவு மேற்பிரிவு ஆகிய இரு பிரிவுகளுக்கும் இப்போட்டிகள் நடைபெறும். இளைஞர் பிரிவுக்குக் கட்டுரைப் போட்டியும் நடைபெறும். இந்த விழாச் செயற்குழு எல்லாத் தமிழ் அமைப்புகளின் ஏகோபித்த ஒத்துழைப்பை அன்புடன் வேண்டிநிற்கிறது.   சைவத்தின் பெயராலும் தமிழின் பெயராலும்  சரித்திரம் படைத்த தமிழ்ப் பெரியோர்களுக்கு   விழாவெடுப்பது எமது கடமையன்றோ?
நன்றி.

உங்கள் பூரண ஒத்துழைப்பை நாடிநிற்கும் விழா அமைப்பாளர்கள்:
திருமதி பாலம் லஷ்மணன்
திரு அருச்சுனமணி
பேராசிரியர் திருமதி ஞானா குலேந்திரன்
திரு திருநந்தகுமார்
பல்வைத்திய கலாநிதி இளமுருகனார் பாரதி.



5 comments:

Anonymous said...

Great Initiative Sir, but I have a question after reading the below:
பின் குறிப்பு – தமிழ் அமைப்புகளுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள்! 9-3-2013 சனிக்கிழமை மாலை வேறு நிகழ்ச்சிகள் நடத்துவதைத் தயவுகூர்ந்து தவிர்த்து ஒத்துழைப்பை நல்கவும் எனப் பணிவன்புடன் கேட்கிறோம்.

There are already two programs arranged for this day - including UNSW - Anjali Tamil Society's 'Oli Olli'. So the Boomerang is back to you to avoid this day.

Anonymous said...

Hello
There is a calender maintained by the Tamil Consortium. It is nothing but courtesy for other organisations, if you or your organisation have given the dates of the programmes which were claimed to have been scheduled earlier. Most of the organisations nowadays look for the Events calender to schedule a programme.
Hope you understand the concerns of the community, if not the organisers of the above programme.

Anonymous said...

Hi Brothers!
Please see the calender that was sent by the Secretary of the Cosortium to the Organisations. Now there is no need for any explanation. Truth will never fail.
Regards
One member of another organisation that received this note from the Secretary of the Consortium.
Tamil Events Calendar 2013 (NSW)
As at 24 November 2012

1-Jan Tues New Year
5-Jan Sat
12-Jan Sat Thamizh Puththandu Thamizhr Thirunaal 2013 - Auburn Tamil Society
19-Jan Sat
26-Jan Sat Thamilar Onrukoodal 2013 / Col Kittu Memorial/ Australia Day
2-Feb Sat
9-Feb Sat
16-Feb Sat
23-Feb Sat
2-Mar Sat Illam Thendral 2013 - Anbaalayam
9-Mar Sat Arumuga Navalar - Somasundara Pulavr Vilzha
16-Mar Sat
23-Mar Sat Carnatic Classical Music Concert-TBA-Presented by PALLAVI Inc.
24-Mar Sun Carnatic Classical Music Concert-TBA-Presented by PALLAVI Inc.
30-Mar Sat

Anonymous said...

Dears!
Our organisation also received this information to upgradeany new programme with a request from the Secrtary.
Tamil Events Calendar 2013 (NSW)


As at 24 November 2012




1-Jan Tues New Year
5-Jan Sat

12-Jan Sat Thamizh Puththandu Thamizhr Thirunaal 2013 - Auburn Tamil Society
19-Jan Sat

26-Jan Sat Thamilar Onrukoodal 2013 / Col Kittu Memorial/ Australia Day
2-Feb Sat

9-Feb Sat

16-Feb Sat

23-Feb Sat

2-Mar Sat Illam Thendral 2013 - Anbaalayam
9-Mar Sat Arumuga Navalar - Somasundara Pulavr Vilzha
16-Mar Sat

23-Mar Sat Carnatic Classical Music Concert-TBA-Presented by PALLAVI Inc.
24-Mar Sun Carnatic Classical Music Concert-TBA-Presented by PALLAVI Inc.
30-Mar Sat
Dear Fellow Tamil Association
Herewith I attach the Tamil Events Calendar 2013 for updating it.
Please fill in your Events with dates in the attached Calendar and email back to me. This will be advantageous to all Associations.
Regards

S Skandakumar
Secretary



Anonymous said...

We do not have to honour such calendars from such organizations. No one can stop Tamils going and enjoying an evening with many events as their choice. That’s how it should be. Everyone wants to have an event on a Saturday. How many Saturdays do we have compared to the amount of Tamil events per year. The Tamil population in Australia is increasing and the happening of many events on 1 day is something that you have to live with. If your event is of good standard or for a good purpose then you don’t have to get scared and beg others to not host events on the same day. Grow up.
Thamilan.