உலகச் செய்திகள்

.
  ஈரானில் சந்தித்துக்கொண்ட மன்மோகன்- சர்தாரி

'இஸ்லாம்: சொல்லப்படாத கதை' செனல்4 இன் புதிய நிகழ்ச்சியால் சர்ச்சை

சாய்பாபாவின் ரூ. 40,000 கோடி சொத்துக்கள்: யாருக்கு சொந்தம்?

ஈரான் தாக்கப்பட்டால் அமெரிக்க படைகளும் பேரழிவை சந்திக்கும்!

"போர்டோ' அணு சக்தி நிலையத்தின் உற்பத்தி ஆற்றலை ஈரான் இரு மடங்காக்கியுள்ளது
ஈரானில் சந்தித்துக்கொண்ட மன்மோகன்- சர்தாரி

இதன்போது மும்பைத் தீவிரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பான பாகிஸ்தானிய விசாரணையை விரைவுபடுத்தி குற்றவாளிகளை சட்டத்தின் முன்பு நிறுத்துமாறு அவர் கண்டிப்புடன் கேட்டுக் கொண்டுள்ளார்.ஈரான் சென்றுள்ள இந்திப் பிரதமர் மன்மோகன் சிங், பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரியை சந்தித்துப் பேசியுள்ளார்.

ஈரான் தலைநகர் டெஹ்ரான் சென்றுள்ளார் பிரதமர் மன்மோகன் சிங். அங்கு 16ஆவது அணி சேரா நாடுகள் கூட்டமைப்பின் மாநாடு நடைபெறுகிறது. 

fgsg

இதற்காக அங்கு சென்றுள்ள மன்மோகன் சிங் சர்தாரியை சந்தித்துப் பேசினார். இரு தலைவர்களும் தனியாக சந்தித்து சுமார் அரை மணி நேரம் உரையாடினர்.

இந்த சந்திப்புக் குறித்து இந்திய மத்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் ரஞ்சன் மத்தாய் கூறுகையில், தீவிரவாதம் தொடர்பான பிரச்சினைகளில் இந்தியாவின் கவலையை பிரதமர் வலியுறுத்திக் கூறினார். மும்பை தீவிரவாத தாக்குதல் விசாரணையை விரைவுபடுத்துமாறும் அவர் பாகிஸ்தான் ஜனாதிபதியைக் கேட்டுக் கொண்டார் என்றார்.

சிங்குடன், மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா மற்றும் உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர். சர்தாரியுடன் அவரது மகன் பிலாவல் பூட்டோ, வெளியுறவு அமைச்சர் ஹீனா ரப்பானி கர், உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இந்த சந்திப்பின்போது பாகிஸ்தானுக்கு வருமாறு ஏற்கனவே தான் விடுத்திருந்த அழைப்பை சர்தாரி, பிரதமருக்கு நினைவூட்டி மறுபடியும் அழைப்பு விடுத்தார். அதற்கு பிரதமர் நன்றி கூறினார்.
மும்பை தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில் உயிருடன் சிக்கிய பாகிஸ்தான் தீவிரவாதி கசாப்புக்கு மரண தண்டனையை உச்சநீதி்மன்றம் உறுதிப்படுத்திய நிலையில் இந்திய, பாகிஸ்தான் தலைவர்களின் சந்திப்பு முதல் முறையாக நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி   
'இஸ்லாம்: சொல்லப்படாத கதை' செனல்4 இன் புதிய நிகழ்ச்சியால் சர்ச்சை
By Kavinthan Shanmugarajah
2012-09-03


இஸ்லாமின் வரலாறு தொடர்பில் பிரித்தானியாவின் செனல் 4 இல் ஒளிபரப்பாகிய நிகழ்ச்சியொன்று பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இஸ்லாம்: சொல்லப்படாத கதை (‘Islam: The Untold Story’) என்பதே அந்நிகழ்ச்சியின் பெயராகும்.
சர்ச்சைக்குரிய இந்நிகழ்ச்சிக்கு எதிராக சுமார் 550 புகார்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
sf4yjk
இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் டொம் ஹொலண்ட் மீதும் பலர் தங்கள் ஆதங்கத்தை வெளியிட்டுள்ளனர்.
புனித நகரான மக்கா தொடர்பில் குர் ஆனில்  எதுவும் குறிப்பிடப்படவில்லை என டொம் ஹொலண்ட் இந்நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து இஸ்லாம் தொடர்பில் சோடிக்கப்பட்ட கருத்துகள் வெளியிடப்படுவதுடன், வரலாறு திரிபுபடுத்தப்பட்டுள்ளதாகவும் இந்நிகழ்ச்சி தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
டுவிட்டரிலும் இந்நிகழ்ச்சி தொடர்பில் சூடான விவாதங்கள் இடம்பெற்று வருகின்றன.
 இஸ்லாமிய அமைப்புகள் பல இந்நிகழ்ச்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. எனினும் டொம் ஹொலண்டுக்கு ஆதரவாகவும் பலர் பேசி வருகின்றனர்.
இதேவேளை  பி.பி.சி. அலைவரிசையில் ஒளிபரப்பாகிய முஸ்லிம் சமூகத்தலைவரொருவரின் வாழ்க்கைபற்றிய நகைச்சுவை நாடகத்தொடரொன்றும் அண்மையில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருந்தது.
அந்நிகழ்ச்சி தொடர்பில் எழுந்த சர்ச்சை ஓய்வதற்குள் இந்நிகழ்ச்சியும் பிரச்சினையைக் கிளப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி   
  சாய்பாபாவின் ரூ. 40,000 கோடி சொத்துக்கள்: யாருக்கு சொந்தம்?
By General
2012-09-05
மறைந்த சத்ய சாய்பாபாவின் உயில் இப்போது வெளியாகியுள்ளது.

ரூ. 40,000 கோடி சொத்துக்கள் கொண்டது சத்ய சாய்பாபாவின் அறக்கட்டளை. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அவர் மறைந்ததையடுத்து அவரது சொத்துக்களை யார் பராமரிப்பது என்பது குறித்த பிரச்சினைகள் எழுந்தன.

இந் நிலையில் 1967ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23ஆம் திகதி சாய்பாபா எழுதி வைத்த உயில் இப்போது வெளியிடப்பட்டுள்ளது. சாய் பாபாவின் உதவியாளரான சத்யஜித் சாலியன் அதை நேற்று ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக்கட்டளையின் இயக்குனர் குழுவிடம் சமர்ப்பித்தார்.


எனது பக்தர்களால் தரப்பட்ட எல்லா நன்கொடைகளும் மக்கள் நலப் பணிகளுக்கே செலவிடப்பட வேண்டும். சொத்துக்களில் எந்தப் பகுதியும் வேறு எந்த தனிப்பட்ட நபருக்கும் இல்லை. எனக்கு என்று எந்த தனிப்பட்ட சொத்தும் இல்லை.

எனது குடும்பத்தினரின் சொத்துக்களிலும் கூட எனக்கு பங்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டேன் என்று கூறப்பட்டுள்ளது.

தனது அறக்கட்டளையின் உறுப்பினர் இந்துலால் ஷா, மும்பை உயர் நீதிமன்ற சொலிசிட்டராக இருந்த டிஐ சுக்லா ஆகியோரை சாட்சிகளாக வைத்துக் கொண்டு இந்த உயிலை எழுதியுள்ளார் பாபா. இதில் இந்துலால் மட்டுமே இப்போது உயிரோடு உள்ளார்.

இந்த உயில் வெளியானதன் மூலம் பாபாவின் அறக்கட்டளையின் சொத்துக்களில் அவரது குடும்பத்தினருக்கு எந்த பங்கும் இல்லை என்பது தெளிவாகிவிட்டது.

சாய்பாபாவின் அறக்கட்டளை புட்டபர்த்தியில் பல்கலைக்கழகம், மருத்துவமனை, அருங்காட்சிசாலை, கோளரங்கம், இரயில் நிலையம், விமான நிலையம், விளையாட்டு அரங்கம், பெங்களூரில் மருத்துவமனை, ஆசிரமம், தமிழகம் மற்றும் ஆந்திராவில் பல குடிநீர்த் திட்டங்கள், நாடு முழுவதும் பல கல்வி நிலையங்கள், சுகாதார மையங்களை நடத்தி வருகின்றது.

மேலும் 165 நாடுகளில் இந்த அறக்கட்டளைக்கு ஆசிரமங்கள் உள்ளன. இன்னும் அதற்கு உலகம் முழுவதும் இருந்தும் நன்கொடைகள் வங்கிகள் மூலமாக வந்து கொண்டு தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 நன்றி வீரகேசரி   


  ஈரான் தாக்கப்பட்டால் அமெரிக்க படைகளும் பேரழிவை சந்திக்கும்!
By General
2012-09-04
ஈரானின் அணு ஆராய்ச்சி மையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் இஸ்ரேலை மட்டுமல்ல மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க படைகள் மீதும் அந்நாடு தாக்குதல் நடத்த முடிவு செய்துள்ளதாக லெபனானில் இருந்து செயல்படும் ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் ஷேக் ஹசன் நஸ்ரல்லா தெரிவித்துள்ளார்.

லெபனான் நாட்டு தொலைக்காட்சியான அல்- மைதீனுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டியில் கூறியுள்ளதாவது:

ஈரானின் அணு ஆராய்ச்சி மையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் நிச்சயமாக அமெரிக்க இராணுவ தளங்கள் மீது அந்நாடு தாக்குதல் மேற்கொள்ளும் என்று எங்களுக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. இஸ்ரேல் நடத்தும் தாக்குதலில் அமெரிக்காவுக்கு தொடர்பே இல்லாமல் இருந்தாலும் கூட அமெரிக்கா இராணுவ தளங்களைத் தாக்கும்.
fhnj
குறிப்பாக இஸ்ரேலில் இருக்கும் அமெரிக்க இராணுவ தளங்களை மட்டுமல்ல மத்திய கிழக்கில் இருக்கும் அனைத்து அமெரிக்க இராணுவ தளங்களையுமே ஈரான் தாக்கும். ஏனெனில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதலுக்கு அமெரிக்காதான் பொறுப்பேற்க வேண்டும்.

ஈரான் மீது இஸ்ரேல் போர் தொடுத்தால் அது மிகப் பெரும் பாதிப்பை இஸ்ரேலுக்கு ஏற்படுத்தும். தங்களது அணு ஆராய்ச்சி மையங்கள் மீதான தாக்குதலை ஈரான் மன்னித்துவிடாது.

இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையே மோதல் ஏற்படுமேயானால் இஸ்ரேல் முழுவதையுமே தாக்கி அழிக்கக் கூடிய ஏவுகணைகளை எமது இயக்கம் பயன்படுத்தும். இதற்காக இரசாயான ஆயுதங்களோ அணு ஆயுதங்களோ எங்களுக்குத் தேவையில்லை. எங்களிடம் அணு ஆயுதங்களும் இல்லை. எங்களிடம் இருக்கின்ற ஏவுகணைகளே போதும் என்றார் அவர்.
 நன்றி வீரகேசரி   "போர்டோ' அணு சக்தி நிலையத்தின் உற்பத்தி ஆற்றலை ஈரான் இரு மடங்காக்கியுள்ளது
By General
2012-09-01 12:01:26

ஈரானானது தனது போர்டோ அணுசக்தி தளத்திலான உற்பத்தி ஆற்றலை இருமடங்காக்கியுள்ளதாக ஐக்கிய நாடுகள் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான சர்வதேச அணுசக்தி முகவர் நிலையம் தெரிவித்துள்ளது.

சர்வதேச அணு சக்தி முகவர் நிலையத்தின் பிந்திய காலாண்டு அறிக்கையிலேயே மேற்படி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஈரானின் பார்சின் இராணுவத்தளத்தை தனது முகவர் நிலையம் பரிசோதிப்பதற்கு அந்நாடு குறிப்பிடத்தக்க அளவில் தடையை ஏற்படுத்தியிருந்ததாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈரான் 2010ஆம் ஆண்டிலிருந்து 189 கிலோ கிராம் நிறையுடைய உயர் மட்ட செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை உற்பத்தி செய்துள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

தனது அணு சக்தி நிகழ்ச்சித் திட்டம் இராணுவ நோக்கம் எதனையும் கொண்டிருக்கவில்லை என ஈரான் வலியுறுத்தி வருகிறது.

புனித நகரான குவோமுக்கு அருகிலுள்ள மனையின் ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ள பொர்டோ அணுசக்தி நிலையத்திலுள்ள யுரேனிய செறிவூட்டல் உபகரணங்களின் தொகையானது கடந்த மே மாதத்திலான 1064இலிருந்து 2140ஆக இரு மடங்கு தொகைக்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச அணுசக்தி முகவர் நிலையம் தெரிவித்தது.

மேற்படி அணுசக்தி தளத்தில் யுரேனியம் 27 சதவீதத்திற்கு செறிவூட்டப்படுவதாக ஐக்கிய நாடுகள் அணுசக்தி முகவர் நிலையம் கடந்த மே மாதம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அந்த அணு சக்தி தளத்திலுள்ள புதிய யுரேனிய செறிவூட்டல் உபகரணங்கள் இதுவரை செயற்படுத்தப்படாத போதும் கவலைக்குரியவையாக உள்ளதாக கூறப்படுகிறது.    நன்றி வீரகேசரி  

No comments: