யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர்கள் நியூ சவுத் வேல்ஸ் சங்கத்தினரின் கீதவாணி விருதுகள் 2012.



யாழ்ப்பாணம் இந்தென்னும் தேன் பொந்தின் தேனீக்களால் (மைந்தர்களால்) 2012ம் ஆண்டுக்கான ஏழாவது கீதவாணி விருதுகள் வெகு கோலாகலமாக 01-09-2012ம் திகதி பரமற்றா ஆற்றடி மண்டபத்தில் மாலை 6.20 தொடக்கம் இரவு  10.40 மணி வரை விறுவிறுப்பாக, சபையோருக்கும் பெருவிருந்தாக நடைபெற்றது.
மாலை 6.20 மணிக்கு தமிழின விடுதலைப் போராட்டத்தில் வீரகாவியமான மாவீரர்களுக்கும், மக்களுக்கும் அகவணக்கம் செலுத்தி, தமிழ் வாழ்த்துடனும், கல்லூரி கீதத்துடனும் ஆரம்பமாகியது. யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழைய மாணவர்கள் நியூ சவுத் வேல்ஸ் சங்கத்தின் தலைவரான திரு வீரசிங்கம் குணரஞ்சிதன், சங்கத்தின் புரவலர்களான திரு பொன்னம்பலம், திரு அருளானந்தம் மற்றும் அவர்களின் பாரியார்களும் மங்கள விளக்கேற்றி, தலைவரின் வரவேற்புரையுடன் கீதவாணி 2012 தொடங்கியது.




புதுமையும் பல பொழுதுபோக்கு அம்சங்களுடனும், செவிக்கு மதுரமாகவும், கண்ணுக்கு இதமாகவும் பாடல்களும், ஆடல்களும்,   பெரு விருந்து படைத்தன. இவ்வாண்டுக்கான போட்டிகள், நான்கு பிரிவுகளாக நான்கு கருப்பொருட்களில் நடைபெற்றதும், உறவும் உணர்வும் என்ற கருப்பொருளில் முதலாவது பிரிவும், துள்ளுவதே இளமை என இரண்டாவது பிரிவும், மெல்லிசை கானங்கள் பாடி மூன்றாம் பிரிவும், நீயா நானா என போட்டிக்கள் போட்டி போட்டு ஏட்டிக்கும் போட்டியாக இணைந்த பாடல்கள் போட்டி அரங்கேறி அவையினரை அகமகிழ வைத்தது. இம்முறை போட்டியாளர்கள் சினிமாத்திரையில் வந்த மாதிரியே ஆடைகள் அணிந்து ஆடிப்பாடிப் பெருவிருந்து படைத்தனர்.


கீதவாணியின் பெருமை வருடந்தோறும் மெருகூட்டப்       படுகின்றது. வைரத்தைப் பட்டறையில் தீட்டுவது போல உள்ளுர் பாடகர்களை மெருகேற்றி பெருவிருந்து படைக்க யாழ்ப்பாணம் இந்துவின் மைந்தர்களால் மட்டும்தான் முடியுமென்றால் அது மிகையாகாது. இவ்வருடம் இந்தியாவிலிருந்து பிரபல இசையமைப்பாளரான திரு சதீஸ் வர்சன் வருகை தந்து உள்ளுர் இசைக்கலைஞர் குழுவான   Eastern Emphire இணைந்து இசை விருந்து படைத்தன. யாழ்ப்பாணம் இந்துவின் மைந்தர்கள் உள்ளுர் இளம் சந்ததியினரைத் தமிழ் சினிமா பாட்டு பாட வைத்தது மட்டுமல்லாமல் இசைவடிக்க வைத்து பாடகர்களுக்கும் இசைக்கலைஞர்களுக்கும் தென்னிந்திய திரைப்பட உலகில் அடியெடுத்து வைக்க வழியமைத்துக் கொடுத்தனர். கீதவாணி விருதுகளால் உவகை கொண்ட உள்ளுர்த்திறமைசாலிகளுக்கு உலகை வலம் வரும் திரையிசை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் அசாத்திய திறமை யாழ்ப்பாணம் இந்துவின் மைந்தர்களுக்குதான் முடியும்.



உறவும் உணர்வும் பிரிவில் அபிசாயினி பத்மசிறியும், துள்ளுதே இளமைப் பிரிவில், நீத்து சுரேஸ்பாபுவும், மெல்லிசை காணங்களில், பிரியா ஞானகுமரனும், நீயா நானா போட்டியில், சேதுமாதவன் பத்தியிலும் ரேசா ஐயரும் பெருவாரியான அவையினரின் விருப்பு வாக்குகள் பெற்று வெற்றியாளார்களாகத் தெரிவு செய்யப்பட்டனர்.


போட்டியின் வெற்றியாளர்களுக்கான விருதுகளை Sri Accounting, TSS World Wide Money Transfer, Vein Tech & BJ Accounting   நிறுவனத்தினர் வழங்கி போட்டியாளர்களை சாதனையாளர்களாக்கின.
திரு கணேசன் மேகநாதன் விழாவின் ஒலிபரப்பாளாராகக் கடைமையாற்றி போட்டிக்கு மெருகூட்டினார். தென்னிந்திய பிரபல இசையமைப்பாளர் திரு சதீஸ் வர்சன் அவையடக்கம் அவையினரைப் பெரிதும் கவர்ந்தது மட்டுமல்லாமல் எமது இளம் சந்ததியினரின் அசாத்திய திறமைகளை அதிரவைத்தது.


எத்தனை நிகழ்வுகள் நடந்தாலும், கீதவாணி விருதுக்கு இணையேது? தமிழரின் பெருமை சேர்க்கும் விழாவில் முதன்மை பெற்று பெருமை சேர்பது யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி நியூ சவத் வேல்ஸ் பழைய மாணவர்களின் கீதவாணி விருதுதான் என்றால் அது வாய்ப்பேச்சல்ல! உண்மை! சரஸ்வதியின் வீணைபோல் கீதம் ஒலித்துக்கொண்டே இருக்கட்டும்
வாழிய யாழ்நகர் இந்துக்கல்லூரி வையகம் புகழ்ந்திட
என்றும் …………………..




















No comments: