சச்சின் இன்று (4/6/2012) எம்.பியாக பதவியேற்பு

.
இந்திய கிரிகெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் இன்று மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்றார்.

39 வயதான சச்சின் டெண்டுல்கர் மேல்சபை உறுப்பினராக கடந்த ஏப்ரல் மாதம் நியமிக்கப்பட்டார். சச்சின் டெண்டுல்கருடன் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்ட நடிகை ரேகா மற்றும் தொழிலதிபர் அணு அகா ஆகியோர் ஏற்கனவே பதவி ஏற்று கொண்டனர்.

ஐ.பி.எல்.போட்டி தொடரில் சச்சின் கலந்து கொண்டதால் பதவி ஏற்காமல் இருந்தார். இப்போட்டி முடிவடைந்ததையடுத்து இன்று அவர் பதவி ஏற்றார்.


முன்னதாக, சச்சின் டெண்டுல்கர் மாநிலங்களவை எம்.பி. ஆவதற்கு பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவரும் கிரிக்கெட்டிற்குத்தான் முன்னுரிமை என்று கூறினார். ஆனால் இதுவும் தனக்கு ஒரு மகுடம் என்ற ரீதியிலும் அவர் பேசியிருந்தார்.

சச்சின் எம்.பி ஆவதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு தோல்வி அடைந்தது. சச்சின் பதவியேற்கத் தடையில்லை என்று தீர்ப்பளித்தது நீதிமன்றம். இந்நிலையில், இன்று சச்சின் ராஜ்ய சபா எம்.பி.ஆக பதவி ஏற்றார். அவருக்கு இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் டோனி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நன்றி வீரகேசரி


No comments: