வானொலி மாமா நா.மகேசனின்குறளில் குறும்பு 37 - அறுதொழிலோர்அப்பா:    சுந்தரி, இவள் எங்கடை மகள் ஞானா, அண்டைக்கு தேடி எடுத்துக் கொண்டு வந்துதான் அந்தக் குறளைக் கேட்டிருக்கிறாள்.

சுந்தரி:     ஒம் அப்பா அவள் எப்போதும் ஏதாவது புரட்சியாய்த்தான் கேள்வி பேட்பாள்.
    எந்தக் குறளை அப்பா கேட்டவள். நான் மறந்துபோனன்.

அப்பா:    கொடுங்கோன்ம எண்ட அதிகாரத்திலை 560 வது குறள் சுந்தரி,

        “ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நு}ல்மறப்பர்
        காவலன் காவா னெனின்.”

சுந்தரி:     ஓம் அப்பா இப்ப ஞாபகம் வருகுது. போன முறை ஆபயனைப் பற்றிப் பேசின
    னாங்கள்.ஞானா:    சரியாய்ச் சொன்னியள் அம்மா. இண்டைக்கு அப்பா அறுதொழிலோர் நு}ல்மறப்பர்
    எண்டதுக்கு விளக்கம் சொல்ல வேணும்.

அப்பா:    ஞானா, இதுகும் ஒரு சிக்கலான வேலைதான். இப்ப பாருங்கோ, திருவள்ளுவருடைய
    காலத்திலை இருந்த தொழில்களுக்கும் இந்தக் காலத்திலை உள்ள தொழில் களுக்கும் எவ்வளவோ வித்தியாசம் இருக்கு. அப்பிடி இருக்க இந்த அறுதொழிலோ
    ருக்கும், அந்தணருக்கும் எப்பிடி விளக்கம் சொல்லிறது?

ஞானா:    அப்பா உந்தக் குறளிலை அந்தணர் எண்ட சொல்லே  இல்லையே. பிறகேன்
    நீங்கள் அந்தச் சொல்லை வலிந்து இழுக்கிறியள்?

அப்பா:    இஞ்சைபார் ஞானா, இதிலை வாற அறுதொளிலோர், அந்தணர் எண்டு பரிமேல்
    அழகர் உரை எழுதியிருக்கிறார் அதுதான் சொன்னனானான்.

சுந்தரி:    ஏன் அப்பா? திருவள்ளப் பெருந்தொகை என்னத்தைக் கருதிச் சொல்லியிருப்பார்
    எண்டதைச் சொல்லுங்கோவன். பிறகு இவள் பிள்ளையும்;, நானும் விளங்காததைக்
    கேக்கிறம்.

அப்பா:    திருவள்ளுவர் இன்னொரு இடத்திலை அந்தணர் எண்டால் ஆர் எண்டு குறளிலை
    சொல்லியிருக்கிறார்.

        “அந்தணர் என்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும்
        செந்தண்மை பூண்டொழுக லான்”
   
எண்டு, அதாவது,
    மற்ற எல்லா உயிர்களுக்கும் சீவகாருண்ணியத்தோடை நடக்கிற, அறங்கள் எல்லா
    வற்றிற்கும் இருப்பிடமாக வாழ்கிறவர்கள்தான் அந்தணர் எண்டு இந்தக் குறளிலை சொல்லியிருக்கு.

ஞான:    அப்பா! உதிலை ஒரு சிக்கல் இருக்கு. அதாவது எங்கடை ஆக்கள் பிராமணர்
    எல்லாரையுமெல்லே அந்தணர் எண்டு சொல்லுகினம். அம்மா நீங்கள் என்ன நினைக்
    கிறியள்.

சுந்தரி:    அப்பிடிச் சொல்ல முடியாது எண்டுதான் நான் நினைக்கிறன் ஞானா. நீ கேள்விப்
    படயில்லையே, இந்தியாவிலை, வடநாட்டிலை உள்ள பிராமண ஆக்களிலை சில
    பேர் மச்சம், மாமிசம் சாப்பிடுவினம் எண்டு.? அப்ப அவையள் எல்லாரையும் அந்தணர் எண்டு சொல்லலாமே?

அப்பா:    சுந்தரி, அந்தணர் எண்ட சொல்லு, பிறப்பிலையோ அல்லது உணவுப் பழக்கத்திலையோ தங்கியில்லை.

ஞானா:    அதெப்பிடி அப்பா, நீங்கள் அப்பிடிச் சொல்லுவியள்? மற்றெவ்வுயிர்கும் செந்தண்மை
    பூண்டு ஒழுகினால் உயிர்களைக் கொல்லமுடியாது. உயிர்களைக் கொல்லாமல்
    மச்சம் மாமிசம் கிடைக்குமோ?

அப்பா:    பிள்ளை ஞானா, ஒருவர் அறவாழ்கை வாழ்ந்தால், கொல்லாமை, புலால் உண்ணாமை, களவு செய்யாமை, பொய் சொல்லாமை எண்ட எல்லா நற்குணங்
    ளும் அவருக்கு இருக்கும். அப்பிடிப்பட்ட மனிதர்களைத்தான் திருவள்ளுவர்
-2-


அந்தணர் எண்டு கருதியிருக்கிறார்.

ஞானா:    சரி அப்பா, நீங்கள் செல்லிறது சரி எனண்டு ஏற்றுக் கொள்ளுவம். இந்த அந்தணருடைய அறுதொழில் என்ன?

அப்பா:    அதுவந்து ஞானா திருவள்ளுவர் காலத்திலை இருந்தபடி, பழைய தமிழ் இலக்கியங்களிலை இருக்கிறபடி சொன்னால்:

    ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் எண்ட ஆறு தொழில்களும்
    அந்தணருக்கு உரியவை எண்டு சொல்லப்பட்டிருக்கு.

ஞானா:    அப்பிடி எண்டால் அப்பா இந்த ஆறு தொழில்களையும் பிராமணர்தான் செய்யவேணும் எண்டு சொல்லப்படயில்லை. அப்பிடித்தானே?

அப்பா:    ஐயோ பிள்ளை ஞானா, பிறப்பால் உயர்ந்தோம் எண்டு சொல்லுகிறவர்களுக்கும், இந்த அந்நணர்களுக்கும் எதுவித தொடர்பும் இல்லை. அவர்களை இழுத்துப் போட்டு இதிலை குழப்ப வேண்டியதில்லை.

சுந்தரி:    என்னப்பா நீங்கள் சொல்லிற கதை? வேதம் ஓதிறது, வேள்வி செய்யிறது, தீவளக்கிறது இதெல்லாம் ஆர் செய்யினம் எண்டு கேக்கிறன்?

அப்பா:    நீர் சொல்லிறது பழையகால வழக்கம், இப்ப உதையெல்லாம், எல்லாரும் செய்யினம். நீர் கேக்கேல்லையே? அல்லாடடில் பாக்கேல்லையே?

ஞானா:    அப்பா அதை விடுங்கோ. இப்ப, இந்தக் காலத்திலை இந்த ஆறுதொழில்களும்
    எப்பிடி நடைபெறுகிது எண்டு சொல்லுங்கோ.

அப்பா:    முதலாவது வந்து ஞானா, ஓதல், அதாவது கல்லி கற்றல் எல்லாரும் கல்வி கற்கிறர்கள்தானே?
   
இரண்டாவது, ஓதுவித்தல், பிறருக்குக் கல்வி கற்பித்தல் எல்லாரும் கல்வி கற்பிக்கலாந் தானே?

மூன்றாவது, வேட்டல் அதாவது பொது நலனுக்காக பெரு முயற்சிகள் எடுத்தல்,

நாலாவது, வேட்பித்தல் அதாவது அந்தப் பொது நலன்களுக்கான உதவிகளைச் செய்தல்.

ஐந்தாவது ஈதல், அதாவது அந்தப் பொது நலன்களுக்காக நன்கொடை கொடுத்தல்.

ஆறாவது: ஏற்றல், அதாவது அந்த பொது நலன்களுக்காக நன்கொடை சேர்த்தல்.

எண்டு கொள்ளவேணும் எண்டு நாமக்கல் கவிஞர் சொல்லியிருக்கிறார்.

சுந்தரி:        அப்ப இந்த ஆறு தொழிலையும் செய்யிறவர்கள் நு}ல் மறப்பர் எண்டதுக்கு என்ன
        கருத்தப்பா?

அப்பா:        சுந்தரி, அதைவந்து நாளைக்குச் சொல்லிறன். இப்ப நான் ஒரு அவசர வேலையாய்
        போகவேணும். போட்டு வாறன்.

(இசை)
   

No comments: