சைவமன்றமும் உலக சைவப்பேரவை அவுஸ்த்திரேலியாக் கிளையும் இணைந்து நடாத்திய சேக்கிழார் விழா 2012 - க சபாநாதன்


கடந்த ஞாயிற்றுக்கிழமை 17-06-2012 அன்று சிட்னி முருகன் கோயில் கல்வி கலாசார மண்டபத்தில் சைவமன்றமும் உலக சைவப்பேரவை அவுஸ்திரேலியாக் கிளையும் இணைந்து சேக்கிழார் விழாவைச் சிறப்பாகச் செய்திருந்தார்கள். இவ்விழா தொடர்ந்து ஐந்தாவது வருடமாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இவ்விழாவிற்காக அறுபத்திமூன்று நாயன்மார்களின் உருவப்படங்களும், நான்கு சந்தானகுரவர்களுடன் மாணிக்கவாசக சுவாமிகளின் உருவப்படமும் சேக்கிழார் பெருமானது உருவப்படமும் ஆலயத்து வசந்தமண்டபத்தில் அலங்கரிக்கப்பட்டு வைத்து மாலை 5.00 மணிப்பூசையுடன் விஷேட பூசை நடைபெற்றது. இப்பூசையைத் தொடர்ந்து இளஞ்சிறுவர்களுடன் இளைஞர்களும் சேர்ந்து பல்லக்கில் சேக்கிழார் பெருமானையும்; ஏனைய திருத்தொண்டர்களின் திருவுருவப்படங்களையும் கும்பம், விளக்கு, குடை, நந்திக்கொடி, ஆலவட்டம் ஆகியவற்றுடன் மணியோசை முழங்க பெரியோர்கள் ஓம் நமசிவாய எனும் தமிழ்மந்திரம் ஓத ஆலய வீதி வலம் வந்தார்கள்.










கலாசார மண்டப வாசலில் சிவாசாரியார்கள் கும்பம் வைத்து தீபம் காட்டி வரவேற்று திருத்தொண்டர்களின் திருவுருவப்படங்கள் கலாசார மண்டப மேடையில் அலங்காரமாக வைத்து சிறுவர்களின் ப10சையுடன் விழா ஆரம்பமானது.
பூசையைத் தொடர்ந்து சைவ மன்ற உபதலைவரும் பாரியாரும் “இல்லக விளக்கது இருள் கெடுப்பது” எனும் தேவாரத்துடன் மங்களவிளக்கேற்றிய பின்னர் ஹோம்புஷ் சைவப்பாடசாலை மாணவர்கள் தேவார புராணம் பாடினார்கள். தொடர்ந்து சைவமன்ற உபதலைவரின் வரவேற்புரையும், ஹோம்புஷ் சைவப்பாடசாலை பாலர் வகுப்பு மாணவர்களது பண்ணிசையும்  மழலைத் தமிழில் இசைக்கப்பட்டது. ஹெலன்ஸ்பேர்க் சிவன் ஆலய சிவாசாரியார் சிவஸ்ரீ சிவசண்முகம் சிவாசாரியார் அவர்கள் “எப்போது வருவாரோ” எனும் தலைப்பில் உரையாற்றினார். தொடர்ந்து சிட்னி முருகன் ஆலய சைவப்பாடசாலை மாணவர்களது பண்ணிசை சிறப்பாக வழமைபோல் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

ஆலய மாலைப்ப10சையைத் தொடர்ந்து சரியாக 7.30 மணிக்கு திருமதி மாலதி சிவசீலனின் மாணவர்கள் திருமுறைகளை பண்ணோடு இசைத்து பாராட்டைப் பெற்றார்கள். தஞ்சாவ10ர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் கலைத்துறைப் பேராசிரியர் திருமதி ஞானா குலேந்திரன் அவர்கள் “கானத்தின் எழுபிறப்பு” எனும் தலைப்பில் இசையோடு சொற்பொழிவாற்றி திருமுறைகளைப் பண்ணோடு பாடுதலின் தேவையை வலியுறுத்தனார். தொடர்ந்து ஹோம்புஷ் சைவப்பாடசாலை மேல்வகுப்பு மாணவர்களது பண்ணிசையும், நாயன்மார்கள் காட்டிய தொண்டு எனும் தலைப்பில் கருத்தரங்கும் நடைபெற்றது. இக்கருத்தரங்கிற்கு திரு திருநந்தகுமார் அவர்கள் தலைமைதாங்க மாணவர்கள் தமக்குத் தெரிந்த நாயன்மார்களது திருத்தொண்டுகளை மிகவும் சுருக்கமாகவும் தங்களது வசனஅமைப்பிலும் எடுத்துரைத்தார்கள்.
இறுதி நிகழ்வாக சிட்னி முருகன் ஆலய மேல்வகுப்பு மாணவர்களது “பெரிய புராண பாத்திரங்கள் பேசுகின்றன” எனும் ஓரங்க நாடகம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மூன்று மாணவர்கள் கதைசொல்பவர்களாகவும் மூன்று மாணவர்கள் கதாபாத்திரங்களாகவும் தோன்றி அழகிய ஒப்பனைகளுடன் சிறப்பாகச் செய்திருந்தார்கள். உலக சைவப் பேரவை செயலாளரின் நன்றியுரையைத் தொடர்ந்து சிட்னி முருகன் கோயில் மாணவர்களது தேவார புராணத்துடன் விழா இனிதே நிறைவேறியது.


2 comments:

kirrukan said...

எல்லாம் நல்லாய்தான் இருந்தது ....என்னதான் இருந்தாலும் ஏற்பாட்டாளர்கள் நேரத்தையும் கவனத்தில் எடுக்க வேண்டும் ...

5.30 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சி 10மணிக்குத்தான் முடிவடைந்தது.5 மணித்தியாலம் சிறுவர்களோ,பெரியோர்களோ பொறுமையாக இருப்பது என்பது மிகவும் கடினமான விடயம் ஆகும்..

குத்து விளக்கு ஏற்றியவர்களோ,குத்து விளக்கு,மற்றும் நாயன்மாரின் படங்களை தூக்கிச் சென்றவர்களோ இறுதிவரை இருந்து நிகழ்ச்சியை பார்வைஇடவில்லை. இதற்கு முக்கிய காரணம் என்ன என்பதை இனி வரும் காலங்களில் நிர்வாகத்தினர் கவன‌த்தில் எடுக்க வேண்டும்.

siva said...

SIVAAYANAMA

Vanakkam,
This is Sivarajkumar from kurinjipadi,near Chidambaram in india. But now i in Puducherry.

i saw the photos and informations of our function in net in the site of tamil murasu.

very superb and very nice and all the kutamuzhaku funtions are very good.

SIVA'S SAINTS 63 NAAYANMAARKAL AND 9 THOGAIYADIYARGAL AND 4 SATHANA GURUMAARKAL. ARE VERY superb and one small request we need

all photos please mail me
yours faithfully
sivarajkumar-----91-9790635334
please reply