அணைக்கட்டு உயர்ந்து கொண்டு போகின்றது.- செ.பாஸ்கரன்


நியூ சவுத்வேல்ஸ் மானிலம் வெள்ளப்பெருக்கால் திணறிக்கொண்டிருக்கிறது. மழையோ தொடர்ந்து கொட் டிக்கொண்டு இருக்கிறது. warragamba அணைக்கட்டு 30 வருடங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்து கொண்டு போகின்றது. சனிக்கிழமை இரவு தமிழ்முழக்கம் வானொலியில் நான் இதுபற்றி இவற்றோடு பணிபுரியும் தமிழ்ப் பொறியியலாளர் திரு. மகேஸ்வரன் அவர்களோடு கலந்துரையாடினேன் அவர் பல வகையில் இந்த வெள்ளப்பெருக்கால் ஏற்பட்டிருக்கும் விழைவுகள் பற்றி பேசியதோடு குடிதண்ணீரில் எந்தப் பிரச்சினையும் இல்லை தொடர்ந்து பருகக்கூடிய வகையில் பராமரிக்கப்படுவதாக குறிப்பிட்டிருந்ததை பல நேயர்கள் கேட்டிருப்பீர்கள்.

warragambaஅணையின் நீர்மட்டம் உயர்துள்ளதால் தானியங்கி கதவு திறந்து நீர்மட்டத்தை குறைக்கும் செயற்பாடு நடைபெறுவதாகவும் மேலதிக நீர் ஆற்றில் விடப்படுகின்றது என்றும் அறிந்து ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு சென்று அதை பார்வையிட்டார்கள். நாங்களும் அதை பார்த்து விடுவோம் என அங்கு சென்று அதைப்பார்த்தோம். இங்குள்ளவர்களுக்கு 30 வருடங்களுக்கு பின்பு நடந்த இந்த நிகழ்வு மிகப்பெரிய விடயமாக இருந்திருக்கலாம் ஆனால் கிளிநொச்சியில் இரணைமடு வான் பாய்ந்த காட்சியை பார்த்த என்னை இந்த அணைக்கட்டால் பாய்ந்த தண்ணீர் பெரிதாக கவர்ந்திருக்கவில்லை என்பதே உண்மையாகும்.ஆனால் இதைப்பார்வையிட்ட மக்கள் மகிழ்ச்சியாக இருந்ததை பார்க்க முடிந்தது. நாம் சென்றிருந்தபோது channel 7 இன் செய்திப்பிரிவு helicopter தாளப்பறந்து அந்த இடங்களை படம்பிடித்துக்கொண்டிருந்தது . ஆயிரக்கணக்கான மக்களை மிக அழகாக கட்டுப்படுத்தி பஸ்வண்டிகள் மூலம் கொண்டுசென்று காண்பித்து விட்டு மீண்டும் கார் தரிப்பு இடத்திற்கு கொண்டுவந்து விட்ட செயற்பாடு உண்மையிலேயே பாராட்டப் படவேண்டிய ஒன்றாகும்.1 comment:

kirrukan said...

[quote]கிளிநொச்சியில் இரணைமடு வான் பாய்ந்த காட்சியை பார்த்த என்னை இந்த அணைக்கட்டால் பாய்ந்த தண்ணீர் பெரிதாக கவர்ந்திருக்கவில்லை என்பதே உண்மையாகும்.[quote]


தகவலுக்கு நன்றிகள் ..நாங்கள் எதிலும் "ஒசத்தி" தானே