சட்டவிரோத குடியேற்ற வாசிகளை தடுத்து வைப்பதற்கு அவுஸ்திரேலியாவில் புதிய முகாம்

Thursday, 01 March 2012

சட்டவிரோதமாக குடியேறும் இலங்கை உட்பட ஏனைய நாடுகளின் அகதிகளை தடுத்துவைப்பதற்கு அவுஸ்திரேலியா தடுப்பு நிலையமொன்றை அமைத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் கிழக்கு பேர்த்தில் நோர்த்தாம் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் இந்த தடுப்பு நிலையம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.

எனினும் கட்டுமானப் பணிகள் இழுபறிக்குள்ளாகியுள்ளதால் மார்ச் மாதமே பணிகள் முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எதிர்வரும் ஏப்ரல் மாதத்தின் கடைசிப் பகுதியிலேயே இத்தடுப்பு முகாம் செயற்படத் தொடங்குமென தெரிவிக்கப்படுகிறது.

இந்த தடுப்பு நிலையத்தில் இலங்கை, ஈராக், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 600 அகதிகள் தடுத்து வைக்கப்படவுள்ளனர்.

நன்றி தினக்குரல்

No comments: