வெளிநாட்டு செய்திகள்

புனித நூல்கள் எரிக்கப்பட்டமைக்கு பழிதீர்க்கும் முகமாக ஆப்கானில் தாக்குதல்


புட்டினை கொல்வதற்கான சதித்திட்டம் முறியடிப்பு

சிரியாவில் இடம்பெற்று வரும் வன்முறைகளில் 7500 பொது மக்கள் இது வரை உயிரிழப்பு


நிரந்தர வதிவிட உரிமை பெற்றவர்களுக்கு பிரிட்டனில் பயோமெட்ரிக் உரிமம்


அமெரிக்காவில் பாரிய சூறாவளி 12 பேர் பலி ; பலரைக் காணவில்லை



ஆயுததாரிகளின் துப்பாக்கிச் சூட்டில் பாகிஸ்தானில் 18 பயணிகள் பலி





புனித நூல்கள் எரிக்கப்பட்டமைக்கு பழிதீர்க்கும் முகமாக ஆப்கானில் தாக்குதல்28/2/2012

ஆப்கானிஸ்தானிலுள்ள ஜலலாபாத் விமான நிலையத்தின் நுழைவாயிலில் தற்கொலை கார் குண்டுதாரியொருவர் திங்கட்கிழமை நடத்திய தாக்குதலில் குறைந்தது 9பேர் பலியானதுடன் 6பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

இராணுவ மற்றும் பொதுஜன விமான சேவைகளுக்கான தளமாக விளங்கிய மேற்படி விமான நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தலிபான் போராளிகள் உரிமை கோரியுள்ளனர்.

அமெரிக்க இராணுவ தளமொன்றில் புனித நூல்கள் எரிக்கப்பட்டமைக்கு பழிதீர்க்கும் முகமாகவே இத்தாக்குதலை நடத்தியதாக தலிபான் போராளிகள் தெரிவித்துள்ளனர்.

தற்கொலை குண்டுதாரி காரை விமான நிலையத்தின் வாயிலில் மோதி குண்டை வெடிக்க வைத்துள்ளார்.

பலியானவர்களில் 6 பொது மக்களும் இரு விமான நிலைய காவலர்களும் ஒரு படைவீரரும் உள்ளடங்குகின்றனர்.

நன்றி வீரகேசரி

புட்டினை கொல்வதற்கான சதித்திட்டம் முறியடிப்பு


29/2/2012

ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புட்டினை படுகொலை செய்வதற்கான சதித் திட்டமொன்றை உக்ரேனிய பாதுகாப்பு பிரிவினர் முறியடித்துள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேற்படி சதித் திட்டத்துடன் தொடர்புடைய இரு நபர்கள் உக்ரேனிய ஒடிஸ்ஸா துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட இருவரும் கடந்த ஜனவரி மாதம் மாடிக்குடியிருப்பொன்றில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவமொன்றையடுத்து மேற்படி சதித்திட்டத்தில் பங்கேற்றதை ஒப்புக்கொண்டுள்ளனர்.

அவர்கள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கெடுப்பையடுத்து புட்டினை கொல்வதற்கு சதித்திட்டம் தீட்டியுள்ளனர்.

மேற்படி தேர்தலில் போட்டியிட்டு மூன்றாவது தடவையாக ஜனாதிபதியாக பதவி வகிப்பதற்கு புட்டின் எதிர்பார்த்துள்ளார்.

சந்தேக நபர்களில் ஒருவரான இலியா பியன்ஸின் தான் செச்சினிய போராளி குழு தலைவரான டொகு உமரோவால் தாக்குதல்களை நடத்துவதற்கு நியமிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

மற்றைய சந்தேக நபரான அடம் ஒஸ்மேயவ் 2007ஆம் ஆண்டிலிருந்து சர்வதேச ரீதியில் தேடப்பட்டு வரும் ஒருவராவார்.
நன்றி வீரகேசரி



சிரியாவில் இடம்பெற்று வரும் வன்முறைகளில் 7500 பொது மக்கள் இது வரை உயிரிழப்பு
Thursday, 01 March 2012

syria_riots_சிரியாவில் கடந்த வருடம் மார்ச் முதல் இடம்பெற்று வரும் வன்முறைச் சம்பவங்களில் இதுவரை 7500 பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளதக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஒரு நாளைக்கு சராசரியாக 100 பொது மக்கள் சிரியாவில் உயிரிழப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல்கள் வழங்கியுள்ளதாக அரசியல் விவகாரங்களுக்கான ஐ.நா. செயலாளரின் பிரத்தியேக செயலாளரான லின் பாஸ்கோ தெரிவித்துள்ளார்.


செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தாக்குதலில் ஹோம்ஸ் பகுதியில் மட்டும் அதிகளவான உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதேவேளை கடந்த வாரம் இடம்பெற்ற தாக்குதல்களில் காயமடைந்த பிரிட்டிஷ் ஊடகவியலாளர் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இந்நிலையில் ஐ.நா. பாதுகாப்புச் சபையில் இடம்பெற்ற முக்கிய மாநாடொன்றிலேயே சிரியாவில் 7500 க்கும் அதிகமான பொது மக்கள் உயிரிழந்திருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.

ஒரு நாளைக்கு சராசரியாக 100 பேர் வீதம் பொது மக்கள் படுகொலை செய்யப்படுகின்றனர். இதுவரை 7500 க்கும் அதிகமான பொது மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனரென லின் பாஸ்கோ தெரிவித்துள்ளார். ஆனால் ஆயுதக் குழுவினருக்கும் பயங்கரவாத அமைப்புகளுக்கும் எதிரான தாக்குதல்களில் 1345 படையினர் கொல்லப்பட்டுள்ளதாக சிரிய அரசாங்கம் கூறி வருகின்றது.

இதேவேளை சிரிய நிலைவரம் தொடர்பான முக்கிய தீர்மானங்களை மேற்கொள்வதற்காக ஐ.நா. மனித உரிமை பேரவையின் அவசர சந்திப்பொன்றுக்கு ஆணையாளர் நவநீதம் பிள்ளை அழைப்பு விடுத்துள்ளார். சிரிய பொது மக்களுக்கு எதிராக அந் நாட்டு அரசாங்கம் இனப் படுகொலையை மேற்கொண்டு வருவதாக மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை கூறியுள்ளார்.
நன்றி தினக்குரல்

நிரந்தர வதிவிட உரிமை பெற்றவர்களுக்கு பிரிட்டனில் பயோமெட்ரிக் உரிமம்
Wednesday, 29 February 2012


 biometric_idபிரிட்டனில் நிரந்தர வதிவிட உரிமையைப் பெற்றிருக்கும் வெளிநாட்டவர்களுக்கு உயிரியல் அடையாளங்களை உறுதிப்படுத்தும் பயோமெட்ரிக் குடியுரிமைச் சான்றிதழ்களை வழங்குவதற்கு அந்நாட்டரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பிரிட்டனின் குடியேற்ற விதிமுறைகளில் புதிய திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது. இதன்படி அந்நாட்டில் நிரந்தரமாக வாழும் உரிமை பெற்றிருப்பவர்கள் பயோமெட்ரிக் குடியிருப்பு உரிமம் எனப்படும் புதிய அட்டையைப் பெற விண்ணப்பிக்கவேண்டும்.


சட்டவிரோதக் குடியேற்றத்தைக் தடுப்பதற்காக இந்த விதிமுறை கொண்டுவரப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

பல ஆண்டுகளுக்கு முன்பாக பிரிட்டனில் குடியேறிய வெளிநாட்டவர்களில் பெரும்பாலானவர்கள் அந்நாட்டு குடியுரிமையைப் பெறுவதற்குப் பதிலாக நிரந்தரமாக வாழும் உரிமையை மட்டும் பெற்றுக்கொண்டனர். அத்துடன் தமது சொந்த நாட்டு குடியுரிமையையும் வைத்திருக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் புதிய விதிமுறைகள் பொருந்தும்.

பயோமெட்ரிக் குடியிருப்பு உரிமம் என்பது ஒரு மின்னணு அடையாள அட்டையைப் போன்றதாகும். சம்பந்தப்பட்டவரின் பெயர் ,பிறந்தநாள், பிறந்தஇடம் உள்ளிட்ட சுயவிபரங்களுடன் கைரேகை, முகப்பதிவு ஆகியவை அதில் அடங்கியிருக்கும்.

குடியேற்ற நிலை,பிரிட்டனில் அவர் பெற்றிருக்கும் உரிமைகள் போன்றவை பற்றிய விபரங்களையும் இந்த அட்டையின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

பல ஆண்டுகளுக்கு முன் பிரிட்டனில் குடியேறிய பெரும்பாலான பிறநாட்டவர்களும் புதிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க வேண்டியிருக்கும்.

அனுமதியில்லாமல் பிரிட்டனில் பணிபுரிந்து வரும் பிற நாட்டவர்களை குடியேற்றத்துறை அதிகாரிகள் கைது செய்யும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. புதிய அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்பட்டால் இதுபோன்ற சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை உடனடியாக கண்டுபிடிக்க முடியும் என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நன்றி தினக்குரல்


அமெரிக்காவில் பாரிய சூறாவளி 12 பேர் பலி ; பலரைக் காணவில்லை
Thursday, 01 March 2012

us_storm_5அமெரிக்காவின் சில பிராந்தியங்களை பாரிய சூறாவளி தாக்கியதில் 12 பொது மக்கள் பலியாகியுள்ளதுடன் பலர் காணாமல் போயுள்ளனர். ஹன்சாஸ் , மிசுசூரி மற்றும் இல்லினோஸ் பகுதிகளிலேயே அதிகளவு சேதம் ஏற்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை ரென்னிசீ நகரில் 3 பொது மக்கள் பலியாகியுள்ளனர். பல்வேறு பிராந்தியங்களிலும் மிக மோசமாக கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதுடன் 100 இற்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

us_storm_
வபலோ அருகிலுள்ள ட்ரேயிலர் பார்க் உட்பட சேதமடைந்த கட்டிடங்கள் இடிபாடுகளுக்குள் புதைந்திருப்போரை மீட்கும் பணியினை மீட்புப் பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். ஹன்சாஸ் ஆளுநர் ஷாம் பிறவுண்பக் மற்றும் மிசுசூரி ஆளுநர் ஜெய் நிஷேன் ஆகியோர் தமது மாநிலங்களில் அவசர கால நிலையை பிரகடனப்படுத்தியுள்ளனர்.
us_storm_2
நாங்கள் வீடுகளிலுள்ளேயே தடுமாறி கீழே விழுந்தோம். கார்கள் மற்றும் ஏனைய வாகனங்கள் என்பன ஏரிகளுள் தூக்கி வீசப்பட்டன. எப்படி அனர்த்தம் அங்கு இடம்பெற்றது என்பதை கற்பனை செய்து கூட பார்க்க முடியாதென ஹரிஸ்பேர்க் மேயர் எரிக் ஜெர்ச் சி.என்.என். தொலைக் காட்சிக்கு தெரிவித்தார்.
us_storm_3
இவ் அனர்த்தம் முக்கியமான சிறுபான்மை சமூகத்தினரை மிகவும் பாதித்துள்ளது. நாம் ஒவ்வொருவரையும் மிகவும் அக்கறையுடன் பராமரிப்போம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். பரன்சன், புபாலே, ஹாஸ்வெலி, லிபானோன் மற்றும் ஒக் ரெயிச் போன்ற மிசுசூரியின் நகரங்களே மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

us_storm_4
us_storm_5

us_storm_7

us_storm_8

us_storm_9

us_storm_10

நன்றி தினக்குரல்



ஆயுததாரிகளின் துப்பாக்கிச் சூட்டில் பாகிஸ்தானில் 18 பயணிகள் பலி
Tuesday, 28 February 2012

பாகிஸ்தானில் வடமாகாணத்தில் கொஹிஸ்தான் மாவட்டத்தில் பஸ்ஸொன்றில் துப்பாக்கி தாரர்களால் மேற்கொள்ளப்பட்ட சரமாரியான துப்பாக்கிப் பிரயோகத்தின் போது 18 பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 7 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இத்தாக்குதலுக்கு எந்த ஒரு குழுவும் உரிமை கோரவில்லை.


ராவல்பின்டி நகரிலிருந்து ஜில்கிட்டின் வட நகருக்கு பயணம் செய்து கொண்டிருந்த பஸ்ஸின் மீதே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொஹிஸ்தான் பிராந்தியத்தின் மலைப் பாங்கான பிரதேசம் போராளிக்குழுவிற்கான இடமாக உறுதிப்படுத்தாத போதும் முன்பு ஸ்வாட் நதிக்கரையோர எல்லைகள் தலிபான் போராளிக் குழுவினரது இடமாக இருந்து வந்துள்ளன.

வீதியிலே பஸ் சென்று கொண்டிருந்த போது வீதியின் இரு பக்கங்களில் இருந்தும் ஆயுததாரிகளால் துப்பாக்கிப் பிரயோகம் மேற் கொள்ளப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி முகமட் ஜயாஸ் தெரிவித்துள்ளார்.

தலைநகர் இஸ்லாமாபாத்தின் வடபகுதியிலிருந்து 130 மைல் தொலைவில் உள்ள ஹார்போன் நாலாவின் மலைப்பகுதிகளில் இத் தாக்குதலின் பின்பு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பஸ் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமைக்கான காரணங்கள் தெரியவில்லை.

நன்றி தினக்குரல்


No comments: