மார்ச் 14 இல் மற்றொரு ஒளிநாடாவை வெளியிடுகிறது பிரிட்டனின் சனல்4

Thursday, 01 March 2012

channel_4_video_லங்கை தொடர்பான மற்றொரு ஒளிநாடாவை பிரிட்டனின் சனல்4 இந்த மாதம் வெளியிடவுள்ளது. போர்க் குற்றச்சாட்டுகள் தொடர்பான புதிய ஆதாரத்தை இந்த ஒளிநாடா கொண்டிருக்கும் என்ற கூறப்படுகிறது. மார்ச் 14 இல் இந்தப் புதிய ஒளிநாடா வெளியிடப்படுமென சனல்4 கூறியுள்ளது

இதேவேளை, இங்கிலாந்தின் கிரிக்கெட் அணி மீண்டும் ஒரு தடவை இந்த மாதம் இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையிலும் 2013 இல் பொதுநலவாய உச்சி மாநாட்டை இலங்கையில் நடத்துவதென்பது இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ள தருணத்திலும் இலங்கையின் கொலைக்களங்கள் ஆவணப் படமானது சர்வதேச சமூகத்தால் மக்கள் மோசமாக துன்பப்படுவது மறக்கப்பட்டிருப்பதை கண்டிருப்பதை நினைவூட்டும் விடயமாக உள்ளது என்று பிரிட்டனின் சனல் 4 செய்திச் சேவையின் பணிப்பாளர் கல்லும் மக்ரே குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் கொலைக்களங்கள்; தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள் என்னும் தலைப்பில் நேற்று முன்தினம் புதன்கிழமை சனல் 4 செய்தியை கல்லும் மக்ரேயின் கட்டுரையை பிரசுரித்துள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

கடந்த வருடம் இலங்கையின் கொலைக் களங்கள் ஒளிநாடாவை சனல்4 ஒளிபரப்பியது. இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழ்ப் புலிகளுக்கும் இடையிலான தசாப்த கால மோதலின் இறுதி வாரங்களில் இடம்பெற்ற நிகழ்வகள் குறித்து இரசாயன பகுப்பாய்வு விசாரணையில் ஆர்.ரி.எஸ். விருதை வென்றெடுப்பதற்கான விடயமாக இலங்கையின் கொலைக்களங்கள் ஆவணப்படம் அமைந்திருந்தது. அதனை ஜோன்ஸ்னோ சமர்ப்பித்திருந்தார். போர்க்குற்றங்கள் மற்றும் மனிதத்துவத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களைக் கொண்டதாக இந்த ஒளிநாடா அமைந்திருந்தது. சனல்4 முன்னொருபோதும் வெளியிட்டிராத திகில் நிறைந்த பிரதிமைகள் சிலவற்றை இந்த ஆவணப்படம் கொண்டிருந்தது.

இரு தரப்பினரும் இழைத்த கொடுமைகளை இந்த ஒளிநாடா உள்ளடக்கியிருந்தது. பாலியல் துன்புறுத்தல்கள் நீதிவிசாரணைக்குப்புறம்பான கொலைகள், பொதுமக்கள் மீதான ஷெல் தாக்குதல்கள் என்பனவற்றை உள்ளடக்கியதாக இந்த ஆவணப்படம் அமைந்திருந்தது.

ஐ.நா.வில் ஜெனீவாவிலும் நியூயோர்க்கிலும் இது திரையிடப்பட்டது. அத்துடன் பிரிட்டிஷ் பாராளுமன்றம் ஐரோப்பிய பாராளுமன்றம் அமெரிக்க செனட் சபையின் முக்கிய உறுப்பினர்கள் உள்ளடங்கலாக அரசியல்வாதிகளுக்கும் இது காண்பிக்கப்பட்டது. இதனையடுத்து உலகளாவிய ரீதியிலுள்ள முன்னாள் அரசியல்வாதிகள் கருத்துக்களை வெளியிடுவதற்கும் இந்த இலங்கையின் கொலைக் களங்கள் வழிவகுத்திருந்தது. பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரூனும் இதில் கருத்துக்களை வெளியிடிடருந்தார். இந்தப் போர்க்குற்றச்சாட்டுகள் இப்போதும் உரிய முறையில் விசாரணை செய்யப்பட்டு அல்லது அதற்குப் பொறுப்பானவர்களை பதிலளிக்கும் கடப்பாடுடையவர்களாக்க வேண்டிய தன்மையைக் கொண்டுள்ளது. இலங்கை அரச படையினர் 40 ஆயிரம் பொதுமக்கள் இழப்புகளுடன் தொடர்புபட்டிருப்பதாக ஐ.நா. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதனைத் தொடர்ந்து கனதியான திரைப்படத்தை ஜோன்ஸ்னோ சமர்ப்பித்திருந்தார். ஆவணங்கள் நேரடிச் சாட்சியங்களின் பதிவுகள் புகைப்படங்கள், ஒளிநாடாக்கள், என்பனவற்றை உள்ளடக்கியதாக அந்த ஆவணப்படம் வெளியிடப்பட்டது. யார் இதற்குப் பொறுப்பு? என்ற விசாரணையை இது கொண்டுள்ளது.

மோதல் சூனிய வலயத்திற்குள் இருந்த வைத்தியசாலை மற்றும் பொதுமக்கள் மீது ஷெல் தாக்குதல் இடம்பெற்றதாகவும் தந்திரோபாயமான முறையில்,அகப்பட்டிருந்த பொதுமக்களுக்கான உணவு மருந்து மறுக்கப்பட்டதாகவும் மனிதாபிமான உதவி போர் வலயத்திற்குள் செல்வதற்கான சட்ட ரீதியான கடப்பாடு மறுக்கப்பட்டதாகவும் படிமுறை ரீதியான தண்டனைகள் நிறைவேற்றப்பட்டதாகவும் காண்பிக்கும் ஒளிநாடா வெளியிடப்பட்டது. மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் ஐ.நா. நியமித்திருந்த நிபுணர் குழுவின் அறிக்கை என்பவற்றின் அழுத்தத்திற்கு மத்தியில் இலங்கை அரசாங்கம் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழு தனது அறிக்கையை கடந்த வருடம் டிசம்பரில் வெளியிட்டது. போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக கனதியான விசாரணை எதனையும் நடத்துவதற்கு அந்த ஆணைக்குழு தவறிவிட்டது. கடுமையான ஆட்டுலறித் தாக்குதலில் பொதுமக்கள் இலக்காக்கப்பட்டதை இந்த ஆணைக்குழு அறிக்கை மறுத்துள்ளது. இலங்கையின் கொலைக் களங்கள் தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள் உரிய தருணத்தில் சர்வதேச மட்டத்திலான செயற்படாத தன்மைக்கான காரணங்களின் பின்னணியை ஆராய்வதாக இது அமைந்துள்ளது. இலங்கை அரசாங்கத்தை பொறுப்புக் கூறுவதற்கான அழைப்பை உரிய தருணத்தில் விடுப்பதற்கு சர்வதேச சட்டத்தில் செயற்படாத தன்மைக்கான காரணங்களைக் கண்டறிவதாக இந்த இலங்கையின் கொலைக் களங்கள் தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள் காணப்படுகின்றது. இந்தத் திரைப்படமானது பொறுப்புக் கூறுவது யார் என்று கேள்விகளை எழுப்புகிறது. இங்கிலாந்தின் கிரிக்கெட் அணி மீண்டும் ஒரு தடவை இந்த மாதம் இலங்கைக்கு வருகை தரவுள்ளது. 2013 இல் பொதுநலவாய உச்சிமாநாடு இலங்கையில் இடம்பெறுமென்பதும் இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சர்வதேச சமூகத்தால் மக்களின் மோசமான துன்பங்கள் மறக்கப்பட்டுவிட்டதை நினைவூட்டுவதாக இந்த ஆவணப்படம் அமைந்துள்ளது.
நன்றி தினக்குரல்


No comments: