ATBC யின் கலை ஒலி மாலை 2011 என் பார்வையில் - ரசிகா

.
சனி மாலை பழைய பாடல்களை கேட்கும் ஆவலுடனும்
எம் சமூக வானொலியாம்ATBCயை ஆதரிக்கும் நோக்குடனும்
அவசர அவசரமாக ST Benedicts college  ஐ நோக்கி பெருந்திரளான மக்கள் படையெடுத்தனர்.
அதே ஆவலுடன் சென்றவர்களில் நானும் ஒருத்தி. இந்த மண்டபத்தில் ஒரு நிகழ்வை பார்ப்பது இதுவே முதல் தடவை. மண்டபம் நன்றாகவே இருந்தபோதும் அது அமைந்த இடம் ஒரு பிரதான வீதியாக இருந்தமையும் வாகனதரிப்பு போதாமையும் பலருக்கும் விசனத்தை உண்டாக்கியது என்னவோ உண்மைதான். பெரும் திரளாக மக்கள் வந்து மண்டபம் நிறைந்து போதாமைக்கு வாசலில் நின்று கொண்டும் நிகழ்ச்சியை கண்டு களித்துக்கொண்டு இருந்தமை எல்லோருக்கும் பெரிய மன நிறைவை அளித்தது.இது இந்த வானொலிக்கு எம் சமூகத்தில் இருக்கும் ஆதரவை காட்டுவதாக அமைந்திருந்தது. வாகன தரிப்பு போதாமைக்கு அதுவும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.



நிகழ்சிகள் தமிழ் தாய் வாழ்த்துடனும் தேசிய கீதத்துடனும் சரியான நேரத்திற்கு தொடங்கியது.  வானொலியின் இயக்குனர்கள் , அறிவிப்பாளர்கள் என்று எந்த வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாக குத்து விளக்கு ஏற்றி ஈசனின் வரவேற்புரையுடன் நிகழ்வுகள் மெதுவாக அரங்கேறின. வருகை தந்திருந்த பிரதம விருந்தினர்களும் சுருக்கமாக தமது வாழ்த்தை எம் சமூக வானொலியாம் ATBC யிற்கு தெரிவித்து விடை பெற்றுக் கொண்டனர்.

             முதலில் திருமதி. கார்த்திகா கணேசனின் மாணவிகளின் கண்கவர் நடனம் அருமையாக இருந்தது. அதனை தொடர்ந்து " கடலோரம் " நாட்டியநாடகம் எம் எல்லோரையும் ஒரு சிறு மீன் பிடி கிராமத்திற்கே அழைத்து சென்றது. அதில் மீன் விழியாக வந்த மாணவி அருமையாக தன் அங்க அசைவுகளாலும் இ அந்த பாத்திரத்துடனேயே ஒன்றினைந்து அருமையான பாவத்தினாலும் எம்மை அந்த கடலோரத்தில் தன்னுடன் சேர்த்து ஏங்க வைத்தார் என்றால் அது மிகையாகாது.
அதனைத் தொடர்ந்து நாம் ஆவலுடன் எதிர் பார்த்திருந்த " ஈழத்து சௌந்தராஜன் "என்றழைக்கப்படும் திரு . ரகுநாதன் அவர்களின் பாடல் ஆரம்பமாகியது. ஆரம்பத்தில் ஒலி அமைப்பு ஒத்துழைக்காத போதும் பின்பு அது சீரமைக்கப்பட்டு மிகவும் நேர்த்தியாக அமைந்திருந்தது. பல பழைய பாடல்களை தன் கணீரென்ற குரலில் எமக்காக தந்து மக்களை பரவசத்தில் ஆழ்த்தினார் ரகுநாதன். வயது வந்தவர்கள் மட்டுமன்றி இளையவர்கள் கூட இந்த நிகழ்வை அசையாமல் இருந்து ரசித்துக் கொண்டிருந்ததை கண் கூடாக காணக் கூடியதாக இருந்தது. எம் தாய் நாட்டில் இப்படிக் குரல் வளம் கொண்டோர் இருக்கும் போது ஏன் இந்தியக் கலைஞர்களுக்கு எல்லோரும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்றும் எண்ணத் தோன்றியது. நம் உள்ளூர் கலைஞர்களும் குறிப்பாக திருக்குமார்இ ரேகா ஐயர் இ இந்துமதி செந்தூரன் இ பிளசிடா ஆகியோரும் அருமையாகப் பாடி நிகழ்ச்சிக்கு  மேலும் மெருகூட்டினர்.  "சின்னம் சிறிய வண்ணப் பறவை  " பாடல் அனைவரதும் பாராட்டை பெற்றதற்கு ரேகா ஐயர் காரணம் என்றால் அது மிகையில்லை.  அதுபோல ரகு நாதனும் திருக்குமாரும் இணைந்து வழங்கிய " பெண்ணொன்று கண்டேன் " பாடலுக்கும் நிச்சயமாக ஒரு சபாஷ் போட்டே ஆக வேண்டும். இறுதியாக வந்த "சிந்து நதியின் இசை " அத்துடன் ஈழத்து பாடல் ஆகிய பாடல்களும் எல்லோரையும் once more  சொல்ல வைத்தது .
அருமையாகப் பாடிய ரேகா ஐயர் கொஞ்சம் சிரிக்கலாமே என்று என் மனதில் தோன்றியது . திருக்குமாரை பார்த்தாவது மற்றைய பாடகர்களும் கொஞ்சம் சிரிக்கலாம் என்பது எனது அங்கலாய்ப்பு .
இடைவேளையின் போது வயிறாற நல்ல உணவும், செவியாற நல்ல இசையும் கிட்டியது. நிகழ்வு சரியான நேரத்திற்கு செ. பாஸ்கரனின் நன்றியுரையுடன்  முடிவடைந்தமையும் நிகழ்ச்சிக்கு முழுமையை கொடுத்தது.நிகழ்ச்சி தொடங்கி முடியும்வரை மகேஸ்வரன் பிரபாகரன் தன் கணீரென்ற குரலால் சுவையாகவும் சுருக்கமாகவும் தொகுத்தளித்தது நன்றாக இருந்தது. நீண்ட காலத்தின் பின்பு ஒரு நல்ல நிகழ்வை பார்த்த திருப்தியுடன் வீடு திரும்பினேன்.



8 comments:

Anonymous said...

Good singer Ragunathan Bad Sound system. Atbc Made Very Bad Mistake

Anonymous said...

Ragunathan and Thabla player Dr, was fantastic. Especially the last song about Mathalai temle was great.

Ragunathan shoud sing once again with the thabala player and key board, but key board shoud be with low pitch.

kalai said...

பெரும் திரளாக மக்கள் வந்து மண்டபம் நிறைந்து போதாமைக்கு வாசலில் நின்று கொண்டும் நிகழ்ச்சியை கண்டு களித்துக்கொண்டு இருந்தமை எல்லோருக்கும் பெரிய மன நிறைவை அளித்தது.இது இந்த வானொலிக்கு எம் சமூகத்தில் இருக்கும் ஆதரவை காட்டுவதாக அமைந்திருந்தது.
----------------------------------
அப்படியானால் ஏன் ATBC வைக்கிற மற்றைய நிகழ்ச்சிகள்(குறிப்பாக தென்னிந்தியக் கலைஞர்கள் கலந்து கொள்ளும் நிகழ்வு) அரங்கு நிறைந்தவையாக இருப்பதில்லை?. முக்கியமாக ஈழத்துக்கலைஞன் ரகுநாதனின் இன்னிசையினை இரசிக்கப்பதற்காகவே இரசிகர்களினால் அரங்கு நிறைந்திருந்தது

Anonymous said...

Ragunathan was fantastic, the planning and execution was fantastic. I have spoken to the organizers about the sound, I was told the school had a policy to use it own sound system and supported by 3rd party.
ATBC you have done it again. I have been to all the ATBC KOM program, either it was performed by local artists, overseas artist from Sri Lanka, India or Malaysia the propel turn up like a Tsunami. I guess it shows the reputation of the organization.
I remember it was in 2007, the last KOM held at C3 hall, where more than 150 people were send back. It was performed by the south Indian artist. So people does turn up to ATBC programs does not matter who performs. All the very best ATBC

kirrukan said...

,இங்கிலிஸ்காரனின் மைக்கில் தமிழ்பாட்டு பாடினால் அப்படித்தான் இருக்கும் .தமிழனின் மைக்கில் தமிழ்பாட்டு பாடினால் தான் நல்லாய் இருக்கும்......

நானும் பல நிகழ்ச்சிகளுக்கு போய்யிருக்கிறன் மைக் விசில் அடிக்காத நிகழ்ச்சியே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.....

அறிவிப்பாளர் சொன்னார் மைக்கில் கோளாறு என்று ,அடுத்த முறை மைக்கில் முதலில் கோளாறு திருப்பதிகம் பாடிவிட்டு நிகழ்ச்சியை தொடங்குங்கோ

Anonymous said...

திருவாளர் கிறுக்கன் அவர்களுக்கு,
மைக்கில் கோளாறு என்பது என்பது முள் குத்தி விட்டது என்பது போலத்தான்! மைக்கில் இல்லை கோளாறு அதை ஒழுங்கு படுத்தியதியதில்தான் கோளாறு. 

உங்களிடம் ஒரு கேள்வி ஒலியமைப்பை பற்றி ஏதாச்சும் தெரியுமா? மிகச்சரியான ஒலியமைப்பிற்கு குறைந்த பட்சம் ஒரு பாடல் 4 தடவையாவது பரீட்சிப்புக்கு உள்ளாகவேண்டும். ஆக மொத்தம் 15 பாடல்கள் என்றால் எவ்வவு நேரம் பிடிக்கும். 
அதற்கு அந்த இடம் 3 நாளைக்கு வாடகைக்கு எடுக்க வேணும். 3 நாள் வேலைசெய்ய ஒலியமைப்பாளருக்கு எவ்வளவு சம்பளம். இவ்வளவும் நடந்தால் நுழைவுச்சீட்டு என்ன விலை வரும்.? 

ஜோசித்து பாருங்கள்... 

kirrukan said...

[quote]Anonymous said...
திருவாளர் கிறுக்கன் அவர்களுக்கு,
மைக்கில் கோளாறு என்பது என்பது முள் குத்தி விட்டது என்பது போலத்தான்! மைக்கில் இல்லை கோளாறு அதை ஒழுங்கு படுத்தியதியதில்தான் கோளாறு.

உங்களிடம் ஒரு கேள்வி ஒலியமைப்பை பற்றி ஏதாச்சும் தெரியுமா? மிகச்சரியான ஒலியமைப்பிற்கு குறைந்த பட்சம் ஒரு பாடல் 4 .?

ஜோசித்து பாருங்கள்...[/quote]
ஒரு ரசிகனுக்கு ஒலியமைப்பை பற்றி தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறன்...மண்டப ஒலியமைப்பையும் உங்களுடைய ஒலியமைப்பையும் ஒன்று சேர்த்தமையால்தான் இந்த கோளாறு என மேடையில் அறிவிப்பாளர் சொன்னார்...மொத்ததில் ஒழுங்கமைப்பாளர்கள் கூடிய கவனம் செலுத்தியிருந்தால் இந்த கோளாறு வந்திருக்காது...

Anonymous said...

திருவாளர் கிறுக்கன் அவர்களுக்கு,

[quote] உங்களிடம் ஒரு கேள்வி ஒலியமைப்பை பற்றி ஏதாச்சும் தெரியுமா? மிகச்சரியான ஒலியமைப்பிற்கு குறைந்த பட்சம் ஒரு பாடல் 4 .?

தெரியாமல் சொல்லவில்லை... உங்களுக்கு சந்தேகம் என்றால் "sound engineers" யாரிடமாவது கேட்டுப்பாருங்களேன்?

sound engineers உடன் சேர்த்து வரும் மண்டபங்களில் இருக்கும் அசெளகரியங்களில் இதுவும் ஒன்று. அதுவும் எமது பாடல்களை பற்றி தெரியாத நபர்களுடன் சேர்ந்து இயங்குவது என்பது மிகக்கடினம்.

நன் திரும்பவும் ஒன்றைத்தன் சொல்கிறேன் இதைவிட சிறப்பாக செய்திருக்கலாம் ஆனால், அதன் பாரம் நுளைவுச்சீட்டின் மீது ஏறியிருக்கும். அதனை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கும்.

உங்களுக்கு இசை விழா நடாத்திய அனுபவம் இருக்கா? இல்லையேல் உள்ளவர்களிடம் கேட்டுப்பார்க்கவும்.