.
துண்டு கொடுக்கும்
துன்பியல் நாடகம்
காலம் காலமாகவே
எங்கள் தமிழ் சமூகத்தில்
கலை - இலக்கிய மற்றும் தமிழர்
சார்ந்த நிகழ்ச்சிகளில் குறிப்பாக விழாக்கள் கூட்டங்களில் ஒரு துன்பியல்
நாடகம் அரங்கேறிவருகிறது.
இலக்கியப்பிரவேசம் செய்த காலம்
முதலாய் தொடர்ச்சியாக இந்தத்துன்பியலை என்னைப்போன்று
சகித்துக்கொண்டிருப்பவர்கள் ஏராளம்.
குறிப்பாக தமிழர்
சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் உரியநேரத்தில்
தொடங்காது. ஆனால் - தமிழர்
தங்கள் திருமண நிகழ்வுகளில் மாத்திரம் சுபமுகூர்த்தம் தப்பிவிடலாகாது
என்பதில் மிகவும் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருப்பார்கள்.
சோதிடர் சொல்லும் திருமண
நாள் சுபமுகூர்த்தம் குறித்துவிட்டால்
எப்பாடுபட்டாவது மணமகன் மணமகளை உரியநேரத்திற்கு முன்பாகவே அலங்கரித்து மணவறைக்கு
அழைத்து வந்துவிடுவார்கள்.