பாரத நாட்டின் சிறந்த கவியாகவும், இலக்கியவாதியாகவும் அழியாப்
புகழ் பெற்றவர் காளிதாஸ். இவர் படைத்த சாகுந்தலம் நூற்றாண்டுகளையும் கடந்து இலக்கியவுலகில் நிலைத்து நிற்கிறது . அந்த காளிதாஸ் தமிழ் சினிமா வரலாற்றில் அழிக்க முடியாத இடத்தையும் பெற்று விட்டார். காரணம் 1931ல் தமிழில் தயாரிக்கப் பட்ட முதலாவது படம் என்ற பெருமையை காளிதாஸ் படமே பெறுகிறது. அதன் பிறகு மீண்டும் ஒருமுறை காளிதாஸ் திரைப் படமானது. அதற்கும் பிறகு 1966ம் வருடம் மீண்டும் காளிதாஸ் வரலாறு சினிமாப் படமானது. மகாகவி காளிதாஸ் என்ற பெயரில் தயாரான இப் படத்தை கல்பனா காலா மந்திர் பட நிறுவனம் தயாரித்தது.
கிராமத்தில் ஆடு மேய்ப்பவனாகவும், தற் குறியாகவும்,
வெகுளியாகவும் வாழும் சின்னையா வளர்ப்புத் தாயின் அன்பையும், வளர்ப்புத் தந்தையின் நிந்தனையையும் தினம் பெற்று வாழ்க்கையை ஓட்டுகிறான் . அந் நாட்டின் இளவரசியை மணக்க ஆசைப் பட்டு அவள் நடத்தும் அறிவுப் போட்டியில் கலந்து அவளிடம் போட்டியிடும் எல்லாப் புலவர்களும், கல்விமான்களும் தோற்று அவமானப் படுகிறார்கள். அவர்களுள் ஒருவனான அம்பரிசன் என்ற கல்வி மேதை சிலருடன் சேர்ந்து இளவரசியை பழி வாங்க அவளை ஒர் அறிவில்லாதவனுக்கு கல்யாணம் செய்து வைக்க திட்டமிடுகிறார்கள் . அவர்களின் திட்டத்துக்கு அமைய சின்னையா அவர்களிடம் சிக்குகிறான். அவனை புலவன் போல் உருமாற்றி மவுனப் போட்டி ஒன்றை இளவரசியுடன் நடத்தி அப் போட்டியில் சின்னையா வெற்றி பெறுகிறான்.

அவனுக்கும் இளவரசிக்கும் திருமணம் நடக்கிறது. அதன் பின்பே அவன் ஒரு மூடன் என்று இளவரசி அறிந்து கொள்கிறாள். அவனையும் அழைத்து சென்று கோவிலில் காளியிடம் முறையிடுகிறாள். காளிதேவி தோன்றி சின்னையாவுக்கு அருள் பாலித்து அவனை பெரும் புலவன், அறிஞன் ஆக்குகிறாள். சின்னையா கவி காளிதாஸ் ஆகி பெரும் பெயர் பெற்று போஜ ராஜனின் அன்பையும் பெறுகிறான். ஆனாலும் அரசவை நர்த்தகி அவனுக்கு எதிராக சதி செய்கிறாள். போஜராஜன், காளிதாஸ் நட்பில் விரிசலை உருவாக்க முனைகிறாள். காளிதாசின் மனைவி விலாஸவதியும் அவளின் சதிக்கு பலியாகிறாள். மகாகவியான காளிதாஸ் சந்திக்கும் இடர்களே மீதி படம்.
படத்தில் காளிதாஸ் கவியாக நடித்தவர் சிவாஜி. ஆரம்பத்தில்
வெகுளியாக, அறிவற்றவனாக தோன்றும் காட்சிகளில் காட்டும் அப்பாவித்தனமான நடிப்பும், பின்பு மகாகவியாகி காட்டும் நடிப்பும் சிவாஜியின் நடிப்புத் திறனுக்கு சான்று பகிர்கின்றன. பின்னர் அவர் நடித்த சரஸ்வதி சபதம், ராமன் எத்தனை ராமனடி, போன்ற படங்களுக்கு இப் படம் முன்னோடியாகும்.

போஜ மன்னனாக வரும் முத்துராமனின் நடிப்பு அவரின் பாத்திரத்துக்கு பொருந்துகிறது. சௌகார் ஜானகி உணர்ச்சி பொங்க தன் நடிப்பை வெளிப்படுத்துகிறார். எல் . விஜயலஷ்மி வில்லியாக வந்து ஆடிப் பாடி சாகசம் செய்கிறார். நாகேஷ் இருப்பதும் ஓர் ஆறுதல் தான். , சி . கே. சரஸ்வதிக்கு இதில் நல்ல அம்மா வேடம். அப்பாடா! இவர்களுடன் வி .கே. ராம
சாமி, ஏ. கருணாநிதி, ஜி . சகுந்தலா, ஈ . ஆர் . சகாதேவன், ஆகியோரும் நடித்திருந்தனர்.
சாமி, ஏ. கருணாநிதி, ஜி . சகுந்தலா, ஈ . ஆர் . சகாதேவன், ஆகியோரும் நடித்திருந்தனர்.
இவர்கள் எல்லோருடனும் கே. பி. சுந்தராம்பாள் சில காட்சிகளில் தோன்றி பாடி நடித்திருந்தார். அவருடைய நடிப்பும், பாடல்களும் படத்துக்கு உறு துணையாகின. சென்று வா மகனே சென்று வா, காலத்தில் அழியாத காவியம் தர வந்த மாபெரும் கவி மன்னனே பாடல்கள் ரசிகர்களுக்கு விருந்தளித்தன .
காளிதாஸ் படத்துக்கு கண்ணதாசன் பெரும்பாலான பாடல்களை இயற்றினார். மலரும் வான் நிலவும், யார் தருவார் இந்த அரியாசனம் , கல்லாய் வந்தவன் கடவுளம்மா, கலைமகள் எனக்கொரு ஆணையிட்டாள் பாடல்கள் கருத்தும், இசையும் சேர இனிமையாக ஒலித்தன. கே. வி. மகாதேவனின் இசை பாடல்களுக்கு மெருகு சேர்த்தன . கவிஞர் கு. மா. பாலசுப்ரமய்யம் படத்தின் கதை வசனத்தை எழுதியதுடன் சில பாடல்களையும் எழுதியிருந்தார். நீண்ட வசனங்களாக இல்லாமல் அளவோடு வசனங்கள் அமைந்தன.
தமிழ் சினிமாவில் மூத்த ஒளிப்பதிவாளராக அறியப்பட்டவர் ஆர். ஆர். சந்திரன் . ரத்தக் கண்ணீர், தாய்க்குப் பின் தாரம் , உலகம், நீதிபதி , கண்கள் போன்ற படங்களை ஒளிப்பதிவு செய்த சந்திரன் பின்னர் கல்பனா காலா மந்திர் என்ற பட நிறுவனத்தை தொடங்கி கே. ஏ. தங்கவேலு, பானுமதி நடிப்பில் ரம்பையின் காதல் படத்தை தயாரித்து இயக்கி வெற்றி கண்டார். அதன் பின் சிவாஜி நடிப்பில் நானே ராஜா, எம் ஜி ஆர் நடிப்பில் தாய் மகளுக்குக் கட்டிய தாலி படங்களை தயாரித்து டைரக்ட் செய்தார். ஆனால் இப் படங்கள் வெற்றி பெறவில்லை. 1966ம் ஆண்டு சிவாஜி நடிப்பில் மகாகவி காளிதாஸ் படத்தை தயாரித்து இயக்கிய போதும் இப் படமும் எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை. அதன் பின் சந்திரனின் பட நிறுவனம் நீடிக்கவில்லை, அவரும் படம் ஏதும் தயாரித்து இயக்கவும் இல்லை!
சந்திரன் எடுத்த படங்களில் அறிஞர் அண்ணா, கண்ணதாசன், இரா. அரங்கண்ணல் போன்றவர்கள் கதை வசனங்கள் எழுதியுள்ளார்கள். வித்தியாசமான கதைகளை கொண்ட படங்களாக அவை அமைந்தும் அப் படங்கள் ஏனோ வெற்றி பெறவில்லை . எம் ஜி ஆருக்கு முன் சிகரெட் பிடிக்கும் தைரியம் உள்ள ஒருவராக சந்திரன் மட்டுமே திகழ்ந்தார்!
.png)
.png)
.png)
.png)
.png)
No comments:
Post a Comment