நாட்டில் ஐந்து பேரில் ஒருவருக்கு நீரிழிவு நோய் - சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை
யாழில் சட்டவிரோத சொத்துக்குவிப்பு குற்றச்சாட்டு - வர்த்தக நிலையத்தை முற்றுகையிட்ட பொலிஸ்
மாவீரர் நாள் நிகழ்வுகள் : முல்லைத்தீவில் முன்னேற்பாடுகள் ஆரம்பம்
19 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை!
உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு யாழில் விழிப்புணர்வு நடைபவனி
நாட்டில் ஐந்து பேரில் ஒருவருக்கு நீரிழிவு நோய் - சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை
Published By: Digital Desk 1
13 Nov, 2025 | 03:41 PM
நாட்டில் ஐந்து பேரில் ஒருவர் தற்போது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது நாட்டில் அதிகரித்துவரும் பொது சுகாதார கவலையை அடிக்கோடிட்டுக் காட்டுவதாக தெரிவிக்கப்படுகிறது.
தேசிய கண் வைத்தியசாலையின் ஆலோசகர் கண் அறுவை சிகிச்சை நிபுணர் கபில பந்துதிலக, நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பெரியவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் கண் நோய்களாலும் பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் அதனை தெரிவித்துள்ளார்.
அண்மைய தரவுகளின்படி, நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கையில் 73 சதவீத அதிகரிப்பை கண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உலகளவில் ஒன்பது பெரியவர்களில் ஒருவருக்கு நீரிழிவு நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இலங்கையில், இந்த பாதிப்பு 23 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது,
அதாவது ஐந்து பெரியவர்களில் ஒருவர் நீரிழிவு நோயாளர்களாக உள்ளனர். அவர்களில், மூன்றில் ஒரு பகுதியினர் கண் நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்,.
மேலும் இதில் 11 சதவீதமானோர் சிகிச்சையளிக்கப்படாவிட்டால் பார்வையற்றவர்களாக மாறும் அபாயம் உள்ளது, ஏனெனில் நீரிழிவு குறிப்பாக கண்களை பாதிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
நீரிழிவு தொடர்பான குருட்டுத்தன்மை மற்றும் பார்வைக் குறைபாடு காரணமாக ஒவ்வொரு ஆண்டும் 923 மில்லியன் ரூபாய் வருமான இழப்பு ஏற்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது என்றும், பொருளாதார விளைவுகள் கணிசமானவை என்றும் வைத்தியர் பந்துதிலக மேலும் குறிப்பிட்டார்.
குறிப்பாக 40 முதல் 50 வயதுக்குட்பட்டவர்களுக்கே இவ்வாறான நோய் ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நோய் தடுக்கக்கூடியது எனவும். இந்த நபர்கள் பார்வையை இழக்க எந்த காரணமும் இல்லை. அதன் ஆரம்ப கட்டங்களில், வாழ்க்கை முறை மாற்றங்கள், உணவுக் கட்டுப்பாடு மற்றும் வழக்கமான மருத்துவ பரிசோதனைகள் மூலம் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், முழுமையான தடுப்பு சாத்தியமில்லை என்றாலும், சரியான நேரத்தில் நோயறிதல் மற்றும் சிகிச்சை பார்வையைப் பாதுகாக்க உதவும் என தேசிய கண் வைத்தியசாலையின் ஆலோசகர் கண் அறுவை சிகிச்சை நிபுணர் கபில பந்துதிலக தெரிவித்துள்ளார். நன்றி வீரகேசரி
11 Nov, 2025 | 11:06 AM
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத சொத்து குவிப்பு குற்றச்சாட்டின் அடிப்படையில் ஆனைப்பந்தி பகுதியில் உள்ள வர்த்தகர் ஒருவரின் விற்பனை நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை (10) சோதனை நடத்தப்பட்டது.
யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் பொலிஸார் பெற்றுக்கொள்ளப்பட்ட தேடுதல் அனுமதிக்கமைய குறித்த சோதனை நடத்தப்பட்டது.
சட்டவிரோதமாகச் சொத்துச் சேர்த்த சிலருக்கு எதிராக, யாழ்ப்பாணம் குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதனடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் ஒருவரின் கையடக்க தொலைபேசிக்கு இன்னொருவரிடம் இருந்து கைத்துப்பாக்கியின் புகைப்படம் அனுப்பபட்டிருந்தமை பொலிஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனொரு கட்டமாக குறித்த நபரின் விற்பனை நிலையத்தில் சோதனை நடத்தப்பட்டதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நன்றி வீரகேசரி
15 Nov, 2025 | 11:32 AM
முல்லைத்தீவு மாவட்டத்தில் அம்பலவன் பொக்கணை, மாத்தளன் சாள்ஸ் மண்டப வளாகத்தில் இவ்வாண்டுக்கான மாவீரர் நாள் நிகழ்வுகள் செய்வதற்கான சிரமதான பணிகள் பணிக்குழுவினரால் வெள்ளிக்கிழமை (14) மாலை ஆரம்பிக்கப்பட்டது.
தமிழ் மக்களுக்கான உரிமைப் போரில் தமது உயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை போற்றி வணங்கும் மாவீரர் நாள் இவ்வாண்டும் கார்த்திகை 27 ம் திகதி தமிழர்கள் வாழும் தேசமெங்கும் அனுஷ்டிக்கப்படுவது வழமை.
அந்தவகையில் இவ்வாண்டும் மாவீரர் நாள் நிகழ்வுகள் மேற்கொள்ள
தமிழர் தாயகப் பகுதிகள் மாத்திரமின்றி தமிழ் மக்கள் வாழும் தேசமெங்கும் தயாராகி வருகிறது. அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களும் தயாராக ஆரம்பித்துள்ளது.
முன்னதாக மாவீரர்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றி அகவணக்கம் செலுத்தி மலர்வணக்கம் இடம்பெற்றதை தொடர்ந்து சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இவ்வாண்டும் கார்த்திகை 27 மாவீரர் நாள் உணர்வு பூர்வமாக இடம்பெறும் எனவும் அனைத்து மாவீரர் பெற்றோர் உறவுகளையும் கலந்து கொள்ளுமாறும் முன்னாயத்த பணிகளிலும் ஒத்துழைப்பு வழங்குமாறும் பணிக்குழுவினர் தெரிவித்தனர். நன்றி வீரகேசரி
15 Nov, 2025 | 05:45 PM
இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 443,622 ஆகும்.
அத்துடன், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 180,592 சுற்றுலாப் பயணிகளும், ரஷ்யாவிலிருற்து 144,308 சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 115,400 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 123,053 சுற்றுலாப் பயணிகளும், பிரான்ஸிலிருந்து 96,818 சுற்றுலாப் பயணிகளும், அவுஸ்திரேலியாவிலிருந்து 88,616 சுற்றுலாப் பயணிகளும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
அதன்படி, இவ்வாண்டின் நவம்பர் மாதத்தின் முதல் 12 நாட்களில் 82,270 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது. நன்றி வீரகேசரி
14 Nov, 2025 | 11:47 AM
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக காலை 6.30 மணியளவில் இந்த நடைபயணம் ஆரம்பமானது.
குறித்த நடைபயணத்தில் யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி, மாவட்ட செயலர் ம. பிரதீபன் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
இந்த நடைபவனி கடந்த சில வருடங்களாகத் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.








No comments:
Post a Comment