இன்று நவம்பர் மாதம் 17 ஆம் திகதி நமது ஈழத்துப் பன்முகப் படைப்பாளி திருமதி. கோகிலா மகேந்திரன் அவர்கள் தனது 75 ஆவது அகவையில், பவள விழா ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றார்.
அவரின் பவள விழா நிகழ்வுகள் டிசெம்பர் மாதம் 21 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நிகழ ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
ஈழத்துப் படைப்பாளிகளில், சமூக சிந்தனை கொண்ட களப் பணியாளராகத் திருமதி கோகிலா மகேந்திரன் அவர்களின் செயற்பாடுகள் பன்முகப்பட்டவை. எழுத்தாளர் என்ற எல்லையைத் தாண்டி, உள வள ஆலோசகராக அவரின் பணி இன்னும் காத்திரமானது. தான் கொண்ட எழுத்துக் களத்தில் ஒரு எல்லைக்குள் நிற்காமல் பல்வேறு கூறுகளைத் தொட்டு அவரின் எழுத்துகள் பரந்து விரிந்தது போலவே அவரின் சமூக இயக்கமும் நிகழ்கிறது.
இந்த வேளை திருமதி. கோகிலா மகேந்திரன் அவர்களின் பன்முகப்பட்ட செயற்பாடுகளை நான்கு கூறுகளில் ஒலிப் பகிர்வுகளாக எடுத்திருந்தேன்.
அவற்றைக் கேட்க
எழுத்தாளர் லெ.முருகபூபதி
எழுத்தாளர் பாடும் மீன் சு.ஶ்ரீகந்தராசா
கிருஷ்ணானந்தன் (வளர் சஞ்சிகை ஆசிரியர்)
பேராசிரியர் பிரவீணன் மகேந்திரராஜா
திருமதி. கோகிலா மகேந்திரன் அவர்களது சமூகப் பணி பல்லாண்டு காலம் நீடித்துத் தொடர வேண்டி வாழ்த்துவோம்.
No comments:
Post a Comment