உலகச் செய்திகள்

அமெரிக்காவில் 43 நாள் நீடித்த அரசு முடக்கம் முடிவு - சட்டமூலத்தில் கையெழுத்திட்டார் ட்ரம்ப்

இராணுவ விமானம் மலையில் மோதி விபத்து - 20 பேர் உயிரிழப்பு

இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் - ட்ரம்ப்

டெல்லியில் பதற்றம்: செங்கோட்டை அருகே  கார் வெடிப்பு - ஒருவர் பலி, பலர் காயம் ? உயிரிழப்பு அதிகரிக்கலாமென அச்சம்


டெல்லியில் பதற்றம்: செங்கோட்டை அருகே  கார் வெடிப்பு - ஒருவர் பலி, பலர் காயம் ? உயிரிழப்பு அதிகரிக்கலாமென அச்சம்


மெரிக்காவில் 43 நாள் நீடித்த அரசு முடக்கம் முடிவு - சட்டமூலத்தில் கையெழுத்திட்டார் ட்ரம்ப் 

13 Nov, 2025 | 05:56 PM

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்ட நிதி சட்டமூலத்தில் ட்ரம்ப் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து, 43 நாள் அமெரிக்க அரசு முடக்கம் முடிவுக்கு வந்துள்ளது. 

இதன்போது ட்ரம்ப் தெரிவிக்கையில், சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்காக நூற்றுக்கணக்கான பில்லின் டொலர்களைப் பறிக்கும் முயற்சியில் உள்ள ஜனநாயகக் கட்சியினர் கடந்த 43 நாட்களாக அமெரிக்க அரசாங்கத்தை முடக்கினர். இன்று மிரட்டி பணம் பறிப்பதற்கு நாங்கள் ஒருபோதும் அடிபணிய மாட்டோம் என்றார். 

“அமெரிக்க அரசு கட்டமைப்பில் ஒவ்வோர் ஆண்டும் ஆளுங்கட்சி அந்த ஆண்டுக்கான நிதி செலவின திட்டத்தை தயாரித்து நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து இரு அவைகளிலும் ஒப்புதல் பெற வேண்டும். அப்படி ஒப்புதல் பெறாவிட்டால் அரசு ஊழியர்களுக்கான சம்பளம் முதல் ஒப்பந்தத்துக்கான நிதி ஒதுக்கீடு, அரசு சேவைகள் வரை அனைத்தும் பாதிக்கும்” என்றவாறு இவ்வாண்டு ட்ரம்ப் நிர்வாகம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிதி அறிக்கையை சமர்ப்பித்தபோது, ட்ரம்ப் அரசு சுகாதார திட்டத்துக்கான மானியத்தை தொடர முடியாது என அறிவித்த காரணத்தால் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியினர் எதிர்த்தனர். இதனால் மொத்த செலவின மசோதாவும் ஒப்புதல் பெற முடியாமல் அமெரிக்க அரசு முடக்கத்தை எதிர்கொண்டது. 

நிதி முடக்கம் காரணமாக பல துறைகள், சேவைகள் இயங்காததோடு, பல அரசு உத்தியோகத்தர்கள் சம்பளமில்லாமல் விடுமுறையில் அனுப்பப்பட்டனர். 

நிதி இல்லாததால் ஊழியர் பற்றாக்குறையும் சேர்ந்துகொண்டது. இதனால் பல்வேறு சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.   நன்றி வீரகேசரி 




இராணுவ விமானம் மலையில் மோதி விபத்து - 20 பேர் உயிரிழப்பு  

Published By: Digital Desk 3

12 Nov, 2025 | 09:40 AM

துருக்கி இராணுவத்திற்கு சொந்தமான சி-130 ரக சரக்கு விமானம் செவ்வாய்க்கிழமை (11) அசர்பைஜானில் இருந்து புறப்பட்டது. துருக்கி வந்துகொண்டிருந்த அந்த இராணுவ விமானத்தில் 20 பேர் பயணித்தனர்.

இந்நிலையில், ஜோர்ஜியா நாட்டின் எல்லைக்குள் பறந்துகொண்டிருந்தபோது விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் மலையில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானம் வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் விமானத்தில் பயணித்த 20 பேரும் உயிரிழந்தனர்.

இதையடுத்து, விபத்து நடந்த பகுதியில் மிட்புபணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.   நன்றி வீரகேசரி 







இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் - ட்ரம்ப்

12 Nov, 2025 | 12:17 PM
இந்தியாவுக்கு விதிக்கப்பட்ட வரி குறைக்கப்படும் என்று தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், விரைவில் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். 

இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக செர்ஜியோ கோர், வெள்ளை மாளிகையில் நேற்று செவ்வாய்க்கிழமை (11) பதவியேற்ற நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார். 

“ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்தியாவுக்கு அதிக வரி விதிக்கப்பட்டது. எனினும், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா பெருமளவில் குறைத்துள்ளது. ஏதாவது ஒரு கட்டத்தில் இந்தியாவுக்கு விதிக்கப்பட்ட வரி குறைக்கப்படும். இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என்று ட்ரம்ப் இதன்போது மேலும் கூறினார். 

உக்ரைன் - ரஷ்யா இடையே போர் நீடித்து வரும் நிலையில், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா கடுமையாக வரி விதித்திருந்தது. குறிப்பாக, இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ட்ரம்ப் 50 வீத வரி விதித்தார். 

அதனையடுத்து, இந்தியா, ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை வெகுவாக குறைத்துக்கொண்டது. 

இதனையடுத்து, இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஐந்து சுற்று வர்த்தக பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இதற்கிடையே நேற்று வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நிகழ்வில் ட்ரம்ப், இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என தெரிவித்திருக்கிறார்.  நன்றி வீரகேசரி 





டெல்லியில் பதற்றம்: செங்கோட்டை அருகே  கார் வெடிப்பு - ஒருவர் பலி, பலர் காயம் ? உயிரிழப்பு அதிகரிக்கலாமென அச்சம்

10 Nov, 2025 | 08:15 PM

இந்தியாவின் தலைநகர் டெல்லியின் மிகவும் பாதுகாக்கப்பட்ட மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதியான செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையத்தின் (Red Fort Metro Station) நுழைவு வாயில் எண் 1 அருகே இன்று (திங்கட்கிழமை, நவம்பர் 10, 2025) மாலை ஒரு கார் வெடித்துச் சிதறியதால் பெரும் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டுள்ளது மாலை 6:55 மணியளவில், செங்கோட்டை மெட்ரோ நிலையத்தின் வாயில் எண் 1 அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு கார் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது.

இந்த வெடி விபத்தில், அந்த காரைத் தவிர, அருகில் இருந்த மேலும் மூன்று முதல் நான்கு வாகனங்கள் தீப்பிடித்து சேதமடைந்தன.

முதற்கட்ட தகவல்களின்படி, இந்தச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததாகவும், சிலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இருப்பினும், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு 7 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.

டெல்லி காவல்துறை உயரதிகாரிகள், வெடிகுண்டு தடுப்புப் பிரிவினர் மற்றும் தடயவியல் குழுக்கள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

  குண்டுவெடிப்புக்கான சரியான காரணம் (சாதாரண விபத்தா அல்லது பயங்கரவாதச் செயலா) இன்னும் கண்டறியப்படாத நிலையில், அப்பகுதி முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, தீவிர விசாரணை நடந்து வருகிறது.

இந்தச் சம்பவம் மக்களிடையே அச்சத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.   நன்றி வீரகேசரி





No comments: