சீனவின் பீஜிங் தலைநகர் பன்னாட்டு விமான நிலையத்தை விமானம் நெருங்கிக் கொண்டிருந்தது. வானிலிருந்து பார்க்கும்போது இதுவரை நான் பார்த்திராத பிரம்மாண்டமான நகரமாகத்தான் தெரிந்தது. பட்டிக்காட்டான் மிட்டாய்க் கடையை பார்ப்பதுபோல் வைத்தகண் வாங்காமல் கழுத்து சுளுக்கும்வரை நான் பார்த்ததற்கு காரணம் வேறு.
வானில் இருந்து பார்க்கும்போது இரவு நேரத்தில் மின்னும் விளக்குகளுடன் ஒரு டிராகன் படுத்திருப்பதுபோல் தெரியுமாம். அப்படி வடிவமைத்திருக்கிறார்களாம். ஆனால் திருப்பதி கோவிலில் ஜருகண்டி கதையாகத்தான் அது முடிந்தது. ஒருவேளை விமானம் வெகு உயரத்தில் பறக்கும்போதே பார்த்திருக்க வேண்டுமோ? அல்லது விமானம் சீனாவைக் கடந்து டேக் ஆப் ஆகிசெல்லும் பொழுது தெரியுமோ ? தெரியவில்லை.
சரி, சீனாவை விட்டுக் கிளம்பும் போது பார்க்கலாம் என்று எண்ணினேன். விமானம் கிளம்பியது சீனாவின் டாக்ஸிங் பன்னாட்டு விமானத்தில் இருந்து. 17 பில்லியன் டாலர் செலவில் கட்டப்பட்ட இந் விமான நிலயத்தை பார்த்த பிரமிப்பில் மாம்பழம் போய் கத்த வந்தது டும் டும் கதையாக டிராகன் போய் இந்த விமான நிலையத்தின் நட்சத்திர வடிவமைப்பு டிராகனை மறக்கடித்தது.
பீஜிங் தலைநகர் பன்னாட்டு விமான நிலயத்தைப் பற்றிச் சொன்னேன் அல்லவா? விமானம் தரையிறங்கியதும் அதைப் பற்றிய வியப்பு இன்னும் அதிகமானது. இதைவிட வியப்படையக்கூடிய விமான நிலையத்தை நீங்கள் பார்த்திருக்கலாம். ஏழைக்கு ஏற்ற எள்ளுருண்டையாக என் அனுபவத்தை மட்டும் கூறுகிறேன். இதுவரை நான் பயணித்து தரை இறங்கிய விமனங்கள் ஓடுதளத்தில் நிற்காமல் ஓடி நிற்கவேண்டிய இடத்தில் பத்து நிமிடங்களில் வந்து நிற்கும்.
சிலசமயங்களில் ஓடுபாதையில் தடையேற்பட்டு ஓடாமல் நின்று
அதன் பின் நிற்கவேண்டிய இடத்தில் வந்தடைவதில் அதிக நேரம் எடுக்கலாம். ஆனால் விமானம் தரையிறங்கியதிலிருந்து எங்கும் நிற்காமல் ஓடுபாதையில் சென்றபடியே நிற்கும் இடத்தை வந்தடைய அரைமணி நேரமானதென்றால் சீனாவின் தலைநகர் பன்னாட்டு விமான நிலயத்தின் பரப்பளவை உங்கள் பார்வைக்கே விடுகிறேன்.
அதன் பின் நிற்கவேண்டிய இடத்தில் வந்தடைவதில் அதிக நேரம் எடுக்கலாம். ஆனால் விமானம் தரையிறங்கியதிலிருந்து எங்கும் நிற்காமல் ஓடுபாதையில் சென்றபடியே நிற்கும் இடத்தை வந்தடைய அரைமணி நேரமானதென்றால் சீனாவின் தலைநகர் பன்னாட்டு விமான நிலயத்தின் பரப்பளவை உங்கள் பார்வைக்கே விடுகிறேன்.
விமானத்திலிருந்து இறங்கியதும் விமானத்தில் இருந்தபோதும் கவனித்ததில் வேறு நாட்டவர்களின் எண்ணிக்கை என்பது மிக மிக குறைவே. விமானத்தில் இருந்து இறங்கியதும் சிம் கார்டு வாங்கவேண்டியிருந்தது. சில சீன நண்பர்களின் ஆலோசணையின்படி சீனாவில் சிம் கார்டு வாங்க முடிவு செய்தேன். நான் பயணித்த விமானம் டெர்மினல் மூன்றில் வந்தடைந்தது.
டெர்மினல் மூன்றில் உள்ள சைனா மொபைல்
கடை இரவு பதினொரு மணிவரை மட்டுமே திறந்திருக்கும். ஆதலால் அங்கு என்னால் சிம் கார்டு வாங்கமுடியவில்லை. டெர்மினல் இரண்டில் மட்டுமே இருபத்திநான்கு மணி நேரமும் சைனா மொபைல் திறந்திருக்கும். குடிவரவைக் கடந்து கரோசலில் பயணப்பொதிகளப் பெற கீழ்த்தளம் சென்று தொடர்வண்டியில் செல்லவேண்டும். தொடர்வண்டிக்காக காத்திருந்தபோது எப்படியாவது புகைப்படம் எடுக்கவேண்டும் என்று எனக்கு ஒரு ஆசை.
விமான நிலையத்தில் கண்டிப்பாக புகைப்படம் எடுக்க அனுமதியில்லை என்ற அறிவிப்பு இருந்தது. அதற்காக ஒரு வழியைக் கண்டுபிடித்தேன். திருடன் கையில் சாவி கொடுத்தமாதிரி பழமொழி உங்களுக்குத் தெரியும். திருடன் வீட்டுக்காரரிடமே சாவியைக் கொடுத்தது கதவைத் திறந்து விடச்சொன்னால எப்படி இருக்கும?
அதுபோல கீழ்தளத்தில் ரயிலுக்காக காத்திருந்த போது ஒரு பொலிஸ்காரரிடமே சைகையால் அனுமதி பெற்று பொதிகளைப்பெற பயணிக்கும் ரயிலைப் படம் பிடித்தேன். அப்போது ஒன்று என் தோளைத்தட்டி பாராட்டியது. வேறொன்றுமில்லை, அது மனசாட்சிதான். சங்கரா நீ பொழச்சுக்குவ என்றது.
நாம் யாரிடம் பழகுகின்றோமோ அவர்களிடமிருந்து ஒன்றிடமிருந்து பழக்கங்கள் நம்மைத் தொற்றிவிடுமல்லவா? அப்படித் தொற்றியதுதான். நம்மை யாரும் பாராட்டவில்லை என்றால் நம்மை நாமே பாராட்டிக் கொள்ளவேண்டும் என்ற தொற்றுதான். அப்படித் தொற்றியதுதான் “சங்கரா நீ பொழச்சுக்குவ” என்பது. இந்த தற்பெருமை இந்தக் கட்டுரைக்கு சுவை சேர்க்கமட்டுமே என்ற நோக்கில் மட்டுமே சேர்கப்பட்டுள்ளது.
மற்றபடி நான் அப்படிப்பட்ட ஆள் கிடையாது.
ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் வாயைத்திறந்தால் தற்பெருமைதான். கேட்டுக்கேட்டு நம் காதுகளில் ரத்தமே வடியத் தொடங்கும். அந்த மாதிரி சந்தர்ப்பங்களில் நான் என் கவனத்தை திருப்பிவிடுவேன். அல்லது பேச்சை திசைமாற்றுவேன். இல்லையெனில் நாம் இச்சமூகத்துடன் இணைந்து பயனிக்க இயலாது.
தற்பெருமை இருக்கலாம். ஆனால் எதற்கும் ஒரு அளவு இருக்கிறதல்லவா? இப்போது என்மனதில் தோன்றிய ஒன்றைச் சொல்லி விடுகிறேன். இல்லாவிட்டால் ஸபூனில் எடுத்த குளாப்ஜாமூனை வாய்க்குள் போடும்போது தவறி கீழே விழுந்ததுபோல் மனம் ஊணமடையும். அது என்னவென்றால் வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் வெள்ளயத்தேவன் வெள்ளையம்மாளுடன் காதல் வயப்பட்டிருப்பான்.
“பலே வெள்ளையத்தேவா! காதலில் களவு காண்பது நம் இலக்கிய மரபு. ஆனால் பாம்பு கொத்தும் அளவுக்கு காதல் கண்ணை மறைப்பதுதான் தவறு” என்ற வசனம்தான் அது. இதை நான் இங்கே கூறியது ஏன் தெரியுமா? தற்பெருமை கொள்வதில் தவறில்லை. உலகில் மூத்தமொழி என் தாய்மொழி என்ற தற்பெருமை எனக்கும் உள்ளது.
ஆனால் தற்பெருமை மற்றவர்கள் முகம் சுளிக்கும் அளவுக்கு இருந்து விடக்கூடாது. நாம் எவ்வளவுதான் தற்பெருமையாக நம்மைப் பற்றிக்கூறி தம்பட்டம் அடித்துக் கொண்டாலும் நாம் யார் எப்படிப்பட்டவர்கள் என்பதனைத்தும் மற்றவர்களுக்கு நன்றாகவே தெரியும். ஆனால் இவர்கள் என்னவோ பூனை கண்ணைமூடிக் கொண்டால் பூலோகம் இருண்டுபோவது போன்ற எண்ணத்துடன் தற்பெருமைக்கு பிரேக் போடவே மாட்டார்கள்.
வழிப்பயணத்தின் கல்லும் முள்ளும் வரத்தான்
செய்யும். கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை சாமியே அய்யப்போ, தேவன் பாதம் தேவகிபாதம் என்று கடந்துசெல்ல வேண்டியதுதான். உனக்குத்தான் கடவுள் நம்பிக்கை கிடையாதே அப்புறம் எப்படி பஜனைப்பாடலெல்லாம் தெரியும் என்கிறார் மாடசாமி அண்ணாச்சி.
கடவுள் நம்பிக்கை கிடையாது என்றுதான் சொன்னேன் கோவிலுக்குப் போகமாட்டேன் என்று சொல்லவில்லையே? குடும்பத்துக்காக கோவிலுக்குப் போகும்போது காதில் விழுந்ததுதான். சரி, கட்டுரைக்குள் நுழைவோம்.
.png)
.png)

.png)
No comments:
Post a Comment