இலங்கைச் செய்திகள்

செம்மணி புதைகுழியில் எட்டு எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் – சுத்திகரிப்பு நடவடிக்கைகள் தொடக்கம்

காணாமல்போனர் குறித்த முறைப்பாடுகள் பற்றிய விசாரணைகளை 2027ஆம் ஆண்டுக்குள் நிறைவு செய்ய 25 விசேட உப குழுக்கள்

செம்மணி–சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் மேலும் 4 எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு

மன்னாரில் 33 ஆவது வது நாளாக தொடரும் போராட்டம் ; புனித செபஸ்தியார் பேராலய பங்கு சபை, பங்கு மக்கள் பங்கேற்பு

செம்மணி நீதி கோரிய கையொழுத்து போராட்டம் கிழக்கில் இன்று ஆரம்பம் ; ஆதரவு வழங்குமாறு தமிழ் தேசிய கட்சிகள் அழைப்பு 



செம்மணி புதைகுழியில் எட்டு எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் – சுத்திகரிப்பு நடவடிக்கைகள் தொடக்கம்

Published By: Vishnu

05 Sep, 2025 | 03:27 AM

செம்மணி புதைகுழியில் குவியலாக எட்டு என்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவற்றை சுத்தப்படும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

குறித்த என்புகூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டதன் பின்னரே , அவை தொடர்பிலான விபரங்களை கூற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேவேளை புதன்கிழமை (3) இரண்டு என்பு கூடுகளின் குறுக்காக காணப்பட்ட என்பு கூடும் , ஒரு என்பு கூட்டின் தோள்பட்டையுடன் தொடுகையுற்றவாறு காணப்பட்ட என்பு கூடும் இன்றைய தினம் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. 

அத்துடன் இன்றைய தினம் சட்டை பொத்தான்கள் சிலவும் , காசும் ,  கைகளில் கட்டும் சிறிய தாயத்து ஒன்றும் புதைகுழியில் இருந்து சான்று பொருட்களாக மீட்கப்பட்டுள்ளன. 

செம்மணி புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிக்காக 45 நாட்கள் நீதிமன்றால் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் , இன்றைய தினம் வியாழக்கிழமை 43 நாட்கள் முடிவடைந்துள்ளன. எதிர்வரும் சனிக்கிழமையுடன் , இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் முடிவுறுத்தப்படவுள்ளது. 

அதேவேளை புதைகுழியை அண்டிய பகுதிகளில் கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட ஸ்கான் நடவடிக்கைகளின் அடிப்படையில் மேலும் புதைகுழிகள் காணப்பட்டலாம் என வலுவாக நம்பப்படுவதால் , மேலும் 08 வார கால பகுதி அகழ்வு பணிக்காக தேவைப்படுவதாக மன்றில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து , அதற்கான பாதீடுகளை தயாரித்தல் மற்றும் அதற்கான ஏனைய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு மன்று அறிவுறுத்தி இருந்தது. இந்நிலையில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் எதிர்வரும் மாதங்களில் முன்னெடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.   நன்றி வீரகேசரி 





காணாமல்போனர் குறித்த முறைப்பாடுகள் பற்றிய விசாரணைகளை 2027ஆம் ஆண்டுக்குள் நிறைவு செய்ய 25 விசேட உப குழுக்கள்

04 Sep, 2025 | 03:39 PM

(எம்.மனோசித்ரா)    காணாமல் போனோர் தொடர்பில் கிடைக்கப்


பெற்றுள்ள முறைப்பாடுகள் குறித்த விசாரணைகளை எதிர்வரும் 2027ஆம் ஆண்டுக்குள் நிறைவு செய்வதற்காக 25 விசேட உப குழுக்களை நியமிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

2016ஆம் ஆண்டின் 14ஆம் இலக்க, காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் (தாபித்தலும், நிருவகித்தலும், பணிகளை நிறைவேற்றுதலும்) சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் தாபிக்கப்ப்பட்டுள்ளது.

காணாமல் போன மற்றும் காணக்கிடைக்காமை நபர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு அவர்களுடைய உறவுகளுக்கு அறிக்கைகளை வழங்குதல் இவ் அலுவலகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதுவரை குறித்த அலுவலகத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ள 16,966 முறைப்பாடுகளில் விசாரணைகளுக்காக மேலும் 10,517 முறைப்பாடுகள் காணப்படுகின்றன.

அதற்கமைய இன்னலுற்றவர்களுக்கு நீதியை நிலைநாட்டுவதற்காக 2027ஆம் ஆண்டு இறுதிக்குள் விசாரணை மற்றும் குறித்த கடமைகளை நிறைவேற்றுவதற்கான விசேட கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் விசேட குழுவொன்றை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.அதற்கமைய குறித்த பணிகளுக்காக ஓய்வுநிலை நீதிபதிகள், சிரேஷ்ட நிர்வாக அலுவலர்கள், சட்டத்தரணிகள் உள்ளிட்ட தகைமையுடன் கூடிய நபர்கள் 75 பேருடன் கூடிய உப பணிக்குழு 25 குழுக்களை நியமிப்பதற்கும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.   நன்றி வீரகேசரி 




செம்மணி–சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் மேலும் 4 எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு

Published By: Vishnu

04 Sep, 2025 | 07:43 PM

செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இன்று மேலும் 4 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் இதுவரை 235 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இதில் 224 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் - செம்மணி - அரியாலை சித்துபாத்தி இந்து மயான


மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் 43 வது நாளாக இன்று யாழ்ப்பாண மாவட்ட மேலதிக நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 




மன்னாரில் 33 ஆவது வது நாளாக தொடரும் போராட்டம் ; புனித செபஸ்தியார் பேராலய பங்கு சபை, பங்கு மக்கள் பங்கேற்பு

04 Sep, 2025 | 02:50 PM

மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்றைய தினம் வியாழன் (04) 33 ஆவது நாளாகவும் சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மன்னார் புனித செபஸ்தியார் பேராலய பங்கு சபை மற்றும் பங்கு மக்கள் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மன்னார் நகர சுற்றுவட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை (4) 33


ஆவது நாளாக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் இளையோர் மற்றும் மக்கள் இணைந்து குறித்த போராட்டத்தை சுழற்சி முறையில் முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த போராட்டத்திற்கு நாளாந்தம் பல்வேறு கிராம மக்கள்,வர்த்தகர்கள்,பொது அமைப்புகள் என அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்கி வருகின்றனர்.


குறித்த போராட்டத்திற்கு நாளாந்தம் பல்வேறு கிராம மக்கள்,வர்த்தகர்கள்,பொது அமைப்புகள் என அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையிலே 33 ஆவது நாளாக முன்னெடுக்கப்படும் குறித்த போராட்டத்திற்கு புனித செபஸ்தியார் பேராலய  பங்கு சபை, மற்றும்  பங்கு மக்கள் பங்கேற்கேற்று தமது ஆதரவை வழங்கினர்.

இதன் போது  மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை


எஸ்.மாக்கஸ் அடிகளார், புனித செபஸ்தியார் பேராலய பங்குத்தந்தை அருட்தந்தை கிறிஸ்து நாயகம் அடிகளார், மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை தமிழ் நேசன் அடிகளார் ,அருட்தந்தை விக்டர் சோசை அடிகளார்,அருட்தந்தையர்கள்,அருட்சகோதரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


மன்னாரில் புதிதாக முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை மின் கோபுரம் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவை முழுமையாக நிறுத்தும் வரை தமது போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

போராட்டத்தை தொடர்ந்து மன்னார் நகர சுற்று வட்டத்தில் இருந்து ஊர்வலமாக மன்னார் மாவட்டச் செயலகம் வரை சென்று மீண்டும் மன்னார் நகர சுற்று வட்ட பகுதியை சென்றடைந்தனர்இந்த நிலையிலே 33 ஆவது நாளாக முன்னெடுக்கப்படும் குறித்த போராட்டத்திற்கு புனித செபஸ்தியார் பேராலய  பங்கு சபை, மற்றும்  பங்கு மக்கள் பங்கேற்கேற்று தமது ஆதரவை வழங்கினர்.


தன் போது  மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.மாக்கஸ் அடிகளார், புனித செபஸ்தியார் பேராலய பங்குத்தந்தை அருட்தந்தை கிறிஸ்து நாயகம் அடிகளார், மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை தமிழ் நேசன் அடிகளார் ,அருட்தந்தை விக்டர் சோசை அடிகளார்,அருட்தந்தையர்கள்,

அருட்சகோதரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


மன்னாரில் புதிதாக முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை மின் கோபுரம் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவை முழுமையாக நிறுத்தும் வரை தமது போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

போராட்டத்தை தொடர்ந்து மன்னார் நகர சுற்று வட்டத்தில் இருந்து ஊர்வலமாக மன்னார் மாவட்டச் செயலகம் வரை சென்று மீண்டும் மன்னார் நகர சுற்று வட்ட பகுதியை சென்றடைந்தனர்.  நன்றி வீரகேசரி 




செம்மணி நீதி கோரிய கையொழுத்து போராட்டம் கிழக்கில் இன்று ஆரம்பம் ; ஆதரவு வழங்குமாறு தமிழ் தேசிய கட்சிகள் அழைப்பு 

Published By: Vishnu

04 Sep, 2025 | 06:12 AM

கிழக்கில் செம்மணி உட்பட  இலங்கையின் வடக்கு கிழக்கு மண்ணில் உள்ள மனித புதைகுழிகளுக்கானதும் நடைபெற்ற இனபடு கொலைக்குமான சர்வதேச நீதி கோரிய கையொழுத்து போராட்டம் வியாழக்கிழமை (04) மட்டக்களப்பு காந்திபூங்காவில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது இதில் மக்கள் ஆதரவு வழங்குமாறு தமிழ் தேசிய கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்கள் அழைப்பு விடுத்துள்ளது.

மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்ற மண்டபத்தில் புதன்கிழமை (3) மாலை இடம்பெற்ற ஊடக மாநாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் களான செல்வம் அடைக்கலநாதன், ஞா.சிறிநேசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ்பிரேமச்சந்திரன்  மு.சந்திர குமார், கோ.கருணாகரம், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் ஆகியோர் கலந்து கொண்டு அழைப்பினை விடுத்தனர்.

இந்த கையொழுத்து போராட்டம் கடந்த மாதம் 29 ம் திகதி யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டு இடம்பெற்று வருகின்றது இதற்கமைய கிழக்கில் வியாழக்கிழமை (04) மட்டக்களப்பில் காந்திபூங்காவில் ஆரம்பித்து வைக்கப்படும் அதனை தொடர்ந்து அம்பாறை மாவட்டத்தில் கல்முனை நகர் ஆர்.கே.எம் வித்தியாலயத்துக்கு அருகில் ஆரம்பித்து வைக்கப்படும்

ஆதனை தொடர்ந்து வெள்ளிக்கிழமை 05ம் திகதி திருகொணமலை மாவட்டத்தில் சிவன்கோவிலுக்கு அருகில் ஈரம்பித்துவைக்கப்படும் இந்த கையொழுத்து போராட்டம் கிழக்கிலுள்ள அனைத்து பிரதேசங்களிலும் தொடர்ந்து இடம்பெறும்.

இந்த கையொழுத்துக்கள் மூலம் தமிழ் மக்கள் மீது ஒரு இனபடுகொலை இடம்பெற்றுள்ளதுடன் அவர்களின் மொழியை அழிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு தொடர்ச்சியாக யுத்தத்தின் மூலலம் தமிழ் தேசிய இனம் இருக்க கூடாது என பல படுகொலைகள் இடம்பெற்றுள்ளது எனவே இதற்கு சர்வதேச நீதி விசாரணை வேண்டும்

எனவே கிழக்கு மாகாணத்தில் பொதுமக்கள் மற்றும் போராளிகள் அதிகளவில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் எனவே இதனை சர்வதேச சமூகத்துக்கு கொண்டுபோக வேண்டும் என்ற கடமைப்பாடு எல்லோருக்கும் இருக்கின்றது எனவே ஜ.நாவுக்கு அனுப்பும் இந்த கையொழுத்து போராட்த்தில் கலந்து ஆதரவு வழங்கவேண்டும் என தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டாக அழைப்பு விடுக்கின்றோம் என்றனர்.   நன்றி வீரகேசரி 







No comments: