செம்மணி மனித புதைகுழியின் வலி – உளவியல் பார்வை

 

05 Sep, 2025 | 02:09 PM















புதைந்த குரல்கள் கேட்காத காற்றில்,
புரியாத சுமையாய் மண்ணில் மறைந்த உயிர்கள்.
ஒவ்வொரு அடியிலும் ஒலிக்கும் நினைவுகள்,
மௌனக் கத்தல்கள் மனதை சிதைக்கும்.

மண்ணின் கீழ் அல்ல, மனதில் புதைந்தது,
மறக்க முடியாத காயங்கள், விழிகள் மூடும் கனவுகள்.
மன அழுத்தம் ஆழமாகக் குடிகொண்டது,
மறைந்தவரின் முகம் தினமும் கண்ணீராய் தோன்றியது.

குழந்தை சிரிப்பை காண முடியாத தாய்,
வழி தெரியாமல் துயரத்தில் உறையும் குடும்பம்.
அந்தக் குழிகள் வெறும் நிலம் அல்ல,
அவை உளவியல் புண்களின் உயிர்ப்புகள்.

அனாதரிக்கப்பட்ட மனித உரிமையின் குரல்,
அழுத்தப்பட்ட நினைவுகள், சிதைந்த நம்பிக்கைகள்.
மனித புதைகுழிகள் சமூகத்தைத் தழுவும் நிழல்,
புதையுண்ட நம்பிக்கையை மீண்டும் எழுப்பும் சவால்.

மனித மனது பிளந்து போகும்,
அமைதி தேடும் கண்கள் இருள் நோக்கும்.
அந்த மண்ணில் விழுந்த உயிர்கள் கதைசொல்லும்—
“மறக்காதே… நியாயம் தேடு, மனிதம் காப்பாற்று.”









நடராசா கோபிராம் 
உளவியல்சிறப்புக்கலைமாணவன் 
யாழ்ப்பாண பல்கலைக்கழகம்

நன்றி வீரகேசரி 


No comments: